"பிறன்மனைநோக்கும் பேதையராவர்"
இதன் கருத்து
" அம்மனை அம்மை அரசியலை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இன்நில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின் றாளே"
சற்குரு திருமூவர் திருவாய்மலர் திருமொழியால் காண்போம்
அம்மையாப்பனே ஆர்ருயிர்களுக்கு தம்செய்த வினைக்கீடாக உடலை வளங்குவர். அவ்வாறு வழங்கி உடலை கொன்டு பிறவாமைபை அடையாமல் இன்னமும் பிறப்பிறப்புக்கு துணைபோவதையே பிறமனை நோக்கும் பேதையராவர் .
உச்சி வீட்டுக்குரிய அம்மை மனோன்மணி அவளே செம்பொருள் திருவடியின் உறையுயினைச் செய்து திருமங்கை யாய்நிற்பவள் அவன் இம் மனையாகிய அவ்வுடலைத் தந்தருளிப் பெருமைமிக்க நிலமடந்தை என பெயர் பெற்றவன். அவளே அழகிய அழகிய அன்னையாய் ஆதியாய் யாண்டும் பொருந்தி நின்றனள் .அவ்வருளம்மை தந்தருளிய ஒருமனையாகிய ஓருடம்பிலேயே பிறப்பற முயலுதல் வேண்டும். வேறு பிறப்பெடுக்கும் நோக்கங்கொண்டார் " பிறன்மனைநோக்கும் பேதையராவர். இது பெரிதும் வருந்தக்க தொன்றாகும். இதை அறிய அவன் அருளும் அதற்கான அறிவு பெற்று பஞ்சேந்திரங்களும் வெளி நோக்காது அகத்தில் மறைந்து உறைந்துள்ள அம்மையப்பனை நோக்கி இருத்தல் வேண்டும்.
பிறன்மனை என்பது பிறப்புற்ற உடல் . அவன் அருளின்றி அவனை அறிய முடியாது. அவன் அறியும் அறிவு அவனே.
நமசிவய என்பதில் சீவன் சிவத்தில் அடங்கும் போது சிவ என்பதும் பிரளையகாலத்தில் சக்தி சிவத்தில் அடங்கும். அதன் பின் படைப்பின் போது சிவத்தில் சக்தி தோன்றி பஞ்சகிருத்தியம் நடைபெறும் அப்போது அப்பனுக்கு அன்னையாகின்றாள் சக்தி உடல்களையும் பொருட்களையும் படைக்கின்றாள் பஞ்சப்பிரமங்கள் மூலம்.
" வாயு மனமும் கடந்த மனோன்மனி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்னை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே"
அரனுக்கு தாய் சக்தி தத்துவத்தில்னின்றும் சதாக்கிய தத்துவ வாசியாகிய சதாசிவமாகிய அரன் தோன்றுவதால் தாயாகவும் சிவதத்துவத்திலிருந்து சக்தி தத்துவம் தோன்றியதால் மகளாயும் ஆதி சக்தியாகி நின்று சக்தி தத்துவத்தில் சதாசிவநாயனாரோடு கூடி இருந்து உலகமும் பல உயிர்களையும் தோற்றுவிக்கும் போது தாரமாயும் நின்றவள் அம்மை.
வாசி வாசி வாசி என்னும் போது சிவா என தோன்றும் வா என்பது சக்தி சி என்பது சிவம். அங்கும் வ இருக்கின்றது சிவத்தையும் சக்தியையும் பிரிக்க முடியாது. உடலில் இருந்து உடல் சக்தியை பிரிக்கமுடியாதோ அதே போன்றதே சிவம் சக்தியும்
ஓம் ஜெய் சற்குரு துணை
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
No comments:
Post a Comment