காடுடைய சுடலை பொடி புசி என் உள்ளம் கவர் கள்வன்.
காடு என்றவுடன் சுடுகாடு இடுகாட்டையே பெரும் பாலும் எண்ணுகின்றனர். சுடுகாடு என்பது கர்மம் செய்த உடலை எரிக்கினற இடம். ஆனால் உடலுடன் இருக்கும் போதே மலபரிகாரம் செய்தால்தான். வீடு பெறு அடைய முடியும். எம்முள் இறைவன் இருக்கின்ற போதே அவனை நாம் காணமுடியும். அதனால் தான் அரிதிலும் அரிது மனிடப் பிறவி. தேவரான பிரமனும் விஸ்ணுவும் காணாத பரமனை நாயன்மார்கள் கண்டு பாடி பரவியுள்ளனர். உயிர் இருக்கும் போதே எமக்குள் நாமாக உணர்ந்து அபரஞானத்தை வெறுத்து பரஞானத்தை அடைய அவன் அருளாலே அவனை வணங்கம் பெறு பெறவேண்டும். அவன் சிரசர அறையில் அமிதசொரூபியாக சிவனும் சிவையுமாக அமர்து திருநடனம் புரிகின்றான். பஞ்சேந்திரியங்கள் அகமுகமான திரும்பி எல்லாம் அவன் செயலக நோக்க வேண்டும் . பஞ்சபூதம் பஞ்சேந்திரியங்களில் அடங்கி அது மனத்தில் அடங்கி மனம் அந்தக் கரணத்தில் அடங்கி அந்தக்கரணம் சீவனில் அடங்கி சீவன் சிவத்தில் அடங்க வேண்டும். இங்கு மலபரிகாரம் செய்த உடலே சுடுகாடு அதில் மலத்தை சிவாக்கிணியில் எரித சாம்பலே திருநீறு. 'நீறு இல்லா நெற்றி பாழ்' எரித்த இடம் ஆக்ஞா சக்கரம். எரித்த மந்திரம் பங்சாக்கரம். சுவஸ்திட்டாணத்தில் 'நமசிவய' மந்திரத்தில் அக்னி காரியம் செய்து. அநாகதத்தில் 'சிவயநம' மந்திரத்தில் அர்சனை செய்து. விசுத்தியில் 'சிவயசிவ' என்றும் அக்ஞ்ஞாவில் 'சிவசிவ' என்றும் சகஸ்ராகாரததில் 'சிவ' என்ற மந்திர பிரயோகம் செய்தல் வேண்டும். உள்ளம் கவர்தவன் வெளிப்படுவான்.
நமது உடல் இறைவன் இருக்கும் ஆலயம் அதில் பல உயிகளின் உடல்களை புதைக்கும் இடமாக மாற்றி விடாது. பாதுகாப்பது சைவசமயத்தவரின் கடமையாகும்.
No comments:
Post a Comment