வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்.
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்'
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்'
இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது. ஏழு என்பது அதாவது ஆறாதாரத்திலும் ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ராதாரத்திலும் அகவொழி தோன்ற வேண்டும் என்று ஏழு தீபங்கள் உள்ள கர்ப்பூர ஆராத்தி காட்டுகின்றனர். எமது உடலில் ஓன்பது வாசல்கள் உண்டு அவை ஒன்பதும் ஒளிபெறுவதால் உண்மை நோக்கி ஒளிபெறுவதை அடயாளப்படுத்துகின்றது. அதாவது ஞாமான தீயினால் ஒடுக்கப்படுவதை குறித்துக்காட்டுவதாக அது அமையும். இறைவனின் பஞ்சகிருத்தி செல்பாட்டில் அழித்தல் என்பது ஞானமாகிய தீயினால் நாம் செய்த கருமத்;தை எரித்து பிறப்புக்கு காரணமான கருமத்தை நிறுத்துதல் அதாவது பலன்கருதா செயல் புரிதல் பற்றற்ற செயல் இதனையே கர்ப்பூர தீபம் காட்டுதல் எமக்குணத்துவது. பூஜையின் போது பச்சைக் கர்ப்பூரமே பன்படுத்தவேண்டும் என்பது ஆகமம் குறித்துக் காட்டுகின்றது. இந்துமதத்தின் எந்த கிரியையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். அவை சித்தி பெற்ற சித்தர்கள் வகுத்தது. கர்ப்பூரம் மருத்துவத்தன்மை வாய்தவை இதனாலேயே மக்கள் கூடும் இடங்கள் நோய் அற்ற சுகாதாரமுள்ள இடமாக இருக்க இதனை பயன்படுத்தினர். மக்களுக்கு செய்தியை கொடுக்கும் அதே சமயம் அதன் மருத்துவதன்மையையும் உணத்தியவர்கள் சித்தர்கள்.
கர்ப்பூரத்தின் மருத்துவக்குணத்தை நோக்கும் போது
'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்
பொளிப்பு:
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
2. 'பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்' : பெருமுமந்தம் என்னும் நோய் இது வயிற்றில் ஏற்படுவது. தீ சுட்டபுண், பித்ததிதினால் ஏற்பட்ட சுரம் என்பவற்றை போக்க வல்லது.
3. 'வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்' : வாந்தி, பித்தம், சீதள வாதம், செவியில் ஏற்படும் நோய்கள், முகத்தில் ஏற்படும் நோய்கள் என்பன போக்க வல்லது.
4. 'சாந்திகருப்பூரந் தால்' இவை இனைத்தையும் போக்கவல்லது கர்ப்பூரம் என்பதை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான கர்ப்பூரத்தின் குணத்தை குறிப்பிட்டுள்ளார்கள் சிறப்பாக நோக்கும் போது பச்சைகர்ப்பூரத்தின் குணத்தை நோக்கும் போது.
'அஷ்டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு
துஷ்டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
துஷ்டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அஷ்டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு' : எட்டுவித குண்மம் தீரும் சூலை என்னும் வயிறில் ஏற்படும் வலி தீரும், வாதம் என்னும் நோயும் தீரும்.
2. 'துஷ்டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்' : மேக நோயை போக்க வல்லது.;
3. 'கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்' : கூந்தல் முடி உள்ள பெண்னே கபம் என்னும் நோயை போக்க வல்லது.
4. 'சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' : பச்சைகர்ப்பூரத்தால் என்றார்கள் சித்தர்கள்.
பச்சைகர்ப்பூரத்தில் பலவகை உண்டு அவற்றின் பேதம் பற்றிக் குறிப்பிடுகையில்.
'பச்சைக்கர்ப்பூரம் பருவதில் பேதம்உண்டிங்
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
பச்சைக்கர்ப்புரத்தில் பலவகை இருந்தாலும் அதில் சிறந்தது ஈசன், வீமன், பூதாச்சிறையன் என்பவையாகும்.
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
1. 'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்' : ஈசன் என்னும் கர்ப்பூரம் வெண்மை நிறமுள்ளது அது காரமானது.
2. 'பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற' : சீதள உஷ;ணம் பித்தம், மயக்கம் என்பனவற்றைப் போக்க வல்லது.
3. 'பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்' : பீநசம் உள்தாகம் என்பன நீங்கி காந்தியுண்டாகும்.
4. 'டான ததுவசியம் ஆம்' : வசியமும் உண்டாகும். என சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் குணம்
'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்
பொழிப்பு:
1. 'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை' : வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் நிறம் மேகநிறமாகும்
2. 'சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு' : உடல்குளிர்சி பெற்றும்
3. 'நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்' : தாகம் நீங்கி பேதியும் உண்டாகும்.
4. 'தூய மதிமுகத்தாய் சொல்' : தூமையான சந்திரனைப்போன்ற முகத்தை உடையவளே சொல் என்று சித்தர் கூறுகின்றார்.
பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் குணம்
'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.
பொழிப்பு:
1. 'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்' : பூதாச்சிறையன் என்னும் கர்ப்பூரம் மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது.
2. 'கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி' : ஸ்திரிகளுக்காகும் காசம் மேகம் வாத என்னும்
3. 'என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்' : மூன்று தோசங்களையும் போக்க வல்லது.
4. 'குன்ன விரணமும்போக் கும்' : சொறி இரணமும் போகும் என்று சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
பச்சைகர்ப்பூரம் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது எவ்வளவு சிறந்தது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழமையானது அதனால் வெப்பம் அதிகரித்து சலதோசம் ஏற்படுவது இயல்பு இதனை தடுக்க மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். இறைவனுக்கு தரிசனம் செய்த கர்ப்பூர தீபம் தொட்டு வணங்க அடியார்கள் மத்தியில் வருகின்றது. இதை ஒத்தி அதை கண்களில் ஒத்துவது வழமை இது எப்படிப்பட்ட மருத்துவம் என்பதை சித்தர்கள் அறியாமல் அறியவைக்கின்றனர். அடியார் அதிகரிக்கும் போது பவனசூழல் மாசடையும் அதை சீர் செய்ய கர்ப்பூரதீபத்தில் ஏற்படும் சுவாலையின் புகை உதவுவதை நாம் அறிவோம். சித்தர்கள் மருத்துவம் வியர்க்கத்தக்கது. ஆனால் இன்று பயன்படுத்தும் கர்ப்பூரம் இயக்கையான தல்ல அவை சேர்க்கையானவை இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். அதை அறிந்து ஆலயங்களில் புரோகிதர்கள் சரியானதை சரியாக அறிந்து உரியதை பயன்படுத்துவது காலத்தின் தேவையுடன் அவசியமே. எதை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்வதே சரியான பலனை பெற உதவும். போலியானது எதிர்மறையான தாக்கத்தையே தரும் இன்று உலகம் இப்பாடுபட காரணம் அதுவே. இன்று பணத்துக்காக வேதங்கள் விற்கப்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. உழைப்பதே தவிர வேறோன்றும் இல்லை. மூன்நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் 'வேதம் காசுக்கு விற்கப்படும் பிராமணர்களால் என்றும் பிராமணர்கள் சூத்திரருக்கு அடிமையாகுவர்' என்றும் குறித்துரைத்தது இங்கு குறிப்பிட்த்தக்கது.
No comments:
Post a Comment