Monday, February 26, 2018

ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும்

ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும்
தாய் கௌரியின் கேதாரகௌரி விரதம் முடிவுற்று அறிவின் சிகரமாம் சிங்கார வேலன் கந்தசஸ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது.ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர் சான்ரோர் . அதை கருப்பையாக கருதுவர் சிலர். முருகன் அவன் அழகன் குமரன் குரு பரனுக்கு. சிவபெருமானாகிய பரம்பொருளின் ஐந்து முகம் சதாசிவன் அதாவது. சத்தியோஜாதம், வாமதேவம் அகோரம் தற்புருடம் ஈசானம், இவையே ஐந்து முகங்களும். ஆனால் சிவபெருமானுக்கு ஆறாவது முகம் ஒன்றும் உண்டு. அதுவே அதோமுகம். அதாவது. மேற்கு முகம் சத்தியோஜாதம் வடக்கு முகம் வாமதேவம். தெற்கு முகம் அகோரம். கிழக்கு முகம் தற்புருடம், மேல் முகம் ஈசானம். அதுபோல் கீழ்முகம் அதோமுகம். அதுவே சிவகுரு. ஆகவே ஆறுமுகமான சிவனே குருபரன் அவனே குமரகுருபரன். சிவனின் ஞானகுருவடிவம் ஆறுமுகம். அப்படி இருக்கு அகப்பை என்பது எது ஆன்மா இருக்கும் இடம். ஆன்மாக்கு எது தேவை. அது ஞானமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. எனவே ஷஷ்டியில் இருக்க அகப்பை வருவது ஞானம். கந்தன் கலியுக வரதன். கலியுகத்தை வெல்ல அஞ்ஞான இருள் அகல வேண்டும். அதனாலேயே அவன் அஞ்ஞான இருளை விரும்பும் மயில் குணமான ஆணவத்தை அடக்கி தனது வாகணமாக்கினார். அதை உணரவைத்த ஞானமான வேலை கையில் ஏந்தினார் வேல் ஆழமானதும் அகலமானதும் கூர்மையானதுமானது வேல் அதுவே அறிவின் அடையாளம் ஒவ்வொரு மனிதனிடம் சாத்வீகம் இராஜதம் தாமதம் ஆகிய மூன்று குணங்களும் இருக்கும். அவை எமக்கு இருக்கின்ற அளவின விகிதாசாரத்திலேயே அவர் அவர் நடத்தைகளும் எண்ணங்களும் இருக்கும் சாத்வீகமே நேரான எண்ணத்துக்கும் தாமதகுணமே எதிரான எண்ணங்களுக்கும் காரணமாகும் மனிதனின் வலபக்க செய்பாடுகள் மூளையின் இடப்பக்க செலப்பாட்டுக்கும் இடபக்க செல்பாடுகள் மூளையின் வலப்பக்க செயல்பாட்டுக்கும் வழிவகுக்கும். அதாவது பொதுவாக வலக்கையையே எல்லா செய்பாட்டுக்கும் முதலில் பயன்படுத்திகின்றோம் உலகம் வலம் இடமாகவே சுற்றுகின்றது. இது நேர் எண்ணங்களை உருவாக்க வல்லது. இதனால் சாதவீக குணங்கள் அதிகரித்து ஆண்மீக நாட்டம் அதிகரிக்கும். ராஜதம் இரண்டு வகையில் அமையும் வெற்றியை நேர்மையான முறையில் எதிர் கொள்ளல். அது ஒருவகை மற்றறையது ஆணவத்தால் ஆசைகொண்டு எதிர்த்து வஞ்சகம் சூது பொறாமையால் வெற்றி பெறல். இது தாமதகுணத்தின் விழைவே. முருகன் ஞானமான வேலைக் கொன்டு மாயையின் சிக்கி ஆணவம் கொண்ட சூரனை சம்ஹரம் செய்கின்றார். அடுத்து சமக்படுத்துஇச்சையையும் கிரியையையும் ஞானத்தால் சமப்படுத்துகின்றார். பூலோக குறவள்ளி தேவலோக தேய்வயானை இருவரையும் திருமணம் செய்தார் திருமுருகன் ஒரு பெண்ணையே சமாளிக்கமுடியாமல் இருக்கின்ற போது. இருமனைவியர் ஒருத்தி பூலோக ஆசைநிறைந்தவள் இச்சாசக்தி மற்றவள் தேவலோக கிரியையான கடமையில் சிறந்தவள் அவளே கிரியாசக்தி இரண்டும் இரு துருவம் இவற்றை ஞானம் பழமான முருகன் சீர்செய்கின்றான். ஞானத்தால் எல்லாவற்றையும் சீர்செய்யும் ஞாகாரணன் அவன் அவனே சிவகுரு. அருநகிரிநாதருக்கு, அருள்ஜோதி வல்லலார், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ குமரகுரு தாசசுவாமிகள் ஸ்ரீ யோகர் சுவாமி, ஸ்ரீ செல்லப்பா சுவாமி, ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி போன்றோருக்கு குருவாய் வந்தவன் குகன் தான். அதனால் தவசீலர் அருணகிரிநாதர் .
"உருவாய் யருவாய் யுளதாய் யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"என்றார். அவனே குரு அவனே சிவகுரு.
கந்தர் அனுபூதி
"முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே"
"சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே".
"கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே"
கந்தர் அலங்காரத்திரல்...................
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌகளத் தௌந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப் பார்வெறுங்களே.
திருமந்திரத்தில் திருமூலர்................
'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே'
'தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்.
பொதுவாக நோக்கும் போது முருகன் பரம்பொருளின் சிவகுரு. அவன் கந்த ஷஷ்டியில் இருக்க அகப்பையில் வரும் என்பது ஞானம்.

No comments:

Post a Comment