Monday, February 26, 2018

பரமாத்மா பயணம் செய்யும் வாகனம் சீவாத்துமா"

பரமாத்மா பயம் செய்யும் வாகனம் சீவாத்துமா"
கடவுளின் படங்களில் அவர்களுக்கான வாகணங்கள் இருக்கும். இது எதற்காக என்று பார்த்தால் பயணம் செய்ய ஒரு வாகனம் தேவை. இப்போது. எமக்கு செல்ல துவிச்சக்கரவண்டி, உந்துருளி, நாற்சக்ரஉருளி போன்றவை உண்டு. அக்காலத்தில் குதிரை, யானை, கழுதை, போன்றவற்றில் பயணம் செய்தனர். இது போன்றவையே இறைவனுக்கு கொடுப்பட்ட வாகணமும் என்று நினைப்பவர்களும் உண்டு. அதிலும் சில வாகனம் உக்கிரமானதாகவும், சில சாதுவாகவும் அமையக்காரணம் அறிய விரும்பியதுண்டா? பார்ப்போம். சிவனுடைய வாகனம் எருத்து வாகனம். பராசக்கியுடையது சிம்ம வாகனம். சிவனும் சக்தியும் வேறுவேறு அல்ல ஓம் என்பது பிரணவம். அதில் உள்ள ஆ,உ,ம,என்னும் மூன்று அச்சரமும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம் ஆனால் அதில் உள்ள 'உம' சக்தி பிரணவம். இப்படி இருக்க வாகனங்கள் சிவனுக்குரிய எருது சாத்வீக குணத்துடனும் பராசக்தியின் வாகனமான சிம்மம் தாமதகுணத்துடனாதாக இருக்க காரணம் என்ன என்று சிந்தித்ததுண்டா? பார்ப்போம் சிவன் சீவான்மாவான நந்தியிலேயே பயனம் செய்வான். அதற்கு தடையான தாமதகுணத்தை அழித்து அடக்கி அவன் பயம் செய்ய வழிவகுப்பவளே பராசக்தி. இரும்பு மனத்தை குழைத்தாண்டு கொண்டவள் பராசக்தி. அதனாயே பராசக்தியை சரணடைந்தால் சகல வரமும் பெறலாம். ஆதிசத்தின் அருள் இன்றி எதையும் சாதிக்க முடியாது. அதனாலேயே சித்தக்கள் சத்தியை வழிபட்டே அட்மாசித்துப் பெற்று சித்தி பெற்றனர். குருதேவர் ஸ்ரீ ரமகிஷ்ணர் காசியில் கங்கைக்கரையில் தியானத்தில் திளைத்திருந்த போது அருச்சுணன் காட்டில் அம்பிகை மோட்சவாசலை திறக்க எம்பெருமான் ஆன்மாக்களை வழி அனுப்பக்கண்டார். மனிதனின் விலங்கு குணமே எல்லாவற்றுக்கும் காரணம் அதை அழிக்க அம்பிகையின் அருள் தேவை. குருதேவர் தக்சிணேஸ்வர் காளிமாவை சரணடைந்தார். காளி கருமையானவள் யாருக்கென்றால் அஞ்ஞாணம் உள்ளவருக்கு ஞாணம் உள்ளனுக்கு அழகானவள் அவள். குருதேவர் அவளை அழகாகவே கண்டார்.

No comments:

Post a Comment