Monday, February 26, 2018

உணவருந்தும் பாத்திரத்தின் தன்மை அறிந்து உண்ண தேகத்தின் உறுதனை தவித்திடலாம்'

உணவருந்தும் பாத்திரத்தின் தன்மை அறிந்து உண்ண தேகத்தின் உறுதனை தவித்திடலாம்'
இலைகளில் உணவு பரிமாறும் பழக்கம் பாரம்பரியமாக இந்துக்களுக்கு உண்டு. சமய விழாக்கள், சமுதாய சடங்குகளிளும் வழக்கமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. இலைகளில் பரிமாறுவதளால் உடலுக்கு ஆரொக்கிமாகவும் சௌபாக்கியமாகும் அதே சமயம் சில இலைககள் கேடாகவும் அமைந்து விடுகின்றது. இது பற்றிய அறிவு தற்போது அவசியமாக அமைகின்ற போது காலத்தின் தேவையாகவும் உள்ளது. உணவருந்த தேவையான இலையை தேர் தெடுக்க அது பற்றிய அறிவு அவசியமாகும். அவசரமான உலகில் அவசியமான சரியான இலையை தேர்ந் தெடுப்பது என்பது பிரச்சனையானாலும் அதன் விளைவுகளை அறிந்திருந்தால் எதிகாலத்தில் ஏற்படும் விளைவுகளை தவித்துக் கொள்ளலாம் அல்வா.
இனி இலைகளைப்பற்றி சித்தர்கள் கூறும் வாழ்வியல் மருத்துவம் பற்றிப்பார்ப்போம். ஊண் கலத்தில் இலைகளின் முக்கியத்துவம் பற்றி பார்க்கையில்
'வாழைவெள்ளைப் பன்ன நன்றா மற்றிலைகண்மத்திபமா
மாழைவெள்ளிவெண்கலமு மாநன்றாங் - கோழை
கயப்பாண்ட நோய்போங் கருதினிவைக் கெல்லாங்
குயப்பாண்ட மேலசனங் கொள்' என்றனர் சித்தர்கள்.
உணவருந்தப் பயன்படுத்தும் இலைகளில் வாழையிலையும் வேங்கையிலையும் உத்தமம். முற்றை இலைகள் மத்திமம். உணவு உண்ண உலோங்களில் பொன், வெள்ளி, வேண்கலத்தால் தயாரிக்கப்பட்ட பாத்திரம் நல்லது. மண்கலத்துக்கு அதாவது மண்னால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவுட் கொன்டால் கோழை, கயம், பாண்டு நோயும் போக்கும் தன்மை உண்டு. பழைய காலதில் வசதி படைத்தவர்கள் மன்னர்கள் போன்றோர் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட உணவருந்தும் பாத்திங்களில் உணவருந்தியதை கேள்விப்பகட்டிருகன்கின்றோம். கிராமப்புறங்களில் இப்போதும் வெண்கல வட்டிலும் சேர்வைக்காலில் உணவருந்துகின்றன். அதுமட்டுமல்ல கண்ணால் செய்யப்பட்ட மடக்கில் உணவருந்துகின்றனர். ஆலயங்களிலும் திருமண வைபவங்களிலும் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது. இனி இலைகளின் மருத்துவக் குணம் பற்றி பார்ப்போம்.
முதலில் வாழையிலையின் மருத்துவக்குணம் பற்றி பார்ப்போம்.
'தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமன்னு
மக்கினி மந்த மபலமொடு திக்கிடுகால்
பாழை யிலைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனா
வாழை யிலைக்குணரு வாய்' என்றனர் சித்தார்கள்.
வாழையிலையில் உணவருந்துவதால் அக்கினி மந்தம், அபலம், வாய்வு, இலைப்பு, பித்தம் போன்ற நோய்கள் அகலும். தேகம் காந்தளுறும். சுகபோகமறும். இவ்வாறு சிறந்தது வாழையிலை. ஆதனால் உடலுக்கு தீங்குவராது நன்னையே தரும். அடுத்து பலாயிலையின் உணவருந்துவதனால் உண்டாகும் பலன் பற்றி பார்க்கும் போது
' பாலிருக் கின்றமரப் பன்னங் களிலுண்டால்
குலாவி யெழும்பிக் குதிக்கு – முலாவிவரு
கன்ம மகோதரநோய் காணா தகலாத
குன்ம மகலுங் குறி' என்றனர் சித்தர்கள் பலாயிலையில் உணவு உட்கொண்டால் பித்தம் உண்டாகும் மகோதரநோயும், முன்மமும் போக்கும் வல்லமை உண்டு.
பாலுள்ள மரங்களின் இலைகளில் உணவு உட்கொளவதின் மருத்துவக் குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
'பாலிருக் கின்றமரப்; பன்னங் களிலுண்டால்
கோலிருக்கச் செய்வாதங் கோழைகபங் - கால்
வசுர்க்குபித்தந் தாகமிவை யண்டாதகலு
முசுக்குமதி சீதளமா மோது' என்றார்கள் சித்தர்கள். வாதம், பித்தம், கோழை, கபம், அசுர்க்கு, தாகமும் போகும் அதிசீதளம், உண்டாகும். எனவே பால்மரத்தின் இலைகளில் உணவு உண்பது உடலுக்கு ஆரொக்கியமாகும். அத்துடன் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
தூமரையிலையில் உணவு உட்கொள்வதனால் உடலுக்கு தீங்கு விளையும். அது ஆரொக்கிய கேடாக அமையும்
'தாமரைப்பன் னத்திலுண்டால் தாங்கரிய உட்டினமாம்
நாவவா தஞ்சினந்து நண்ணுங்காண் - தூமமுறா
அக்கினிமந் தங்கனுண்டாம் அன்றே மலர்த்திருவத்
திக்கினிலி ராளெனவே வேர்' என்றனர் சித்தர்கள். தாமரை இலையில் உணவு உட்கொண்டால் இலஷுமிகடாஷம் இல்லாது போகும் உஷ்ணவாதம்; அக்கினி மந்தமும் உண்டாகும். எனவே உணவு உட்கொள்ள பொதுவாக பொருத்தமற்றது.
கைப்பாத்திரத்தில் உணவு உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்.
'கைப்பாத் திரத்திற் கலத்தன்னங் கொள்ளுங்கால்
வைப்பா மனச்சேட்டை மாறுங்காண் - இப்பாற்
சருவ கிலேசமும்போஞ் சாற்றவென்றா லின்னும்
பெருவருசி நோயும்போம் பேசு' என்றார்கள்; சித்தர்கள். மனச் சேட்டையும், சருவகிலோசம், அருசியும் போக்கும் வல்லமை உண்டு.
உலோகத்தினாலான உண்கலத்தில் உட்கொள்வதனால் உண்டாகும் பலன்கள் தொட்பாக சித்தர்கள் கருத்துக்களை நோக்கும் போது முதலில் தங்பத்திலான உண்கலத்தின மருத்துவக் பண்புகள் தொடர்பாக நோக்கும் போது.
'தங்கக் கலத்திலுண்ணத் தாதுவிர்த்தி யும்பசியும்
போங்க மிகுதிடமும் பூரிப்பும் - அங்குறையும்
பித்தசோ பப்பிணியிப் பேருலகை விட்டகலுஞ்
சித்தரசத் தீங்கனியே சொல்' என்றனர் சித்தர்கள். தங்கத்திலான உணவருந்தும் பாத்திரத்தில் உணவருந்தினால் பித்த சோகப்பிணி போகும் தாதுவிருத்தி பசி, திடம், பூரிப்பும் உண்டாகும். பொதுவாக நோக்கும் போது உணவு உட்கொள்ள சிறந்த பாத்திரமாகும். அடுத்து வெள்ளிக்கலத்தில் உணவருந்தும் பாத்திரத்தின் மருத்துவக் குணம் பற்றி பார்க்கும் போது.
'வெள்ளிக் கலத்துண்ண வீறி வருகபமுந்
துள்ளியெழு பித்தமும்போஞ் சொல்லவோ – விள்ளரிய
குhந்தியுண்டா நாளுங் களிப்புண்டாந் தேகத்திற்
சேர்ந்திவரும் வாதமுண் டாஞ் செப்பு' என்றனர் சித்தர்கள் வெள்ளிக்கலத்தில் உண்பதனால் கபத்தையும் பித்தத்தையும் போக்கும் அதே வேளை காந்தியும் களிப்புவாதமும் உண்டாகும். பித்தத்தை உண்டாக்க வல்லது.
செப்புக்கலத்தில் உணவு உட்கொள்வதன் பலனைப் பொறுத்வரை
'செப்புக் சலத்துண்ணத் தேக ஆரொக்கியமாம்
பும்பிரத்த தோஷம் பறக்கும்காண் - அப்புவியல்
அண்ணியிடுங் காந்தி யண்ங்கே விழியொளியாம்
புண்ணியமு நண்ணும் புகல்' என்றனர் சித்தார்கள். செப்புப் பாத்திரத்தில் உணவு உட்கொண்டால் இரத்ததோஷத்தை போக்க வல்லது அத்துடன் தேகவாரோக்கியம் உண்டாவதுடன் காந்தியும் கண்ணெளியும் பெருகி புண்ணியம் உண்டாகும். எனவே செப்பு பாத்திரம் உடலுக்பு ஆரொக்கியமானது.
வேண்கலத்தில் உணவு உட்கொண்டால் உண்டாகும் பலன்
'தாம்பிரத்தில் வெள்ளீயம் தான்கலக்க வெண்கலம்என
றாம்பெயர் பெறுங்கலத்தூள் அன்னமுண்ணில் தேம்புகின்ற
சோபமொடி ரத்தபித்தந் தோன்றஅறி யாதனங்கள்
சாபமெனச் சொன்னுதலே சாற்று' என்றனர் சித்தார்கள். வேண்கலத்திலான பாத்திரத்தில் உணவு உட்கொண்டால் சோம்பும் இரத்தபித்தையும் போக்க வல்லது.
தாம்பிரம் - வெள்ளி – கலப்பு – வெண்கலம் - .வைகளாற் செய்த உண்கலத்தின் உண்பதனால் உண்டாகும் பலன்கள்.
'தக்கதாம் பிரத்தின் வட்டிற்றான் அதி ரத்தபித்தம்
மெய்க்குறா தகற்றும் வெள்ளி விலக்கிடும் ஐயந்தன்னை
யொக்கலே கலப்பு வட்டில்உறுதிரி தோஷம் போக்குங்
கூக்கிய உதிர மேறுங் கனத்தவெண் கலத்திற் கென்னே'. என்றார்கள் சித்தர்கள். கலப்புலோகத்தில் தாம்பிரகலத்துக்கு இரத்தபித்தம் போக வல்லது. வேள்ளிக்கு ஐயம் போக்கும் வல்லமை உண்டு. கலப்புலோகத்துக்கு திரிதோசத்தை போக்கும் வல்வமை உண்டு. வெண்கலத்திக்கு உதிரம் உண்டாக்கும் வல்லமை உண்டு.
இந்துமத சடங்குகளிலும் விழாக்களிலும் சமுதாய சடங்குகளிலும் உணவு பரிமாற்றத்துக்கும் ஏனைய விடயங்களிலும் வாழையிலையும் தாம்பர பாத்திரங்களும் செம்பு பாத்திரங்களுமே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இவை அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
' சித்தர்கள் சிந்தையில் உதித்த இரத்தின முத்துக்கள்
அவை. மெய் ஞானத்தின் அமிதம் அவை.
சித்தன் வாக்கு அத்தன் வாக்கு.
உண்மையின் விளைவுகள்.'

No comments:

Post a Comment