Monday, February 26, 2018

அம்பிகையின் ஆறாதாத்பிரவாகம் பற்றி ஸெளந்தர்யலஹரீ குறிப்பிடுகையில்

அம்பிகையின் ஆறாதாத்பிரவாகம் பற்றி ஸெளந்தர்யலஹரீ குறிப்பிடுகையில்
மஹீ மூலாதாரே கமபி மணிபூரே ஹூதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத - மாகாச-
முபரி!
மனேபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா
விஹரஸே"
மூலாதாரத்தில் பிருதிவீ தத்துவத்தையும் மணிப்பூரகத்தில் ஜலதத்துவத்தையும் ஸ்வாதிஷ்டானத்தில் இருக்கும் அக்னி தத்துவத்தையும் இருதயத்தில் அனாஹதத்தில் வாயுதத்துவத்தையும் அதற்கு மேல் விசுத்தியில் ஆகாசதத்துவத்தையும் புருவநடுவில் ஆக்ஞையில் மனஸ் தத்துவத்தையும் இவ்வாறாக ஸூஷூம்னா மார்க்கத்தில்லுள்ள எல்லாச் சக்கரங்களையும் ஊடுவிச் சென்று ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் ரகசியமான இடத்தில் உமது பாதியாகிய ஸதாசிவனுடன் கூடிமகிழ்கின்றய். அம்பிகை எம்முள் எழுந்தருளி இருப்பதை இச்சுலோம் எமக்கு எடுத்தியம்புகின்றது. இதனை மானசபூஜையாக நாம் செய்ய வேண்டும். அதற்கு மூலாதாரத்திலிருந்து எழுந்த பராசக்திக்கு ஸ்வாதிஷ்டானத்தை கடந்து மணிப்பூரகத்தில் பிரத்தியசஷமாவாள் அங்கு அர்க்கியம், பாத்தியம் முதலிய பூஷணம் வரை உபசாரங்களைச் செய்து அநாகதத்துக்கு அழைத்து வந்து துபம் முதல் தாம்பூலம் வரையிலான உபசாரங்களைச் செய்து விசுத்திக்கு அழைத்துவந்து அங்கே பராசக்தியை சிம்மாசனத்தில் இருக்கச்செய்து சந்திர கலாரூபமான ஸ்படிகமணிகளால் பூஜீத்து ஆஜ்ஞா சக்கரத்துக்கு அழைத்துவந்து நீராஜனம் செய்து. ஸஹஸ்ராரத்தின் நடுவில் இருக்கும் சந்திர மண்டத்தில் ஸதாசிவனுக்கு பக்கத்தில் சேர்த்து அவர்களைச் சுற்றிப் படுதாவைப் போட்டுத் தான் சமீபத்தில் இருந்துகொண்டு அம்பாள் மூலாதாரத்துக்கு திரும்பும் சமயத்தை எதிர்பாத்து இருத்தல் வேண்டும் இதுதான் அந்தர்யாகம். அல்லது சமயாசாரம் எனப்படும் மானஸ பூஜை. இதுவே குண்டலினி தியானம்.எனப்படும்.

மட்டூர் புனையம்பதியான்

No comments:

Post a Comment