Saturday, January 13, 2018
பூக்கள் அழகானவை பூக்களைத்தேடி பல பூச்சிகள் செல்லுகின்றது
பூக்கள் அழகானவை பூக்களைத்தேடி பல பூச்சிகள் செல்லுகின்றது. அதில் சில மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றது இன்னும் சில தாங்கள் தேனைக்குடித்து மகிழுகின்றது. இன்னும் சில தனது எதிர்கால தேவைகருதி சேகரிக்கின்றன். . சில பறவைகள் தானது உறைவிடமாக்கிக் கொள்கின்றது அம் மரங்கள் எதையும் இன்னும் அனுபவிக்க வில்லை. அது தனது உணவு உற்பத்திக்கு சூரிய ஒளியினையும் மனித கழிவான கானீர் ஓட்சைட்டை உட்கொன்டு மனித வாழிவுக்கு அசியமான உயிப்பு வாயு ஒட்சிசனை வெளியிட்டு உலகை காக்கின்றது. அதனாலேயே அதை ஆதிமனிதன் கடவுளாகக் கண்டான். இவ்வாறு தனக்கென வாழாது மற்றவர்காக வாழ்ந்த மனிதனை மாந்தர் கடவுளாகக் கண்டனர். அந்தவகையில் தோன்றியவர்களே குருதேவர் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சர், ஸ்ரீ ரமணமஹரிஷி, புத்தர், ஜெசு, முகமது நபி போன்றோர். தன்னலம் கருதாது பிறர்நலம் கருதும் மனிதகளை காண்பது அரிது. ஒரே எண்ணம் கொன்டவர்கள்தான் ஒருகூட்டமாக இருப்பர்கள் அவர்கள் செல்பாடுகளும் ஒன்றாகவே அமையும். துறவிகளுடன் கூடும் கூட்டம் துறவை அடைய திறவுகோல் தேடும் நபர்களாகவே இருப்பர். அவர்களின் தகுதி அறிந்தே குரு படிப்படியாக துறவின் திறவுகோலைக் கொடுப்பார். அந்த வகையில் குருதேவர் இல்லறத்தாருக்கு ஒருவிதமாகவும் பிரகச்சாரிகளுக்கு ஒருவிதமாவும் உபதேசம் செய்து தகுதிக்கேற்ப துறவின் திறவுகோலை கொடுத்த பெருமைக் உடைவர். அதனாலேயே வாழ்க்கைத்தத்துவம் அறிய குருவின் துனை தேவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment