Monday, December 25, 2017

மனைவியை மாயையின் வடிவமாகவே கருதின்றனர்

மனைவியை  மாயையின் வடிவமாகவே  கருதின்றனர் . ஒருவரின் வாழ்க்கையில் ஆக்கத்திலும் அழிவிலும் ஒரு பெண் இப்பதை யாவரும் அறிந்ததே 'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' அதே மாதிரி ஞானிகளுக்கும் ஞானமடைய ஆதி சக்தியே இருப்பதை அறிவோம். அதனாலேயே ஆதிசக்தியை மஹாமாயா என்று அழைக்கப்படுகின்றாள். மனைவி தனது கணவனின் ஆசைக்காக ஓர் இரு குழந்தைகளை பெற்றுக்கொன்டு உலக ஆசையில் இருந்து விடுபட்டு இருவரும் இறைவனை நாடி அவனே கதி என இருந்து வாழ்வதே நாம் பிறந்த வாழ்க்கையின் அர்த்தம்.  இவ்வாழ்வே மஹரிஷிகளின் வாழ்வியல் . இந்த நிலையை கிரகஸ்த ஆச்சிரமத்திலிருந்து வானபிரதிஸ்ட ஆச்சிரமத்துக்கு இட்டுசெல்ல வழிகோலும் இவ்வகையான  மனைவியை வித்தியா மாயை மனைவி என அழைக்கப்படுகின்றாள்.  இவ்வாறு மனைவி கிடைப்பதும் 'விட்டகுறை தொட்டகுறையின் பலனே'  அது அவன் அருனால் மட்டுமே ஏற்படும். இவர்கள் உடன் பிறப்பை போல் வாழ்கின்றனர் அங்கு காமத்துக்கு  இடமில்லை. இருவருமே இறைவனின் பக்தர்கள் தாசன் தாசி அவர்களுடைய இல்லறம் வித்தியா மாயையுடைய இல்லறம் இவர்கள் பகவான் பத்தர்கள்  என்ற கூட்டுறவில் ஆனந்தம் காண்கின்றனர். இறைவன் ஓருவனே சொந்தமான தமக்கான சொத்தாக  உணர்கிறார்கள். மஹாஷிரிகள் சித்தர்களை வழிபடும் போது  உங்களுடைய அருள் சக்தியையும் நீங்கள் பெற்ற தாய் சக்தியையும் எமக்கு தந்தருளும் ஈஸ்வரா என்றே  வழிபடுகின்றோம். குருதேவர் ஸ்ரீ இராமகிஷிணர் அவர்களுடைய வாழ்க்கையின் அன்னை  ஸ்ரீ சாரதாதேவி  வித்தியா மாயை மனைவியாகவே வாழ்ந்து அன்னை பவதாரியின்  அருள்கடாஷ்சம் பெற்று  அவளானவர் குருதேவர். 'மனைவ அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'; என்றும்' தாரமம் குருவும் அவன் அவன் தலைவிதிபடி' என்று முதுமொழி இயம்புகின்றது.  பெண் எடுக்கும் போது கூட 'பாத்திரம் அறிந்து பிச்சை பொடு கோத்திரம் அறிந்து பெண் எடு' என்று குறிப்பிடப்படுகின்றது.  அப்படியான மனைவி அமைந்தால் அது எமது பிறப்பிறப்பில்லா பெருவாழ்வுக்கு வழிகோலும் என்பது திண்ணம்.

சிந்தி  மனிதா நீ யார் எந்த இடத்தில் நிற்கின்றாய் ? உலகில் படைக்கப்பட்டவை எல்லாம் இறைவனின ; படைபின் விந்தையின் வியற்பை அறிவன் மூலம் அவன் சக்தியை அறிய அதை அனுபவித்தல் விடுதலை இல்லை மயையில் சிக்கி சின்னா பின்னமாகவே! அதிலிருச்து தப்ப ஞானம் தேவை அதை பெற அவன் அருள் தேவை. இயற்கை நமக்கெல்லாம் சிறந்த ஆசான் அதை அனுசரித்தே செல்வது நியதி அதற்கு கேடு விளைவித்தால்  எம்மையே அழித்து விடும்.  'இயற்கையை நேசித்து  அதன் வழி சென்றால் உலகை காக்க முடியும் கேரங்கொன்டால் மனிதன் தாங்க மாட்டான்'

No comments:

Post a Comment