மட்டக்களப்பு அரசடித்சந்திப்பிள்ளையார் ஆலய வரலாறு
இவ் வாலயம் 1945 ஆம் ஆண்டு தாமரைக்கேணியைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி என்பவரும் வீரபத்திரரும் சேர்ந்து அரச மரத்தின் அடியில் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்ததின் விளைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில் அரசமரத்தின் கீழ் புத்தரை வைத்து விடுவார்கள் என்று அஞ்சி அக்காலத்தில் சந்திக்கு முன் இருந்த அமரர் திருஞாவுக்கரசு என்பவரின் ஆலோசனையின் பேரில் மரத்தடியில் பலகையால் ஆன பந்தல் அமைத்து மரத்தில் இருந்த பொந்தில் பிள்ளையாசிலையை வைத்து தினமும் வீரபத்திரர் காலையில் வந்து நீரினால் அபிசேஷிகம் செய்து திருநீறு பூசி சந்தனத்தில் திலகமிட்டு செல்வது யாவரும் அறிந்ததே அப்பகுதியில் வாழ்தவர்கள் வெள்ளிக்கிழமையில் பொங்கி படைத்து வழிபடுவது வழமையாகும்.பிள்ளையாரை சந்திவழியாக செல்லும் அனைவரும் எந்தநேரத்திலும் தரிசணம் செய்து வழிபடும் தெருப்பிள்ளையாரக இருந்தார். அவரை வழிபடும் அடியார்கள் எண்ணில் அடங்கா விக்னம் தீக்கும் விக்னவிநாயகர் அல்வா அவர்
ஆரசடி சந்தி மூன்று வீதிகள் உள்ளடக்கிய முற்சந்தியாக முக்கோண பகுதியில் பெருத்து வளர்ந்த பெரிய அரசுமரம் நாலாப்பாகத்திலும் கிளைவிட்டு வளர்ந்த சந்தியே பரவிய மரமாகக் கானப்பட்டது .வீதி அபிவிருத்தி செய்வதற்காக பாரளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அரசியல் அதிகாரியுமான அமரர் ராஜன் செல்வநாயகம் மரத்தை வெட்டி சந்தியில் சுற்று வளைவு ('ரவுன்ட வோட்' )ஒன்றை உருவாக்கி நாற்சந்தியை ஒன்றை ஏற்படுத்தி பிள்ளையாரை வெயிலி வீதியில் அமைந்திருந்த 'ராயூ கொட்டேலுக்கு' முன் இருந்த மாமரத்தின் அடியில் வைத்து விட்டனர் 'பொது வேலைத்தினைக்களத்தினா';அப்போது தெருநாய்கள் சலம் கழிக்கும் கல்லாக மாறவே. ஓருநாள் பாதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பொது போக்குவரத்து பேரூந்து அதாவது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சந்தியில் சறுக்கியதன் பயணாக பயமடைந்த பிரதேசத்தை சேர்த அமரர் ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்கள், அமரர் கற்பகம் தம்பிராஜாஅவர்கள், அமரர் தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு( பொதுவேலை தினைக்களத்தில் லிகிதராக பணிபுரிந்தவர்) ஆகியோர் பொது வேலைத் தினைக்களத்துக்கு சென்று பிரதான பொறியியளாளரை சந்தித்து சந்தியில் கோயில் அமைத்துத் தருமாறு கேட்டதன் பயனாக சூறாவளின் பின்னர் ஆலயம் அமைத்து ஆவணி ஓணத்தில் முதலாவது கும்பாவிஷேகம் அமரர் பிம்மஸ்ரீ வியாகரண சிலோன்மணி பூரண தியாகராஜ குருக்களால் செய்யப்பட்டது.
அதன்பின்னர் அமரர் சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்கள் பிளையாருக்கு வருகின்ற உண்டியல் காணிக்கைகளை சேர்த்து ஆலய பூஜைக்கு நிரந்தர பூசகர் ஒருவரை நியமணம் செய்து காலை மட்டும் பூஜை செய்வதுடன் செவ்வாய் வெள்ளிகளில் பிற்பகலில் பூஜை செய்து வந்துடன் ஆலய திருப்பணி வேலைகளும் செய்து இரண்டாவது மஹா கும்பாவிஷேகம் பிம்மஸ்ரீ க. மகேஸ்வரக் குருக்களை கொண்டு கும்பாவிஷேகம் செய்வித்தார்.
தற்போது பல அன்பர்களின் அயராத முயற்சியால் புணராவத்தணம் செயப்பட்டு மூன்றாவது முறையாக மஹா கும்பாவிஷேகம் செய்பபட்டுள்ளது.சந்தியில் இருந்து கொண்டு தம்மை நாடிவரும் அடியாருக்கு வேண்டும் வரம் அருளி வருகின்றார். 'மூர்த்தி சிறிதானாலும் கீத்தி பெரிது' இவ் ஆலயத்தில் ஆரம்பகாலத்தில் அமரர் வீரபத்திரரின் பக்தியும் வைராக்கியமும் அயராத சேவையும் என்று மறக்கப்படவோ மறைக்கப்படவோ கூடாது. ஆவரை அடியேன் நன்கு அறிவேன். ஏனெனில் பிளையார் எனது வீட்டு கதவு திறந்தால் முதலில் தரிசிப்பது அவரையே எனது நன்பன் திரு தம்பிராஜா ஈஸ்வரராஜா அமரர் வீரபத்திரர் வரமுடியாத சந்தர்ப்பத்தில் அவரும் பூஜை செய்ததை நானும் அறிவேன்.
இவ்வாலயம் இன்னும் ஆகமமுறைக்கு உட்டாத கட்டட அமைப்பை கொண்டாலும் பூசை முறைகள் ஆகமுறைக்குட்பட்டே நடைபெறுகின்றது. இப்போது எப்போதும் தரிசணமாக ..இருந்த நிலை மாறி பூசை நேரம் மட்டும் தரிசணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பூட்டப்பட்டால் இறைவனை வழிபடக்கூடாது என்பது விதி
No comments:
Post a Comment