Friday, July 28, 2017

ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம: விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் ' ஆதிசங்கரர்'

ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் ' ஆதிசங்கரர்'
கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர். படிப்பை முடித்து குலத்தொழிலான பாத்திரம், மற்றும் பொற்பணியும் கற்று வேத தத்துவங்களை உணர்ந்து இந்தியாவின இந்து மதத்தின் எழுபத்தி நான்கு உட்பிரிவுகளாக இருந்தை ஒன்று சேர்க்க எண்ணி இந்தியாவின் எல்லா மாhநிலங்களிலும் உள்ள கோவில்களுக்குச் சென்று பாடியும் பல மடங்களை சீர் செய்தும் சில மடங்களை அமைத்தும் மரகத லிங்கங்களை செய்து சில கோவில்களில் பிரதிஷ்டை செய்தும். ஸ்ரீ சக்ரம் செய்து பல கோவில்களில் பிரதிஷ்டை செய்தும் போலிப் பிரிவினை வாத மதவாதிகளை வாதிட்டு தன்னுடன் சேர்த்து கொன்டும் ஆறுமதங்களாக மட்மே சுருக்கி அமைக்க முடிந்தது. அதனால் அவரை '|ண்மதஸ்தாபகர்'; என்று போற்றப்படுகின்றார். அவர் பாடிய பாடல்கள் தொகுப்புக்கு 'ஸெளந்தரியா லஹரி' என போற்றப்படுகின்றது. அவர் சில அற்புத சித்துக்களும் செய்துள்ளார். சிவமதத்தின் அறுபத்தி நான்கு நாயன்மார்களிலும் சேர்க்கபடாமலும் ஆழ்வார்களிலும் சேர்க்கப்படாமலும் பதினென் சித்தர்களிலும் சேர்க்கப்படாமலும் நடுநாயகமாக உள்ள பிரம்ம மதத்தின் கருத்துக்களை உணர்ந்தவர்களால் போற்றப்படுகின்றார். ஆதிசங்கரரின் முழு விபரமும் 'சங்கரர் விஜயம்' என்னும் பழைய நூலிலும். 'விஸ்வகர்மப் பிராமண வம்சப் பிரகாசிகை' என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம். இவரே காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய பீடத்தின் ஸ்தாபகருமாவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'இராம சுனார் ஆச்சாரியார்'
கி.பி 1580-ம் ஆண்டில் விஸ்வப்ராமண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் சந்திரசேகர சர்மா மரகதாம்பிகை தம்பதிகளுக்கு இராம சுனார் ஆச்சாரி மகனாகப் பிறந்தார். இவர் பொற்பணி செய்து அம்பிகையை வழிபட்டு வந்தார். இவர் பேரரசர் அக்பரின் அரன்மனைக்கு தேவையான ஆபரணங்களை செய்து கொடுப்பது வழக்கம். அதில் சிறிதளவு தங்கத்தை பெற்று அதை விற்று அம்பிகைக்கு ஆலயம் அமைக்கத் தொடங்கினார். ஒருமுறை அக்கபர் ஆபரணங்களை நிறுக்க எண்ணி தன் மகளையும் அங்கு அழைத்து வந்தார். நிறுவையில் தங்கத்தை வைத்த போது அம்பிகையை எண்ணி வேண்டுதல் செய்த போது. நிறுவையில் ஒரு தங்க பொம்மை இருக்கக் கண்ட குழந்தை எனக்கு அந்த பொம்மை வேண்டாம் என்று அழுத போது அக்கருக்கு அது தெரிய வில்லை நிறை சரியாக இருந்தது. பின்னர் விடையத்தை அறிந்த அக்பர் அம்பிகையின் ஆலயம் கட்டி நிறைவை பெற ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்தார். இந்த சிறப்பை போற்றும் வகையில் அவரின் படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் விபரம் அறிய 'இராம சுணார் சரிதம்' என்ற நூலைப்படித்து விபரம் அறிக

No comments:

Post a Comment