Friday, July 28, 2017

ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம: விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'ஸ்ரீ போகாமாமஹரிஷி'

ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'ஸ்ரீ போகாமாமஹரிஷி'
கி.பி 8-ம் நூற்றாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் விஸ்வப்ரம்மண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் போகர் பிறந்தார். பன்மொழியும் கற்று குலத்தொழிலான பொற்பணியைச் செய்து மருத்துவம், சோதிடம், யோகம், வானசாஸ்திரம், தொழில் வரலாறு, மாயாயாலம், ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பலநூட்கள் எழுதியுள்ளார் அவற்றில் போகர் ஏழாயிரம், போகர் பன்னிரண்டாயிரம் என்பன சிறப்புப் பெற்றது. மேலும் கவுரி பாஷாணம், வீரம், பூரம், லிங்கம், மனேசிலை, பாதரசம், அரிதார, துத்தம், காபி என்னும் நவ பாசாணத்தில் பழனி முருகன் சிலை செய்து செய்துள்ளனர். அம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிருதம் காயகற்பமாக இன்றும் கருதப்படுகின்றது. மேலும் அவர் சீனநாட்டுக்கு சென்று பல அற்புதங்கள் செய்தார். இவர் இன்றும் சீனமக்களின் மனதைக்கவர்;தவர். அவரின் வழிமுறைகளை நன்கு பயன்படுத்தியும் அவருக்காக போகர் தினம் என விடுமுறையும் அனுசரிக்கின்றனர். அவர் சாதிமதபேதம் இன்றி அனைவருக்கும் வழிகாட்டியவர். அவரின் சீடராக வேட குலத்தைச்சேர்ந்த ஸ்ரீ புலிப்பாணி முக்கிய சீரடாவார். போகர் சமாதி பழனியில் உண்டு அவர் சித்தர்களில் பிரதானமானவராவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'பொன்மணித் தட்டார்"
கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிப சிவஜோகி வாழ்ந்து வந்தார். அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமாணமாக விற்றுப் பெறுவார். இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக பெண்கள் கூடுவர் அவர்களில் இருவருக்கே மணி கிடைக்கும். இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பென்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. இச்சமயம் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பிகட்டிவந்த ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது கலங்கி இருந்த வேளை தன்னை அறிமுகப்படுத்தா வகையில் தினமும் வேலைகளை கண்டு வருபவர்; பொன்மணி தட்டார். அன்று சிப்பின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை பொன்மணிதட்டார் காட்ட அதை வாங்கி கோபுhரத்தில் வைத்தார்கள்;. பின்னர் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாத போகவும் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. கும்பாவிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ' உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்' என்ற இறைவனின் அசரீதியாக உணர்ந்திட்ட மன்னன். மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதமாகும். இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல். கோபுரத்தின் மேல் இருப்பதாகும். பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது புரியவில்லை என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை அனுப்பிவைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூற அவர் நானோ சாதாரண வயோதிபன் அரசரிடம் எனக்க ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறிவிட அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதான கேட் அசரீதி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார். அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றர். அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழி;தவாறு கட்டி முடித்து. எட்டாம் நாள் மன்னர் அவட்வீட்க்குச்சென்று அழைத்து வந்தனர். திருக்குளத்தினுள் செல்ல அரசன் தெப்பம் உள்ளதென அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றோருர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அவிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடை;துள்ளது.
தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினபலும் மகா சிவராத்திரியன்று குருபூஜை நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் சிறப்பினை 'விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்' என்ற பழைய நூலிலும். 'பொன்மணித்தட்டார் சரித்திரம்' என்னும் நூலிலும், 'படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்' என்ற நூலிலும் காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'வீர கவிராயர் (வீரசாமி ஆச்சாரி)
பாண்டியநாடு நல்லூர்க் கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் கி.பி.1524-ம் ஆண்டு பிறந்து பொற்பணியைச் செய்யும் பன்மொழி புலவராகத் திகழ்ந்தவர். படிக்காசு புலவரை எதிர்த்துப்படி வெற்றி கொண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தி சத்திய வாழ்க்கை முறை அமைய வழிகோலிய 'அரிச்சந்திர புராணம்' என்ற நூலை இயற்றியும் சமகாலப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றும் சிறப்புடன் வாழ்தவர்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'இராமலிங்க ஆச்சாரியார்'
கி.பி 1815- ம் ஆண்டு சேலம் ஜில்லா நமக்கல் தாலுக்கா எருமைப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைச் செய்து வந்தார். 1843 – ம் ஆண்டு சுப்பராய ரெட்டி, நாணய செட்டி, நாராயண ரெட்டி, மாறாடி ரெட்டி, பள்ளி தாண்டவப்படையாசட்சி, இராமலிங்கப் படையாச்சி ஆகியோர் ஒன்று சேர்;து தோட்டி மொட்டையன் என்ற தாழ்த்தப்பட்டோரை வைத்து இராமலிங்க ஆச்சாரியரை அடித்து பூணூலை அறுக்கச்செய்தனர். அதனால் பாதிக்கப்பட்ட அவர் மானநஷ்ட வழக்கு தொடுத்து தன்குலப்பெருமைகளை விளக்கி தான் மீண்டும் பூணூலை அணிவதற்கு உண்டான செலவுகளை அபராதமாக பெற்று குலப்பெருமையை நிலை நாட்டியவர்கள். இதனை விரிவாக நோக்க 'சேலம் ஜில்லா நீதிமன்றத் தீப்பு' என்ற நூலில விரிவாகக்; காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'கருவூரர்'
கி.பி. 10 –ம் நூற்றாண்டில் கருவூரில் விஜ்வ பிராமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைக் கற்று சிதம்பரக்கோயிலில் பூபாலப் பாண்டியன் வருப்படி தில்லை நடராஜர் சிலையினை கருவூர் தேவர் என்னும் ஆச்சாரியிடம் பொன்னால் செய்துவரச் சொன்னார். கருவூரர் தேவர் அரசனின் விருப்பப்படி சாஜ்திர முறைப்படியும் மனுவிதியின் படியும் காலத்தில் மக்களின் மனநிலை அனுசரித்துப் பத்தி ஏற்படுமாறும் திருட்டு விடாதபடியும் கோடிமாற்று என்ற கணக்கில் நிறமாற்றுப் பொன்னினால் ஆனசிலையை செய்து மன்னனிடம் கொடுத்தார்.
மன்னன் சிலையைக்கண்டபோது செம்பு நிறத்தில் இருப்பதைக்கண்ட அரசன் கருவூராரிடம் விளக்கம் கேட்க அதற்கான காரணகாரியத்தை கூற மன்னனும் மந்திரியும் ஏற்காது சிறையில் இட்டனர் கருவூத் தேவரை.
அதன் பின்னர் சருவு_ர் தேவர் சிலையின் ஒருபகுதியை வெட்டி உருக்க முழுவதும் தங்கமாக இருக்கண்டு இரசன் மகிழ்து சிப்பியின் பெது நலநன பாராட்டி போற்றி விழா எடுத்தான். இதனை போகர் ஏழாயிரம என்ன நூலில் மூன்றாவது சந்தக்கண்ட பாடலில் நடராஜ விக்ரகம் என்பதில் காண்க. போகரின் சீடகளில் முதன்மையானவர் கருவூர் தேவர்.
மேலும் தஞ்சைப் பெரும் கோயிலில் லிங்கத்தின் அஷ்ட பந்தனம் என்னும் மருந்து கூடாது போனதால் தன்வாய் தம்பூலத்தையும் சேர்த்துக் கூட்டி விரதிஷ்டை செய்யப்பட்டது. இறைவனின் மேல் திருவிசைப்பா படியருளியவர்களில் இவரும் ஒருவர் இதனால் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்.
தஞ்சை பெரும் கோயிலில் மேல் பிரகாரத்தில் ஆலயம் அமைத்தது 1926 –ம் ஆண்டில் மீண்டும் பெரிது படுத்தியும் கருவூத் தேவருக்கு பஞ்சலோக சிலை செய்து குப்பாவிசேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் 'தஞ்சைப்பெரிய கோயில் வரலாறு' என்னும் நூலில் காண்க.

No comments:

Post a Comment