சிவாக்கியர் ஒரு புரட்சிகர சிந்தனையாளர் அவர் உருவ வழிபாடு, தலயாத்திரை, மதவாதம், வேதம் ஓதல் சாதியாசாரம் என்பவற்றுக்கு அப்பால்பட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன். உள்ளமே கோயில் என்று வாழ்ந்து காட்டியவர். அவருடைய பாடல்கள் அணைத்தும் அதைச்சாந்தவையே
காப்பு
அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன்
சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஒடவே
கரிதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைமகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன்
சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஒடவே
கரிதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைமகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
நமசிவய மந்திரம் ஆதியந்தமானது பன்னிரு கோடி தேவர்கள் அன்றுரைத்த மந்திரம் இந்த அரியதோர் எழுத்தை உன்னிடம் சொல்வேன் . அது சிவவாக்கியம் தோசங்களையும் மாயையையும் அகற்றக்கூடிய மந்திரம் என்று இயம்புகின்றார்.
அசஷர நிலை
ஆன அஞ் செழுத்துளே
அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே
ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே
அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே
அடங்கலாவ லுற்றவே
அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே
ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே
அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே
அடங்கலாவ லுற்றவே
சரியை விலகல்
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
என்றார் எங்கு ஓடியும் காணாத நாதனை தன்னுள் நாடிடில் தானாக கண்டிடலாம் என்று இயம்புகின்றார் சிவாக்கியர்
யோநிலை
உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலாவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலாவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.
என்றார். சுழுணா நாடியில் வாயுவால் இந்திரியத்தை கபாலத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் ஏற்ற வல்லவருக்கு மேனி பாலனாதுடன் மேனி சிவந்து இறை அருள் கிட்டும் . இது உண்மை என்று இயம்புகின்றார். தாம்பத்தியம் தவித்து பிரமச்சாரியம் கடைப்பிடித்து எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஆக்ஞாவில் செலுத்திட ஞானத்தை பெறலாம் என்பதை சிவாக்கியர் இங்கு குறிப்பிடுகின்றார்.
தேக நிலை
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன்
நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும்
என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்வுடல்
சுடலை மட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக்
கொடுப்பரே.
நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும்
என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்வுடல்
சுடலை மட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக்
கொடுப்பரே.
என்றார் அழகான தன்மனைவியை மற்றோருவன் விரும்பினால் அவனை தண்டிக்க துணிவான். காலன் வந்து கவர்ந்திட்டால் நாறும் இந்த உடலை சுடுகாட்டில் இட்டுச்செல்வான். இதுதான் தேகநிலை. இதை உணரார் தேகத்துக்கு முக்கியத்தும் கொடுப்பேர் நிலை. தேகத்தினுள் உள்ள இறைவனுக்கு முக்கியத்தும் கொடுத்தால் காயம் கற்பமாகும். அழியா அழகு பெறும். தேகசுகம் தற்காலியமானது. விரைவில் அழித்துவிடும்.
ஞான நிலை
என்னில் இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னில் இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னில் இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னில் இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
என்னில் இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னில் இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னில் இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
என்றார் என்னுள்ளே உள்ளதை யான் அறியேன். அறியும் அறிவு தந்தபின் அறிந்தேன் என்னை. யார் அதை அறியவல்லாரோ அவரை அவர் அறிவார். இவ் அறிவே ஞானம். தன்னை தாமே அறியும் அறிவு ஞானம். உலகை அறியும் ஞானம் படைப்பை அறிவதே தவிர அது ஞாமாகாது. அது அஞ்ஞானத்துக்கு வழிவகுக்கும். சிவாக்கியர் எவ்வளவு அழகாக நாலு வரியில் இயம்பியுள்ளார்.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாறு தெங்ஙனே.
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாறு தெங்ஙனே.
எனது நினைப்பு உன்னை அன்றி வேறு இல்லை நினைப்பும் மறப்பு மாயை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிகளுக்குகெல்லாம் அனாதியாய் என்னுள் நீ உன்னுள் நான் என்று இயம்புகின்றார் சிவாக்கியர் இறைவன் வேறு எங்கும் இல்லை எம்முள் என்று உறுதியாக கூறுகின்றார்.
மண்ணும் நீ விண்ணும் நீ
மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ
இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள்
ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம்
நண்ணுமாறு அருளிடாய்
மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ
இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள்
ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம்
நண்ணுமாறு அருளிடாய்
அரியும் அல்ல அயனும் அல்ல
அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக்
கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல
பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர
தூரமே
அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக்
கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல
பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர
தூரமே
என்றார் அரியும் அயனும் அறியா இறைவன் அவன் நிலம், நெருப்பு, ஆகாயம் கடந்த நின்றதன் காரணம் ஆணவத்தால் இயம்புகின்றார்.யார் பெரிது எற்ற போட்டிக்கு முடிவு கட்ட துரிதம் கடந்து நின்றார். இதன்மூலம் இறைவனை ஆணவத்தால் அடையமுடியாது. அவனை அவனால் அறியும் அறிவால்தான் அறியமுடியும் என்று இயம்புகின்றார். இது அடிமுடிக் கதையை கூறுகின்றார்.
யோகநிலை பற்றி சிவாக்கியர் பாடல்
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீர்க்குளியல் வேதவாக்கியம் கேளுமின்
அநருப்பும் நீரும் உம்முள்ளே நினைத்துக்கூற வல்லிரேல்
சுருக்க அற்ற சோதியை தொடந்து கூடல் ஆகுமே
விருப்பமோடு நீர்க்குளியல் வேதவாக்கியம் கேளுமின்
அநருப்பும் நீரும் உம்முள்ளே நினைத்துக்கூற வல்லிரேல்
சுருக்க அற்ற சோதியை தொடந்து கூடல் ஆகுமே
என்றார்.
வெளியில் ஞானத்தை தேடி என்ன பலன் உன்உள்ளே இருக்கின்றதடா எல்லாம் தெரியாது திரிகிறான் அறியாமையிலே என்பதை உணர்து கின்றார் சித்தர்பாடலிலே
பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டில்லாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமள்ள வாய்புதைந்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே
நாட்டில்லாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமள்ள வாய்புதைந்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முள்ளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சக்திமுத்தி சித்தியே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முள்ளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சக்திமுத்தி சித்தியே
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம்
அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள்
அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார்
அகத்துள்ளேஇருக்கவே
காலன் என்று சொல்லுவீர்
கனாவிலும் அதில்லையே
அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள்
அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார்
அகத்துள்ளேஇருக்கவே
காலன் என்று சொல்லுவீர்
கனாவிலும் அதில்லையே
சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துள்ளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே
சேமமாக ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துள்ளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே
என்றார் சிவாக்கியர் வேதங்களை கற்பதாலும் சாத்திரங்கள் கற்பதாலும் ஆசாரங்களை கடைப்பிடிப்தாலும் ஆணவமிகுதியே. அவை பேதங்களையே உருவாக்கும். அவை ஆன்மாவுக்கு உரமாகாது ஆன்மா புனிதமானது பேதமறியாதது அது எல்லாம் அறிந்தது அது அறிய எதுவும் இல்லை. அதுவே எல்லாம் தந்தது. அதனாலேயே இறைவன் 'வேதமாகி வெண்நூல்பூண்டு வெள்ளை எருதேறி' என்று ஞானசம்பந்தர் பாடி அருளினார். பிராமணர் என்போர் மற்றவரை தன்னிலும் குறைவாக மதித்து மற்றவரை வேதனைக்குள் ஆக்கின்றனர். இவர்கள் அறிந்த வேதம் அது தான் அதற்காகவே சிவாக்கியர் இதை எல்லாம் ஞானவிரேதமாக கருதினார். இவை ஞானத்தை அழித்து அஞ்ஞாத்தை ஏற்படுத்தும் அவித்தைகளாகவே கருதினார். வேதத்தையும் சாத்திரங்களையும் அறிந்தவன் அதுவாகி இறைவனை போல எல்லோரையும் சமமாக மதித்து அன்பு செலுத்தி அதரவாய் இருந்து எல்லோரையும் வழிநடத்துவதையே சிவாக்கியர் இயம்பியுள்ளார்.
No comments:
Post a Comment