Friday, July 28, 2017

புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.

புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.
மார்க்கசகாய ஆச்சாரி எமது வியாசபகவான் திரிமூர்திகளையும் எந்தப்புராணத்தில் இகழ்திருக்கின்றார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு.
சிவபுராணத்தில் 'ஆதிசக்தி மயம் பீஜசக்தி மயம்சிவ சிவசக்தி மயம்விஷ்ணு சர்வம்விஷ்ணு மயம்ஜகத்' இதன் கருத்து ஆதிசக்தியினிடத்திலிருந்து ஓருபீஜம் பிறந்தது. அதனுடைய வல்லமையினாலே சிவன் பிறந்தார். சிவனிடத்தில் விஷ்ணு பிறந்தார். இவ்விஷ்ணுமயம் சர்வலோகம் முழுவதும என்பதினால் சிவன் விஷ்ணுவுக்கு தந்தை அல்லவோ?
'மயோனிர்ஹர்ஹத்ப்ரம்ஹஸ்பின்கற்பேகதாம்ஹம்'
இதன் கருத்து: என் யோனியில் மஹாப்ரம்மம். அதிலிருந்து நான் உலுவாகி விடுகின்றேன் என்பதாம்.
'குணேப்யசேஷாப்ய மாணேப்யத்iயேப்தேவா பிஜக்ஞீறே ஏகமூர்திதரயோபாகா ப்ரம்மாவிஷ்ணுமஹேஸ்வர'
என்பதின் கருத்து: ராஜச தாமத சாத்வீக குணங்களினால் ஆதிமூர்த்தியும், அந்த ஏகமூர்த்தியினால் திரிமூர்த்திகளும் தோன்றியது என்பது. இங்கு இவ்விரண்டு சாஸ்திரங்களில் ஒன்றில் ஏகமூர்தியானவர் ஆதியிலே யாதொரு குணமும் இல்லாமல் ஏகமாயிருந்தார் என்றும், மற்றுமோர் சாஸ்திரத்தில் முற்குணங்கள் உள்ளவரானார் என்றும் சொல்லி இருப்பத்னாலே அநேக ஆசேஷபனைகளுக்கு இடமாயிருக்கின்றதல்லவா? அது எப்படி என்பீரோ? அந்த மூர்த்தி குணமில்லாதவர் என்றால் அவருடைய பரத்துவ மகத்துவத்துற்குக் குறைவும், அவரது பூரணத்தன்மைக்குப் பின்னமும் ஆகின்றதல்லவோ! ஏனென்றால் ஓரு சாஸ்திரம் நிhக்குணமென்றும், மற்றொரு காஸ்திரம் முக்குணம்ரென்றும் சொன்னால் அது மகாபேதமல்லவோ? அதை யோசித்தால் தெரிகின்றதல்லவோ?
மச்சபுராணம் இந்த ஆதிமூலத்துக்குரிய திரிகுணாத்துமாவின் உற்பத்தி காரணங்களைக் குறித்துச் குறித்து இருக்கின்ற சுலோகங்களை உமக்கு விரிக்க வேண்டுமாகில், அவை அனேகமாக இருப்பதால் மற்றைய புராணங்களில் இருக்கின்ற வழுக்களில் சிலவற்றை மாத்திரம் இங்கே சுருக்கமாக காட்டுவேன். அவைகளில் ஒரு புராணத்திலே ஆதிசக்தியில் நின்று இந்ததிரிமூர்த்திகள் தோன்றினார்கள் என்றும். அந்த ஆதிசக்தி இவர்களை மோகித்துத் தனக்கே இவர்களைப் புருசர்களாக்கிப் பாவித்துக்கொண்டார்கள் என்றும். பகவதத்திலும் இன்னும் சிலபுராணங்களிலும் விஷ்ணுவுடைய நாபியிலே ஒருதாமரை தோன்றி அதிலிருந்து ப்ரம்மா உற்பவித்தார் என்றும். சொல்லப்பட்டிருக்கின்றது. அது அப்படி என்றால் ஆதியிலே ப்ரம்மா முந்தி தண்ணீரை சிருட்டித்துத் தன்னுடைய இந்திரியத்தை அந்ந தண்ணீரில்விட்டார். அது முட்டையாகி மிதந்து, அந்த முட்டையை முற்கண்ணனாகிய சிவபொருமான் தோன்றி உடைத்தார். அந்த ஷிணமே குற்றமில்லாத பஞ்சபூதங்களும் உண்டாகினவாம்.
மற்றொரு புராணத்திலோ ஆதிசக்தியிலிருந்து ஒரு விந்து தோன்றி அதிலிருந்து சிவன் தோன்றினார் என்றும், மச்ச புராணத்திலே ப்ரம்மாவிலிருந்து சிவன் தொன்றினார்ரென்றும். இன்னம் இப்படிப் பலவிதஞ் சொல்லி இருப்பதால் எது மெய் எது பொய் என்பதை யார் கிரகிக்கக்கூடும்? இதனால் சகலமும் பொய் என்றே தெளிவாய் விளங்குகின்றது.
'ததோசிருஜத்வாமதேவம் திரிபுண்ரவாதாரிணம்'
இதன் கருத்து: ப்ரம்மம் திரிபுண்டதாரியென்கிற வாமதேவனை உண்டாக்கிகினானென்பதே.
நரதபுராணத்தில் நாராயணனுடைய வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா தோன்றினாரென்றும் இடது பக்கத்திலிருந்து விஷ்ணு தொன்றினார் என்றும், மத்தியில் சிவன் தோன்றினார் என்றும் சொல்லிருக்கின்றது.
இலிங்கபுராணத்தில் இவ்வுலக அண்டத்திலிருந்த சிவனானவர் ரூபீகரித்துப் பிறகு தனது இடது பக்கத்திலிருந்து விஷ்ணு இலக்குமி என்பவர்களையும் தனது வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா சரஸ்வதி என்பவர்களையும் உண்டாக்கினர் என்றும் சொல்லிருக்கின்றது. இப் புராணத்திலேயே மற்மோர் பக்கத்தில் ப்ரம்மா சவிருஷ்டிக்கிரியை முடிக்கச் சக்தியில்லாமல் கண்ணீர் விட்டெழுந்தானென்றும், அந்த கண்ணீர்களில் ருத்திரன் தோன்றி அந்த திருஷ்டிக்கிரியைத் தானும் முடிக்கக்கூடாமல் வருந்துவதை அவன் தகப்பனாகிய ப்ரம்மா கண்டு அவனுக்குத் துணை செய்ததாகவுஞ் சொல்லியிருக்கின்றது.
மார்க்கண்டபுராணத்தில் லட்சுமியிலிருந்து விஸ்ணுவும், காளியிலிருந்து சிவனும், சரஸ்வதியிலிருந்து ப்ராமாவும் தோன்றினார்களென்றுஞ் சொல்லிருக்கின்றது.
வராகபுராணத்தில் திரிமூர்த்திகளிலிருந்து சக்தி தோன்றி அந்த சக்தியிலிருந்து லட்சுமி, காளி, சரஸ்வதி மூன்றாயினார்கள் என்றும் இப்படிபலவிதமாகச் செல்லிய பலபுராணங்களில் எதை மெய் என்று சொல்லக்கூடும்? இவ்வித மாறுபாடுகள் அனேகம் வியாசர் முதலிய ரிஷிகள் தங்கள் புராணங்களிற் கற்பனை செய்திருக்கின்றபடியால் இதை மெய்யென்று நம்புகிறவர்களைப் பேதைகளெனறே சொல்லப்படும்.
'சர்வவ்யாபீ'பகவான் தஸ்மாத்ஸர்வ கதஸ்சிவ'
இதன் கருத்து: அந்த பகவானென்னப்பட்ட சிவன் சர்வவியாபியபகி எவ்விடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்பது பகவதத்தில் இதற்கு முழு விரோதமாயிருக்கின்ற சுலோகத்தைக்கேளும்
'பவவ்ரததாயேசா ஏசதாசசமநோவரத:
பாஷாண்டின: தேபவந்த சஸ்சாஸதி;ந்பரிபந்தன:
முழுசஷீவோகோரரூபந த்வாபூதபதிர்நதா:
நாராயண பளாசாந்தா பஜந்திஹ நசூயவ:
இதன் கருத்து: சிவனைப் பூசித்துத் தியானித்தவர்களைப் பாஷாண்ட் பதிதர்களென்றும், மோசஷம் அடையார்களென்றும் நாராயணனைத் தியானிப்பவர்கள் மோசஷத்தை அடைவார்கள் என்றும் சிவனை இகழ்ந்தும் ஹரியைப் புகழ்ந்து பேசியிருக்கின்றது பதுமபுராணத்தில் சிவனை இகழ்ந்திருக்கின்றது.
'விஷ்ணுதர்ஸனமாத்னே சிவத்ரோஹப்ரஜாயதே
சிவத்ரோஹசநீதேஹோ நரகம்யாந்த்தி தாருணம்
தஸ்மாத்தப்விஷ்ணுநாமாபி நவக்தவ்யகதாச' இதன் கருத்து: சிவத்துரோகஞ் செய்து விஷ்ணுவைத் தரிசித்தால் சிவன் உக்கிரங்கொண்டு நரகத்துக்காhக்கு வான். ஆதலால் விஷ்ணுவினுடைய பெயரை உச்சரிக்கலாகா என்பதாம். இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றதல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றார்கள் அல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
'யஸ்து நாராயணம்தேவம் ப்ரம்ஹருத்ராதி தேவதா:
சமமந்வைர்நிரொசேஷதா ஸபாஷாண்டிபவேத்பதா:
திரிமந்த்ரபகுமோக்தேநா ப்ரம்ஹணய்யேப்யவைஷ்ணவ:
நஸ்பஷ்டவ்யாநவக்தவ்யா நத்ருஷ்டவயா கதாசந:'
இதன் கருத்து: எவனொருவன் ப்ரம்மா உருத்திரனுக்கு நாராயணனைச் சமமென்று சொல்லுகிறானோ. அவன் என்றென்றைக்கும் பதிதபாஷாண்டனாவானென்றும் லட்சுமி மந்திரஞ் செபிக்கின்ற விஷ்ணு பக்தாளாகிய வேதியர்களைத் தூஷிக்காமல் ப்ரம்மக்கியானமுள்ளவரென்று போற்றிவாழ்த்திப் பணியவேண்டியது. கேட்டீரோ பஞசாங்கம் குண்டையரே சிவனை நீக்கி விஷ்ணுவைப் போற்றிப் புகழவேண்டுமமென்றும். விஷ்ணுவை நீக்கிச் சிவனைத் துதிக்கவேண்டும்மென்றும், விஷ்ணு பக்தாளைக் கண்ணாலே பார்க்கவும், தொடவும்படா தென்றும், பேசக்கூடாதென்றும், அவர்அவர்களுக்கேற்றபடி புராணங்களைக் தற்பித்த உங்கள் முன்னோர்களின் புத்தீயினத்தை என்னென்று புகழ்வேன்.
'அந்யதேவம்பரத்வேநா வாந்த்யக்ஞான மோஹிதா:
நாராயணஜகந்நாதா தேவபாஷாண்டி நஸ்மிருதா:'
இதன் கருத்து: ஜகநாதனாயிருக்கின்ற நாராயணனைப் பாக்கிலும்ட முக்கியமாயிருக்கின்ற அந்நியதெய்வமும் உண்டெண்றும் சொல்லுவார்கள் அறிவீனரும், வஞ்சகரும், பதிதபாஷாண்டரும், பாவிகளுமாவார்கள்.
'ரமதேவோமஹாதேவோ விஜ்ஞேயஸ்துமஹேஸ்வர:
நதஸ்மதித்பரங்கஸ்சித்பதம்சமதிகம்யதே'
இதன் கருத்து: மஹேஸ்வரனுக்கு மேலானவஸ்து ஓன்றுமில்லை யென்பதாம். இதில் சிவனைப் புகழ்ந்திருக்கின்றது.
'வாசுதேவம்பரித்யஜ்ஞ யேன்யதே வமுபாசதே
த்ருஷிதோஜாந்நதிதீரே கூபம்நகதிதுர்மதி:'
இதன் கருத்து: வாகுதேவனென்னப்பட்ட விஸ்ணுவை விட்டு விட்டு அந்நிய தேவனை வணங்குகின்றவன் தாகமடைந்த மதியீனனாவான். அவன் கங்கை நதியின் கரையில் உட்கார்ந்து கிணற்றை வெட்டுகின்றவனுக்கு சமமாக எண்ணப்படுவானென்பதாம். இதிலே விஷ்ணுவைப் புகழ்திருக்கின்றது.
இவ்விதமாகவே உங்கள் புராணங்கள் எல்லாம் சிவனை இகழ்ந்தும் விஷ்ணுவை புகழ்ந்துமிருப்பதால் ஒன்றுகொன்று ஒவ்வாமல் மாறுபாடாயிருப்பதென்பதற்கு மெற்சொல்லிய சில திருஷ்டாந்தமே போதுமென்றேண்ணுகின்றேன்.
இப்படி மார்க்கசகாய ஆச்சாரி வாதிட்டார். இவ்வாறன குலறுபடிகளால் மக்களிடத்தில் ஏற்பபட்ட விரோதச்செயல்பாட்டை சீர்செய்யவே கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர் 'ஆதிசங்கரர்'. அவரே 'சஷண்மதஸ்தாபகர்' என்று போற்றப்பட்வர்.
புராணங்கள் இதிகாசங்கள் வேதத்தில் சொல்ப்பட்ட விடையங்களை இலகுவாக மக்களுக்கு விளங்கக்கூடியதாக அமையும். சிறிய உண்மைகளை விரித்துக்காட்டுக் பூதக்கண்ணாடியே புராணஇதிகாசங்கள் ஆகும். அதுவே குழப்பத்துக்கு காரணமாக அமைந்தால் எப்படி வேத உண்மைகளை மக்களுக்கு கொடுப்பது. வேதங்களை விளங்கும் ஆற்றல் மகரிஷிகளுக்கும் சித்தம் தெளிந்த சித்தர்களுக்குமே முடியும். அதை ஆகமங்களாகவும் வகுத்து இன்னும் இலகுபடுத்த உபநிடதங்களாக வகுத்து இன்னும் எழிமையாக்கியதே புராணஇதிகாசங்கள். இவற்றை இப்படி குழப்பினால் எப்படி பாமரமக்கள் இதைப்புரிந்து கொள்வது. ஒரு ப்ரமம்த்தில் இருந்து வந்தால் எப்படி வேறுபடுவது. பரப்ரம்மம் எங்கள் எல்லோரிடத்தும் ஆத்மாவாக இருக்கின்றது அதற்கு எல்லாமே தெரியும். 'பம்பின் கால் பாம்பறியும்' என்போர் சான்றோர்.

No comments:

Post a Comment