Friday, July 28, 2017

ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா' நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரம்



"ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா'
நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரம்

தேவி மஹாமியத்தில் மாங்கண்டேய புராணத்தில் உள்ள தொள்ளாயிரம் மந்திரங்களில் சிறந்த மந்திரங்களாக சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஏழுமந்திரங்களாகும். இவை மிகவும் சக்தி வாய்தவை கேட்டவருக்கு கேட்ட வரம் தரவல்லவை. இதனாலேயே இந்த மந்திரங்களை "ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா' என அழைக்கப்படுகின்றது. இம்மந்திரம் புரட்டாதி மாதத்தில் வரும் சாரதாநவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது சிறந்தது. எனைய காலங்களில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இராகு காலங்களில் பாராயணம் செய்தால் அதன் பலனை அடைய முடியும். இறைவனிடம் சரணாகதியடைந்தால் எல்லாமே சரியாக நடைபெறும். எதையும் கேட்கவேண்டியது இல்லை. எல்லாம் நாம் செய்யும் செயலின் பலன் தான். ஆனால் வழிபாடு என்பது நம்மை சரியான வழியில் வழிப்படுத்த துணை செய்யும். இதனை சான்றோர் 'தலையால் போவதை தலைபாகையுடன் போவதாக' பழமொழி கூறியுள்ளனர்.

ஆசமனம்:
சுக்லாம்பரதரம் .......... சாந்தையே ||
ப்ராணாயாம: ஓம் பூ : பூர்ப்புவஸ் ஸீவரோம் ||
மமோபாத்த............
தியானம்
மாதர்மே மதுகைடபக்க்னி மஷிஷப்ராணாபஹா -
ரோத்யமே
ஹேலா - நிர்மித – தூம்ரலோசனவதே ஹேசண்ட –
முண்டார்த்தினி |
நி: சோஷீக்ருத – ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்ப்பாபஹே
சும்ப்பத்த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே
நமஸ்தேளும்பிகே ||
(தாயே! மதுகைடபர்களை வதம் செய்பவளே மஹிஷாஸீரனுடைய பிராணனைப் போகியவளே! வினையாட்டாக தூம்ரலோசனனை வதைத்தவளே! சண்டமுண்டர்களையழித்தவளே! ரக்தபீஜாசுரனை நிர்மூலமாக்கியவளே! சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே! நித்தியமானவளே! துர்க்காம்பிகையே! உன்னை நமஸ்கரிக்கின்றேன். விரைவில் எனது பாவத்தைப் போக்கியருள்வாய்)
ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா |
பலா – தாக்ருஷ்ய மோ ஹாய மஹா மாயா
ப்ரயச்சதி || 1 ||
(மஹாமாயா தேவியான பகவதி வலுவில் கவர்ந்து மோஹத்தில் செலுத்துகிறாள். அவளேதான் அசைவதும் அசையாததும்மான இவ்வுலகெல்லாம் சிஷ்டிக்கப்படுகின்றது.)
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி – மசேஷஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி |
தாரித்ர்ய – து: க்க – பய - ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார – கரணாய ஸதார்த்ர – சித்தா || 2 ||
(கடத்தற்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்கயுளுடைய பயத்தையும் போக்குகின்றாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய் ஏழ்மையும்;இதுன்பத்தையும் பயத்தையும் போக்குபவளே! ஏல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவள் உன்னைத் தவிர யார்உளர்?)
ஸர்வமங்கல – மாங்கல்யே சிவே ஸர்வார்த்த - ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோளுஸ்துதே || 3 ||
(எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய்! விளங்குபவளே! ஏல்லா நன்மைகளையும் அளிப்பவளே! ஏல்லா ஆசைகளையும் பூத்தி செய்பவளே! சரணடைதற்குரியவளே முன்று கண்களை யுடையவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)
சரணாகத தீனார்த்த – பரித்ராண – பராயணே |
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோளுஸ்துதே || 4 ||
(தன்னை சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே! ஏல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வ - சக்தி - ஸமன்விதே |
பயேப்ப்யஸ் - த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோளுஸ்துதே || 5 ||
(அனைத்தின் வடிவமாகவும் அனைத்தையும் ஆள்பவளாகவும் சக்தியனைத்தும் விளங்கும் தேவியே பயங்பரமானவற்றினின்று எங்களைக் காப்பாய் துக்காதேவியே! உனக்கு நமஸ்காரம்)
ரோகானசேஷா- னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான் |
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி || 6 ||
(நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களும் அறவே போக்குகின்றாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் அறவே அழிக்கின்றாய் உன்னை அண்டிய மனிதருக்கு விபத்து கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ? )
ஸர்வா – பாதா – ப்hசனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி |
ஏவ மேவ த்வயா கார்ய – மஸ்மத்வைரி – விநாசனம் || 7 ||
(அகில நாயகியே இவ்வாறே முவுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்)
மந்த்ரம் :
'ஓம் ஐம் ஹ்ரீம் க்லிம் சாமுண்டாயை விச்சே'
(ஜம் - சித்தஸ்வரூபிணியான மஹாஸரஸ்வதி
ஹ்ரீம் - சிதமாத்மஸ்வரூபிணியான மஹாலஷ்மி
க்லிம் - ஆநந்தரூபிணியான மஹாகாளி ஆகிய எல்லாத்தீமைகளையும் சமனம் செய்யும் நிர்விகல்பரூபிணியான உன்னை இதய கமலத்தில் தியானிக்கின்றேன்.)

No comments:

Post a Comment