பரமஹம்சர் என்பவர் யார் அவர் எப்படி இருப்பர் என்பது இன்று பலருக்கு தொரியாது. எம்மைப் பொறுத்தவரை குருதேவர் ஸ்ரீராமகிருணஷ்ரை ராமகிஷ்ண பரமஹமசர் என கேள்விப்பட்டுள்ளோம். அவர் தன்னை யாரிடமும் கடவுளாக வெளிப்படுத்தவில்லை. அவரது சீடக்களும் பக்தர்களும் கடவுளாக கண்டனர். கற்பக தரு தரிசனத்திலே அவரது பிதமசீடரன சுவாமி விவேகாநந்தரிடம் ராமனும் நானே கிருஸ்ணனும் நானே என்றார். அவர் அன்பே சோருபமானவர். எளிமையான வாழ்க்கை வாழ்தவர். பிற்காலத்தல் அவர் பூணுல் சிகை போன்றவற்றை வெறுத்தார். சாக்கடை நீரையும் தன்னையும் ஒன்றாக மதித்தார். உடலை உயிரற்ற உடலுக்கு சமாக மதித்தார். கழிவறை தொழிலாளியின் மலவாசலை தன் தலையால் சுத்தம் செய்தார். எச்சில் இலையில் தானும் நாய்யும் ஒன்றாக போஜணம் புசித்தார். பணத்தை தன் கையால் ஒருபோதும் தொடவில்லை. இவ்வாறு நான் என்பதை தன்னிலிருந்து கொன்றார். இவரே பரமஹம்சர்.
உபநிஷத்தில் இருபதில் பரமஹம்ஸோபநிஷத்தில் பரமஹம்சர் மார்க்கம் தொட்பாக குறிப்பிடுகையில் 'மார்க்கஸதோஷாம் கா ஸ்திதிரிதி நாரதோ பகவந்தமுபேத்யோவாச.............' என்று தொடங்கும் சுலோகத்தில் நாரதர் பகாவானிடம் சுக்லயஜூர் வேத்தில் வினாவினார். பரமஹம்கர்களாகிய யோகிகள் மார்க்க மென்ன? அவர்கள் கதி என்ன? இவ்வினாவுக்கு பகவான் கூறியதாவது. பரம்மஹம்சஸ மாக்கம் உலகில் அடைதற்கரியது. அவர் பரவலாக இல்லாது எங்கோ ஒருவ் இருப்பார். அவர் என்றும் புனிதமானவர்.அவரே வேத புருஷர் என்று அறிவாளிகள் கருதுவர். அவரே மகாபுருசர். அவருடைய மணம் எப்போதும் என்னில் லயித்திருக்கும். நானும் அவரிடம் நிலைத்திருப்பேன். அவர் தனது புத்திரர், மித்திரர், மனைவி, உறவினர்கள் ஆகியோரைத் துறந்தவர். சிகை, பூணூல் ஆகியவற்றைக் களைந்து, எல்லாக்கருமங்களையும் வேதம் ஓதுதலையும் கூட விட்டுவிட்டு இந்தப் பிரமண்டமாகிய உலகத்தையே துறந்து சரீரத்தின் உபையோகத்துக்காகவும் உலகத்தின் உபையோகத்துக்காகவும் கோவணமும், துணியும், ஒரு தடி மட்டும் வைத்திருப்பார். அதுவும் கூட முக்கியமன்று.
இரண்டாவது சுலோபத்தில் ' ந தண்டம் ந சிகா ந யஜ்ஞோபவீதபவீதம் ந.........' என்று தொடங்கும் சுலோபத்தில் தடியுமன்று, சிகையுமன்று, பூணூலுமன்று துணியும் கூட இல்லாமல் பரமஹம்சர் சஞ்சரிப்பார். அவருக்குக் குளிரும் வெப்பமும் இல்லை. இன்பமும் துன்பமும் இல்லை. மானமும் அவமானமும் இல்லை. தோன்றுதல், வளர்தல், மாறுதல் போன்ற ஆறு வாழ்க்கைக்கலைகள் இல்லை. நிந்தை, கர்வம், மாச்சரியம், இடம்பம், ஈர்ஷை, அஸூயை, அஹங்காரம் முதலியவை இல்லாமல் அவர் தனது உடலையும் பிணமெனக் கருதுவர். சந்தேகம், மெய்அறிவு ஆதலியவற்றுக்கு எந்த உடல் காரணமாக இருந்ததோ அந்த உடல் பற்றிலிருந்து முற்றும் நீங'கி விட்டமையினால் அந்த அழியாத மெய்யறிவுடன் ஆத்மாவாகிய தன்னிடமே நிலைத்தது. ' அசையாது அமைதியாய் இரண்டற்ற ஆனந்தமாய், அறிவே உருவாய் நான் இருக்கின்றேன். அதுவே என்னுடைய பரமபதம் அதுவே சிகை, அதுவே பூணூல்' என்று காண்கின்றார். பரமாத்மாவும் ஆத்மாவும் ஒன்றே என்ற ஞானத்தால் அவற்றினிடை வேற்றுமை அழிந்து விட்டது. அந்த ஸந்தியே அவருடைய ஸந்தியோபாஸனை.
மூன்றாவது சுலோபத்தில் 'ஸ்ர்வான் காமான் பரித்யஜ்ய.........' எல்லா ஆசைகளையும் அறவே ஒழித்து உத்தமமான அத்வைத்தில் நிலைபெற்று ஞான தண்டத்தைத் தரித்தவர் எவரோ அவரே ஏகதண்டீ எனக் கூறப்படுவர்.
நான்காவது சுலோகத்தில் 'ஸர்வேஷாமிந்த்ரியாணாம் கதி...........' எல்லா அந்திரியங்களின் போக்கையும் அடக்கி எவர் ஆத்மாவிலே நிலை பெற்று, பூர்ணானந்தமாகிய ஒரே உணர்வுடையவராய் இருப்பவராய் 'ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்ற அபரோசஷானுபூதியுடையவராய் இருப்பவரோ அவர் க்ருதக்ருத்யர், வாழ்க்கைப் பயனை எய்தியவர் என்று உபநிஷத்துக் கூறுகின்றது.
எனவே பரமஹம்சர் என்பவர் இதிலிருந்து தன்னை யாரும்அறியாதவராக அறிந்தவக்கே அறியத்தக்கவராக இருப்பவரே என்பது புலணகின்றது. அவர் உடலை துச்சமாக மதிப்பவர். அதை ஒரு நடைப்பிணமாகவே கருதுவர்கள். ரமணமகரிஷி அப்படியான வாழ்க்கை வாழ்ந்தவர். தற்போது சிலர் தம்மை பரமஹம்சராக தமே கருதிகொள்கின்றனர். பரமஹம்சர் எப்படிப்பட்டவர் அவருடைய இலக்கணம் என்ன என்பதை உலகம் அறிய வேண்டும். உலகத்தை ஏமாற்றுவர்கள் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றிக் கொண்டே இருப்பர். இதனால் உண்மையை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எனது இணையதளத்தின் நேயர்களுக்காகவே சமர்ப்பிக்கின்றேன். சரியானதை சரியாக அறிவதே அறிவு. அது ஆஞ்ஞானத்தால் போக்கி மெய்ஞானத்துக்கு வித்தடுவதே நோக்கம்.
No comments:
Post a Comment