இந்துக்கள் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி இடுவது தொன்மையான வழக்காகும் இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிவதில்லை
பிரணவத்திலுள்ள நாதத்துக்கு வாிவடிவு கீறு விந்தவுக்கு வாிவடிவு சுழி இரண்டும் சேரும்போது யானையினது துதிக்கையை ஓத்த வடிவம் உ வருகின்றது இதனையே பிள்ளையாா் சுழி இதனை குண்டலிசக்தி என்று திருவருட்பயன் செப்புகின்றது பிள்ளையார் பிரணவ வடிவம் அவர் குண்டலிசக்தி வடிவம் என்பதால் அவரை கொடிதம்பத்தில் தம்பவினாயகராக வைக்கப்பட்டுள்ளது இது பாம்பின் வடிவை ஒத்தது அ ,உ ,ம என்பது ஓம் அதில் அ என்பது அக்னி மண்டலம் உ என்பது ஆதித்திய மண்டலம் ம என்பது சோம மண்டலம் நம் பூமியில் எல்லா செயல்பாடுகளும் சூாியனை அடிப்படையாக இயங்குவதனால் இறை அடையாளமாக சூாிய மண்டலத்துக்கு பீசாச்சரமான உ என்னும் எழுத்தை முதலில் இட்டு ஆரம்பிக்கின்றோம்
No comments:
Post a Comment