Saturday, May 27, 2017

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களின் தொடர்ச்சி

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களின் தொடர்ச்சி...................

ஒம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

ஜெபத்தின் போது கணிக்கும் மிடத்து மேல் நோக்கி கணித்தால் மேட்சத்தை நோக்கியதாகவும் கீழ்நோக்கி கணித்தால் உலக வாழ்கையை மையமாதாகவும் கொள்ளப்படும். ஜெபமும் தியானமும் ஒன்றல்ல தியானத்தின் அடிப்படையே அன்றி தியானம் அல்ல மந்திர ஜெபம்கள் மனதை திடப்படுத்தவே மந்திரம் என்பது ம என்பது மனம் ஸ்திரம் என்பதே பொருள். தியானத்துக்கு மனதை ஸ்திரப்பதுத்துவது அவசியம். மனம் அலையாயும் தன்மை உடையது. அதனாலேயே மனதை குரங்குக்கு ஒப்பாக 'மனம் ஒரு குரங்கு ' என்று கூறுகின்றனர். தியானம் என்பது ஆத்மாவுடன் தொடர்வு கொள்வது. சித்தம் தெளித்தால் சிவலிங்ககமான ஆத்மா தெரியும். அதற்கு மனத்துள் மறைந்துள்ள புத்தி வெளிப்பட வேண்டும். 'மரத்துள் மறைந்தது மாமதயாளை' கல்லினுள் மறைந்தள்ளது உருவம் சிப்பி தேவை அற்றதை நீக்கினால் உருவம் வெளிப்படுவது போன்று ஆத்மா வெளிப்படும்.
எது தேவையானது எது தேவை அற்றது என்பதுஅவர் அவர் கர்மா. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையை ஓத்தது  இரத்தின கல்லின் மேல் சாணம் விழுந்தால் ஒளி மங்கி கல் வெளிப்படாது. அவற்றைப்போக்கவே ஜெபம். ஆத்மாவைக்காண தியானம்

தொடரும்......

பிரமசாாியம் காத்து இறை சிந்தையில் ஈடுபட வேண்டும்..

அமாவாசை, பௌா்ணமி, அட்டமி ,ஏகாதசி ,நாட்களில் உடலில் இயல்பாக அமிதம் சுரந்து குண்டலினி சகஸ்டாகரத்தில் ஏறி ஆக்ஞா சக்தில் ஆத்மலிங்கத்துக்கு அமிதம் சொாிவதனால் தாம்பத்தியம் தவித்து (கலவியில் ஈடுபடாது) பிரமசாாியம் காத்து இறை சிந்தையில் ஈடுபட வேண்டும்..
ஓம் சற்குருவே துணை.
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

Wednesday, May 24, 2017

தியானத்தின் போது கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்

தியானத்தின் போது கடைப்பிடிக்கவேண்டியவை  தொடர்............

ஓம் சற்குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

தியானத்துக்கு பயன்படுத்தும் ஜெபமாலை உருத்திராட்சமணி, தாமரைமணி, வெண் சென் சந்தண கட்டைகளினாலான மணிகள், படிக மணி, துளசி கட்டை மணி, போன்றவற்றால் அமையலாம். அதன் எண்ணிக்கை ஐம்பத்திநாலு மணி அல்லது நூற்றி எட்டு, ஆக இருக்கன்பவற்றுக்குலாம். அதில் மேலதிகமாக தாய் காய் ஓன்றுடன் அமைதல் வேண்டும். ஜெபம் செயும்போது கணிப்பில் தாய் கட்டைடையை மேவக் கூடாது.  இதைவிட்டு கணிப்பீடு செய்த சிசையிலேயே மீண்டும் கணிப்பீடு செய்ய வேண்டும். இடது கையால் மாலையை தொடக் கூடாது. வலது கைவிரல்களால் ஆட்காட்டி விரலை விலக்கி சின்னவிரல் மேதிரவிரல் நடுவிரல் நடுவிரல்லுகு மேல் ஜெபமாலையை வைத்து பெருவிரலால் கணிக்க வேண்டும். அதாவது ஆணவம், கன்மம், மயை ஆகிய மூன்று விரல்களின் மேல்வைத்து நான் என்னும் ஆட்காட்டி விரலை நீக்கி இறைவனான வெருவிரலால் கணித்தல் வேண்டும். ஜெபமாலை கழுத்தில் அணியக்கூடாது. கணிக்கும் போது மற்றவர்கள் பார்க்கக்கூடாது. மலையை மறத்து வைத்தல் வேண்டும். விரல்களின் இறைகளில் கணிக்கும் முறையும் உண்டு. வலது கையில் மோதிர விரலின் நடு இறையில் ஆரம்பித்து அடுத்த கீழ் இறை அடுத்து சின்ன விரலின் கீழ் இருந்து மேல் நோக்கி சென்று மேல் இறைகளின் மூலம்ஆட்காட்டி விரலுக்குச் சென்று ஒவ்வொன்றாக கீழ் இறங்கி சென்ற வழியால் மேல் நோக்கி வந்தால் ஒருதவை இருபது முறை கணிக்கப் பெறும். இப்படி ஜந்து முறை கணித்து பின்னர் மீண்டும்ஆட்காட்டி விரலின் முதல் இறையுடன் நின்றால் நூற்றி எட்டுமுறை அமையும்.  இக்கணிப்பின் போதும் மறைத்தே செய்தல் வேண்டும்.  இதனை சிறந்த முறை என குறிப்பிடுகின்றனர்.

தொடரும்

குமரி கண்டத்தின் தென்திகையிலேயே வேதங்களும் ஆகமங்களுத் தோன்றின அதுவே சிவபூமி அதனாலேயே தென்நாடுடைய சிவனே போற்றி என்றனர்.

குமரி கண்டத்தின் தென்திகையிலேயே வேதங்களும் ஆகமங்களுத் தோன்றின அதுவே சிவபூமி  அதனாலேயே தென்நாடுடைய சிவனே போற்றி என்றனர்.


அண்டத்தின் நடுவில் பொன்மலையாகிய மேருமலை விளங்குகின்றது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு. அதுவே நடுநாடி  இதனை சுழுமுனை என்பர். மேருவினை நிலத்தில் நடுக்கோடு என்பர். நடுக்போட்டின் வடபாலும் தென்பாலும் உள்ள கோடுகள் வழிக்கோடுகளாகும். இதுவே உடலில் கானப்படும் இடகலை பிங்களை நாடிகளாகும். இதனை திருமூலர் திருமந்திரத்தில்


'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே'  

இங்கு வான் வெளியில் நடுக்கோட்டின்நிலையினை இலங்கை என்கின்றார். இவ் இலங்கைக் கோட்டுடன் தில்லைசிற்றம்பலக்கோடு பொருந்திநிற்கின்றது. இதனால் தில்லைக்கும் பொதிகை மலைக்கும் ஊடாகச்செல்லும் கோடு நடுநாடியாகும். இதனையே தென்நாடு சிவபூமி என அழைக்க காரணமானது. இதனை சிறப்பு முறை என்பர். பொது முறையாக நோக்கும் போது இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவில் உள்ளது தில்லையம்பம். இவை இரண்டுக்கும் இடைப்பட்டது சிவபூமி. மேரு நடுநாடி அண்டத்தில் அது நடுரேகை பிண்டத்தில் அது சுழுமுனை. அண்டத்தினுள் இதன் வட அயன் வரைகளும் பிண்டத்தினுள் இடகலை பின்கலை நாடியாகும். இலங்கைக் குறியும் என்னும் போது இலங்யையில் மேருவின் குறியைப்பார்க்கலாம். எனவே திருமூலர் காலத்தில் மேருமலை அழிவெய்தி விட்டது என்பதே பொருள். மேரு என்பது மேரு சுரமேரு குமேரு என மூன்றாகும். மேரு பூமத்திய ரேகையும் பூமியின் ஆச்சு ரேகையும் கூடுமிடமாகும். அதுதான் இலங்கை. எனைய மேருக்கள் துருவங்கள் அவை சுரமேரு வடதுருவம் என்றும் குமேரு தென்துருவம் எனவும் கூறப்படுகின்றது. தில்லை வனம் நடுநாடியில் இருக்கின்றுது.
அகத்துவத்தில் இடகலை பிங்களை உள்ளது. அதாவது எமது முள்ளந்தண்டின் வலப்புறமும் இடப்புறமும் நாடிகள் செல்லுகின்றது அவை சூரியநாடி சந்திர நாடிகளாகும். இவையே இடகலை பிங்கலை ஆகும். அவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லுகின்றது. இது எமது அல்பா கதிரின் அதிகரிப்பால் உருவாகுவது. இவை அனைத்தும் எமது உடல் உள் இருப்பவை அதாவது பிண்டத்தில் அதுபோன்று அண்டத்தில் உள்ளவை தொடர்பாக திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகையில்
'
இடபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமாம் பரம்றே' 

இங்கு இடபிங்கலையாக பொன்மலையம் இலங்கையும் கொள்ளப்படுகின்றது. நடுநாடியான சுழுனை தில்லைவனம். தில்லைவனம் எல்லாவற்றையும் இயக்குகின்றது. இதனாலேயே 'கடவும் தில்லைவனங் கைகண்ட மூலம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே வடக்கு எல்லை பொன்மலை தெற்கு எல்லை இலங்கை எனவே தென்நாடும் இலங்கையே இதனாலேயே 'தென்நாடுடைய சிவனே போற்றி' என்றாகிவிட்டது. இலங்கை வேதன் இராவணன் சிவபக்தன் கைலயங்கரியையே பேயர்தெடுத்து இலங்கைக்கு கொண்டு வந்தவன். மன்டோதரியும் சிவபத்தை அவளுக்கு அடிக்கடி சிவதரிசனம் கிடைத்ததாக வரலாறு சான்று பகர்கின்றது. சிவன் தென்நாட்டவன் என்ற காரணத்தால் அவன் கறுப்பு நிறமானவன். வடநாட்டு இராமர் வெள்ளை நிறத்தவர். சிவனை வழிபட்டு வரம் பெற்றவர்கள் அசுரர்கள். உதாரணமாக. இராவணன், சூரர்கள்( கஜமுகா சுரன்,நரகாசுரன்,பத்மாசுரன், தரகாசுரன்) அதுபோன்று விஸ்ணுவிடம் வரம்பெற்றவனும் அசுரர்களே நிம்பன் நிசும்பன் போன்றோர். சிவபத்தைனை இழிவு படுத்தி விஸ்ணு பத்தனை மேலோங்க காவியம் படைத்தவர்களே ஆரியர். திராவிட கடவுள் சிவன் ஆரியர்களின் கடவுள் விஸ்ணு ஒருரை ஒருவர் எதிர்த்தகாலமொன்று உண்டு. அக்காலத்தில் சிவபெருமானின் திருவிழவை கண்டவர்கள் இமக்கிரிகையில் கலந்து கொண்டவர் போல தலைமுழுக்குச் செய்வர் அதுபோல சிவபத்தர்களும் விஸ்ணு திருவிழாக்களையும் அப்படியே கருதினர்.ஸ்ரீ ஆதிசங்கர ஆச்சாரியார்   இவற்றை களைந்து ஒற்றுமைப்படுத்தினர். அக்காலத்தில் தோன்றிய காலியமே இராமாயணம். இறுதியில் பிரமகஸ்தி தோசம் தீர்;க்க இமேஸ்வரத்தில் சிவபூசைசெய்ததன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் திருமூலர் பரம்பொருளான சிவப்பரம் பொருளை மட்டுமே திருமந்திரத்தில் இயம்பியுள்ளார்.
குமரிகண்டத்தில் தென்திசையிலேயே வேதமும் ஆகமங்களும் தோன்றின என திருமந்திரம் திருமூலர் குறிப்பிடுகையில்.

'ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே' 

திருமூலர் வாழ்த காலம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் ஆண்டுகொன்றாக மூவாயிரம் பாடல்களை பாடியதாக வரலாறு. எனவே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குமரிக் கண்டதையே அவர் இப்பாடலில் பாடியுள்ளார். இக்கண்டம் கடல்கோள்களால் அழி;து கடல்கொண்டு எஞ்சியது தென்பகுதியில் இலங்கை மட்டும்தான். இலங்கையின் கீழ்பகுதியில் தான் குமரியாறு ஒடி இருக்கின்றது என்பது இன்றைய ஆய்வுகள் கூறுகின்றது. இங்கு குமரி மலை, மகேந்திரமலை இலங்கைக்கு ஈழம் என்றும் அழைக்கப்பட்டது. தென்பகுதியில்; இறுதியில் ஒளிநாடு என நாற்பத்தி ஒன்பது தமிழ் நாடுகள் இருந்தாதக பண்டைய நூல்கள் கூறுகின்றன். அக்கண்டத்திலேயே சிறந்த தீர்தங்கள் ஒன்பதும் ஏழு மலைகளும் குறிப்பிட்டு அதன் தென்பகுதி குமரிக் கண்டம். அதில் குமரிஆறு காவேரி போன்ற நதிகளும் குமரிமலை, மகேந்திரமலை தொதிகைமலை போன்ற ஏழுமலைகளும் உள்ள நாடாகிய தென்நாட்டிலே வேதஆகமங்கள் தோன்றின். இதில் இலங்கையே எஞ்கியுள்ளது.எனையவை கடல் தன்னகத்தே ஆக்கிக்கொண்டது. இதனை திருத்தொண்டர் புராணத்தில் வரும் வெண்பா குறிப்பிடுகின்றது.
'
காவேரியே பெண்ணையம ராவதி பென்முகலி
மேவு பொருநை மிளிர்வையை – தாவில்கப்பை
கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு
வெள்ளாறு கங்கை நிவா மேவு'

 என்று குறிப்பிடுகின்றார்.
குமரியாறு என்பது இலங்கைக்கு கீழாக இருந்திருக்கின்றது. ஒளிநாடு தென் எல்லையா இருந்திருக்கின்றது. மகேந்திர மலையில்தான் சுரசம்காரம் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இலங்கையே சிவபூமி  அன்று குமரிகண்டத்தின் தென் பகுதி ஒளிநாடு ஆனால் அழிவின் பின் இன்றுள்ளபகுதி இலங்கை இதுவே தென்நாடு.

தவமும் தவமுடையார்க்கே

தவமும் தவமுடையார்க்கே
தவம் என்பது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்து விடுவதில்லை. மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் 'புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராயப்; பேயாயக்; கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்  ......' என்று பலபிறவி எடுத்து அழுந்தி இறுதியிலே தவவாழ்வு கிடைக்கும். அதை எவராலும் கொடுக்க முடியாது. அவர் அவர் செய்த வினைப்பயனை அனுபவித்து முடிக்க வேண்டும். ஒருவர் செய்ததை இன்னொருவர் அனுபவிப்பது என்பது எந்தளவுக்கு சரியாகும். மேலும் நாம் சுமையை கூட்டிக் கொள்வதற்கு ஒப்பானது. சிலர் பிராயச்சித்தம் என்று செய்து விடுவது ஒரு தற்காலிய விடயம் தான் அதை அனுவிக்க மீண்டும் பிறவி எடுக்க நேரும். அதே வேளை சிலர் தம் பிழையான வழியில் சம்பாதித்ததை தானமாக வழங்கி விட்டு தன் கறுமாவை மற்றவர்களுக்கு சுமத்திவிடுகின்றனர். இதனால் மற்றவர்களும் தாம் தானத்தைப் பெற்றுக் கொண்டதற்காக கறுமாவை அனுபவிப்பர். இந்தப்பாவமும் எமக்கே சேர்ந்து அடுத்த பிறவியில் கூட்டுக்கறுமாக்கு ஆளாக வேண்டிவரும். ஒரு சிலருக்கு முன்வினை பயனாக அது தவசிகளின் நற்பலனை கொடுத்து அவரின் பிறப்பறுக்க உதவிடும் அப்போது அது தம் பெற்ற தவப்பயனாகி விடும். இதனாலேயே தவசிகளுக்கு உணவளித்து  அதனை அவர்கள் மனமாற மனமுவந்து ஏற்றுக்கொண்டால் எமது பாக்கியம்; அவர்கள் பெற்ற நற்பலனை எமக்கு தாரைவார்ப்பதுடன் அவர்களும் வினையிலிருந்து விடுதலை பெறுவதுடன் அவர்களுக்கு விடுதைக்கு வழிசெய்த பலனையும் அடைவர். தவசியை இணம்கான்பது என்பது இன்று பெரும் பிரச்சனை புளைக்க வழி இல்லாத அனேகர் புளைப்புக்கு வழியாக சுவாமியார் வேஷம்போட்டு நிம்மதிறற்று அலையும் மக்களை தம்பிடியில் வைத்து ஆட்டிப்படைக்கும் உலகமிது. இதனாலே 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்போர் சான்றோர். அருளும் பொருளும் ஓர் இடத்தில் இருக்காது. இதனாலேயே குருதேவர் ஸ்ரீ ராமகிஷ்ணர், ஸ்ரீ ரமணமகரிஷி, ஸ்ரீ ராம்குமார் சுவாமி, ஸ்ரீ பட்டித்தடிகள் போன்றோர் பணத்தை வெறுத்தனர். ஆனால் இன்று அந்தநிலை மாறிவிட்டடு. 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றனர். அது சரி இவ்வுலகம் கறுமத்தை அனுபவிப்பதற்கே அது நரகமும் சொர்ற்கமும் சேர்ந்தது. பொருள் இருந்தால் தான் இவை இரண்டும் கிடைக்கும். இதற்கு காரணம் செயல் அதுவும் பற்றுள்ள செயல். பற்றற்ற செயல் பிறப்புக்கு வழிவகுக்காது. ஆகவே பொளுள் இல்லா விட்டால் மறு உலகமான பிறப்பற்ற பிரவாமை ஏற்படும்.
இனி தவம் என்பது தொட்பாக திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை நோக்கு வோம். தவமுடையாரின் புலனகள் சிவபெருமானின் திருவடியின் கண் ஒடுங்கிநிற்கும் அவர்கள் எதற்கும் தயங்கார். அவர்கள் பிறப்யிறப்பு நோய் அடையார். நமனை அடையார். வேறுலக துன்பம் எய்தார். சிவனை நினைப்பு மறுப்பாகிய துன்பமைதார். இனை திருமந்திரம்
'ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே' என்றார். ஐம்புலனை அடக்கி சிவனில் நிலைபெறச்செய்தாக்கு அவன் சிந்தையைத்தவிர வேறு எதுவும் இல்லை. பிறப்பிறப்பு இல்லை. இராப்பகல் இல்லை. அவன் நிலை பெற்றவனாவான். மலத்தை போக்கு வதற்காக மயாகாரியமான உடலுடன்  உயிர் சேர்த்து உடல் நிலைத்திருப்பதற்கு வேண்டிய உலகமும் உலகியல் பொருட்களுமாகிய பெருநிலத் தேற்றமும் திருவடிநிலையை அடைதற்பொருட்டு செய்யப்படும் நன்நெறி பாதையும் தவமுடையாக்கே தென்படும். அவர்கள் மாயையின் பிடிஅறிந்தவர்களே இதனை திருமந்திரம
'எம்மா ருயிரும் இருநிலத்தேற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரல்லார்
இம்மா தவத்தின் இயலபறி யாரே' என்றார். தவமுiயாருக்கு உலகம் தெளிந்தா நீரின்னுள் உள்ளவை எல்லாம் தெட்டத்தெளிவாக தெரிவது போல் வினைக்கீடானவையும் திருவடி பெற்றை பெற செய்ய வேண்டியவையும் தெரியும். புத்தி விளித்து சித்தம் தெளிந்து இருக்கும் நிலை ஏற்படும். ஆதனால் மாயையின் பிடியில் அகப்படான். தாம் உழைத்து உண்ணார். உழைப்பு பயன் கருதும் போது இதில் எதிர்பார்ப்பு இருக்கும் இது வினைக்கீடாகும் அது பிறப்பிறப்புக்கு வழிவகுக்கும். இதனால் பிச்சை எடுத்துண்பர். பிச்சை கொடுப்பவன் முன்வினை பயனால் பெறுபெற்றவனாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லோரிடமும் பிச்சை எடுப்பதும்மில்லை பிச்சை எடுத்து உழைப்பதும் இல்லை. பசி இருந்தால் மட்டுமே பிச்சை எடுப்பர். அதுமட்டுமல்ல எந்தநேரமும் பிச்சை எடுப்பதல்ல. அவர் பெற்ற தவப்பலனை தவமுடையாருக்கு கொடுத்து பலன் அறுத்து சிவபுண்ணியப் பெருமையைப் பெற்றவரே. இதனை திருமந்திரம்
புறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே' என்றார். தாம் வினையை உழைப்பதிலிலை. தவமுடையார் பெற்ற தவப்பயனை பெற தவமுடையாக்குகே அதை வழங்க பிச்சை எடுப்பர். வினையை அனுபவித்துக் கொண்டு இருக்கை அவன் அருளை நினைத்து ஏங்கிக்கொண்டு இருக்கும் ஆன்மா விடுதலைக்காக. ' சிவத்தினைப்பேணில் தவத்துக்கு அழகு' என்றது கொன்றை வேந்தன்.
'பள்ள முதுநீர் பழகிய மீன்னம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோ டாடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே' என்றார். நீர் வற்றி குளம் குட்டாகிய போதும் இங்குள்ள மீன்கள் வெள்ளம் வருவதை எதிபார்ப்பது போல் தலமுடையாக்கு இறைஅருள் பெற்றுய்யும். போகமாஷிக்கு ஒரு கட்டத்தில் போகத்தில் ஆசை வர அவரின் குரு மீண்டும் அதை அனுபவிக்க அனுப்பி தடுத்தட் கொண்டமை, அருனகிரிநாதரை தடுத்தாட் கொண்டமை, சுந்தரரை தடுத்தாட் கொண்டமை போன்றவை இதற்கு சான்றாகும். பற்றுடையாரிடம் இறைவன் பாலில் நெய்கலந்துள்ளதைப் போல் கலந்துள்ளான். புhல் தயிராகி தயிரை கடைந்து மோரிலிருந்து வெண்ணையைப் பிரித்து வெண்ணையை உருக்கி நெய் பெறப்படுவது போல. வினையை அனுபவித்து அதை அறுத்து பிறவாமையை பெற வேண்டும்.இதனை திருமந்திரம்
'கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
புரந்த சடையான் பசும்பொன் நிறத்தன்
அருதவர்க் கல்லான் அனுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே' என்றார். பாலில் நெய்கலந்திருப்பது பாலை பாலக நோக்கும் போது தென்படாது. அதுபோல் அதனை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் 'கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று  பிறந்த பிப்பறுக்கு மெங்கள் பெருமா........' என்று இயம்பியுள்ளார். அவனை எல்லோரும் அறியமுடியாது. அருந்தவம் கொண்ட மெய்அடியாருக்கே அவன் தெரிவான். அவர்களே இயற்கை உண்மை அறிவின்ப நிலையை உணர்வர். அவர்கள் வாலறிவான வெண்மதியினை காலமுண்டாகவே காதல் செய்து உய்வர். பகைமையால் தம்மைதாமே அழித்துக்கொள்கின்றனர். அழிவால் கண்டதென்ன ஒன்றுமில்லை. அழித்துக்கொண்டது உலகை அனுபவிக்க வேண்டிய உடல். அது பிளையார் பிடிக்க குரங்காகிய கதையை ஒத்தது. இதை கண்டு நிலையாமையும் திருவடி உணர்வும் சிவ பரம்பொருளின் கண் நாட்டமும் இயலபாகவே உண்டாகும். அவ்வாறு அடைவோர் நற்தவம் செய்தாரே. இதனை திருமந்திரம்
'அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசம்
புகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்தோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே' என்றார். வல்லரசுகள் தமக்கடிமையாக்கும் போட்டியில் உடல் உடமைகளை இழந்து நிற்க்கும் நிலைமையை கண்டு ஞானத்தால் அறிவுடையேர் தவத்தை மேற்கொள்ளுவர். மனித ஆக்கத்துக்காக  மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அணுக்கள் இன்று கண்பிடித்த மனிதனையும் அவனால் உருவாக்கப்பட்ட பொருட்களையும். அவன் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப்பட்ட உலகையும் அழித்துள்ளது. இவை அனைத்தும் மனித செயல்பாடே ஒளிய இறைவனின் அல்ல. இறைவன் படைத்ததை அழிக்க முடியாது. இயற்கை தன்னை சரிசெய்து கொள்ளும். ஆதனால் அழிவது மனினால் படைக்கப்பட்ட பொருட்களும் அவனை அழிக்க அவனால் ஏற்பதுத்தப்பட்ட ஆணவமும், அவன் செய்த வினையும் வினை செய்ய காரணமான அறியாமையான மாயையும். இதை எல்லாம் முன்னரே தெரிந்து இதிலிருந்து விலகி இருந்து புதினம் பார்த்துக்கொண்டு இருப்பவன் தவமுடையான். உண்மைப் பொருளாகிய பரம்பொருளிடத்து ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகமின்றி பொருந்திநிற்றலே தவமாகும். ஞாமின்றி புத்தக அறிவைவைத்து உலகை பேய்க்காட்டி திரியும் சிலரிடம் தவம் இல்லை. 'ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது' என்பர் முதியோர். திருவள்ளுவர் திருக்குறளில் 'கற்ககசடற கற்றபின் நிற்க அதற்கு தக' என்றார். கற்று உனர்ந்ததை தன்வாழ்கை யாக்கிக் கொள்வதே சிறந்தது. 'படிக்கின்றது சிவபுராணம் இடிப்பது சிவன் கோயில்' என்போர் சான்றோர். 'உனக்கில்லடி உபதேசம் ஊருக்கடி' என்போரும் உள்ளனர். ஆனால் தவம் என்பது. அகமுகமாக இறைவனை என்நேரமும் மறவாது இருத்தலை குறிக்கும். இதனை திருமந்திரம்
'சாத்திரம் ஓதுஞ் கதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் பொது மறிந்துள்ளே நோக்குமின்
பார்தவப் பார்வை பசுமத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகல்சிட் டோடுமே' என்றார். சாத்திரம் கூறிக்கொண்டு அதன் படி நடக்காது. பரம்பொருளான அருளை நாடாது பொருளை நாடி திரிதலை நிறுத்தி பரம்பொருளில் இமைக்கும் பொழுதெல்லாம் அவன் நாட்டமாக இருத்தலே தவமாகும். திருவடி உணர்வைப் பெற சீலம், நோம்பு ஆகிய புறதவப் பயிச்சி தேவை அது இடையறாது மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஞானகமாதி நிலை பெறும். இதனை திருமூலர்
'தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மற்றந் தனையறி யாரே' என்றார். அறிவு, செறிவு ஆகிய இருநிலையில் நிற்போர் அகத்தவமும் அறிவுத்தவமும் உடையார் ஆவர் அவர்களுக்கு ஏணைய தவம் வேண்டார் இவர்கள் பிறர் பொருள் உண்மையை அறியார். தன்னை அறிந்தவன் ஞானி உலகை அறிந்தவன் அறிவாளி. அறிவு ஏட்டுச்சுரக்காக்கு ஒப்பானது. அதை உண்ணமுடியாது. ஞானியே தனக்கு நடக்க இருப்பது நடந்தது நடந்து முடிந்தது என்பவை தெட்டத்தெளிவாக தெரிவதுடன் கருமத்துக்கீடாகும் வினையையும் தெரியப்படுத்தும். அதனால் செயலை செய்யாது பரம்பொருளின் சிந்தையில் கலந்து அவனாவான். அவனே தவமுடையான்

Sunday, May 14, 2017

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்  தொடரில்

ஓம் சற்குருவே துணை

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ

இருக்கையில் இருக்கும் போது பத்மானசத்தில் அல்லது சுகாசனத்தில் ஆடாமல் அசையாமல் இருந்து ஜெபத்தில் ஆரம்பித்து தியானத்துக்கு செல்ல வேண்டும். ஏனெனில் ஆறாதரத்தினுடாக மூன்று மண்டலமான கிரந்த முடிசுக்களை தாண்டி சகஸ்ராதாரத்தில் விரியும் குண்டலினி ஆட்டம் அசைவின்றி இருந்தால் தான் அது உச்சநிலையை அடையும் அதே வேளை நம்மை சுற்றி இருக்கும் மனித காந்த (ஓராவும்); விரிவடையும் அதானல் கற்றாடிகளை தவித்துக் கொள்ள வேண்டும். இவை தியானத்துக்கு தடையாய் அமைந்து விடும். தியானத்தின் மூலம் நேர் எண்ண அலைகள் விரிவடைவதனால் நம்மை வந்து தாக்கும் எதிர் எண்ணங்கள் பலமடங்கு விரிந்து எங்கிருந்து அனுப்பட்டதோ அங்கு சென்று தாக்கும். நாம் பலமற்ற நேர் அலைகளை கொண்டிருந்தால் அது எம்மை தாக்கும். அதற்கு காரணம் எம்மிடம் இருக்கும் எதிர் எண்ணங்களே 'நான்'; என்பதே அதனாலேயே. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்னும் முது மொழியும் ' அரசன் ஆண்டறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்' என்பதும் அதுதான். 'தன் வினை தன்னைச்சுடும் வீடப்பம் வீட்டை சுடும்' என பட்டணத்தார் தமக்கை தனக்கு அப்பத்தில் போட்ட நஞ்சை அவர் வீட்டில் எறிய வீடு பற்றி சம்பலானது. எனவே நேர் எண்ணம் கொண்ட ஞானியர் விடயத்தில் கவணமாக இருக்க வேண்டும். ஆனால் குண்டலினி மேலோங்கி ஆனந்த நிலையை அடையும் போது தன்னை மறந்து ஆனந்த கூத்தாடும் நிலை ஏற்படும்.  பேரானந்தநிலை குருவேவர் ஸ்ரீ இராமகிஸ்ணருக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. தை மாதம் 'கற்பகதரு' கொண்டாடுவது அதற்காகவேதான் உலகில் உள்ள இராமகிருஷணமிசன் கிளைகள் எல்லாம் கொண்டாடுகின்றது.

Tuesday, May 9, 2017

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

ஓம் குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம: :
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ
தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை
ஆசணம் என்னும் போது தரையில் விரிப்பு இல்லாமல் வெறும் தரையில் இருந்து தியானம் செய்யக் கூடாது. சுதாரண விரிப்பாகுதல் இருத்தல் வேண்டும். மான்தோல் விசேடமானது ஏன் என்றால் மான் எப்போதும் விளிப்பத்தைன் நடமாடுவது சிறிய அசைவுகள் கூட அதற்குத் தெரியும் தியானத்துக்கு அது அவசியம். புலித்தோல் அதிலும் விசேடம் ஆனால் பொதுவாக பிரம்சாரியம் கடைப்பிடிப்போர்கே சிறந்தது.
பட்டு, வெல்வேற்துணி, தர்ப்பைபாய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். விரிப்பின் அவசியம் என்ன வெண்றால் பூமிக்கு மேலாக ஏழு உலகமும் கீழாக ஏழு உலகமும் உண்டு. அதில் கீழ் உலகத்தில் அதல, விதல , பாதல, என்று ஏழு உலகம் உண்டு அது போன்று பூர், புவ, சுவ, மக, ஜன, தவ, சத்திய என ஏழு உலகம் உண்டு. அதில் கீழ் உள்ள உலகம் ஏழும் நரக லோம். அங்குள்ளவர்கள் விணைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும் ஆனால் அவர்களுக்கு வெற்று நிலத்தில் இருந்து தியானம் செய்தால் அப்பலன் அவர்களை அடைந்துவிடும். அது நல்லது தானே என்று சிலர் கருதலாம். ஆனால் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆகவேண்டும். அது ஆன்ம ஈடெற்றத்துக்கு தடையாகி விடும். இங்கு இன்னுமென்றை தெரிந்து கொள்ள வேண்டும் உயர் குலம் தாழ்குலம் என்பது பிறப்பால் அல்ல அவை தனது செயலால். இதனை மனுதர்ம சாத்திரம் சொல்லுகின்றது பிம்மாவின் முகத்தில் இருந்து பிராமணனும் புயத்தில் இருந்து சத்திரியனும் தொடையில் இருந்து வைசீகனும் பாதத்தில் இருந்து சூத்திரனும் தோன்றினர்கள் என்றும் அவர்கள் பிறப்பால் அல்ல செயலாலேயே கணிக்கப்படுகின்றனர். பிறப்பால் பிராமணராக இருந்தாலும். வேதம் ஓதுதல் ஓதுவித்தல், ஈதல் ஈவித்தல், வேட்டல் வேள்வித்தல் இக்கடமையை செய்யாத விடத்து அவன் பிராமணர் அல்ல. சூத்திரன் இக் கடமையை செய்தால் அவன் பிராமணனே. பிறப்பால் அல்ல செயலாலே இவை அமையும்

Sunday, May 7, 2017

குலதெய்வத்துக்கு திருவழா நடைபெறும் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள்


ஓம் சற்குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

ஓம் சிவசிவ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ


குலதெய்வத்துக்கு திருவழா நடைபெறும் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி எமது சாஸ்திரங்கள் கூறும் நடை முறைகள் பற்றி சிந்திக்க வேண்டியது இந்துக்களின் கடமையாகும்.



குலதெய்வத்துக்கு திருவிழா நடை பெறுகின்றது என்பது பற்றி தத்துவத்தமாக சிந்திக்கும் போது முதலில் திருவிழா என்பதின் தத்துவத்தை முதலில் நாம் அறிய வேண்டும். திருவிழாக்களில் மகோட்சவம் மிகவும் முக்கியமானது. ஆலயத்தில் நித்திய நைமித்திய கருமங்களில் நடைபெறும் குறைபாடுகளை நிவத்தி செய்வதற்காகவே மகோட்சவம் என்னும் பிரமோட்சவம் நடைபெறுகின்றது. நித்திய நைமித்திய என்பது தினமும் ஆலயத்தில் நடை பெறுகின்ற பூஜைகளும், விசேடமாக நடைபெறும்; பூஜைகளையும் குறிக்கும். அப் பூயையின் போது கிரியைகளில் காணப்பட்ட குறைபாடுகள், பக்தி சிரத்தையில் காணப்பட் குறைபாடுகள், ஆலய அறங்காவலர்கள் செய்த தவறுகள், வரும் அடியார்கள் செய்த நிந்தைகள் , தெரிந்தும் நம்மை அறியாது செய்த தவறுகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யவே இம் மகோட்சவம் நடை பெறுகின்றது.
திருவிழாவின் போது இறைவனின் சக்தி தம்பம், விம்பம், கும்பம் ஆகியவற்றில் இறைவனின் சக்தி நிறைந்து இருக்கும். பொதுவாக வழமையான திருவிழாக்களில் எழுந்தருளும் விம்பமாகிய எழுந்தருளும் விக்கிரகத்தில் அச் சக்தி இருக்கும். ஆனால் திருவிழாவில் தம்பமான கொடிமரத்தில் சானித்தியம் நிறைந்த இறைசக்தி எழுந்தருப்பட்டு மந்திரரூபமான இறைவன் அங்கு ஆவாகணம் செய்பட்டு தினமும் அபிசேகம் செய்யப்படு மந்திர உச்சாடணம் செய்யப்படும். அதுபோல் இறைவனை கும்பத்தில் ஆவாகணம் செய்யப்பட்டு சிவாக்கிணியில் உட்சாடணம் செய்யப்படும். இறைவன் மந்திர ஜந்திர தந்திர ரூபமானவன். இம்மூன்று நிலைகளிலும் திருவிழாவின் போது உட்சாடணம் செய்வித்து. ஒரு வருடத்தில் நடைபெற்ற குறைகளை நிவத்தி செய்வதே மகோட்சவம்.
அடுத்து பிரவேசப்பலி கொடுக்கப்பட்டு அட்டதிக்குப்பாலகர்கள் ஆலயத்தின்; சுற்று வீதியில் எட்டு இடங்களில் நிறுத்தப்பட்டு இருப்பதனால் அவர்களை வேறு தேவைக்கு அந்த மக்களால் அழைக்கப்படக்கூடாது. ஆதனால் வீடுகளில் மங்களகாரியங்கள் செய்யக்கூhது அடுத்து அமங்கலம் இடம்பெறகூடாது. குலதேய்வத்துக்கே சிறப்பு அல்லாது வேறோன்றும் இல்லை.
குலதெய்வத்துக்கு கொடி எற்றப்பட்டுள்ளது. ஏன்பது. முள்ளந்தண்டின் வழியான் ஆறாதாரத்தின் ஊடாக முற்பத்திரண்டு துண்டங்களினுடே குண்டலிணி சக்தி சகஸ்ராகாரத்தில் விரிந்து இருக்கும் போது திருமணம் செய்து அதை இறக்கி விடக்கூடாது. அதனாலேயே திருமணம் அக்காலத்தில் செய்யக்கூடாது என்பது விதி. அண்மையில் திருமணமானவர்கள் கோடியேற்றம் பார்க்கக்கூடாது என்பதும் அதுவே. ஊர்மக்கள் பிரமசாரியம் காப்பது தாம்பத்திய வாழ்கையில் ஈடுபடாது இருப்பது அவசியம். இதனாலேயே குருக்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலயத்திலேயே காப்புக்கட்டி ஆலயத்திலேயே இருக்கவேண்டும் என்பது விதி.
எனவே மகோட்சவத்தின் போது எல்லாச் சிறப்பும் குலதேவத்துக்கே அன்றி வேறு ஒன்றும் இல்லை

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களில்

ஓம் சற்குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ


தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களில் முதலில் இடத்தெரி தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன். அதில் ஓரே இடமாக இருப்பது அவசியம் அடிக்கடி யாரும் போகாத இடமாக இருந்தால்; நல்லது ஏன் என்றால் எண்ண அலைகள் மாறாமல் இருந்தால் தியாணத்தில் இடையுறு இருக்காது. தேவை இல்லாது யாரையும் அந்த அறையினுள் அனுமதிக்கக் கூடாது. பொதுவாக பழைய வீட்டை வாங்குவதானல்  அந்த வீடுக்கு தீந்தை அடிக்க வேண்டும் அதுவும் ஒயில்பெயின்டாக இருக்க வேண்டும். ஏன் என்றால் அங்கு வாழந்தவர்களின் எண்ணங்கள் சுவர்களில் பதிந்து இருக்கும் இதனால் வீடுவாங்கும் போது அங்கு வாழ்ந்தவர்களின் வாழ்கை முறையினை அறிந்து வாங்க வேண்டும். எண்ணங்களின் வலிமை பற்றி சுவாமி விவேகாநந்தர்  ஓரு முறை சிறச்சாலை ஒன்றிக்கு சென்றிருந்த போது அவரின் பத்தனின் வேண்டுகோளுக்கமைய உணவருந்த சென்ற போது உணவை அருந்திக்கொண்டிருந்த போது இருக்கு கொலை செய்யும் உணர்வு ஏற்பட சமைத்தவரை வரவழைத்து விசாரித்த போது அவர் ஒரு கொலை குற்றவாளி என்பதை அறிந்தார். எனவே நாம் எதை எண்ணுகின்றோமே அதுவே எமது வாழ்வாகிவிடும். அதனாலே நல்எண்ணம் உள்ள அதாவது நேர்எண்ணம் உள்ளவர்களுடன் உறவு வைத்திருக்க வேண்டும்.  ஏதிர் எண்ணம் உள்ளவர் உறவு கலவாமை நன்று. குருதேவர் ஸ்ரீ இராமகிஸ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஓன்று ஒரு முறை அவர் நோய்யுற்று இருந்த போது அவருக்கு ஒவ்வொரு நாளும் ஓரு தோடம் பழம் கொடுப்பது வழக்கம் அதனை அவரது சீடன் ஓரு தோட்டத்திலிருந்து பெற்று வருவது வழக்கம். அன்று அந்த தோடம் பழரசம் தொண்டை குழிக்குக் கீழ் இறங்க வில்லை கவலை அடைந்த சீடன் மறுநாள் தோட்டத்தை அடைந்த போது தொட்டத்தின் உரிமையாளர் மாறி இருப்பதை அறிந்து அவரிடம் அனுமதி பெற்று சென்ற போது பழச்சாறு தொன்குழியின் ஊடாக இறங்கக் கண்டான். அவர்  சத்தியத்தின் சத்தியவான் அல்லவா? ஏண்ணங்களின் வலிமையை பற்றிக் கூறும்போது ' விணைவிதைத்தவன் விணை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்பது முது மொழி. தியாணத்துக்கு இவை அனைத்துமே அவசியமானவை. வுpணைக்கும் எண்ணத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கும் போது எண்ணமே செயல்.
தொடரும்

Saturday, May 6, 2017

கடவுள்

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ
ஒரு மனிதன் தனது தேவைக்காக பல்வேறு பாத்திரங்களை எடுப்பது போல் தந்தையாக் தாய்க்கு மகனாக மனைவிக்கு கணவனாக மாணவா்களுக்கு ஆசிாியராய் பாடசாலைக்கு அதிபராய் குழந்தைக்கு பாதுகாவலனாய் ஒருவரே செயல்படுவது போல ஏகோபித்த பிரபஞ்சத்தை ஆளும் பரப்பிம்மம் தேவைக்கேற்ப அவதாரம் எடுக்கின்றாா் ஆனால் இந்துமதக்கொள்கை ஏக கடவுள் கொள்கையே கடந்தவனுக்கு உருவம் உண்டு உள்ளுள்ளவனுக்கு உருவமற்ற அருவக்கடவுளே அதாவது ரோகிக்கும் போகிக்கும் கடவுள் உருவம் உண்டு யோகிக்கு அருவக்கடவுளே..
சித்தபெருமக்கள் மூன்று வேளை உணவு அருந்தி உணவுப்பிாியா்களை ரோகி என்றும் இருவேளை உணவு அருந்துபவா்களை போகி என்றும் ஒருவேளை அருந்து பவா்களை யோகி என்றும் கருதுகின்றனா்.
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ

கடவுள்

குருவே துணை
ஓம் சற்குரு அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ


இந்து மதம் கடவுள் பற்றி குறிப்பிடுகையில் கடவுள் உருவமற்ற ஓளி வடிவமானவர் யாருக்கு என்பதுதான் இங்குள்ள வினா கடவுள் என்ற சொல்லில் இரண்டு சொற்கள் உண்டு ஒன்று கட மற்றையது உள் யாருக்கு கடந்தவர் என்றால் அஞ்ஞாண இருளில் உள்ளவர்களுக்கு அதாவது உலக பொருட்களில் பற்றுள்ளவர்களுக்கு பொருட்கள் தேவை தான் அவை தேவைக்கு மட்டுமே அவை ஆசையை பொறுத்து அமையும் ஆசை அளவோடு அதியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிலேயே ஆனால் பேராசையாக மாறி மற்றவர்களுக்காக இறைவன் படைத்ததை தனககாக்கி கொன்டமையும் இங்கு பிரச்சனை இவர்கள் தாமத இராஜத குணங்கள் கொண்டவர்கள். இவர்களுக்கு கடவுள் கடந்தவர். இவர்களுக்கு உருவம் அவசியம் ஏன்னெனில் பயம் தேவை. ஆனால் கடவுளை வெளியில் தேடாது தன்னுள் தேடுபவர்களுக்கு இறைவன் உள்நின்று உணர்த்துவார் இவர்கள் கடவுளை அருவுருவாகக் கண்டு அருவமான கடவுளை அனுபவிதித்து அவரே சரணாகதி உலகப் பொருட்கள் அல்ல அவர்கள் சாத்வீககுணம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் உண்மை, சத்தியம். நேர்மை, மற்றவார்களின் மனதை புண்படுத்தாக பண்புள்ளவர்களாக காணப்படுவதுடன் மற்றவர்களுக்காக தனக்கெவாழாது வாழ்பவர்கள் அவர்களே சித்தர்களும் மஹரிஷிகளும். அவர்கள் ஞானிகள் ஞானத்தால் உலகை தன்வசப்படுத்தியவர்கள்.

Friday, May 5, 2017

நாராயணா என்பது நாா் அயன் நீாில் உறைபவா் .


குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:



ஹாி ஓம் நமோ நாராயணா.
நாராயணா என்பது நாா் அயன் நீாில் உறைபவா் .
நீா் உலகை காப்பது அதனால் காத்தல் கடவுளாக வேதங்கள் எடுத்து இயம்புகின்றது. இறைவனின் பஞ்சகிாித்தியங்களில் ஒன்று பஞ்சக்கிருத்தியம் என்பது படைத்தல் ,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றுக்கு பொறுப்பாக முறையே பிரம்மா, விஸ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் போன்றோர் இருக்கின்றனர். இவர்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்புண்டு. இவர்கள் முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், என்பன இவற்றல் நிலம் படைப்புக்கும் நீர் பாத்தலுக்கும் நெருப்பு அழித்தலுக்கும் காற்று மறைத்தலுக்கும் ஆகாசம் அருளலுக்கும் செயல்படுகின்றது செயல் படுத்துவது பஞ்சப்பிரம்மம். இவை அனைத்தும் அண்டத்தில் இணங்குவது போல பிண்டமாகிய உடலிலும் இவை இயங்குகின்றன. மூலாதாரம் நிலம் அதிலே ஓங்கார நாதமான பிரணவப்பெருளான விக்கிணம் தீக்கும் விநாயகன் வீற்றிருக்க சுவாதிட்டாணத்தில் பிம்மா படைத்தலை செய்கின்றார். மணிப்புரகத்தில்லிருந்து விஸ்ணு காத்தலை செய்கின்றார் அதாவது வயிற்றில் உணவு சமிபாட்டினுடாக அநாகதத்தில் மார்பில் அழித்தலை விஸ்ணு செய்கின்றார். விசுத்தியில் மகேஸ்வரன் மறைத்தவை செய்கின்றார். ஆக்ஞாவில் அருளலை சதாசிவன் செய்கிறார். இங்கு கவணிக்க வேண்டிய விடையம் இறைவன் ஒருவனே இவை அனைத்தையும் செய்கின்றார். செய்பவர் ஒருவர் அவர் செய்யும் வேலைகள் பல. இதை அடிபடையாகக் கொண்டே அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்று கூறப்படுவது.

Monday, May 1, 2017

இந்துமதத்தில் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை

இந்துமதத்தில் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை

           ஆலயங்களில்; பூஜையின் போது பயன்படுத்தப்படும் உபசாரப் பொருட்களில் பல மருத்துவத் தன்மை வாய்தவை சித்தர்களால் தான் வழிபாட்டு முறைகள் ஏற்படுத்தப்பட்டது அவர்கள் மனுக்குல நன்மையையே தாரக மந்திரமாகக் கொண்டவர்கள் அந்தவகையில் எல்லா மதத்தினரும் பொதுவாக பயன் படுத்துவது சாம்பிராணி இந்து மதத்தில் பூஜை ஆரம்பத்தில் முதலில் இறைவனுக்கு சமர்ப்பிப்பது சாப்பிராணி புகை இதனை தூபம் என்று அழைப்பர். அது வாய்வின் அடையாளமாக கருதுகின்றனர். பஞ்சபூதங்களில் ஒன்று வாய்வு  இதற்கான பீஜாச்சரமாக 'யம்' எனும் மந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. தூபம் சமர்பிக்கின்ற போது இறவன் வாயு மயமானவன் என்பதை தெரிவிக்க 'யம்' – வாய்வாத்திகாயை தூபமாக்ராபயாமி என்னும் மந்திரத்தை பிரயோகித்து இறைவனுக்கு தூபம் காட்டப்படுகின்றது. இது போன்று றோமம்கத்தோலின்க சமயத்திலும் பூஜையின் போது பீடத்தில் சாபிராணி கட்டப்படுகின்றது. இஸ்லாமானவர்களும் முத்திப்பேறு பெற்ற கல்லறைகளில் சாம்பிராணி பயன் படுத்துகின்றனர். பௌத்தர்களும் இந்துமத கடவுளான கணபதி, முருகன், அம்மன் போன்ற தெய்வங்களை கணதெய்யோ, கதிரகம தெய்யோ, பத்தினிதெய்யோ என கூறி அங்கும் சாபிராணி காட்டுகின்றனர். இந்த வகையில் எல்லா மதங்களும் வழிபாட்டின் போது சாம்பிராணி பயன் படுத்தப்படுகின்றது.
        பொதுவாக அடியார்கள் ஒன்று கூடும்போது அவர்களின் சுகாதாரம் மிகவும் முக்கியமானதுடன் அது மருத்துவமாகவும் அமைய வேண்டும் என்பது சித்தர்கள் சிந்தையில் உதித்தது. அதன் மருத்துவக்குணம் பற்றி குறிப்பிடுகையில்
'வாதசீ தங்கண்ணோய் மாறாத் தலைவலியும்
ஓதம்உறு பீநகமும் ஓட்டுங்காண் - பூதலத்தில்
வேம்பிதுதான் என்ன மிகுகசப்பை வாய்க்களிக்கும்
சாம்பிராணி யென்னுஞ் சரக்கு' என்றனர் சித்தர்கள்;
பொழிப்பு:
1. 'வாதசீ தங்கண்ணோய் மாறாத் தலைவலியும்: வாதம் என்னும் வாய்வினால் ஏற்படுவது புளிப்பு சுவை இதற்கு காரணம் இதனால் வாய்வு உண்டாகி அது நரம்பு மண்டலத்தை தாக்கி வாதம் ஏற்படுகின்றது இதனை சாம்புராணி புகை சுவாசதின் மூலம் உட்சென்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இது போன்று சீதளம் என்னும் சிரசில் நீர் கட்டு ஏற்பட்டு வலிஏற்படும் நோயை போக்கும் வல்லமை உண்டு. அத்துடன கண்ணோய்யை போக்கும் வல்லமை சாம்புராணிக்கு உண்டு. மாறா தலைவலியையும் போக்கும் வல்லமை உண்டு.
2. 'ஓதம்உறு பீநகமும் ஓட்டுங்காண் - பூதலத்தில்': சலப்பீநசம் என்னும் நீர் தலையில் நின்று நாசியில் தும்மலுடன் சாசி அரிப்பு ஏற்படும் நோய்னை குணம்படுத்தும் ஆற்றல் சாம்பிராணிக்கு உண்டு.
3. 'வேம்பிதுதான் என்ன மிகுகசப்பை வாய்க்களிக்கும்': அதன் சுவை கசப்பு தன்மையான தாக இருக்கும் இது வேம்பினது கசப்பு சுவையுடையதாக இருக்கும்.
4. 'சாம்பிராணி யென்னுஞ் சரக்கு': மேல் கூறப்பட்டவை அனைத்தiயும் போக்க வல்லது சாப்பிராணி என சித்தர்கள் குறிப்பிடுகின்றது.
சித்த வைத்தியத்தின் நாசியால் வைத்தியம் செய்யும் முறை ஒன்று உண்டு. அதனையே இங்கு சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாழிபாடே ஆரோக்கியம் அதுவே வாழ்வியலாக கண்டவர்கள் சித்தர்கள் சாம்புராணி ஒருவகை மரத்திலிருந்து (பிரங்கின்சென்ஸ் (குசயமெinஉநளெந) பெறப்படும் பால் அல்லது பிசினிலிருந்து தாயாரிக்ப்படுகின்றது. இம்மரம் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. சாம்பிராணி. குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் பாஸ்வெல்லியா செர்ராட்டா (டீழளறநடடயை ளநசசயவய)
 இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது. சாம்பிராணி மரம் உறுதியானதும்; எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும்.

வாதபித்தம் அத்திசுரம் போக்கிடும் சண்பக மலர்

 வாதபித்தம் அத்திசுரம் போக்கிடும் சண்பக மலர்
சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை பொதுவாக இமையமலைச் சாரலிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பொதுவாக நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு அரிச்சினைக்குப் பயன் படுத்துகின்றனர். வியாழ பகவான் தேவகுரு அவரே சிவன் ஞானகாரகன். ஞானத்தை கல்லாலையின் கீழ் சனகர் சனாதனர் போன்ற மகஷிகளுக்கு வேதத்தை உபதேசித்தார். அவருக் சமர்பிக்கப்படும் மலர்களில் பிரதானமாது சண்பகமலர் இனி அதன் மருத்துவகுணங்களைப் பார்ப்போம்;.
சம்பக மலரின் மருத்துவக்குணத்தை நோக்குகையில் சித்தர்கள்
'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்
தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள்
திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்' என்றனர்.
பாடலின் பொழிப்பு:
1. 'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்......': இம் மலர் வாதநோய் பித்தம் அத்திசுரம் என்னும் எழும்பு மச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரம். மேகம் எனும் நிரிலிவு நோய் காச்சல் போன்ற நோய்களைப் போக்க வல்லது.
2. 'தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள.....': தாது என்னும் இந்திரிய குறைபாட்டை போக்குவதுடன் கண்ணில் ஏற்படும் அழற்சியையும் போக்க வல்லது பெண்ணே கேள் என்கின்றார் சித்தர்.
3. 'திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்.....': மனக்களிப்பை போக்குவதுடன் நல்ல மணத்தையும் தருவதுடன் உட்டிணமும் உண்டாகும். என்றார்கள் சித்தர்கள். அறிவைப் பெற மணச்சந்தோசம் தேவை அத்துடன் உடல் வலிமையும் நோயற்ற நிலையும் தேவை.
அடுத்து சண்பகமரவேரின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிடுகையில்.
'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள
சண்பக மரத்தின்வேர் தான்' என்றனர் சித்தர்கள்.
பாடலின் பொழிப்பு:
1. 'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்.....': தீராத உஸ்னத்தை போக்க வல்லதுடன் சுரத்தையும் போக்கும் சண்பக மரவேர்.
2. 'நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால் ......':  உடலில் ஏற்படும் உஸ்ணத்தை குறைத்து பசியை உண்டாக்க வல்லது.
3. 'பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள......': கண்ணில் ஏற்படும் நோய்யினை போக்குவதுடன் இம்மலர் வாசமுள்ளது இதனால் மணம் அமைகொள்ள வைப்பது.
4. 'சண்பக மரத்தின்வேர் தான்': இவை அனைத்தையும் தரவல்லது சண்பகமர வேரை பயன்படுத்துவதனால் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.

பயன்படுத்தும் முறை:
சண்பகமலரையும் வேரயும் நினலில் உவத்திவைத்துக் கொண்டு கசாயம் வைத்து காலை மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலத்துக்கு முன் அருந்திவர மேல்கண்ட நோகளுக்கு பரிகாரம் காணமுடியும். இரண்டையும் தனித்தனியே பயன் படுத்தவும்.

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் இடத்தேர்வு

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்
இடத்தேர்வு
முதலில் ஓரே இடத்தில் தியாணத்தை மேற்கொள்ள வேண்டும் அது துமையான அறையாகவும் அல்லது நேர் எண்ணங்களை உருவாக்க கூடிய மரத்தின் கீழ் நறுமணங்கள் கமழும் மரங்கள் நிறைந்த இடமாக அல்லது அழகான நதிக்கரையாக அமையலாம். அல்லது தியானத்தின் போது எண்ணத்தின் மூலம் அப்படியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏண்ணத்தின் மூலம் சூழலை உருவாக்கும் போது நிலத்தில் ஓர் குழி வெட்டி அதனுள் படிகள் வெட்டி படிகளினால் மனத்தில் எண்ணத்தால் இறங்கி அங்கு நதிக்கரையில்  பெரிய ஆலமரத்தின் கீள் இருப்பதாக கற்கனை செய்து மணமுள்ள மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசுவதாக அந்த மணத்தை நுகர்வதாகவும்  சூரியனை கண்டு தாமரைமல்வதாகவும் கற்பதை செய்து இருப்பிடத்தில் அமருவதாக கற்பனை செய்து கொண்டு தியாணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தொடரும்

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ