Friday, May 5, 2017
நாராயணா என்பது நாா் அயன் நீாில் உறைபவா் .
குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஹாி ஓம் நமோ நாராயணா.
நாராயணா என்பது நாா் அயன் நீாில் உறைபவா் .
நீா் உலகை காப்பது அதனால் காத்தல் கடவுளாக வேதங்கள் எடுத்து இயம்புகின்றது. இறைவனின் பஞ்சகிாித்தியங்களில் ஒன்று பஞ்சக்கிருத்தியம் என்பது படைத்தல் ,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றுக்கு பொறுப்பாக முறையே பிரம்மா, விஸ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் போன்றோர் இருக்கின்றனர். இவர்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்புண்டு. இவர்கள் முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், என்பன இவற்றல் நிலம் படைப்புக்கும் நீர் பாத்தலுக்கும் நெருப்பு அழித்தலுக்கும் காற்று மறைத்தலுக்கும் ஆகாசம் அருளலுக்கும் செயல்படுகின்றது செயல் படுத்துவது பஞ்சப்பிரம்மம். இவை அனைத்தும் அண்டத்தில் இணங்குவது போல பிண்டமாகிய உடலிலும் இவை இயங்குகின்றன. மூலாதாரம் நிலம் அதிலே ஓங்கார நாதமான பிரணவப்பெருளான விக்கிணம் தீக்கும் விநாயகன் வீற்றிருக்க சுவாதிட்டாணத்தில் பிம்மா படைத்தலை செய்கின்றார். மணிப்புரகத்தில்லிருந்து விஸ்ணு காத்தலை செய்கின்றார் அதாவது வயிற்றில் உணவு சமிபாட்டினுடாக அநாகதத்தில் மார்பில் அழித்தலை விஸ்ணு செய்கின்றார். விசுத்தியில் மகேஸ்வரன் மறைத்தவை செய்கின்றார். ஆக்ஞாவில் அருளலை சதாசிவன் செய்கிறார். இங்கு கவணிக்க வேண்டிய விடையம் இறைவன் ஒருவனே இவை அனைத்தையும் செய்கின்றார். செய்பவர் ஒருவர் அவர் செய்யும் வேலைகள் பல. இதை அடிபடையாகக் கொண்டே அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்று கூறப்படுவது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment