Thursday, March 2, 2017

இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு

இலங்காபுரியின் கிழக்கு  மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டமுனை புன்னையம்பதி
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு.

உள்ளடக்கம்
1.  ஆலய ஆரம்ப தோற்றம் வரலாறு:
2.  ஆரம்பகால வழிபாட்டு முறையும் ஆகமுறைக்கு மாறிய வரலாறும்:
3.  கோத்துப்பந்தல் மடாலயமானது
4.  அம்பிகையின் திருவுருவ பிரதிட்டை.
5.  அம்மனின் திருவுரு பற்றி குறிப்பிடுகையில்.
6.  பலிபீடத்தின் முன் நந்தி காணப்படுதல்:
7.  தலவிருட்சம் புன்னையாக இருந்தாலும் வேம்பு ஆல்அரசுடன் இருக்கின்றது.
8.  நித்திய நைமத்திய பூஜைகள்.
9.  திருவிழாக்கால நிர்ணயம் விசேட திருவிழாக்களும்:
10. புணருத்தாரண வேலைகளும் குடமுழுக்குகளும்
11. ஆலய உற்ச்சவ மூத்திகள்.
12 .உற்ச்சவ மூர்த்திகளின் வாகனங்கள்:
13. இராஜகோபுரத்திருப்பணி:
ஆக்கம்
திரு.பாக்கியமூர்த்தி குமரகுருபரன்
B.Com(sp),PGDEd,MAAT.ACBA,SLTS-1,SLPS-1


இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில்; உள்ள கோட்டமுனை புன்னையம்பதி
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு.
       ஈழவழ நாட்டின் இந்துமத வரலாற்றிலே மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி ஸ்ரீ மாகாமாரியம்ன் ஆலயம் சிறப்பான ஓர் இடத்தை வேண்டிய ஒன்றாகும். தேன்னையும், கன்னலும், கதலியும், புன்னையும், பாத்ரியும், மகிழும், கோங்கும் பிரதேசத்தின் இயற்கை வனப்பை எடுத்துக் கட்டியங்கூற, அன்னை மகாமாரி வழிபடும் அடியார் வல்வினை போக்கி அருளாட்சி செய்வதற்கு செய்வதற்கு உகர்ந்து அமர்தருளிய திருத்தலமே புன்னையம்பதி. அன்னை அருள்மாரி அருள்மழை பொழிகின்ற என் அன்னையின் திருப்பதி.
1. ஆலய ஆரம்ப தோற்றம் வரலாறு:
    அன்னையின் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் இற்றைக்கு முன்நூறு வருடங்களுக்கு முற்பட்ட 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மணங்கமழ் புன்னை தோப்பாகக் கானப்பட்டது. அத் தோப்பில் அப்பகுதியில் வாழ்து வந்த விஸ்வபிரம்ம குல மக்கள் விறகு எடுத்கச் செல்வது வழக்கம். ஒரு நாள் மாலை வேளை சிறுமி ஒருத்தி விறகு எடுகச் சென்ற போது தோப்பினுள் இளமையும் அழகும் நிறைந்த நங்கை புன்னை மரத்தின் கீழ் நிற்பதை கண்டு செய்வதறியாது நிற்கும் போது அத்திருவுரு மறைந்து விட்டது. பின்னர் பயமும் பதட்டமாகவும் ஓடோடி வந்த சிறுமி தமது தாய் தந்ரையரிடம் நடந்த சம்பவத்தை கூற ஊர்மக்களை அழைத்துக் கொண்டு தொப்புக்குள் நுளைந்த போது அவ்விடத்தில் ஒளி தென்பட்டது. அது சிறிது நேரம் நிலை கொண்டு பின்னர் மறைந்தது. இதைக்கண்ட அப்பகுதியில் மக்கள் செய்வதறியாது வீடு திரும்பினர். அன்று இரவு அதிகாலையில் அங்கு வாழ்ந்த விஸ்வபிராமணர் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொற்பணத்தில் அம்பிகை தோன்றி தன்னை பந்தலிட்டு அவ்விடத்தில் வழிபடுமாறு கூறி மறைந்தாள். அதன் பின் அடுத்த நாள் பொது மக்களை அழைத்து நடந்த சம்பவத்தை கூறி பந்தல் அமைத்து அக்காலத்தில் காணப்பட்ட தாந்திரிய முறைப்படி அம்மனை வழிபட்டனர்.
2. ஆரம்பகால வழிபாட்டு முறையும் ஆகமுறைக்கு மாறிய வரலாறும்:
     ஆக்காலத்தில் வருடத்தில் ஒரு முறை பத்தாசு முறைப்படி சடங்கு நடை பெற்று வந்தது. அப்போது ஆணி மாதப் பூரணையை இறுதிப் பள்ளைய நாளாக கொண்டு முதல் ஏழுநாட்கள் சடங்கு நடை பெற்று வந்தது. ஒரு முறை அப்பகுதியில் வாழ்த வேற்று மதத்தவர்கள் இவ்வாலய வழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்த விளைந்து பன்றியின் முள்ளை பூசையின் போது வைக்கப்படும் பிரதான மடையினுள் மறைத்து வைத்து அங்கு தெய்வம் ஆடி குறி சொல்லும் செயற்பாட்டை நிறுத்திதன் விளைவாக ஆத்திரம் கொண்ட பூசாரிமார் பூஜையை நிறுத்தினர். ஆதன் விளைவாக தகாக செயலைச் செய்த மக்கள் கொளை நோக்குள்ளாகி உயிருக்கு போரடும் நிலை ஏற்பட்டு அம்பிகையை சரணடைந்தனர். இதன் பின் சடங்கு முறை நிறுத்ப்பட்டு ஆகம முறைக்குட்பட்ட நித்திய நயிமித்திய பூசைகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு  முறை ஆலய திரைச்சீலை ஆலயத்தினுள் எரிந்து கொண்டு இருந்த விளக்குத்திரியினால் எரியுண்ட போது அப்போது ஆலயத்தின் குருக்களாக இருந்த விஸ்வபிம்ம ஸ்ரீ தமேதரம் ஆச்சாரியார் சொற்பணத்தில் தோன்றி திரைச்சீலை எரிவதைக்காட்டி அணைக்கும் படி கூறிய போது நனவில் அது நடப்பதை கண்டு அணைத்தாக முன்னோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். குருதேவர் ஸ்ரீ ராமகிருஸ்ணர் அவரது சீடர் ஒருவருக்கு தனது உடை கிழிந்திருப்பதை சொற்பணத்தில் கூறிய போது நனவில் அது இருந்ததை இது நினைவு படுத்துகின்றது. அதுவும் அம்பிகையின் திருவிளையாடலே.
3. கோத்துப்பந்தல் மடாலயமானது.
      கொத்துப் பந்தல் அமைத்து பூஜைகள் நடைபெற்று வந்து. பின்னர் மடலாயமம் அமைத்தனர். அப்போது ஆலய மணியகாரக இருந்த அமரர் தவத்திரு பிதாம்பரம் பாலானந்தச் சாமியார் அவர்களுடன் அமரர் திரு. ஆனந்தர் கணபதிப்பிள்ளை, அமரர் திரு. சின்னத்தம்பி பொண்ணையா, அமரர் தம்பர் ஆகியோரின் குடும்பத்தினரும் ஆலயம் அமைப்பதில் அரும்பாடுபட்டனர் தவத்திரு. பிதாம்பரம் பாலானந்தம் சுவாமியார் கொழும்பு, கண்டி திருகோணமலை, யாழ்ப்;பாணம் ஆகிய இடங்களில் வாழ்ந்த விஸ்வபிராமண குல மக்களிமிருந்து பண உதவிகள் பெற்று வந்தார். மற்றையவர்கள் உள்ளுரில் பண பொருள் உதவிகளைப் பெற்று  ஆலய நிர்மணப்பணிகளை நிறை வேற்றினர். இதில் தவத்திரு பீதாம்பரம் பாலானந்தம் சாமியார். பிரம்சாரியம் காத்து சன்னியாசம் பூண்ட தவசீலர். இவர் எனது தயாரின் தாயின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு அவர் பூட்டன்.
4. அம்பிகையின் திருவுருவ பிரதிட்டை:
      இந்த நிலையில் அங்கு வாழ்தவர்கள் அம்பிகையின் திருவுருவை பிரதிட்டை செய்து வழிபட என்னினர். இதற்கான முயற்சியில் ஈடுபடலானனர். அதகும் அவள் திருவிளையாடல் புரிய எண்ணினாள். திரிபுரத்தை எரித்து ஆன்மாவை ஆட்கொண்டவள் அவள் அல்லவோ. இங்கும் அவள் விட்டுவைக்க வில்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த மாடன் என்னும் சிற்பாசாரியராரின் மனதில் புகுந்து சிலை வடிக்க வைத்து அது மட்டு நகர் கோட்டைமுனை புன்னையம்பதியில் அருள் மழை பொழிய எண்ணிய அவள், அக்காலத்தில் பாரததேசத்தின் தமிழ்நாட்டின் நாகபட்டினத்திலிருந்து மட்டக்களப்பு கற்குடாவை துறைமுகமாகக் கொண்டு பாரிய மச்சுவாய்க்கப்பல்கள் பொருட்களை ஏற்றி இறக்குவது வழமை இப்படி இறக்கும் துறைகளில் மட்டக்களப்பு சுமைதாங்கியும் ஒன்று அங்கு அக்காலத்தில் சுங்கமும் இறங்கு துறையும் இருந்தது அத்துடன் பெரிய பண்டகசாலையும் இருந்தது. இதை நானும் அறிவேன். தற்போது அதன் எச்சமாக பாரந்தூக்கியின் பகுதி ஒன்று உண்டு. கற்குடவுக்கு கொண்வரப்பட்ட திருவுரு மட்டக்களப்பு வாவியினுடாக லேடிமெனிங்ரைவ்வில் உள்ள 'சல்லிவளவு' என்று அழைக்கப்படும் வளவினுள் இறக்கி வைக்கப்பட்டது. அக் காலம் அம்மனின் சடங்கு முடியும் ஆணி மாத பூரணை தினமாகும். இக்காலத்தில் கும்பம் சொரிய செல்லும் 'மடத்துவளவு' என்று அழைக்கபடும் வளவும் அது தான். கும்பமும் சொரியும் சடங்கும் நிறைவேறிவிட்டது. ஆக்காலத்தில் எமது பரம்பரையைச் சேர்ந்த ஏரம்பர் என்பவர் கப்பல் எழுதுவினைராகப் பணியாற்றியவர். அவர் மூலமே திருவுரு கொண்டுவரப்பட்டது.   திரு. ஆனந்தன்  கணபதிப்பிள்ளை ஆச்சாரியாரின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதற்காக ,அங்கு பூஜை பிணகக்காரங்கள் செய்து வருகையில் அங்கு அதிசயிக்கத்தக்க நிகழ்வு பல நடை பெற்றது. தானாக விளக்கெரிந்தது, இரவில் தானாக பூஜை நடை பெறும் சத்தம், அம்பினை நடமாடும் சலங்கை ஒலி போன்று பல அதிசயம் நடை பெற்றது. திரு.ஆனந்தன் கணபதிப்பிளையின் மனையாள் சவுந்தரப்பிள்ளை அம்பாளின் திருவேறி வாக்குச் சொல்பவள். ஆவர் வாக்குச் சொன்ன போது எமது ஆலயத்தில் அம்மனை பிரதிட்டை செய்யுமாறு திருவாக்கு அருளினார். இதன் பின்னரே அம்பிகையின் திருவுரு இங்கு எழுந்தருளப்பட்டது. இவ் நிகழ்வு 1920 அளவில் நடை பெற்றதாக ஆலய பதிவுகள் தெரிவிக்கின்றது.
5. அம்மனின் திருவுரு பற்றி குறிப்பிடுகையில்:
       திருவுருவின் மாரியம்மனுக்குரிய உபாங்கள் இருக்கின்றன. அம்மனின் நான்  கைகளுக்கும் உருத்தான பாசம், உடுக்கை, கபாலம், வாள். என்பன கானப்படுகின்றது. பாசம் பற்றறுத்தல் அதாவது பாசங்களே பற்றுக்கு காரணம் இது பிறவிக்கு காரணமாகும். உடுக்கை உலக இயக்கம் அண்டத்தில் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே உலகம் உருவானது. ஆகவே உலக இயக்கம் சக்தியிடத்தில் என்பதை குறிக்கின்றது, கபாலம் ஆன்ம விடுதலைபெற தடுத்தாட்கொண்டு அருளளையும், வாள் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தை வழங்கும் என்பதையும் வலியுறுத்தி நிக்கின்றது. சுடர்விடும் கேசம் இது மும்மலங்களை எரிக்கும் தன்மையையும் வீராசனமும் காணப்பட்டாலும் அமைதியே சொருவமான கருனையும் இளமையும் புன்முறுவலிக்கும் அகாரமும் நிறைந்த தேஜோமயமான திருவதனம் மிக எழிலோடும், கம்பீரத்தோடும் காணப்படுகின்றது.
6. பலிபீடத்தின் முன் நந்தி காணப்படுதல்:
    மாரியம்மனின் பலிபிடத்தின முன்;; சிம்மம் தான் இருக்க வேண்டும். தேவியின் வாகனம் சிம்மம் தான் ஆனால் இங்கு நந்தியே இருகின்றது. இதுவே இங்குள்ள சிறப்பம்சமாகும். இங்கு ரிஷபம் பிரதிஷ;டை செய்தற்கு காரணம் உண்டு. ஆலயத்தின் மணியகாரணான தவத்திரு பீதாம்பரம் பாலானந்தர் அவர்களின் சொற்பணத்தில் அம்பிகை தோன்றி நான் 'மகாமாரியாகவும் காமாட்சியாகவும் புண்னையம்பதியிலிருந்து அருளாட்சி செய்கின்றேன்' என்று திருவாய் மலந்தருளினாள். அவள் சிவகாமியாக அத்தனாதி;ஸ்வரியாக இருப்பதை அவள் திருவுருவில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது திருவுருவின் இடது பக்க உபாங்கங்களை விட வலதுபக்க உபாங்கங்கள் பெரிதாக கானப்படுகின்றது. இதுவும் திருவுருவில் கானப்படும் சிறப்பம்சமாகும்.
7. தலவிருட்சம் புன்னையாக இருந்தாலும் வேம்பு ஆல்அரசுடன் இருக்கின்றது.
      ஆலயம் தோன்றிய காலத்தில் புன்னைமரத்தோப்பாக இருந்த இடம் தற்போது அங்கு மருந்துக்குக் கூட புன்னை மரம் இல்லை. இங்கு வேப்பை மரத்தின் கீழ் ஆதிவைரவர் காணப்படுகின்றார். அவரது திருவுரு நீளமான கல்லிலே பொறிக்கப்பட்டு ஆழமாக தாக்கப்பட்டுள்ளது. ஆக்கல் நீர்மட்டத்தை அடைந்திருக்கும் என கருதுகின்றனர். புணராவத்தன கும்பாவிஷகங்களின்  போது பாலஸ்தானம் செய்வதில்லை அப்படியே வைத்தே குடமுழுக்கு செய்கின்றனர். இவர் அம்மன் ஆலயம் அமைப்பதற்கு முற்படட்டதாக இருந்திருக்க வேண்டும் என எமது மூதாயையர் கூற கேள்விப்பட்டு இருக்கின்றோம். இம் மரத்தையே தலவிருட்சமாக கொண்டு போற்றுகின்றனர். இம்மரம் முந்நூறு வருடங்களுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதில் தற்போது அரசமரம் சேர்ந்து இருக்கின்றது. இதில் முதல் ஆலமரம் சேர்ந்து இருந்தது. இதனை சில விசமிகள் அழித்து விட்டனர். தற்போது வேம்பும் அரசும் சேந்;தநிலையில் ஆல் உருவாகிவருகின்றது. ஆல் அரசு வேம்பு சேர்திருப்பது இன்னுமோர் சிறப்பாகும். ஆல் விஷ;ணுவுக்கும் அரசு சிவனுக்கும் வேம்பு சக்திகும் உரியதால் இவை மூன்றும் முறையே  ஒரு மரத்தில் சேர்திருத்தல் சிறப்பம்சமாகும். தற்போது முன்னாள் தலைவராக இருந்த திரு. ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்களால் புன்னைமரம் ஒன்றை பெற்று ஆலயத்தின் இடப்பக்க வாயு முலையின் நாட்டப்பட்டு தற்போது விருட்சமாகக் காணப்படுகின்றது.
8. நித்திய நைமத்திய பூஜைகள்:
        ஆலயத்தில் மூன்று காலமாகிய காலை,  உச்சிக்காலை, மாலை, வேளை பூசைகள் நடைபெறுவதுடன் தைப்பொங்கள், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவழி போன்ற பண்டிகை தினங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடை பெறுகின்றன. அத்துடன் மாதம் தோறும் வருகின்ற பூரணை தினத்தில் விசேட திருவிழக்கள் நடைபெறுகின்றது. ஆரம்பகாலத்தில் வருடாந்த உச்ஷவமாக நவராத்திரி தினத்தை அலங்கார உற்சவமாக கொண்டாடிவந்தனர். பிற்காலத்தில் மகா உற்சவகாலமாக பங்குனி உத்திர நட்சேத்திரத்தை தீர்த்தோற்ட்சவ தினமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. அத்துடன் விஸ்வகுல வாலிபர்சங்கத்தினர் திருப்பவணிக்காக தேர்திருப்பணி செய்து தேர் கடந்த பதினொரு வருடங்களாக தேர்திருவிழா நடை பெற்று வருகின்றது. மட்டக்களப்பின் நகரக் கோயில்களில் உள்ள தேர்களின் முதவாவது தேர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஸ்ரீ சக்கரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. அதற்கு தைபூசத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்கள் ஸ்ரீ சக்கரபூஜை நடை பெற்று வருகின்றது. அடுத்து மாசிமகத்தை அடிப்படையாகக் கொண்டு இலசாட்சனை நடை பெற்று வருகின்றது. இதை விட திருவென்பாவை, விநாயகர் சதுர்த்தி, கெதாரகௌரி விரதம், கந்தசட்டி விரதம், பொன்றனவும் அனுட்டிக்கப்படுகின்றது.
9. திருவிழாக்கால நிர்ணயம். விசேட திருவிழாக்களும்:
     ஆரம்பகாலத்தில் ஆணிமாதப்பூரணையில் சடங்காக இருந்து பின்னர் தினப்பூஜை மாறிய பின்னர் சரதா நவரத்திரி காலமான மாறிய திருவிழா 1995 இல் வசந்த நவராத்திரியில் அலங்கார உற்ச்சவமாக மாறி 2000ஆம் ஆண்டில் மகா உற்ச்சவமாக மாறியது. இதற்கு காரணம் அப்போது இருந்த திரு. விநாயகமூர்த்தி ஈஸ்வரராஜா அவர்களும் அடியேனும். பல மகாசபை கூட்டங்களிலும் இது தொடர்பான பிரேரணைகளை கொண்டு சென்றாலும் பாரம்பரிய சரதா நவராத்திரியை மாற்றி வசந்த நவராத்திரியில் திருவிழா செய்ய தயாரில்லை. அதன் பின் ஆலய விஸ்வகுல வாலிபர் சங்கம் அவர்களிம் இருந்த சுவாமி உலவரும் சகடையை தேரக மாற்றும்  திருப்பணியில் ஈடுபட்டு; தேர் திருப்பணி நிறைவேறி விட்டது. தேர் செய்ததே பின்னர் திருவிழவுக்கு வித்திட்டது. அதன் பின் மகாசபையில் தீர்மாணம் நிறைவேற்றி. வசந்த நவராத்திரியில் பங்குனி உத்திரத்தை மையமாகக் கொண்டு மகா உற்சவத்தையும் வழமையான சரதாநவராத்திரியை அலங்கார உற்சவமாக கொண்டாவது என்றும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்திருப்பணி நிறை வேறும் வரையில் அலங்கார உற்ச்சவமாகவே நடைபெற்று வந்தது. பின்னர் அம்பிகை மகா உற்;சவமாக மாற்ற திருவுளம் கொண்டு 2000 ஆம் ஆண்டு கொடித்தம்பம் தாபக்கப்பட்டது. இதனை தாபிக்க திருமதி அந்தோனிப்பிள்ளை நல்லரெத்தினம் பத்தர் குடும்ப ஞாபகாத்தமாக செய்து கொடுத்தார். இதன் பின்னர் கொடியேற்றி திருவிழா நடை பெற்றது. அது தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. இங்கு தைப்பூசத்தை அடிப்படையாகக் கொண்டு இலட்சாரிச்சனையும்,  மாசிமகத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ சக்கர பூஜை பத்து நாட்கள் கொண்டுவரப்பட்டது. அத்துடன்  செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசையும் நடைபெற்று வருகின்றது. பூரணை திருவிழாக்களும், கந்நசஷ;டி விரதம், விநாயகர் சஷ;டி விரதம், கேதார கௌரி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், போன்ற விரதங்கள் அணுட்டிக்கப்படுகின்றது.

10. புணருத்தாரண வேலைகளும் குடமுழுக்குகளும்:
           மடாலயமாக இருந்த ஆலயம் புனராவத்தம் செய்ய எண்ணி 1968 ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி காலை 9.54க்கும் 10.45 மணிக்கும் இடைப்பட்ட சுப வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அக்கால காலத்தில் ஆலய பரிபான சபையில் திரு. காத்திகேசு வேதாரணியம் ஆச்சாரியார் அவர்கள்; தலைவராகவும் திரு. முத்துலிங்கம் சங்கரதாஸ் அவர்கள் காரியதரிசியாகவும் திரு. பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் தனாதிகாரியாகவும் இருதனர். அவ் ஆலயத் திருப்பணி நிறைவேறி 1979 சித்தாத்தி வருஷம் நவம்பர் மாதம் 30ம் திகதி (காத்திகை 14) தனுலக்கினமும் ரோகினி நட்சேத்திரமும் கூடிய காலை 7.30 தொடக்கம் 9.24 வரையுள்ள சுபமுகுத்தத்தில் வியாகரண சிரோமணி சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்களை பிரதிஷ;டா குருவாகக் கொண்டு முதலாவது புதிய ஆலயம் கட்டி குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது ஆலயத்தின் கருவறை அமரர் காத்திகேசு வேதாரணியம் ஆச்சரரியாரின் பெரும் பொருள் உதவியினாலும்,  தம்பமண்டபம் திரு.சாமிப்பத்தர் வள்ளிச்சாமி அவர்களாலும் எனைய மண்டபங்கள் அங்கு வாழ்ந்த மற்றும் பல்வேறு பகுதியில் வாழ்ந்த விஸ்வபிரம்மண குல மக்களின் நிதி உதவியிலும் ஆலய பரிபாலன சபையினதும் விஸ்வப்பிராமணகுல வாலிபர் சங்கம், மகளீர் சங்கம் ஆகியவற்றின் ஆயராத உழைப்பினால் கட்டப்பட்துடன். பரிபாலன மூத்திகளான விநாயகர் கோயில் காலம் சென்றவரான  நெல்லைநாதர் தில்லைநாதன் வழக்கறிஞராலும் (இங்கு குறிப்பிடப்பட வேண்டியது விநாயகர் சிலை வேப்படிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னை நாள் மூலவராவர். வழக்கறிஞரின் தயார் அங்கு சென்ற போது மூலவர் மாற்றப்பட்டு இச்சிலை விற்பதற்கு தயாராக இருந்தத போது அதை பணம் செலுத்தி பெற்று வந்தார். அதனால் தான் அவ்வாயம் புனரமைக்கும் போது அவரின் மகன் புணரமைத்துக் கொடுத்தார்), வல்லிதேவசேனாதி பதியான முருகனின் திருத்தலம் திரு. சாமிநாதபத்தர் முருகையா ஆச்சாரியராலும், நடேசர் சபை காலம் சென்ற திரு சின்னத்தம்பி பத்தராலும் நாகதம்பிரான் திருத்தலம் காலம் சென்ற பொண்ணர் பரம்பரையினரின் சார்பில் காலம் சென்ற சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்களாலும்,  ஸ்ரீ சன்டேஸ்வரி திருத்தலம் காலம் சென்ற நல்லதம்பி இரத்தினம் குடும்பத்தாரினாலும், மணிக்கூட்டுக் கோபுரம்; காலம் சென்ற காத்திகேசு சீனிவாசகம் சப்பையா நடராஜா குடும்பத்தினராலும் வைரவர் ஆலயம் வீரகுமாரர் குடும்பத்தினராலும் நவக்கிரக ஆலயம் திரு சாமிவேல் குடும்பத்தினாலும் வசந்த மண்டபம் திரு. அழகரெத்தினம் முருகையா  குடும்பத்தினராலும் வசந்த மண்டபத்தின் முன் மண்டபம் திரு தவராஜா குடும்பத்தினாலும் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் தெற்கு வாசல் நடராஜ மண்டபம் ஆலய  விஸ்வ பிரம்ம குல மகளீர் சங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்டது. முதவாவது கும்பாவிஷேகத்தின் போது ஆலய பரிபாலன சபைத் தலைவராக திரு சினத்துரை விஸ்வையா அவர்களும் காரியதரிசி திரு ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்களும் தனாதிகாரி திரு  இராசையா யோகேந்திரன் அவர்களும் இருந்தனர்;.
 இரண்டாவது புனராவர்த்தன கும்பாவிஷேகம் 1993 ஸ்ரீமுக வருஷம்  நவம்பர் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பூர்வ சஷ;டி திதியும் சித்தயோகமும் உத்தராட நட்ஷேத்திரமும் கூடிய காலை 8.12 மணி தொடக்கம்  9.56 வரையான  தனுலக்கின சுபமுகுத்தத்தில் பிரதிஷ;டா சிரோமணி வேதாகம கிரியா சூடாமணி சுவானுபூதி கிரியா கிரமஜோதி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்களை பிரதிஷ;டா குருவாகக் கொண்டு  நடை பெற்ற போது ஆலயபரிபாலன சபையின் தலைவராக திரு.  சின்னத்துரை விஸ்வையா ஜெ.பி. ஓய்வுபெற்ற நீப்பாசன அத்தியட்சகர் அவர்களும் செயவாளராக திரு. ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அதிபர் அவர்களும்  பொருளாளரக திரு கணபதி சந்தானம். கணக்காய்வாளர் அவர்களும் இந்தனர். இக் காலத்திலேயே விஸ்வபிரம்ம கலாசாரமண்டப திருப்பணியை இராமகிஷ்ணமிசன் சுவாமி ஸ்ரீமத் இராஜேஸ்வரானந்நதா மகராஜ் அவர்களும் ஸ்ரீமத் சுவாமி ஜீவனாநந்தஜீ மகராஐ; அவர்கனாலும் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து நிறைவேற்றப்பட்டது. அக்காலத்தில் பாராளுமன்ற அங்கவராக இருந்த திரு பிறிஸ் காசிநாதரின் பல்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்திலிருந்து 125000 ரூபாய் பெறப்பட்டு குழியல் அறையுடனாக கழிவறைகளும் கட்டப்பட்டது குறிப்பிடப்தக்கது. அத்துடன் பாரளுமன்ற உறுப்பினர்  காலம்சென்ற திரு. யோசேப் பரராஜசியசிங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்திலிருந்து தொலைபோசி இணைப்பும் பெறப்பட்டது.
மூன்றாவது புனராவர்த்தன கும்பாவிஷேகம் 2007 விய வருடம் ஜனவரி மாதம் 28ம் திகதி (தை 14)மீன லக்கனமும் ரோகினி நட்ஷேத்திரமும் தசமி திதியும் சித்த யோககும் கூடிய காலை 9.35 தொடக்கம் 10.38 வரையான சுபமுகுத்தத்தில் பிரதிஷடா குரு கிரியா கிரம வித்தியா ஜோதி குமரகுருமணி பிரம்மஸ்ரீ முத்து சற்குருநாதக் குருக்களால் புனராவத்தன சம்புரோசஷன மகாகும்பாவிஷேகம் நடை பெற்றது அப்போது ஆலய பரிபாலன சபை தலைவராக திரு சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்களும் செயகாளராக திரு. இரத்தினராஜா கிஸ்ணமூர்த்தி அவர்களும் பொருளாளராக திரு. நல்லரத்தினம் ஜீவகுமார் அவர்களும் இருந்தனர். அப்போது அடியேன் உபதலைவராக இருந்துடன் பதில் செயளாளராக திரு பூபாலப்பிள்ளை லோகானந்ததாசன் செயல்பட்டு திரு. தம்பிராஜா கருனாகரன் திரு. தம்பிராஜா  ஈஸ்வரராஜா ஆயோரின் அயராத உழைப்பால் கும்பாவிஷேகம் நடை பெற்றது. 2008 ஆம் ஆண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்  பங்குனி உத்திர  மகா உற்ச்சவத்தின் தீர்த்த திருவிழாவான பங்குனி உத்தரத்தரதினத்தில்   விஸ்வபிம்மகுல வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு இராமகிஸ்ணமிசன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தா மகராஜ் அவர்களால் கல்நாட்டப்பட்டு அங்குராற்பணம் செய்யப்பட்டது.
முதலாவது மகாஉற்சவம் 2000ஆம் ஆண்டு பங்குனி உத்தரத்தை தீர்தோஷசவமாகக் கொண்டு முதல் பத்து நாட்கள் நடைபெற்றது. கொடிமரம் திருமதி. இராஜலட்சுமி அந்தோனிப்பிள்ளை அவர்களால் நல்லரத்தினம் பத்தர் குடும்பஞாபகாத்தமாக செய்து கொடுக்கப்பட்டது. இவ் மகா உற்ச்சவம் தொடந்து வருடாவருடக் நடை பெற்று வருகின்றது.
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அம்பாளின் திருவுவில் காணப்பட்ட உடைவினால்  அம்பிகையின் விம்பம் தென் இந்தியாவில் மாவல்லி புரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் பிரதிஷடா குருக்கள் பிரம்மஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களால் செய்யப்பட்டது. அப்போது ஆலய பரிபாலன சபை தலைவராக திரு பாக்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்களும். செயளாளராக திரு தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களும் பொருளாளராக திரு. சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்களும் செயல்பட்டனர்.  அச்சமயம் சிதைவு ஏற்பட்ட சிலையை சமுத்திரத்தில் ஜலவாசம் செய்வதே விதி ஆனால் அதை பொது மக்கள் விரும்பவில்லை அதனால் பொது மக்களிடம் அபிப்பிராயம் கேட்டபோது பல்வேறு அபிப்பிராய வந்தது அவை
1. சிதைவை தேன்மெழுகால் சீர்செய்து வெள்ளி அங்கியால் போத்தி வைத்தல்
2. கண்ணாடிப் பெட்டியில் வைத்து பாதுகாத்துவைத்தல்.
3. ஆலயத்தின் பின்புறத்தில் வைத்தல்.
4. ஆலயதீர்த்தக் கிணற்றில் ஜலவாசம் செய்தல் (இத் தீர்மாணம் அடியேனுடையது.)
  அவை அனைத்தையும் அம்பானின் முன் சமர்பணம் செய்து திருவிளச்சீட்டு எடுத்த போது தீர்த்த கிணற்றில் ஜலவாசம் செய்ய திருவருள் கிடைத்தது. அதன் பிரகாரம் தீர்த்தக் கிணற்றில் ஜலவாசம் செய்யப்பட்டது. அதன் பின் நிருவாககால மாறியது. அதன் பின்னர் மக்களில் சிலரின் அபிலாசை காரணமாக ஒரு நாள் இரவு ஆலயம் பூட்டப்பட்ட நிலையில் ஒரு சில விசமிகளினால் ஜலவாசம் செய்யப்பட்டதை வெளியில் எடுத்து அலய மகாமண்டபத்தில் வைத்துவிட்டு மறைந்தனர். அதன்பின் மூன்று வருடங்கள் எவ்வித அபிவிருத்தியும் இன்றி ஆலயம் இருந்து. அதன் பின்னர் (2013) அடியேனை தலைவராகக் கொண்டு திரு ஞானமுத்து இராமநாதனை அவர்களை செயளாளரரகவும் திரு. சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களை பொருளாளராகக் கொண்டு புதிய நிர்வாகம் பாரமெடுத்து பின்னப்பட்ட பழைமையான அம்மன் சிலையை விஸ்வ பிரம்ம காலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
11. ஆலய உற்ச்சவ மூத்திகள்:
       ஆலயத்தில் ஆரம்பகாலத்தில் அம்பிகையின் உற்சவ மூர்த்தி காலம் சென்ற   பொன்னையா செல்வராஜா அவர்களாலும் சிவகாமிசமேத நடராஜர் காலம் சென்ற திரு தம்பிராஜா அவர்களாலும் முருகன் வல்லிதேவசேனாதிபதி வினாயகர் திருமதி. மகாலிங்கம் அவர்களாலும். சிவன்பார்வதி திருமதி விஜயராணி குடும்பத்தினராலும்; சன்டேசுவரி திரு இரத்தினம் குடும்பத்தினராலும் செய்து கொடுக்கப்பட்டது.

12. உற்ச்சவ மூர்த்திகளின் வாகனங்கள்:
       சிம்ம வாகனம் திரு. திருமதி. சண்முகராசா குடும்பத்தினராலும், எலி வாகனம் திரு. மதனகுமார் குடும்பத்தினராலும் எருது வாகனம் திரு.திருமதி நடராஜா குடும்பத்தினரும்; மயில் வாகனம்  சுரன் திரு.இ கஜேந்திரகுமார் அவர்களாலும் செய்து கொடுக்கப்பட்டது.
13. இராஜகோபுரத்திருப்பணி:
     2009 யில் இராஜகோபுரத்திருப்பணி சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் தலைவராக திரு. சிதம்பரநாதன் சண்முகநாதன் அவர்களும் காரியதரிசாக திரு. தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களும் பொருளாளராக திரு. நல்லரெத்தினம் ஜீவகுமார் அவர்களும் நியமிக்கப்பட்டு திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு  அப்போது  ஆலய பரிபாலன சபை தலைவரக திரு. பா க்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்களும் காரியதரிசியாக திரு. தம்பிராஜா ஈஸ்வராஜா  அவர்களும் பொருளாளராக திரு. சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்களும் இருந்தனர். அப்போது மகாசபையின் தீமானத்துக்கு ஏற்ப திருப்பணிச்சபை அமைப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஐந்து தளமும் கட்டப்பட்டு இரண்டு தளங்கள் பூசப்பட்டுள்ளது. அதன் பின்னர் மூன்று வருடங்கள் சென்றிருந்தும் திருப்பணி நடைபெறவில்லை. (ஆலயத்தின் அறங்கவலர்கள் மாற்றப்பட்டு புதிய சபை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருப்பணிசபையில் மாற்றம் இல்லை இருந்தும்திருப்பணிவேலைகள் இடம்பெறவில்லை) அதன் பின் புதிய நிருவாகம் திரு. பாக்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்கள் தலைமையாகக் கொண்டு திரு.சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்கள் செயளாளராகவும் திரு. சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்கள் பொருளானராகவும் கொண்ட நிருவாக சபை 2013 இல் பொறுப்பெடுக்கும் போது மகாசபை ஆலய நிர்வாக சபையினரே பொறு பெற்று நடாத்த வேண்டும் என தீமானம் நிறைவேற்றியதற்கிணங்க பொறு பொற்றுள்ளார். இத் தீர்மானத்துக்கிணங்க 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருப்பணி இரண்டு மணித்தூனுடன் நிறை வேற்றப்பட்டதுடன் பரிபாலன மூர்த்திகளாக ஸ்ரீ நத்தன வினாயகர், ஸ்ரீ விஸ்ணுதுர்க்கை, ஸ்ரீ மகாலச்சுமி, ஸ்ரீ தச்சனாமூர்த்தி, ஸ்ரீ விராட் விஸ்வப்பிம்மா, ஸ்ரீ காயத்திரி, ஆதி வைரவருக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டடு   2016.மாசி மாதம் குடமுழுக்குச் செய்யப்பட்டது.
தொடரும்...........



No comments:

Post a Comment