Thursday, March 2, 2017

வாதபித்தம் அத்திசுரம் போக்கிடும் சண்பக மலர்

 வாதபித்தம் அத்திசுரம் போக்கிடும் சண்பக மலர்
சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை பொதுவாக இமையமலைச் சாரலிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பொதுவாக நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு அரிச்சினைக்குப் பயன் படுத்துகின்றனர். வியாழ பகவான் தேவகுரு அவரே சிவன் ஞானகாரகன். ஞானத்தை கல்லாலையின் கீழ் சனகர் சனாதனர் போன்ற மகஷிகளுக்கு வேதத்தை உபதேசித்தார். அவருக் சமர்பிக்கப்படும் மலர்களில் பிரதானமாது சண்பகமலர் இனி அதன் மருத்துவகுணங்களைப் பார்ப்போம்;.
சம்பக மலரின் மருத்துவக்குணத்தை நோக்குகையில் சித்தர்கள்
'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்
தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள்
திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்' என்றனர்.
பாடலின் பொழிப்பு:
1. 'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்......': இம் மலர் வாதநோய் பித்தம் அத்திசுரம் என்னும் எழும்பு மச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரம். மேகம் எனும் நிரிலிவு நோய் காச்சல் போன்ற நோய்களைப் போக்க வல்லது.
2. 'தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள.....': தாது என்னும் இந்திரிய குறைபாட்டை போக்குவதுடன் கண்ணில் ஏற்படும் அழற்சியையும் போக்க வல்லது பெண்ணே கேள் என்கின்றார் சித்தர்.
3. 'திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்.....': மனக்களிப்பை போக்குவதுடன் நல்ல மணத்தையும் தருவதுடன் உட்டிணமும் உண்டாகும். என்றார்கள் சித்தர்கள். அறிவைப் பெற மணச்சந்தோசம் தேவை அத்துடன் உடல் வலிமையும் நோயற்ற நிலையும் தேவை.
அடுத்து சண்பகமரவேரின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிடுகையில்.
'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள
சண்பக மரத்தின்வேர் தான்' என்றனர் சித்தர்கள்.
பாடலின் பொழிப்பு:
1. 'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்.....': தீராத உஸ்னத்தை போக்க வல்லதுடன் சுரத்தையும் போக்கும் சண்பக மரவேர்.
2. 'நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால் ......':  உடலில் ஏற்படும் உஸ்ணத்தை குறைத்து பசியை உண்டாக்க வல்லது.
3. 'பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள......': கண்ணில் ஏற்படும் நோய்யினை போக்குவதுடன் இம்மலர் வாசமுள்ளது இதனால் மணம் அமைகொள்ள வைப்பது.
4. 'சண்பக மரத்தின்வேர் தான்': இவை அனைத்தையும் தரவல்லது சண்பகமர வேரை பயன்படுத்துவதனால் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.

பயன்படுத்தும் முறை:
சண்பகமலரையும் வேரயும் நினலில் உவத்திவைத்துக் கொண்டு கசாயம் வைத்து காலை மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலத்துக்கு முன் அருந்திவர மேல்கண்ட நோகளுக்கு பரிகாரம் காணமுடியும். இரண்டையும் தனித்தனியே பயன் படுத்தவும்.

No comments:

Post a Comment