Wednesday, March 8, 2017

தவமும் தவமுடையார்க்கே

தவமும் தவமுடையார்க்கே

தவம் என்பது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்து விடுவதில்லை. மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் 'புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராயப்; பேயாயக்; கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்  ......' என்று பலபிறவி எடுத்து அழுந்தி இறுதியிலே தவவாழ்வு கிடைக்கும். அதை எவராலும் கொடுக்க முடியாது. அவர் அவர் செய்த வினைப்பயனை அனுபவித்து முடிக்க வேண்டும். ஒருவர் செய்ததை இன்னொருவர் அனுபவிப்பது என்பது எந்தளவுக்கு சரியாகும். மேலும் நாம் சுமையை கூட்டிக் கொள்வதற்கு ஒப்பானது. சிலர் பிராயச்சித்தம் என்று செய்து விடுவது ஒரு தற்காலிய விடயம் தான் அதை அனுவிக்க மீண்டும் பிறவி எடுக்க நேரும். அதே வேளை சிலர் தம் பிழையான வழியில் சம்பாதித்ததை தானமாக வழங்கி விட்டு தன் கறுமாவை மற்றவர்களுக்கு சுமத்திவிடுகின்றனர். இதனால் மற்றவர்களும் தாம் தானத்தைப் பெற்றுக் கொண்டதற்காக கறுமாவை அனுபவிப்பர். இந்தப்பாவமும் எமக்கே சேர்ந்து அடுத்த பிறவியில் கூட்டுக்கறுமாக்கு ஆளாக வேண்டிவரும். ஒரு சிலருக்கு முன்வினை பயனாக அது தவசிகளின் நற்பலனை கொடுத்து அவரின் பிறப்பறுக்க உதவிடும் அப்போது அது தம் பெற்ற தவப்பயனாகி விடும். இதனாலேயே தவசிகளுக்கு உணவளித்து  அதனை அவர்கள் மனமாற மனமுவந்து ஏற்றுக்கொண்டால் எமது பாக்கியம்; அவர்கள் பெற்ற நற்பலனை எமக்கு தாரைவார்ப்பதுடன் அவர்களும் வினையிலிருந்து விடுதலை பெறுவதுடன் அவர்களுக்கு விடுதைக்கு வழிசெய்த பலனையும் அடைவர். தவசியை இணம்கான்பது என்பது இன்று பெரும் பிரச்சனை புளைக்க வழி இல்லாத அனேகர் புளைப்புக்கு வழியாக சுவாமியார் வேஷம்போட்டு நிம்மதிறற்று அலையும் மக்களை தம்பிடியில் வைத்து ஆட்டிப்படைக்கும் உலகமிது. இதனாலே 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்போர் சான்றோர். அருளும் பொருளும் ஓர் இடத்தில் இருக்காது. இதனாலேயே குருதேவர் ஸ்ரீ ராமகிஷ்ணர், ஸ்ரீ ரமணமகரிஷி, ஸ்ரீ ராம்குமார் சுவாமி, ஸ்ரீ பட்டித்தடிகள் போன்றோர் பணத்தை வெறுத்தனர். ஆனால் இன்று அந்தநிலை மாறிவிட்டடு. 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றனர். அது சரி இவ்வுலகம் கறுமத்தை அனுபவிப்பதற்கே அது நரகமும் சொர்ற்கமும் சேர்ந்தது. பொருள் இருந்தால் தான் இவை இரண்டும் கிடைக்கும். இதற்கு காரணம் செயல் அதுவும் பற்றுள்ள செயல். பற்றற்ற செயல் பிறப்புக்கு வழிவகுக்காது. ஆகவே பொளுள் இல்லா விட்டால் மறு உலகமான பிறப்பற்ற பிரவாமை ஏற்படும்.
இனி தவம் என்பது தொட்பாக திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை நோக்கு வோம். தவமுடையாரின் புலனகள் சிவபெருமானின் திருவடியின் கண் ஒடுங்கிநிற்கும் அவர்கள் எதற்கும் தயங்கார். அவர்கள் பிறப்யிறப்பு நோய் அடையார். நமனை அடையார். வேறுலக துன்பம் எய்தார். சிவனை நினைப்பு மறுப்பாகிய துன்பமைதார்.
இனை திருமந்திரம்
'ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே' என்றார். ஐம்புலனை அடக்கி சிவனில் நிலைபெறச்செய்தாக்கு அவன் சிந்தையைத்தவிர வேறு எதுவும் இல்லை. பிறப்பிறப்பு இல்லை. இராப்பகல் இல்லை. அவன் நிலை பெற்றவனாவான். மலத்தை போக்கு வதற்காக மயாகாரியமான உடலுடன்  உயிர் சேர்த்து உடல் நிலைத்திருப்பதற்கு வேண்டிய உலகமும் உலகியல் பொருட்களுமாகிய பெருநிலத் தேற்றமும் திருவடிநிலையை அடைதற்பொருட்டு செய்யப்படும் நன்நெறி பாதையும் தவமுடையாக்கே தென்படும். அவர்கள் மாயையின் பிடிஅறிந்தவர்களே இதனை திருமந்திரம
'எம்மா ருயிரும் இருநிலத்தேற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரல்லார்
இம்மா தவத்தின் இயலபறி யாரே' என்றார். தவமுiயாருக்கு உலகம் தெளிந்தா நீரின்னுள் உள்ளவை எல்லாம் தெட்டத்தெளிவாக தெரிவது போல் வினைக்கீடானவையும் திருவடி பெற்றை பெற செய்ய வேண்டியவையும் தெரியும். புத்தி விளித்து சித்தம் தெளிந்து இருக்கும் நிலை ஏற்படும். ஆதனால் மாயையின் பிடியில் அகப்படான். தாம் உழைத்து உண்ணார். உழைப்பு பயன் கருதும் போது இதில் எதிர்பார்ப்பு இருக்கும் இது வினைக்கீடாகும் அது பிறப்பிறப்புக்கு வழிவகுக்கும். இதனால் பிச்சை எடுத்துண்பர். பிச்சை கொடுப்பவன் முன்வினை பயனால் பெறுபெற்றவனாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லோரிடமும் பிச்சை எடுப்பதும்மில்லை பிச்சை எடுத்து உழைப்பதும் இல்லை. பசி இருந்தால் மட்டுமே பிச்சை எடுப்பர். அதுமட்டுமல்ல எந்தநேரமும் பிச்சை எடுப்பதல்ல. அவர் பெற்ற தவப்பலனை தவமுடையாருக்கு கொடுத்து பலன் அறுத்து சிவபுண்ணியப் பெருமையைப் பெற்றவரே.
 இதனை திருமந்திரம்
புறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே' என்றார். தாம் வினையை உழைப்பதிலிலை. தவமுடையார் பெற்ற தவப்பயனை பெற தவமுடையாக்குகே அதை வழங்க பிச்சை எடுப்பர். வினையை அனுபவித்துக் கொண்டு இருக்கை அவன் அருளை நினைத்து ஏங்கிக்கொண்டு இருக்கும் ஆன்மா விடுதலைக்காக. ' சிவத்தினைப்பேணில் தவத்துக்கு அழகு' என்றது கொன்றை வேந்தன்.
'பள்ள முதுநீர் பழகிய மீன்னம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோ டாடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே' என்றார். நீர் வற்றி குளம் குட்டாகிய போதும் இங்குள்ள மீன்கள் வெள்ளம் வருவதை எதிபார்ப்பது போல் தலமுடையாக்கு இறைஅருள் பெற்றுய்யும். போகமாஷிக்கு ஒரு கட்டத்தில் போகத்தில் ஆசை வர அவரின் குரு மீண்டும் அதை அனுபவிக்க அனுப்பி தடுத்தட் கொண்டமை, அருனகிரிநாதரை தடுத்தாட் கொண்டமை, சுந்தரரை தடுத்தாட் கொண்டமை போன்றவை இதற்கு சான்றாகும். பற்றுடையாரிடம் இறைவன் பாலில் நெய்கலந்துள்ளதைப் போல் கலந்துள்ளான். புhல் தயிராகி தயிரை கடைந்து மோரிலிருந்து வெண்ணையைப் பிரித்து வெண்ணையை உருக்கி நெய் பெறப்படுவது போல. வினையை அனுபவித்து அதை அறுத்து பிறவாமையை பெற வேண்டும்.இதனை திருமந்திரம்
'கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
புரந்த சடையான் பசும்பொன் நிறத்தன்
அருதவர்க் கல்லான் அனுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே' என்றார். பாலில் நெய்கலந்திருப்பது பாலை பாலக நோக்கும் போது தென்படாது. அதுபோல் அதனை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் 'கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று  பிறந்த பிப்பறுக்கு மெங்கள் பெருமா........' என்று இயம்பியுள்ளார். அவனை எல்லோரும் அறியமுடியாது. அருந்தவம் கொண்ட மெய்அடியாருக்கே அவன் தெரிவான். அவர்களே இயற்கை உண்மை அறிவின்ப நிலையை உணர்வர். அவர்கள் வாலறிவான வெண்மதியினை காலமுண்டாகவே காதல் செய்து உய்வர். பகைமையால் தம்மைதாமே அழித்துக்கொள்கின்றனர். அழிவால் கண்டதென்ன ஒன்றுமில்லை. அழித்துக்கொண்டது உலகை அனுபவிக்க வேண்டிய உடல். அது பிளையார் பிடிக்க குரங்காகிய கதையை ஒத்தது. இதை கண்டு நிலையாமையும் திருவடி உணர்வும் சிவ பரம்பொருளின் கண் நாட்டமும் இயலபாகவே உண்டாகும். அவ்வாறு அடைவோர் நற்தவம் செய்தாரே. இதனை திருமந்திரம்
'அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசம்
புகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்தோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே' என்றார். வல்லரசுகள் தமக்கடிமையாக்கும் போட்டியில் உடல் உடமைகளை இழந்து நிற்க்கும் நிலைமையை கண்டு ஞானத்தால் அறிவுடையேர் தவத்தை மேற்கொள்ளுவர். மனித ஆக்கத்துக்காக  மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அணுக்கள் இன்று கண்பிடித்த மனிதனையும் அவனால் உருவாக்கப்பட்ட பொருட்களையும். அவன் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப்பட்ட உலகையும் அழித்துள்ளது. இவை அனைத்தும் மனித செயல்பாடே ஒளிய இறைவனின் அல்ல. இறைவன் படைத்ததை அழிக்க முடியாது. இயற்கை தன்னை சரிசெய்து கொள்ளும். ஆதனால் அழிவது மனினால் படைக்கப்பட்ட பொருட்களும் அவனை அழிக்க அவனால் ஏற்பதுத்தப்பட்ட ஆணவமும், அவன் செய்த வினையும் வினை செய்ய காரணமான அறியாமையான மாயையும். இதை எல்லாம் முன்னரே தெரிந்து இதிலிருந்து விலகி இருந்து புதினம் பார்த்துக்கொண்டு இருப்பவன் தவமுடையான். உண்மைப் பொருளாகிய பரம்பொருளிடத்து ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகமின்றி பொருந்திநிற்றலே தவமாகும். ஞாமின்றி புத்தக அறிவைவைத்து உலகை பேய்க்காட்டி திரியும் சிலரிடம் தவம் இல்லை. 'ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது' என்பர் முதியோர். திருவள்ளுவர் திருக்குறளில் 'கற்ககசடற கற்றபின் நிற்க அதற்கு தக' என்றார். கற்று உனர்ந்ததை தன்வாழ்கை யாக்கிக் கொள்வதே சிறந்தது. 'படிக்கின்றது சிவபுராணம் இடிப்பது சிவன் கோயில்' என்போர் சான்றோர். 'உனக்கில்லடி உபதேசம் ஊருக்கடி' என்போரும் உள்ளனர். ஆனால் தவம் என்பது. அகமுகமாக இறைவனை என்நேரமும் மறவாது இருத்தலை குறிக்கும். இதனை திருமந்திரம்
'சாத்திரம் ஓதுஞ் கதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் பொது மறிந்துள்ளே நோக்குமின்
பார்தவப் பார்வை பசுமத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகல்சிட் டோடுமே' என்றார். சாத்திரம் கூறிக்கொண்டு அதன் படி நடக்காது. பரம்பொருளான அருளை நாடாது பொருளை நாடி திரிதலை நிறுத்தி பரம்பொருளில் இமைக்கும் பொழுதெல்லாம் அவன் நாட்டமாக இருத்தலே தவமாகும். திருவடி உணர்வைப் பெற சீலம், நோம்பு ஆகிய புறதவப் பயிச்சி தேவை அது இடையறாது மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஞானகமாதி நிலை பெறும். இதனை திருமூலர்
'தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மற்றந் தனையறி யாரே' என்றார். அறிவு, செறிவு ஆகிய இருநிலையில் நிற்போர் அகத்தவமும் அறிவுத்தவமும் உடையார் ஆவர் அவர்களுக்கு ஏணைய தவம் வேண்டார் இவர்கள் பிறர் பொருள் உண்மையை அறியார். தன்னை அறிந்தவன் ஞானி உலகை அறிந்தவன் அறிவாளி. அறிவு ஏட்டுச்சுரக்காக்கு ஒப்பானது. அதை உண்ணமுடியாது. ஞானியே தனக்கு நடக்க இருப்பது நடந்தது நடந்து முடிந்தது என்பவை தெட்டத்தெளிவாக தெரிவதுடன் கருமத்துக்கீடாகும் வினையையும் தெரியப்படுத்தும். அதனால் செயலை செய்யாது பரம்பொருளின் சிந்தையில் கலந்து அவனாவான். அவனே தவமுடையான்

No comments:

Post a Comment