ரிஷிமூலம் நதிமூலம் பார்க்ககூடாது என்பர். இது ஏன்என்று சிந்தித்துப்பார்பர் இல்லை.
இன்று தாங்தான் உயந்தவர்கள் என்று கருதும் சிலரின் வம்சம் பரம்பரையின் சூட்சிதான் அது. அதாவது மனுஸ் மிருதியில்
'ருஷியஸ்ருங்கோம்ருகோஜாத கொளசிகொசாதிநந்தந:
ஜம்புகேர்ம்புகோத்பத்தி: கொதமோகௌதசம்பவ: வேதம்
வால்மீகோபரோத்பத்தி: அகஸ்தியகும்பகம்பவ:
வியாசோலுப்தசம் பீதோ வசிஷ;டாவூர்வசிசுத:
நாரதோப்சகிபுத்ரோ கௌண்டந்யோமுண்டகிசுத:
மதங்கஸ்யமதங்கஸ்யாத் மாண்டவ்யோமண்டுகிசுத:
சாங்க்பாசப்சகம்பூதோ கார்க்கேயோவகார்த்தசுத:
சிநகிகர்ப்பசம்பூதோ சௌநயாதி மஹா ருஷp:
குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கலைக்கோட்டார் மான் வற்றிலும், கௌசிகர் காசிமஹாராஜாவுக்கும். ஜம்புகர் நரியின் வறிற்றிலும், கௌதமர் பசுவின் வயிற்றிலும், வான்மீகர் வேட்டுவப் பெண்ணின் வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்படவபெண்ணின் வயிற்றிலும், வசிஷ;டர் தாசி வயிற்றிலும், நாரதர் வண்ணாத்தி பெண்ணின் வயிற்றிலும், கௌண்டில்யர் முண்டச்சி பெண்ணின் வயிற்றிலும், மதங்கர் சக்கிலிய பெண்ணின் வயிற்றிலும், மாண்டவ்யர் தவளை வயிற்றிலும், காங்கையர் பறைய பெண்ணின் வயிற்றிலும், காங்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும் பிந்துள்ளனர். இதனால் அவர்களை ஆராய்ந்தால். அவர்களின் கோத்திரப் பெருமை தெரிந்து விடும் என்பதற் காகவே இவை அனைத்தும். விஸ்வபிராமணர்களே பிராமணர்களாக அன்று காணப்பட்டனர். ஐந்து வேதங்களை நான்கு வேதமாக்கி. ஐந்து தலைஉள்ள பிம்மாவை நான்கு தலையாக்கியவர்கள் அல்லா அவர். மனுஸ் மிருதி மனுவால் ஆக்கப்பட்டது. மனு, மயா, துவஷ;டா, சில்பி, விஸ்வக்ஞ் என்னும் பஞ்சகம்மாளர்களே விஸ்வபிம்ம கோத்திரத்தார். அவர்களே பிராமணர்கள். முறையே வேதங்கள் ருக்கு வேதம், யசுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம், பிரணவ வேதம், இவர்களிடவே
சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பு
சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பு என்பது 1818ஆம் ஆண்டில் சென்னைப்பட்டணத்தைத் சேர்ந்த தித்தூர் ஜில்லா சதுர்ப்பேரில் பண்டிதர் மார்க்கசகாய ஆசாரிக்கும் பஞ்சாங்கம் குண்டையனுக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் பிராமணீகத்தைக் குறித்து நடந்த சம்பாஷணை. இச் சம்பாஷணைக்கு காரணம் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த கதுர்ப்பேரில் விஸ்வப்ரம்ஹவம்சத்தில் பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரியார் முதலியவர்கள் நடாத்துகின்ற விவாகஸ்தம்பம் பிரதிஷ்டை வைபவத்தில் பஞ்சாங்கம் குண்டையன் முதலியன பிப்ராள் கும்பல் கூடி வந்து ஆசேஷபனை செய்தமையினால் ஏற்பட்ட விபரீதம். சம்பாஷணையை ஓவ்வொன்றாகத் தருகின்றேன். அவை கேள்வி விடையாக தொடர்கின்றது. இந்த சம்பாஷணையில் பஞ்சாங்க குண்டையன் கேட்ட கேள்விக்கு வேதசுருதி பிரமாணமாக பண்டிதர் மார்க்கசகாய ஆசாரி விராட் விஸ்வப்ரம்மம் தொடர்பாக அளித்து விடைகள் வருமாறு.
1. பஞ்சாங்க குண்டையன்:- ஓ மார்க்கசகாய ஆச்சாரி! இந்த அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் படைத்தவர் யார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- ஓமெனும் பிரணவ ஓங்காரமாய் ஒலிக்கா நின்ற விராட் விஸ்வப்ரம்ஹமே அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் படைத்தவர்
2. பஞ்சாங்க குண்டையன்:- அந்த விராட்புருஷ விஸ்வப்ரம்ஹம் எப்பேர்க் கொத்தது ?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- யஸூர்வேதம் மூன்றாவது உபநிஷதத்தின் சூத்திரார்த்த வாக்கியத்தில்
வேதசுருதிப் பிரமாணம்: 'தஸ்யமத்யேவந்ஹிசிகா அணீயோர்த்வாவ்யவஸ்தித:
ஓம் அத்தியோகாஷரம் ப்ரம்ஹவியாஹரந்'
என்று சொல்லியபடி அந்த விராட் விஸ்வப்பிரம்மமாகிய பரப்ரம்மம் ஆதியந்தமும் அருவ உருவங்களும் குணங்குறிகளும் இல்லாதவராய் நிர்மல நிராமய நிஸ்கள வஸ்துவாய் இருக்கின்றார்.
3. பஞ்சாங்க குண்டையன்:- அந்த பரப்ரம்மம் அருவ உருவங்களற்றவரென்றீரே! அப்படி இருக்க விராட் விஸ்வப்ரம்மமென்று சொல்லும் விதி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அந்தவிஸ்வப்ரம்மத்தை அந்தாமுகமாய் நோக்குகையில் அருவ உருவங்கள் அற்றவர் என்றும், பகிர்முகமாய் நோக்குகையில் ரூபமுடையவர் என்றுஞ் சொல்ல நியாயமிருக்கின்றது. அது எப்படியென்றால், உலகத்தில் காணும் சிருட்டிகள்யாவும் அவரல்லாமல் இல்லையாகையால் அவைகள் அவரல்லாமல் இல்லையாகையால் அவைகள் அவரேயென்றும் அந்த சிருஷ்டி கர்த்தாவை ரூபில் காண திட்டமில்லையாகையால் அரூபமென்றுஞ் சொல்லாயிற்று.
4. பஞ்சாங்க குண்டையன்:- ப்ரம்மத்திற்குப் பகிர்முகத்தில் ரூபமுண்டென்றீரே அதை விபரமாய்த் தெரிவிக்கக் கோருகின்றேன்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரமத்திற்கு அண்டரண்ட பிரமண்டங்களே சரீரம். அது எப்படி என்றால் பிரம்மமென்று சொல்லும் பிருதிவி அந்த விராட் விஸ்வப்ரமத்திற்கு பாதமென்றும், விஸ்ணு வென்னும், அப்பு தொப்புளென்றும் உருத்திரனனுந்தேயு மார்பென்றும், மஹேஸ்வரனென்னும் வாயுமார்பு முதல் புருவமத்தியமெறும், சதாசிவமெனச் சொல்லும் ஆகாயம் சிரமென்றும் சொல்லப்படும்
அந்த ப்ரம்மத்திற்கச் சந்திரன் - மனது, திக்குகளே - காது, வி;ஸ்ணுவே - தோள்கள், அக்னியே - வாக்கு, மிருத்யுவெ - குதம், வாயுவே - தொக்கு, சூரியனே - கண்கள், வருணனே - நாவு, பூமாதேவியே - மூக்கு அந்தர்யாமியே - புருசன். அவைகளே அப்பிரமத்திற்குத் தேகம். அந்த விஸ்வப்ரம்மமானது சிற்றுருவாகி ஜீவன்களில் ஸ்தூலம் சூசஷ்மம், காரணம், கூடஸ்தம், ப்ரம்மமெனப் பஞ்ச அங்கங்களைப் பெற்றிருப்பதால் பஞ்சேந்திரியத்தால் மனதை செல்லவொட்டாமல் நிறுத்திப் பிரணவவேதத்தில் கற்பித்திருக்கும் விதிப்படி யனுஷ்டித்தால் அந்த ப்ரம்மத்தைத் தெரிசிக்கலாம்.
5. பஞ்சாங்க குண்டையன்:- பிரமாண்ட பிண்டமாகிய அப்பிரம்மம் வேறு ஜீவன்களாகிய நாம் வேறு ஆகியிருக்க நம்மில் அவர் சிற்றுருவாய் நிறைந்திருக்கிறாரென்றீரே அது எப்படி?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-
வேதசுருதிப் பிரமாணம்:
'இருஷிகேசவிபு: நாநோபாதி நடாதத்பேதாத்
ஆகசா: யதாததாயின்னவத்தந்நநாஸேஸதிகேவலாபவதி'
என்கின்ற இதிலே, மனாதி இந்திரியங்கள் அனைத்துக்கும் அதிபதியாய்ச் சர்வ வியாபகனாகிய விஸ்வப்ரம்மமானது நானா விதமான ஸ்தூல சூட்சம காரண கூட ஸ்ததேகமாகிய உபாதிகளிலேப்ரம்மமாக பிரதிபலித்தவனாகிய அந்த உபாதிபேதத்தினாலே கடாதிகளால் வேறுபட்ட ஆகாயமானது எப்படி இருக்கின்றதோ அப்படியே வேறுபட்டவனைப் போல அந்த விஸ்வப்ரம்மம் ஜீவர்களில் பிரகாசிக்கின்றது. இவர் னாதிவஸ்து வென்பதற்கு மூலஸ்தம்பம் பிரமாணம்.
'நபூமிநஜலஞ்சைவர நதேஜோ நசவாய்வ:
நசாகாஸநசித்தஞ்சா நபத்தீயாக்றாணகோசர:
நசப்ரம்மநிவஸ்ணுச்ச நசருத்ரஸ்சதாரகா
சர்வசூன்யநிராலம்ப ஸ்வயம் பூவிஸ்வகர்மண'
என்னும் இதிலே பூமீயும் - ஜலமும் - அக்கினியும் - வாயுவும் - பிரகாசமும் - ஆகாசமும் - புத்தியும் - நசஷத்திரமும் - ப்ரம்மாவும் - விஸ்ணுவும் - ருத்திரனும் இவை முதலியவை ஒன்று மில்லாத சாவசூனிணமாயிருந்த காலத்தில் ஸ்சுயம்பு விராட் விஸ்வப்ரம்மாவானவர் ஸ்வரூபமாயிருந்தார். அந்த ஸ்வரூபத்திலிருந்து பஞ்சமுகசம்ராட்டாகிய விஸ்வப்ரம்மா உண்டாகினார். அவருடைய ஸ்வயரூபதியான மோவென்றால் சத்தியோசாகம், வாமதேவம், அகோரம், தற்புருஷம், ஈசாநியமென்றும் பஞ்சமுகதியானத்தால் சாநக - சநாதந –அபுவநச – பிரத்தநச –சுபர்நச என்னும் நாமதேயமுடைய மநு – மய – துவஷ்டா – சில்பி – விஸ்வக்ஞ ஜீய என்னும பஞ்சப்ரம்மாக்கள் உற்பவமானார்கள். இந்த ப்ரபஞ்சம்மாக்களாலும், பஞ்சசத்திகளாலும் சிருஷ்டி, திதிசங்காரம் திரோபவம் - அநுக்கிரகமெனும் பஞ்சகிருத்தியங்கள் நடந்தேறி வருகின்றன.
6. பஞ்சாங்க குண்டையன்:- பஞ்சகிருத்தியத்தில் சிரு|;டி எவ்வாறு?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- பூமிசாரபூதவியற்கையால் தேவர்- மக்கள்- விலங்கு- புல்- ஊர்வன- நீர்வாழ்வன- தாவரமென்னும் எழுவகைத் தோற்றமாகி அவைகளில் ஆண் பெண் ஜாதியாய் ஜீவாத்மாக்கள் பிரதிபல்த்து வாழையடி வாழையாய் உற்பவித்து வருவதே சிருஷ்டி பிருதிவியின் செய்கையாகிய இதுதான் ப்ரம்மாவென்று சொல்லப்படும்.
7; பஞ்சாங்க குண்டையன்:- திதி கிருத்யஞ் செய்பவர் யார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அப்புவின் அம்சம் பிருதிவியின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் எங்குந் தானே வியாபித்து பிருதிவியினால் உற்பவித்த ஜீவாத்மாக்களுக்குக் காமத்தை விளைவித்துக் காப்பற்றுவது தான் திதித் தொழில் இதுதான் அப்பு இந்த அப்புதான் விஸ்ணுவென்று சொல்லப்படுகின்றது.
8. பஞ்சாங்க குண்டையன்:- சங்காரகிருத்யஞ் செய்பவரார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- தேயுவின் அம்சம் பிருதிவியின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் அடங்கிய பிருதிவியின் செய்கையால் உற்பவித்த ஜீவாத்மாக்களில் கலந்து விஸ்ரம்பிக்கும் போதுவாதபித்தமென்னும் பிணிகள் ஒவ்வாமல் அழிவதுவே சங்காரம் இதுதான் தேயுவாகையால் ருத்திரனென்று சொல்லப்படும்.
9. பஞ்சாங்க குண்டையன்:- திரோபவமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- திரோபவமாவது வாயுவின அம்சம் எங்கும் தானாயுலாவித் தேயுவின் அம்சத்தை அதிகரிக்கவொட்டாமல் உலகத்தை பாதுகாப்பது ஜீவாத்மாக்களின் பரிசவேதியிற் கலந்து விஸ்ரம்பிக்கும் போது சத்துவகுணம் பிரதானமாகி அந்தக்கரணங்கள் அடங்கியிருப்பது திரோபவமாகையால் இதுதான் மஹேஸ்வரனென்று சொல்லப்படும்.
10. பஞ்சாங்க குண்டையன்:- அநுக்கிரகமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அநுக்கிரகமாவது ஆகாயத்தின் செய்கை விராட் விஸ்வப்ரம்மம் ஜோதி சொருபமாகிய பரவெளியில் உதயமாகி வாயுவின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் தனக்குட்படுத்திக் கொண்டு அவ்வாயுவின் அம்ஸம்விஸ்ரம்பிக்கும் போது அதிதீவரபக்குவமுள்ள சுத்த ஆத்மாவுக்கு ஒளியாக வெளிப்பட்டு விஸ்வப்ரம்மத்தின் கிருபாநோக்கத்தால் பாலொடு நெய் கலந்தால் போல பரவி முத்தியைத் தருவது ஆகாயத்தின் செய்கையாகிய அநுக்கிரகம் என்றறிக. இந்த அநுக்கிரகந்தான் சதாசிவமென்று சொல்லப்படும்.
11. பஞ்சாங்க குண்டையன்:- ப்ரம்மவம்சத்தின் விதியாவது என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- ப்ரம்மவம்சத்தில் மநுவாச்சாரி என்பவர் அயசிருஷ்டியும், ருக்குவேத பாராயணமும், அவுபாசநமும், ஓமகுண்டங்களில் சிருஷ்டித்தருளயிய சம்ஹாரகர்தாவென்கிற உருத்திரசிருஷ்டி என்று சொல்லப்பகின்றது. அதன் செய்கை வேதம் ' அயாமதுருக்ஜாதம்' என்னும் வேத வாக்குப்படி ருத்திர ரூபமாகிய சுத்தியினால் சமஸ்தவர்ணாசிரமங்களும் சிருஷ்டி பரிபாலனமாகுமட்படிக் கெற்பத்திலுற்பவித்து சிசுவின் உந்திக்கொடியைத் தாய் வேறு பிள்ளை வேறாக கண்டித்த பின் தர்மாத்த காமமோஷமென்கின்ற சதுர்வித புருஷாத்த சித்திகளும் விளங்கும்படி கார்முணை, கத்திமுணை, கதிர்முணை, தராசுமுணை, எழுத்தானிமுணை இவ்வைந்தினால் உலக கரசஷனை செய்து வருவது ருத்திரன் தொழிலென்று யசுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இது தான் மநுவாச்வாரியார்.
12. பஞ்சாங்கம் - குண்டையன்:- மயாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- மயாச்சாரி நிhணயமாவது 'மயாதாரு யஜீஸ்தா' என்னும் வேதவாக்கின் படி யசுர்வேத பாராயணமும் ,சகல ஜீவாத்துமாக்களும் உயி;ர்வாழும்படி தாருசிஷ்டியும், தேவனுகூலமான சாமான்களும் விஸ்ணு தொழிலென்று சொல்லப்படுகின்றது. அவ்விரசஷப்பையுடையவர் தான் மயாச்சாரியார்.
13. பஞ்சாங்கம் - குண்டையன்:- துவஷ்டாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- துவஷ்டாச்சாரி நிர்ணயமாவது 'தாம்ரத்வஷ்டாஜாஸாமம்' என்ற வேதவாக்கியப்படி தாம்பிர சிருஷ்டியும், சாமவேத பாராயணமும், கருக்கட்டியுருக் காட்டிய ஷண்மத ஸ்தாபன விக்கிரகங்களும் யாகசாலையில் கலசாவாவம் - தூபதீப முதலிய கருவிகளும் ப்ரம்மாவினுடைய தொழிலென்று யசுர் வேதத்திற் சொல்லுகின்றமையினால் அந்த ப்ரம்மா தான் துவஷ்டாச்சாரியார்.
14. பஞ்சாங்கம் - குண்டையன்:- சிற்பியாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சிற்பியாச்சாரி நிர்ணயமாவது வேதம் 'சிலாசில்பி: அதர்வணர்:' என்னும் வேதவாக்கின் படி அதர்வண வேதபாராயணமும் முப்பத்திரண்டு சில்பமும், சண்மதஸ்தாபனமும், கோபுரஸ்தூபி முதலிய சதகோடி தேவதா நிர்மிதோத்தாரணமும், வேதமந்திரபீஜ ஆவாஹனமும் அஷ்ட திசைக்கிரியையும் நிர்மானித்து மோஷார்த்தமாகிய ப்ரம்மக்கியானங்களுக்கு நியம நிஷ்டா –கிஷ்டா – அஷ்டாங்கயோக சமாதிகிரியா ஸம்ப்ரத அத்வைத ப்ரம்ம சொரூபமென்கிற விராட் விஸ்வப்பிரம்மத்தை வணங்குவதற்கேதுவாகியும், தேவர்களுக்கு ஸ்தபதியாச்சாரியர் இருந்து சமஸ்தமந்திர அம்சையினால் சர்வாதார தேவதைகளும் அஷ்டாதசவர்ணமும் மோசஷமடைவதென்று சிற்பாச்சாரியினுடையசிருஷ்டியே தேவேந்திரனுடைய சிருஷ்டியென்றும். யசுர் வேதத்திற் சொல்லியிருக்கின்றது. அந்த இந்திரன்தான் சிற்பாசாசிரியார்.
15. பஞ்சாங்கம் - குண்டையன்:- விஸ்வக்ஞ ஆச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விஸ்வக்ஞ ஆச்சாரி நிர்ணயமாவது வேதம் 'ரௌப்யஸ்வர்ணாற்கப்ரணவம். பஞ்சப்ரஹ்ம விதீயதே' என்னும் வாக்கியப்படி புராணவேத பாராயணமும், திரய்த்திரிம் சதகோடி தேவதைகளும், சமஸ்த வர்ணாசிரமத்தார்களும், பிரகாசம் பொருந்தின சுவர்ணங்களினால் ரத்னாபரணாதிகள் சிருஷ்டித்தலும் அஷ்டாதசவர்னங்களும், அஷ்டவிவாகத்திற்குட்பட்ட வர்ணாசிரமங்களில் துன்மார்க்க மாதர்களால் உற்பத்தியான அனுவோமன்- பிரதிலோமன்- அந்தராளன்- கன்னன்- குண்டன்- கோளகன் முதலான வாக்கபீஜ நிஷிதமில்லாமல் மாங்கல்யமென்கிற முத்திரியைச் சிருஷ்டித்து மேற்சொல்லிய வர்க்கங்களை குலபுத்திரர்களாக்கி சதுர்வித புருஷார்த் தங்களை அடையும்படி அனுக்கிரகம் செய்வது சூரியசிருஷ்டியென்று யசுர் வேதத்திற் சொல்லப்படுகின்றது. அந்த சூரியன்தான் விஸ்வக்ஞ் ஆச்சாரியார். இந்த ஐந்துவித ப்ரம்ம கருமங்களை அனுஷ்டித்து வருவதினால் உலக சம்ரஷணையென இருக்கு – யசுரர் - சாமம் - அதர்வணம் - பிரணவம் மூலஸ்தம்பம் - ஷட் - சாஸ்த்திரம் - அஷ்டாதசபுராணங்கள் - ஆகமசித்தாந்த இதிகாசங்கள் வச்சிரசூசி – நாகாகாண்டம் - சிற்பநூல் முப்பத்திரண்டில் விச்சுவகருமம் - விசிசுவேகம் - விச்சுவகாசிபம் - மகத்திரம்விசாலம் - சித்திரம் - காபிகாலயூபம் - நாமசங்கிதை – சரத்திகம் - விச்சுவபோதம் - ஆதிசாரம் - வெகுச்சுருதம் - மானபேதம் - ஆதிசாரம் - வெகுச்சுருதம் மானபேதம் முதலிய பல நூல்களிலுஞ் சொல்லியிருக்கின்றது. மேலும் ஐந்து சிருஷ்டிக்கும்மிஞசி உலகம் இல்லையென்றும் அதுவே பஞ்சகர்த்தாக்கள் அவதாரரூபம்மென்று யசுர் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. அதாவது
'மநுப்பிரம்மணே உமாமஹேஸ்வராப்யாம் நம:
மயப்பிரம்மணே லசஷிமிநாராயணப்யாம் நம:
துவஷ்ட்றுபிரம்மணே வாணி ஹிரண்ணிய காப்;பாப்யாம் நம:
சில்பிபிரம்மணே சசீபுரந்தார்ப்யாம் நம:
விஸ்வக்ஞப்ரம்மணே ஸ்விதபாஸ்கராப்யாம் நம:' என்னும் வேதவாக்கியத்தின் பொருள் மநுப்ரம்மாவினுடைய சிருஷ்டியே உமாமகேஸ்வரியாகிய ருத்திரன் தொழில் என்றும். மயப்ரம்மாவினுடைய சிருஷ்டியே லட்சும்நாராயணஸ்வரூபமாகிய விஸ்ணு தொழில் என்றும், துவஷ்டப்ரம்மாவினுடைய சிரூஷ்டியே வாணி ஹிரண்யகர்ப்பராகிய ப்ரம்மாவினுடைய தொழில் என்றும், சில்பிப்ரம்மாவினுடைய சிரூஷ்டியே சசிபுரந்தனாகிய தேவே;திரன் தொழில் என்றும், விஷ்வக்ய ப்ராம்மாவினுடைய சிருஷ்டியே சவிதா பஸ்கரனாகிய சூரியனுடைய தொழில் என்றும்
' விராட்விஸ்வ கர்மணே நம:
ஸம்ராட்விஸ்வ கர்மணே நம:
ஸம்ராட்விஸ்வ கர்மணே நம:
என்னுடைய விராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மா ஸ்வரூபமென்றும் விராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மா ஸ்வரூபம் என்றும் ஸம்ராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மரூபம் என்றும் , ப்ரம்மகர்மமென்பதும் வேத முதலியவற்றால் விளக்கியிருக்கின்றன்.
16. பஞ்சாங்கம் - குண்டையன்:- சஷத்திரியருடைய விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சஷத்திரியர்களில் சூரியவம்சம் சந்திரவம்சம் அக்னிவம்சம் முதலியன அனந்தம் சஷத்திரியர் ஐம்பத்தாறு முதலான தீவுகளில் அரசாளுகின்றவர்கள் முடிகொடை முதலிய தசாங்கத்துடன் வேதமோதுதலும், யாகஞ் செய்தலும், இரப்பவர்க்கீதலும், ஆயுதவித்தையிற் பழகுதலும், ஆகிய ஷட்கர்மமுடையராய் வீரமுள்ளசேனைகளும், மதிநுட்பமும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டைகளும், பதினெண் வழக்குகளை மநுநீதியின் படி விதிக்கின்றவர்களே சஷததிரியர்கள்.
17. பஞ்சாங்கம் - குண்டையன்:- வைசியர்களின் மார்க்கமென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- வைசியர்களின் மார்க்கமாவது தராசு நிறை நிறையும் தர்மமான நிதானமும் ஐPவகாருண்யமும், தேவதா பக்தியும், காரிய சித்தியும், சத்தியநாவும், நித்தியசீலமும், புத்தியுக்தியும், வேதவித்தையும் பெற்றவர்களே வைசிரியர்களென்னப்படுவார்கள்.
18. பஞ்சாங்கம் - குண்டையன்:- சூத்திரர்களுடைய விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சூத்திரர்களுடைய விதியாவது ஆதியில் விஸ்வர்ரம்ம வம்சத்தார் இ;ந்த பூச்சக்கரத்தைக் குறிஞ்சி, பாலை,முல்லை, நெய்தல், மதுரமென்னும் பஞ்கநிலமாகப் பகுத்தளித்து இன்ன காலத்தில் இன்ன பொருள் விளையும் எனறும் கற்பித்தபடியே உயிர்களை காப்பாதற்றுவது சுத்திரர்கள் பெருமையாகையால் அச்சூத்திரர் தேவர்கள் முதலிலாகிய பிதுர்க்கள் யாவருக்கும் நித்திய நைமித்திய உணவுகளைத் தருபவன் வேதாகமங்களுணர்ந்த விதிவழுவாதவனே சூத்திரர் என்று சொல்லப்படுவார்.
19. பஞ்சாங்கம் - குண்டையன்:- பிரமச்சாரி விதியாவதுதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- குருபத்தியில் தொண்டு பூண்டிருப்பதும், வேதம் ஓதுதலும், நிலத்தில்படுத்தலும், நித்தியஸ்நான விதரமும், உத்தமர் நேசமும், தேவாலய தரிசனப் பணிவிடைகளும் , சத்தியவாக்கும் பெற்றிருப்பவர்
20. பஞ்சாங்கம் - குண்டையன்:- இந்த பிரமச்சாரிக்கு பதவி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாலோகப்பதவி
21. பஞ்சாங்கம் - குண்டையன்:- சலோகப்பதவியாவது யாது?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரம்ம உலகத்தில் வாழிவதே சாலோகப்பதவியாகும்.
22. பஞ்சாங்கம் - குண்டையன்:- கிரகஸ்தன் விதியாவது யாது?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- தர்மமாக தேடியபொருட்களைப் பிரம்மச்சாரி முதலிய பதின்மருக்கும் பகிந்து கொடுத்துத் தேவாலய பணிவிடை திருவிழா செய்வது வேதவிதி வழுவாது விரதநோன்பியற்றி அசத்தியம் மாற்றி ஆச்சாரியரை வாழ்த்திச் சொல்தவறாதவளுடன் கூடி வாழ்வது இல்வறதருமமாதம்.
23.பஞ்சாங்கம் - குண்டையன்:- இந்த கிரகஸ்டனுக்கு பதவி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாமீபம் எனப்பட்ட பதவி
24. பஞ்சாங்கம் - குண்டையன் :- சாமீபம் என்றால் என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி: - விராட் விஸ்வரம்மத்தின் அருகில் இருப்பது.
25. பஞ்சாங்கம் - குண்டையன்: வானப்பிரஸ்தன் விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- கற்புடைய மனைவியுடனாவது தனியாவது ஐம்புலன் அவாவில் உழலாமல் தன்வசத்தனாகி விரத முதலிய தவம் புரி;து ஏகபுத்திரனாக இருப்பதுதான் வானப்பிரஸ்தன் விதி.
26. பஞ்சாங்கம் - குண்டையன்: இவர்களுக்கு பதவியென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாரூபம்
27. பஞ்சாங்கம் - குண்டையன்:- சாரூபப்பதவியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரம்மம் போல் ரூபித்திருப்பது.
28 பஞ்சாங்கம் - குண்டையன்:- சந்நியாசி விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. பிரணவவேத விதிவழுவாமல் தத்துவபேதாபேதங்களறி;து இருவினை மும்மலமகற்றிப் பாசபந்தத் தொடக்கறுத்துத் தேகாபிமானம் வெறுத்துப் பற்றறச்சுத்தசை தந்யபதமானதே சந்நியாச விதியாம்.
29. பஞ்சாங்கம் - குண்டையன்:- இவர்க்குப் பதவியென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. சாயுச்சிய பதவியாகும்
30. பஞ்சாங்கம் - குண்டையன்:- சாயுச்சிய பதவியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. ஆ குண்டையனே நானுமில்லை நீயும்மில்லை நாமரூபந்தானுமில்லை தானுந்தானாயிருக்கும் சாயுச்சியம். அந்த சாயுச்சியமாவது விராட் விஸ்வப்ரம்மத்தில் ஐக்கியமாம்.
இப்படியான பஞ்சாங்கம் - குண்டையனுடைய பல கேள்விக்கு வேதசுருதியின் படி பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி விடையளித்தார். இதை முழுமையாக அறிய 'சித்துர் அதாலத்துக் கோர்ட்டு தீர்ப்பு' என்ற வு. முக்கண்னா ஆச்சாரியார் அறக்கட்டளை வெளியீடு, தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன இளைஞர் சங்கம், மாநில அமைப்புச் செயலாளர், ஆ.ளு. முனிசாமி ஆச்சாரியார், இல 28, பராசக்தி காலனி, சிவகாசி- 626 123. இதில் வேதவியாசரின் உற்பத்தி, புராணங்களுக்கிடையிலான மும்மூர்திகளின் பேதம் அதாவது ஒன்றில் உயர்த்தி இன்னொன்றில் இழிவுபடுத்தி பேதங்களை ஏற்படுத்திய விதம். விஸ்வபிரம்ம வம்சத்தாரை சூட்சி செய்து நாடுகடத்திய விதம், அவர்களின் பரம்பரை தொடர்பான விடையங்கள், வேள்வி தொடர்பாக விடையங்கள், குருத்துரோகம், போன்ற பல்வேறு விடையங்கள் வேதசுருதிகளின் ஆதாரபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது.
இறுதியாக சென்னைப்பட்டணத்தைச் சார்ந்த சித்தூர் ஜில்லா அதாலத்து கோட்டு மஹகனம் பொருந்திய கவர்ண்மெண்டு ஜட்ஜி டேகர் துரையவர்கள் சமுகத்துக்கு
மேல்படி ஜில்லாவைச் சேர்ந்த சதுர்ப்பேரியிலிருக்கும் விஸ்வப்ரம்ம வம்சத்தாரில் பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி முதலானவாதிகள் 11 பேர் எழுதிக்கொண்ட விண்ணப்பமான தென்னெனில்
மேற்படி சதுர்பேரியிலிருக்கும் பஞ்சாங்கம் - குண்டையன் முதலிய பிரதிவாதிகள் பத்துப்பேர் ஏகமாய்கும்பல் கூடிக்கொண்டு வந்து விவாகஸ்தம்பப் பிரதிஷ்டாபனஞ் செய்வதை ஆட்சேஷபனை செய்தார்கள்.
மேற்சொல்லிய பிரதிவாதிகழைத்து வந்த பஞ்சாயத்தார் இந்த பஞ்சாங்கங் முண்டையனை நீக்கி உங்கள் வம்சத்தில் வாத்திமாரை வைத்து விவாகஞ் செய்ய எத்தனித்தபடியால் எங்களைப் பஞ்சாயத்தாராகக் கோரிக்கொண்ட இந்த பஞ்சாங்கங் குண்டையன் கேட்குங் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் வேதச் சுருதிப் பிரமாணமாய் உத்திரவு கொடுத்ததால் உங்கள் விஸ்வப்ரம்ம வம்சத்தில் வாத்திமாரை வைத்து வேத விதிப்படி விவாகஞ் செய்து கொள்ளளாமென்றார்கள்.
மேற்சொல்லிய பஞ்சாயத்தார் முன்னிலையில் பஞ்சாங்கங் குண்டையன் கேட்டகேள்விக்கெல்லாம் வேதசுருதிப் பிரமாணமாய் உத்தரவு கொடுத்தோம்.
பஞ்சாயத்தார் முதலானவளும் விஸ்வப்ரம்மவம்சத்தார் வேதவிதிப்படி விவாகஞ் செய்வதற்கு பஞ்சாங்கங் குண்டையன் முதலான விப்பிராள் தடங்கல் செய்யக் கூடாதுதென்று தீர்ப்புக்கொடுத்தார்கள்.
அத்தீர்ப்புப் பிரகாரம்இந்த பஞ்சாங்கங்குண்டையன் முதலானவாள் ஒத்துக்கொள்ளாமல் கம்மாள ஜாதி தவிர மற்ற ஜாதிகளெல்லாம் எந்த தேசத்திலும் எந்த நாட்டிலும் தங்களுக்கு உபபலமாயிருக்க கவர்ன்மெண்டு துரைத்தனத்தில் எந்தக்கோட்டிலும் தங்களுடைய வமிசத்தாராகிய விப்பிராள் தானே சகலருக்கும் அதிகாரிகளாயிருக்கிறார். லேசாய் செயிக்கலாமென மேற்படி குண்டையன் முதலான விப்பிராள் கும்பல் கூடிக்கொண்டு எங்களைப்பிடித்து அடித்துச் சண்டை செய்ததை மேற்சொல்லிய பஞ்சாயத்தார் முதல் பதினைந்த சாசஷிகளைத் துரையவர்கள் சிசாரணை செய்தால் தங்கள் சித்தத்துக்கே நன்றாய்த் தெரியலாம்.
மேற்சொல்லிய பதினைந்து சாசஷிகளையும் பொலிஸ்துரையவர்கள் விசாரணை செய்து அந்த பஞசாங்கங் குண்டையன் முதலான விப்பிராளுக்கு அபராதம் போட்டு விவாகநஷ்டத்தைக் குறித்து கோட்டாரில் பிரியாது செய்யும்படி டையரி கொடுத்தார். இத்துடன் தாக்கல் செய்திருக்கும் அந்த டையரியும் தாங்கள் தயவு செய்து பார்வையிட வேண்டியது.
இந்த பாரதகண்ட முழுமையும் தங்கள் கைக்குள்ளாக ஆளுகை செய்து வருகின்ற மகானம் பொருந்திய இங்கிலீஷ் துரைத்தனத்தாரை இத்தீவுக்கு வரும்படியாகச் செய்த காரணம் தெய்வயத்தனமெனயோசிக்க வேண்டியிருக்கிறதெதினாலே யென்றால்.
உலகத்துக்கெல்லாம் ஒளியையுங் காந்தியையுந் தருகின்ற சூரியனை மேகமானது மறைப்பதுபோல் வியாசர் முதலான ரிஷிகள் கூடி உண்டுபண்ணின அக்கியமான புராணங்களானது நீதியின் வெளிச்சத்தைப் பிரகாசிக்கவொட்டாமல் மறைந்திருந்தது. ஆனால் கார்மேகத்தைக் காற்றானது கலைத்து விலக்குவதுபோல இங்கிலீஷீக்காரருடைய சத்தியமும் தரும நீதியுமாக்கப்பட்ட சண்டை மாருதங்கொஞ்சஞ்மாக முன்னிரு;த சுத்தியான விருளை விலக்கிவருகின்றது.
இப்பவும் விராட் விஸ்வப்ரம்மாவானவர் இஙகி;லீஷீக்காரர்கள் கையிற் சத்தியத்தின் வாளையுஞ் சமாதாபனத்தில் கிரீடத்தையும் நீதியின் தராசையுங் கொடுத்திருக்கின்ற படியால் கொஞ்சக்கால்தில் இவ்விடத்தில் விப்பிரசங்களுக்குள்ளேயுண்டயிருக்கின்ற சாதிபேதத்தினாலே வரும் சகல துர்க்குணங்களுக்குமற்று நற்குணத்துக்காளாகவும்.
எங்கள் கலியாண சாமக்கிரியை நஷ்டம் ரூபா 550ம் வாதிகளுக்குப் பிரதிவாதிகள் கொடுக்கும்படியாகவும், வாதிகள் தங்களுக்குண்டானயிருக்கின்ற பாத்தியப்படிக்கு வேதபாராயண முதலியதுஞ் செய்துகொண்டு சகல கிரியைகளையும் எந்தேசத்திலும் எந்த நாட்டிலும் விஸ்வப்ரம்ம வம்சத்தார் தாராளமாய் நடாத்திக்கொண்டு வரும்படியாகவும், அதில் பிரதிவாதிகளாகிய விப்பிராள் பிரவேசிக்கக்கூடாதென்றும் தீப்பு கொடுக்கும் படி கோருகின்றோம்.
அதற்கு விஸ்வப்ரம்ம வம்சத்தார் சுபாசுபங்களைக் குறித்து வேதவிதிப்படிச் செய்வதை விப்பிராள் தடங்கல் செய்யக்கூடாதென்று சித்தூர் ஜில்லா அலாத்து கோட்டு தீர்ப்பு வளங்கியது.
இவை எல்லாம் ஆச்சாரமுள்ளக்கே அன்றி பிறப்பால் அல்ல. ப்ரம்மத்தின் முகத்தில் தோன்றியவனே ப்ராமணன் என வேதம் சொல்லுகின்றது. அவன் தனது கடமையை மறந்தால் சூத்திரனே. ப்ரம்மணனின் கடமை ஓதல் ஓதிவித்தல், வேட்டல் வேட்பித்தல், ஈதல் ஈவித்தல் என்பனவே. செய்யும் தொழிலுக்கு தானம் வாங்குவது மட்டும் அல்ல. ஆனால் விஸ்வப்ராமணர் பஞ்சகம்மியர்கள் அவர்கள் அதன் மூலம் பொருள் ஈட்டி சீவணோபாயம் பண்ணுபவர்கள். அவர்களுக்கு தானம் வாங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தானம் கொடுப்பவர்கள். ஆச்சாரம் உள்ளவனே ஆச்சாரி எனவே அவர் முறையாக குருவிடம் திட்சைபெற்று பவித்திரமான முற்புரிநூல் அணி;து விராட் விஸ்வப்ரம்மத்தை வணங்கி நாகலிங்கபூஜை செய்து பஞ்சகிரித்திங்கள் செய்வதற்கே விஸ்வகர்மாவினாலும் விஸ்வகர்மிணி ஆன காயத்திரியாலும் படைக்கப்பட்டவர்கள அவகளே பஞ்சகம்மாளர்கள்.
1814 த்திய அசலுக்குச் சரியான நகல் அசல் நம்பர் 205 1818 வருடத்தில் தீர்ப்பு
வாதிகள்
சதுர்ப்போரியிலிருக்கும்
1 .வெள்ளை ஆச்சாரியார்
2. மார்க்கசகாய ஆச்சாரியார்
3. ருத்திர ஆச்சாரியார்
4.வெங்கடாசல ஆச்சாரியார்
5. நல்லா ஆச்சாரியார்
6. குழந்தை ஆச்சாரியார்
7. சின்னகண்ணு ஆச்சாரியார்
8. அருனாசல ஆச்சாரியார்
9. மஹாதேவஸ்தபதியார்
10. தசஷணாமூர்த்திஸ்தபதியார்
11. வரத ஆச்சாரியார்
வக்கீல் அப்துல்காயபு
பிரதிவாதிகள்
சதுர்ப்போரியிரு;து
1. பஞ்சாங்கம் - குண்டையன்
2. அருனாசல அய்யன்
3. வெங்கடசுப்பு சாஸ்திரி
4. விஸ்வபதி சாஸ்திரி
5. தொட்டாச்சாரி
6. எக்கியதீசஷதர்
7. வியாசபட்டர்
8. சூரியநாராயண சாஸ்திரி
9. ஜோதி சாஸ்திரி
10. வந்தவாசி சிரஸ்தாரையர்
வக்கீல் அருணாசல முதலி
புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.
மார்க்கசகாய ஆச்சாரி எமது வியாசபகவான் திரிமூர்திகளையும் எந்தப்புராணத்தில் இகழ்திருக்கின்றார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு.
சிவபுராணத்தில் 'ஆதிசக்தி மயம் பீஜசக்தி மயம்சிவ சிவசக்தி மயம்விஷ்ணு சர்வம்விஷ்ணு மயம்ஜகத்' இதன் கருத்து ஆதிசக்தியினிடத்திலிருந்து ஓருபீஜம் பிறந்தது. அதனுடைய வல்லமையினாலே சிவன் பிறந்தார். சிவனிடத்தில் விஷ்ணு பிறந்தார். இவ்விஷ்ணுமயம் சர்வலோகம் முழுவதும என்பதினால் சிவன் விஷ்ணுவுக்கு தந்தை அல்லவோ?
'மயோனிர்ஹர்ஹத்ப்ரம்ஹஸ்பின்கற்பேகதாம்ஹம்' இதன் கருத்து: என் யோனியில் மஹாப்ரம்மம். அதிலிருந்து நான் உலுவாகி விடுகின்றேன் என்பதாம்.
'குணேப்யசேஷாப்ய மாணேப்யத்iயேப்தேவா பிஜக்ஞீறே ஏகமூர்திதரயோபாகா ப்ரம்மாவிஷ்ணுமஹேஸ்வர' என்பதின் கருத்து: ராஜச தாமத சாத்வீக குணங்களினால் ஆதிமூர்த்தியும், அந்த ஏகமூர்த்தியினால் திரிமூர்த்திகளும் தோன்றியது என்பது. இங்கு இவ்விரண்டு சாஸ்திரங்களில் ஒன்றில் ஏகமூர்தியானவர் ஆதியிலே யாதொரு குணமும் இல்லாமல் ஏகமாயிருந்தார் என்றும், மற்றுமோர் சாஸ்திரத்தில் முற்குணங்கள் உள்ளவரானார் என்றும் சொல்லி இருப்பத்னாலே அநேக ஆசேஷபனைகளுக்குpடமாயிருக்கின்றதல்லவா? அது எப்படி என்பீரோ? அந்த மூர்த்தி குணமில்லாதவர் என்றால் அவருடைய பரத்துவ மகத்துவத்துற்குக் குறைவும், அவரது பூரணத்தன்மைக்குப் பின்னமும் ஆகின்றதல்லவோ! ஏனென்றால் ஓரு சாஸ்திரம் நிhக்குணமென்றும், மற்றொரு காஸ்திரம் முக்குணம்ரென்றும் சொன்னால் அது மகாபேதமல்லவோ? அதை யோசித்தால் தெரிகின்றதல்லவோ?
மச்சபுராணம் இந்த ஆதிமூலத்துக்குரிய திரிகுணாத்துமாவின் உற்பத்தி காரணங்களைக் குறித்துச் குறித்து இருக்கின்ற சுலோகங்களை உமக்கு விரிக்க வேண்டுமாகில், அவை அனேகமாக இருப்பதால் மற்றைய புராணங்களில் இருக்கின்ற வழுக்களில் சிலவற்றை மாத்திரம் இங்கே சுருக்கமாக காட்டுவேன். அவைகளில் ஒரு புராணத்திலே ஆதிசக்தியில் நின்று இந்ததிரிமூர்த்திகள் தோன்றினார்கள் என்றும். அந்த ஆதிசக்தி இவர்களை மோகித்துத் தனக்கே இவர்களைப் புருசர்களாக்கிப் பாவித்துக்கொண்டார்கள் என்றும். பகவதத்திலும் இன்னும் சிலபுராணங்களிலும் விஷ்ணுவுடைய நாபியிலே ஒருதாமரை தோன்றி அதிலிருந்து ப்ரம்மா உற்பவித்தார் என்றும். சொல்லப்பட்டிருக்கின்றது. அது அப்படி என்றால் ஆதியிலே ப்ரம்மா முந்தி தண்ணீரை சிருட்டித்துத் தன்னுடைய இந்திரியத்தை அந்ந தண்ணீரில்விட்டார். அது முட்டையாகி மிதந்து, அந்த முட்டையை முற்கண்ணனாகிய சுpவபொருமான் தோன்றி உடைத்தார். அந்த ஷிணமே குற்றமில்லாத பஞ்சபூதங்களும் உண்டாகினவாம்.
மற்றொரு புராணத்திலோ ஆதிசக்தியிலிருந்து ஒரு விந்து தோன்றி அதிலிருந்து சிவன் தோன்றினார் என்றும், மச்ச புராணத்திலே ப்ரம்மாவிலிருந்து சிவன் தொன்றினார்ரென்றும். இன்னம் இப்படிப் பலவிதஞ் சொல்லி இருப்பதால் எது மெய் எது பொய் என்பதை யார் கிரகிக்கக்கூடும்? இதனால் சகலமும் பொய் என்றே தெளிவாய் விளங்குகின்றது.
'ததோசிருஜத்வாமதேவம் திரிபுண்ரவாதாரிணம்'
இதன் கருத்து: ப்ரம்மம் திரிபுண்டதாரியென்கிற வாமதேவனை உண்டாக்கிகினானென்பதே.
நரதபுராணத்தில் நாராயணனுடைய வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா தோன்றினாரென்றும் இடது பக்கத்திலிருந்து விஷ்ணு தொன்றினார் என்றும், மத்தியில் சிவன் தோன்றினார் என்றும் சொல்லிருக்கின்றது.
இலிங்கபுராணத்தில் இவ்வுலக அண்டத்திலிருந்த சிவனானவர் ரூபீகரித்துப் பிறகு தனது இடது பக்கத்திலிருந்து விஷ்ணு இலக்குமி என்பவர்களையும் தனது வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா சரஸ்வதி என்பவர்களையும் உண்டாக்கினர் என்றும் சொல்லிருக்கின்றது. இப் புராணத்திலேயே மற்மோர் பக்கத்தில் ப்ரம்மா சவிருஷ்டிக்கிரியை முடிக்கச் சக்தியில்லாமல் கண்ணீர் விட்டெழுந்தானென்றும், அந்த கண்ணீர்களில் ருத்திரன் தோன்றி அந்த திருஷ்டிக்கிரியைத் தானும் முடிக்கக்கூடாமல் வருந்துவதை அவன் தகப்பனாகிய ப்ரம்மா கண்டு அவனுக்குத் துணை செய்ததாகவுஞ் சொல்லியிருக்கின்றது.
மார்க்கண்டபுராணத்தில் லட்சுமியிலிருந்து விஸ்ணுவும், காளியிலிருந்து சிவனும், சரஸ்வதியிலிருந்து ப்ராமாவும் தோன்றினார்களென்றுஞ் சொல்லிருக்கின்றது.
வராகபுராணத்தில் திரிமூர்த்திகளிலிருந்து சக்தி தோன்றி அந்த சக்தியிலிருந்து லட்சுமி, காளி, சரஸ்வதி மூன்றாயினார்கள் என்றும் இப்படிபலவிதமாகச் செல்லிய பலபுராணங்களில் எதை மெய் என்று சொல்லக்கூடும்? இவ்வித மாறுபாடுகள் அனேகம் வியாசர் முதலிய ரிஷிகள் தங்கள் புராணங்களிற் கற்பனை செய்திருக்கின்றபடியால் இதை மெய்யென்று நம்புகிறவர்களைப் பேதைகளெனறே சொல்லப்படும்.
'சர்வவ்யாபீ'பகவான் தஸ்மாத்ஸர்வ கதஸ்சிவ'
இதன் கருத்து: அந்த பகவானென்னப்பட்ட சிவன் சர்வவியாபியபகி எவ்விடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்பது பகவதத்தில் இதற்கு முழு விரோதமாயிருக்கின்ற சுலோகத்தைக்கேளும்
'பவவ்ரததாயேசா ஏசதாசசமநோவரத:
பாஷாண்டின: தேபவந்த சஸ்சாஸதி;ந்பரிபந்தன:
முழுசஷீவோகோரரூபந த்வாபூதபதிர்நதா:
நாராயண பளாசாந்தா பஜந்திஹ நசூயவ:
இதன் கருத்து: சிவனைப் பூசித்துத் தியானித்தவர்களைப் பாஷாண்ட் பதிதர்களென்றும், மோசஷம் அடையார்களென்றும் நாராயணனைத் தியானிப்பவர்கள் மோசஷத்தை அடைவார்கள் என்றும் சிவனை இகழ்ந்தும் ஹரியைப் புகழ்ந்து பேசியிருக்கின்றது பதுமபுராணத்தில் சிவனை இகழ்ந்திருக்கின்றது.
'விஷ்ணுதர்ஸனமாத்னே சிவத்ரோஹப்ரஜாயதே
சிவத்ரோஹசநீதேஹோ நரகம்யாந்த்தி தாருணம்
தஸ்மாத்தப்விஷ்ணுநாமாபி நவக்தவ்யகதாச' இதன் கருத்து: சிவத்துரோகஞ் செய்து விஷ்ணுவைத் தரிசித்தால் சிவன் உக்கிரங்கொண்டு நரகத்துக்காhக்கு வான். ஆதலால் விஷ்ணுவினுடைய பெயரை உச்சரிக்கலாகா என்பதாம். இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றதல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றார்கள் அல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
'யஸ்து நாராயணம்தேவம் ப்ரம்ஹருத்ராதி தேவதா:
சமமந்வைர்நிரொசேஷதா ஸபாஷாண்டிபவேத்பதா:
திரிமந்த்ரபகுமோக்தேநா ப்ரம்ஹணய்யேப்யவைஷ்ணவ:
நஸ்பஷ்டவ்யாநவக்தவ்யா நத்ருஷ்டவயா கதாசந:'
இதன் கருத்து: எவனொருவன் ப்ரம்மா உருத்திரனுக்கு நாராயணனைச் சமமென்று சொல்லுகிறானோ. அவன் என்றென்றைக்கும் பதிதபாஷாண்டனாவானென்றும் லட்சுமி மந்திரஞ் செபிக்கின்ற விஷ்ணு பக்தாளாகிய வேதியர்களைத் தூஷிக்காமல் ப்ரம்மக்கியானமுள்ளவரென்று போற்றிவாழ்த்திப் பணியவேண்டியது. கேட்டீரோ பஞசாங்கம் குண்டையரே சிவனை நீக்கி விஷ்ணுவைப் போற்றிப் புகழவேண்டுமமென்றும். விஷ்ணுவை நீக்கிச் சிவனைத் துதிக்கவேண்டும்மென்றும், விஷ்ணு பக்தாளைக் கண்ணாலே பார்க்கவும், தொடவும்படா தென்றும், பேசக்கூடாதென்றும், அவர்அவர்களுக்கேற்றபடி புராணங்களைக் தற்பித்த உங்கள் முன்னோர்களின் புத்தீயினத்தை என்னென்று புகழ்வேன்.
'அந்யதேவம்பரத்வேநா வாந்த்யக்ஞான மோஹிதா:
நாராயணஜகந்நாதா தேவபாஷாண்டி நஸ்மிருதா:'
இதன் கருத்து: ஜகநாதனாயிருக்கின்ற நாராயணனைப் பாக்கிலும்ட முக்கியமாயிருக்கின்ற அந்நியதெய்வமும் உண்டெண்றும் சொல்லுவார்கள் அறிவீனரும், வஞ்சகரும், பதிதபாஷாண்டரும், பாவிகளுமாவார்கள்.
'ரமதேவோமஹாதேவோ விஜ்ஞேயஸ்துமஹேஸ்வர:
நதஸ்மதித்பரங்கஸ்சித்பதம்சமதிகம்யதே'
இதன் கருத்து: மஹேஸ்வரனுக்கு மேலானவஸ்து ஓன்றுமில்லை யென்பதாம். இதில் சிவனைப் புகழ்ந்திருக்கின்றது.
'வாசுதேவம்பரித்யஜ்ஞ யேன்யதே வமுபாசதே
த்ருஷிதோஜாந்நதிதீரே கூபம்நகதிதுர்மதி:'
இதன் கருத்து: வாகுதேவனென்னப்பட்ட விஸ்ணுவை விட்டு விட்டு அந்நிய தேவனை வணங்குகின்றவன் தாகமடைந்த மதியீனனாவான். அவன் கங்கை நதியின் கரையில் உட்கார்ந்து கிணற்றை வெட்டுகின்றவனுக்கு சமமாக எண்ணப்படுவானென்பதாம். இதிலே விஷ்ணுவைப் புகழ்திருக்கின்றது.
இவ்விதமாகவே உங்கள் புராணங்கள் எல்லாம் சிவனை இகழ்ந்தும் விஷ்ணுவை புகழ்ந்துமிருப்பதால் ஒன்றுகொன்று ஒவ்வாமல் மாறுபாடாயிருப்பதென்பதற்கு மெற்சொல்லிய சில திருஷ்டாந்தமே போதுமென்றேண்ணுகின்றேன்.
இப்படி மார்க்கசகாய ஆச்சாரி வாதிட்டார். இவ்வாறன குலறுபடிகளால் மக்களிடத்தில் ஏற்பபட்ட விரோதச்செயல்பாட்டை சீர்செய்யவே கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர் 'ஆதிசங்கரர்';. அவரே'|ண்மதஸ்தாபகர்'; என்று போற்றப்பட்வர்.
புராணங்கள் இதிகாசங்கள் வேதத்தில் சொல்ப்பட்ட விடையங்களை இலகுவாக மக்களுக்கு விளங்கக்கூடியதாக அமையும். சிறிய உண்மைகளை விரித்துக்காட்டுக் பூதக்கண்ணாடியே புராணஇதிகாசங்கள் ஆகும். அதுவே குழப்பத்துக்கு காரணமாக அமைந்தால் எப்படி வேத உண்மைகளை மக்களுக்கு கொடுப்பது. வேதங்களை விளங்கும் ஆற்றல் மகரிஷிகளுக்கும் சித்தம் தெளிந்த சித்தர்களுக்குமே முடியும். அதை ஆகமங்களாகவும் வகுத்து இன்னும் இலகுபடுத்த உபநிடதங்களாக வகுத்து இன்னும் எழிமையாக்கியதே புராணஇதிகாசங்கள். இவற்றை இப்படி குழப்பினால் எப்படி பாமரமக்கள் இதைப்புரிந்து கொள்வது. ஒரு ப்ரமம்த்தில் இருந்து வந்தால் எப்படி வேறுபடுவது. பரப்ரம்மம் எங்கள் எல்லோரிடத்தும் ஆத்மாவாக இருக்கின்றது அதற்கு எல்லாமே தெரியும். 'பம்பின் கால் பாம்பறியும்' என்போர் சான்றோர்.
விஸ்வப்ரம்ம குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் நக்கீரர்.
நக்கீரர்
கி.பி 175ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுரையில் விஸ்வப்ரம்ம குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் எண், எழுத்து, பஞ்சாங்கம், ஐந்திலக்கணம், நீதி, போன்றவைகளை இயல்பாகவே உணர்ந்து சொல்லி கணக்காயராக இருந்த விஸ்வப்ரம்ம தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார். அவர் படிப்பை முடித்து குலத்தொழில் பொற்பணியும், தச்சுத்தொழில் செய்துமம் பெரும் புலவராகவும் திகழ்ந்தார்.
செம்பமாறன் என்னும் சூடாமணிப் பண்டிதன் அரசின் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவிருந்து தமிழ் திறமைமிக்க புலவர்களை ஊக்கப்படுத்தியும் திறமையற்றவர்களை சீர்ப்படுத்தியும் தமிழை வளர்த்தார். பாண்டிய மன்னனுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பெண்களின் கூர்தலுக்கு மணம் உண்டு எனப் பாட்டிசைக்க அதில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டிய போது தொழில் திறமை இல்லாமல் சிவனார் வேடத்தில் வரும் நக்கீரரைப்பார்த்து புலவர்கருத்தை விட்டு விலகி
'அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கப்பட இரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் சீரனோ என் கவியைப்
பாரீல் பழதென்பவன்'
சாதியைப்பற்றி இழிவாகச் சொன்ன போது
'சங்கறுப்பது என் குலமே தம்பிரானுக்கேது குலம்
பங்கமறச் சொன்னாற் பழதாமே – சங்கை
அரித்துண்டு வாழ்வோர் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வது இல்லை' என விளக்கம் கூறி றேர்மையை நிலை நாட்டினார். நக்கீரர்.
நக்கீரர் நேர்மைக்கு உவமை காட்டிப் பேசும் போது இவர் நக்கீரர் என்றும் இவர் நக்கீரர் பரம்பரை என்றும் சொல்வதை காணலாம். இவர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன எட்டுத்தொகை நூல்களிலும் தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
இவருடைய பாடல்களில் உலகியல், நாட்டுநடப்பு, மன்னனின்சிறப்பு, நாடகக்கலை, கட்டடக்கலை, போன்ற மனிதனுக்கு தேவையான பல சிறப்புக்களைக் கொண்டதாக உள்ளது. இவர் நாயன்மார்கள் ஆறுபத்தி முவரில் ஒருவராவார்.
இவ்வாறு சிறப்பு மிக்க நக்கீரரை பலர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுள் 1983 ம் ஆண்டில் சேலம் டாக்டர் மு.பெ.ரி.மு இராமசாமி அவர்கள் நக்கீரர் ஓர் ஆய்வு என்ற நூலைத் திறம்பட எழுதியுள்ளார். இன்நூலை பாரி நிலையம் வெளியீடு செய்துள்ளது.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'ஸ்ரீ போகாமாமஹரிஷி'
கி.பி 8-ம் நூற்றாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் விஸ்வப்ரம்மண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் போகர் பிறந்தார். பன்மொழியும் கற்று குலத்தொழிலான பொற்பணியைச் செய்து மருத்துவம், சோதிடம், யோகம், வானசாஸ்திரம், தொழில் வரலாறு, மாயாயாலம், ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பலநூட்கள் எழுதியுள்ளார் அவற்றில் போகர் ஏழாயிரம், போகர் பன்னிரண்டாயிரம் என்பன சிறப்புப் பெற்றது. மேலும் கவுரி பாஷாணம், வீரம், பூரம், லிங்கம், மனேசிலை, பாதரசம், அரிதார, துத்தம், காபி என்னும் நவ பாசாணத்தில் பழனி முருகன் சிலை செய்து செய்துள்ளனர். அம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிருதம் காயகற்பமாக இன்றும் கருதப்படுகின்றது. மேலும் அவர் சீனநாட்டுக்கு சென்று பல அற்புதங்கள் செய்தார். இவர் இன்றும் சீனமக்களின் மனதைக்கவர்;தவர். அவரின் வழிமுறைகளை நன்கு பயன்படுத்தியும் அவருக்காக போகர் தினம் என விடுமுறையும் அனுசரிக்கின்றனர். அவர் சாதிமதபேதம் இன்றி அனைவருக்கும் வழிகாட்டியவர். அவரின் சீடராக வேட குலத்தைச்சேர்ந்த ஸ்ரீ புலிப்பாணி முக்கிய சீரடாவார். போகர் சமாதி பழனியில் உண்டு அவர் சித்தர்களில் பிரதானமானவராவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'பொன்மணித் தட்டார் :
கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிப சிவஜோகி வாழ்ந்து வந்தார். அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமாணமாக விற்றுப் பெறுவார். இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக பெண்கள் கூடுவர் அவர்களில் இருவருக்கே மணி கிடைக்கும். இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பென்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. இச்சமயம் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பிகட்டிவந்த ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது கலங்கி இருந்த வேளை தன்னை அறிமுகப்படுத்தா வகையில் தினமும் வேலைகளை கண்டு வருபவர்; பொன்மணி தட்டார். அன்று சிப்பின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை பொன்மணிதட்டார் காட்ட அதை வாங்கி கோபுhரத்தில் வைத்தார்கள்;. பின்னர் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாத போகவும் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. கும்பாவிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ' உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்' என்ற இறைவனின் அசரீதியாக உணர்ந்திட்ட மன்னன். மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதமாகும். இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல். கோபுரத்தின் மேல் இருப்பதாகும். பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது புரியவில்லை என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை அனுப்பிவைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூற அவர் நானோ சாதாரண வயோதிபன் அரசரிடம் எனக்க ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறிவிட அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதான கேட் அசரீதி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார். அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றர். அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழி;தவாறு கட்டி முடித்து. எட்டாம் நாள் மன்னர் அவட்வீட்க்குச்சென்று அழைத்து வந்தனர். திருக்குளத்தினுள் செல்ல அரசன் தெப்பம் உள்ளதென அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றோருர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அவிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடைதுள்ளது.
தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினபலும் மகா சிவராத்திரியன்று குருபூஜை நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் சிறப்பினை 'விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்' என்ற பழைய நூலிலும். 'பொன்மணித்தட்டார் சரித்திரம்' என்னும் நூலிலும், 'படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்' என்ற நூலிலும் காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'வீர கவிராயர் (வீரசாமி ஆச்சாரி)
பாண்டியநாடு நல்லூர்க் கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் கி.பி.1524-ம் ஆண்டு பிறந்து பொற்பணியைச் செய்யும் பன்மொழி புலவராகத் திகழ்ந்தவர். படிக்காசு புலவரை எதிர்த்துப்படி வெற்றி கொண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தி சத்திய வாழ்க்கை முறை அமைய வழிகோலிய 'அரிச்சந்திர புராணம்' என்ற நூலை இயற்றியும் சமகாலப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றும் சிறப்புடன் வாழ்தவர்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'இராமலிங்க ஆச்சாரியார்'
கி.பி 1815- ம் ஆண்டு சேலம் ஜில்லா நமக்கல் தாலுக்கா எருமைப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைச் செய்து வந்தார். 1843 – ம் ஆண்டு சுப்பராய ரெட்டி, நாணய செட்டி, நாராயண ரெட்டி, மாறாடி ரெட்டி, பள்ளி தாண்டவப்படையாசட்சி, இராமலிங்கப் படையாச்சி ஆகியோர் ஒன்று சேர்;து தோட்டி மொட்டையன் என்ற தாழ்த்தப்பட்டோரை வைத்து இராமலிங்க ஆச்சாரியரை அடித்து பூணூலை அறுக்கச்செய்தனர். அதனால் பாதிக்கப்பட்ட அவர் மானநஷ்ட வழக்கு தொடுத்து தன்குலப்பெருமைகளை விளக்கி தான் மீண்டும் பூணூலை அணிவதற்கு உண்டான செலவுகளை அபராதமாக பெற்று குலப்பெருமையை நிலை நாட்டியவர்கள். இதனை விரிவாக நோக்க 'சேலம் ஜில்லா நீதிமன்றத் தீப்பு' என்ற நூலில விரிவாகக்; காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'கருவூரர்'
கி.பி. 10 –ம் நூற்றாண்டில் கருவூரில் விஜ்வ பிராமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைக் கற்று சிதம்பரக்கோயிலில் பூபாலப் பாண்டியன் வருப்படி தில்லை நடராஜர் சிலையினை கருவூர் தேவர் என்னும் ஆச்சாரியிடம் பொன்னால் செய்துவரச் சொன்னார். கருவூரர் தேவர் அரசனின் விருப்பப்படி சாஜ்திர முறைப்படியும் மனுவிதியின் படியும் காலத்தில் மக்களின் மனநிலை அனுசரித்துப் பத்தி ஏற்படுமாறும் திருட்டு விடாதபடியும் கோடிமாற்று என்ற கணக்கில் நிறமாற்றுப் பொன்னினால் ஆனசிலையை செய்து மன்னனிடம் கொடுத்தார்.
மன்னன் சிலையைக்கண்டபோது செம்பு நிறத்தில் இருப்பதைக்கண்ட அரசன் கருவூராரிடம் விளக்கம் கேட்க அதற்கான காரணகாரியத்தை கூற மன்னனும் மந்திரியும் ஏற்காது சிறையில் இட்டனர் கருவூத் தேவரை.
அதன் பின்னர் சருவு_ர் தேவர் சிலையின் ஒருபகுதியை வெட்டி உருக்க முழுவதும் தங்கமாக இருக்கண்டு இரசன் மகிழ்து சிப்பியின் பெது நலநன பாராட்டி போற்றி விழா எடுத்தான். இதனை போகர் ஏழாயிரம என்ன நூலில் மூன்றாவது சந்தக்கண்ட பாடலில் நடராஜ விக்ரகம் என்பதில் காண்க. போகரின் சீடகளில் முதன்மையானவர் கருவூர் தேவர்.
மேலும் தஞ்சைப் பெரும் கோயிலில் லிங்கத்தின் அஷ்ட பந்தனம் என்னும் மருந்து கூடாது போனதால் தன்வாய் தம்பூலத்தையும் சேர்த்துக் கூட்டி விரதிஷ்டை செய்யப்பட்டது. இறைவனின் மேல் திருவிசைப்பா படியருளியவர்களில் இவரும் ஒருவர் இதனால் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்.
தஞ்சை பெரும் கோயிலில் மேல் பிரகாரத்தில் ஆலயம் அமைத்தது 1926 –ம் ஆண்டில் மீண்டும் பெரிது படுத்தியும் கருவூத் தேவருக்கு பஞ்சலோக சிலை செய்து குப்பாவிசேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் 'தஞ்சைப்பெரிய கோயில் வரலாறு' என்னும் நூலில் காண்க.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் ' ஆதிசங்கரர்'
கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர். படிப்பை முடித்து குலத்தொழிலான பாத்திரம், மற்றும் பொற்பணியும் கற்று வேத தத்துவங்களை உணர்ந்து இந்தியாவின இந்து மதத்தின் எழுபத்தி நான்கு உட்பிரிவுகளாக இருந்தை ஒன்று சேர்க்க எண்ணி இந்தியாவின் எல்லா மாhநிலங்களிலும் உள்ள கோவில்களுக்குச் சென்று பாடியும் பல மடங்களை சீர் செய்தும் சில மடங்களை அமைத்தும் மரகத லிங்கங்களை செய்து சில கோவில்களில் பிரதிஷ்டை செய்தும். ஸ்ரீ சக்ரம் செய்து பல கோவில்களில் பிரதிஷ்டை செய்தும் போலிப் பிரிவினை வாத மதவாதிகளை வாதிட்டு தன்னுடன் சேர்த்து கொன்டும் ஆறுமதங்களாக மட்மே சுருக்கி அமைக்க முடிந்தது. அதனால் அவரை '|ண்மதஸ்தாபகர்'; என்று போற்றப்படுகின்றார். அவர் பாடிய பாடல்கள் தொகுப்புக்கு 'ஸெளந்தரியா லஹரி' என போற்றப்படுகின்றது. அவர் சில அற்புத சித்துக்களும் செய்துள்ளார். சிவமதத்தின் அறுபத்தி நான்கு நாயன்மார்களிலும் சேர்க்கபடாமலும் ஆழ்வார்களிலும் சேர்க்கப்படாமலும் பதினென் சித்தர்களிலும் சேர்க்கப்படாமலும் நடுநாயகமாக உள்ள பிரம்ம மதத்தின் கருத்துக்களை உணர்ந்தவர்களால் போற்றப்படுகின்றார். ஆதிசங்கரரின் முழு விபரமும் 'சங்கரர் விஜயம்' என்னும் பழைய நூலிலும். 'விஸ்வகர்மப் பிராமண வம்சப் பிரகாசிகை' என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம். இவரே காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய பீடத்தின் ஸ்தாபகருமாவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்
'இராம சுனார் ஆச்சாரியார்'
கி.பி 1580-ம் ஆண்டில் விஸ்வப்ராமண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் சந்திரசேகர சர்மா மரகதாம்பிகை தம்பதிகளுக்கு இராம சுனார் ஆச்சாரி மகனாகப் பிறந்தார். இவர் பொற்பணி செய்து அம்பிகையை வழிபட்டு வந்தார். இவர் பேரரசர் அக்பரின் அரன்மனைக்கு தேவையான ஆபரணங்களை செய்து கொடுப்பது வழக்கம். அதில் சிறிதளவு தங்கத்தை பெற்று அதை விற்று அம்பிகைக்கு ஆலயம் அமைக்கத் தொடங்கினார். ஒருமுறை அக்கபர் ஆபரணங்களை நிறுக்க எண்ணி தன் மகளையும் அங்கு அழைத்து வந்தார். நிறுவையில் தங்கத்தை வைத்த போது அம்பிகையை எண்ணி வேண்டுதல் செய்த போது. நிறுவையில் ஒரு தங்க பொம்மை இருக்கக் கண்ட குழந்தை எனக்கு அந்த பொம்மை வேண்டாம் என்று அழுத போது அக்கருக்கு அது தெரிய வில்லை நிறை சரியாக இருந்தது. பின்னர் விடையத்தை அறிந்த அக்பர் அம்பிகையின் ஆலயம் கட்டி நிறைவை பெற ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்தார். இந்த சிறப்பை போற்றும் வகையில் அவரின் படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் விபரம் அறிய 'இராம சுணார் சரிதம்' என்ற நூலைப்படித்து விபரம் அறிக.
.
No comments:
Post a Comment