சிவனுக்கு உகந்த உத்தம நாட்கள் உலகுக்கு உயிவு கொடுத்த நன் நாட்கள் இதை அறிந்து நாமும் உயிவுற்று உயர்வு பெறுவோம்.
திருமூலர் திருமந்திரத்தில் சிவனுக்கு உரியநாட்கள் இரண்டை குறிப்பிடுகையில் அதில் ஒன்று ஆதிரை என்று அழைக்கும் திருவாதிரை அடுத்து திருக்காhத்;திகை இவை அருவமான இறைவன் அருவுருவம் உருவமான நாட்கள்.
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே'
என்றார். திருவாதிரை செவ்வொளியுள்ள நுண்மீன் அதுபோல திருக்காத்திகை செவ்வொளியுள்ள செம்மீன் இவை இரண்டும் சிவபெருமானின் தனிச்சிறப்பு நாட்கள். திருக்கார்த்திகை பெரொளிப் பிழம்பாகத் தோன்றிய திருநாள் அதுவே அருவுரு அதை தீண்டவும் முடியாது அதை நெருங்கவும் முடியாது. கண்ணுக்கு புலப்படுவதாகும். இன்நிகழ்வு புலோகத்தில் நிகழ்ந்த இடம் திருவண்ணாமலை. அகஇருள் நீங்க திட்டமிட்ட நாள் அது. படைப்பு கடவுள் நான்தான் பெரிது என்றும் இல்லை காத்தல் கடவுள் பிம்மா நான் தான் பெரிது என்றும் ஆணவசெருக்கால் தன்னை மறந்ததை மீட்டெடுத்த நாள். அடிமுடி தேடி அன்னமும் பன்றியுமாய் அவதரித்து அலைந்து இறுதியில் கர்வம் அடங்கிய நன்நாள். 'அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மாய் நின்றசோதி' என்றார் கந்தர் அலங்காரத்தில் கார்த்திகை திருநாளில் தோன்றிய பேரொளியை குறிப்பிடுகின்றார். முருகனும் சிவனும் வேறல்ல சிவனின் ஐந்து முகத்துடன் ஆறாவது முகமான அதோ முகம் சேர்ந்து ஆறுமுகமாகி அதில் உள்ள ஆறு நெற்றிக்கண்களில் இருந்து ஆறு தீப்பொறி தோன்றி அதை வாயுவால் உந்தப்பட்டு சரவணபொய்கையில் உள்ள ஆறு தாமரை மலர்களில் குழந்தையாக உதிர்த்து காத்திகைப்பெண்களால் வளக்கப்பட்டு அவை அனைத்தையும் பார்வதி கையால் அணைத்து ஒருமுகமாக்கி கந்தன் என பெயர் புணைந்தாக குமரகுருபரர் அருளிய கந்தர்கலிவெண்பா கூறுகின்றது. சிவபெருமானின் சக்தியே முருகன் சிவன் வேறு கந்தன் வேறல்ல. இருவரும் ஒருவர் இது கார்த்திகைக்கு காத்திகை அன்று கொண்டாடப்படுகின்றது. அதாவது கார்த்த்திகை மாதத்தில் வரும் காத்திகை திருநாள் அன்று. இது பொதுவாக குமாராலன தீபமாக கொண்டாடப்படுகின்றது.
உலகத்தோற்றத்துக்கே காரணமான ஐம்பூதமாய் உருவமாகி தில்லையில் நாடமாடி நடராஜரானர் இறைவன். இத்திருநாள் திருவாதிரை இது திருவுரு கூத்தப் பெருமான் திருவுருத் திருமேனி யாகும். அருவுருவம் உருவத்திருமேனியான நாள். இது மார்கழிமாதத்தில் வருகின்றது. மார் களி என்றால் இருள் அகன்ற நாள் என்பர். வருடத்தில் முதல் ஆறு மாதமும் உத்தராயணம் என்றும் அடுத்த ஆறுமாதங்களும் தட்சணயகாலமாகக் கருது கின்றனர். இதனை தேவர்களுக்கு அறுமாதம் பகல் என்றும்; அடுத்த ஆறுமாதம் இரவு என்று குறிப்பிடுகின்றனர். நல்ல காரியங்கள் முதல் ஆறுமாதத்தில் செய்தால் சிறப்பு என்றும் பிற்பட்ட ஆறுமதமும் இறைவழிபாட்டுக்காக ஒதுக்கபட்டு இறுதி மாதமான மார்கழி தேவர்களின் பிரமமுகுர்த்தமாக கருகின்றனர். தேவர்களுக்கு ஒரு வருடம் ஒருநாள். அதிலும் திருவாதிரை எம் உள்ளத்தின் உள் இறைவனை மறைத்து வைத்த திரை அகன்ற திருநாள். இந்த காலத்தில் விஸ்ணு பத்தக்களின் வைகுந்த ஏகாதசி அல்லது சுவர்க்க வாசல் ஏகாதசி என்று அழைக்கப்படும் நாளும் வரும். உயிர் வியாள கோளில் இருந்து வந்தது இக்காலத்தில் வியான் பூமியை அன்மித்து வரும். இதனால் வியாளனின் ஈப்பால் பூமிக்கு சக்தி கிடைக்கும். அத்துடன் மழை காலமாதால் சூரியனில் இருந்து பெறப்படும் சக்தி பிற்பகலில் நீர் நிலைகளிலில் மேற்பரப்பில் பரவி பகலில் வெயில் ஆவியாகி முகிலாகி மழையாய் பூமியை அடைந்து மரங்களில் சக்தியாய் மாறி இலை குலையாகவும் பூ காய் கனியாகி மனிதனுக்கு உணவாகின்றது. அதிகாலையில் எழுந்து தோய்ந்தால் இவை உடலில் கலந்து சக்தியாகி விடும் அத்துடன் மனஒருமைபாட்டுடன் இறைவழிபாட்டுக்கும் வழிவகுக்கும். இதனைலேயே மார்கழி திருவாதிரை அதிகாலையில் வழிபாட்டுக்குரிய கலமாகக் கருதப்படுகின்றது. எனவே உலக தோற்றத்துக்கான காலமாதலால் அதை வழிபாட்டுக்குரியாக்கினர் இந்து சமயத்தவர்.
அடுத்து மகாபிரளயமாக கருதப்படும் நன்நாள் மாசிமாத கிருஷ்ணபட்ச கதுத்தசி நாளான சிவன் இராத்திரி அன்று அணுக்கள் என்றுடன் ஒன்று மோதி சக்தி உருவான நாள். அணுக்களை நியூத்திறன் புரோத்திரன் என இரண்டாகப் பிரிக்க முடியும். இவை ஒன்றுடன் ஒன்று மேதுவதால் இலத்திரன் என்னும் சக்தி உருவாகியது. இதனால் தான் உலகம் சக்கி பெறுகின்றது. இதைத்தான் பிரளையம் என்று கூறுகின்றனர். இது உலகில் நடைபெற்ற நாள் சிவன் இராத்திரி தினமாகும். அன்றையதினம். சிவன் தனிமையில் பஞ்சபூதங்களை ஒன்னுடன் ஒன்று மோதி பிரளயத்தை ஏற்படுத்தி உலகை சமன் செய்து மக்களை படைத்த நாள் உலக தோற்றத்துக்கும் அழிவுக்கும் காரணமான லிங்கோற்பவம் தோன்றிய நாள். லிங்கம் என்றால் அடையாளம் என்றும். உலக தோற்றத்துக்கு காரணமான சிவசக்தியின் வடிவம் என்றும் கூறுகின்றனர். மேல் உள்ள லிங்கம் சிவன் என்றும் ஆவடையார் சக்தி என்றும் கூறுகின்றனர். இதனால் ஆக்கமும் அழிவும் இதனுள்லே தோற்றமும் மறைவும் இதனுள்ளே என்று கருதுகின்றனர். லிங்கத்தை மூன்றாக பிரித்து அடிப்பாகம் பிரம்மா இடைப்பாகம் விஸ்ணு மேல் பாகம் உருத்தின்; என்று கருதுகின்றனர் படைத்தல், கார்த்தல், அழித்தல் என்னும் முத்தொழிழுக்கு உறைவிடமாக இதைக் கருதுகின்றனர். இந்த லிங்கோற்பவம் தோன்றிய நாளாகக் கருதி விரதம் என்னும் செல்லுக்கு இலக்கமாண தனித்திரு ,பசித்திரு, விளித்திரு என்பதை ஒருங்கே கடப்பிடிக்க நன்நாளாக கருதப்படுகின்றது. பந்த பாசங்களிலிருந்து தனித்திரு மலங்கள் பிடிக்காது விளித்திரு ஞானத்துக்காய் பசித்திரு. இதுவே விதத்தின் தத்துவம்.
பங்குனி மாதமென்றால் உத்தரம் ஞாபகத்துக்கு வரும் அன்நாள் பிரளயத்தில் தனித்து இருந்த இறைவன் படைப்புக்காய் சிவசக்தியாய் இணைந்த நன்நாள் மதுரையில் மீனாட்சி மீனாட்சிசுந்தரேஸ்வரரான நாள் உலக இயக்கத்துக்கு காரணமானது சக்தி. சக்தி இன்றி சிவம் இல்லை சிவம் இன்றி சக்தி இல்லை. அணுவில் நியூத்திறன், புரோத்திறன் என்னும் அணுதுணிக்கைகள் உண்டு. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. பிரித்தாலுல் இரண்டும் சேர்ந்தே இருக்கும். அதுவே சிவசக்தித் தத்துவம். அதிலிருந்து தோன்றியது இலத்திரன் இதுவே சோஸ்கந்த தத்துவம். அணுக்கள் ஒன்ரோடு ஒன்று மோதுவதால் உருவாகுவதே இலத்திரன். அணுமோதலே தில்லை நடராஜரின் தாண்டவ நடம். பஞ்சபூதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் பிரளயம் தோன்றி இறுதியில் சமநிலை ஏற்பட்டு படைப்பு நடைபெறுகின்றது. பொதுவாக நோக்கும் போது பெரும்பாலாலும் மார்கழி மாதத்தில் இயற்கை அனத்தங்கள் நடைபெறும். அதனால் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் பிரளயம் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகம் ஒரேதடவையில் எல்லாம் அழிவதில்லை படிப்படியாக எல்லா இடங்களும் மாற்றமடைந்து கொண்டே வரும். இயக்கை தன்னை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கையே பிரளயம். இயற்கை ஒருநாளும் தன்னை மாற்றிக்கொள்ளாது மாற்றமடையவும் அனுமத்க்காது. கிழக்கில் சூரியன் மேற்கில் உதிக்காது. இரவுபகல் மாறிமாறி வரும். ஆனால் பலப்படுத்தயால் இயற்கையை மாற்றத்துக்குள்ளாக்கிய மனிதனையும் மனிதனால் படைக்கப்பட்டபடைப்புகளும் தான் அழியும். இயற்கை மனிதனுக்காக இறைவனால் படைக்கப்பட்டது. மனிதன் சுயநலனுக்காய் ஒருசிலர் எல்லா உயிரினங்களும் வாழ படைத்த அரணை பயன்படுத்யதே காரணம். எந்த காரியத்தையும் செய்யும் போது இது எல்லளவிலும் மற்றவரை பாதிக்காதவரையில் நடந்து கொள்வது அவசியமாகும். இதையே இந்து தர்மம் எமக்கு எடுத்து இயம்புகின்றது. நாம் எப்படியும் வாழலாம் என்பதை விட்டு அப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையை கடப்பிடித்து விளுமியங்களை கடைப்பிடித்து வாழவேண்டும். 'படிப்பது சிவபூராணம் இடிக்கின்றது சிவன் கோயில்' என்று இருக்காது எமது சமய தத்துவங்ளை நன்றாகப்புரிந்து வாழ பழக வேண்டும
' மட்டூர் புன்னையம்பதியான்'
No comments:
Post a Comment