ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தோன்றயதே இலிங்க வழிபாடு.
இலிங்க வழிபாடு தொரப்பாக பலரும் பலகருத்துக்களை கூறினாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுண்டு இயற்கையையே இறைவனாக கண்டவர்கள் இந்துக்கள். பிரபஞ்ச ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமானது இயற்கை அதன் சமநிலையை பாதுகாப்பது மரம்செடி கொடிகளும் இயற்கையும் இதனாலேயே ஆதி மனிதன் சூரியனையும் காற்று மழை போன்றவற்றை வழிபட்டான். மரவழிபாடே இலிங்கவழிபாட்டுக்கு வளிவகுத்தது. அதனை கந்தழிவாழிபாடாக ஆதிமனிதன் கருதினான். மரங்கள் சூரியனில் இருந்து கதிர்களைப் பெற்று பச்சயமணிகனை வேதியல் மூலக்கூறாக மாற்றி மரத்துக்கு சக்தியை வழங்குகின்றது. மரங்கள் உணவு தயாரிப்பதற்காக மனிதனிடமிருந்தும் இயந்திரங்களின் இயக்கத்தின் முலமாக வெளிவரும் கரியமலவாயுவை பயன்படுத்துகின்றது. இதன் விளைவால் வெளியேறும் பிராணவாயு மனிதனின் உயிர்பாக பயன்படுகின்து. அம்மரங்கள் தன்நலமற்ற சேவையை உலகுக்கு வளங்குகின்றது. அவை தனக்காக மட்டும் எப்போதும் வாழ்வதில்லை மனிதர்களில் பெரும்பாலானவார்கள் தனக்காக மட்டும் வாழ்கின்றனர். மரங்கள் அதன் பயன்கள் அனைத்தையும் மனிதனுக்கும் மிருகங்கள் பறவைகள் ஊர்வன போன்ற அனைத்து உயிரினங்களுக்கு வழங்கிவிட்டு. அவற்றின் கழிவுகளை தமக்கு உணவாக்கி பிரபஞ்சத்தை சுத்தம் செய்கின்றது. மரங்கள் மனிதனுக்கு உணவாகவும் அவனுக்கு ஏற்படும் நோய்களுக்கு வேதியல் மூலக்கூறாகவும். உயிர்வாழ்வாற்கான பிராணவாயுவாகவும் உணவு சமைக்க எரிபொருட்களாகவும் ஆவியுர்பினால் மழைமுகில்களை ஏற்படுத்தி மழையாகவும். மனிதன் இளைப்பாறும் இடமாகவும். வளி அசைவுகளை ஏற்படுத்தி காற்றாகவும் மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதனால் நெருப்பாகவும் பஞ்சபூதங்களின் சக்தியாகவும் அமைகின்றது. அதனாலேயே ஆதிமனிதன் மரத்தை கடவுளாகக் கண்டான்.
மரங்களின் வழிபாடே இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. மரங்களை ஆதிமனிதன் வழிபட்டு வருகையில் மரங்களின் கிளைகள் அழிந்து படிப்படியாக மரத்தின் அடியை வணங்கி அதுவும் அழிவடையும் போது அது இருந்த குழியில் நீளமான கற்தூன்களை நிறுத்தி அதை கடவுளாக வழிபட்டான் காலப்போக்கில் அது இறைவனுக்குரிய அடையாளமாக மாறி இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இதனை கந்தழி வழிபாட்டில் இருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுகல் வழிபாடும் இருந்தது அது அந்த நாட்டை ஆண்ட அரசன், நாட்டைக்காத்த போர் வீரன் ஆகியோரை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டு அதனை வழிபட்டனர் அதுவே காவல் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இவ்வழிபாடே எல்லைத்தெய்வமாக சிறுதெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்க வழிபாடு கந்தழிவழிபாட்டில் இருந்தே வந்தது. இயற்கையின் படைப்புக்களான மரங்களும் மலைகளும் மேல்நோக்கி வளர்ந்து குடைபோல் காட்சியளிப்பதை எல்லோரும் அறிவர். ஒலிஒளி அலை வாங்கிகள் அனைத்தும் குளிவாக இருக்க இலிங்கம் மட்டும் அதற்கு மாறாக குவிவாக தொப்பி போன்று அமைந்துள்ளது. அதாவது இலிங்கம் சதாசிவ முகுர்த்தம். நாதம், விந்து, சிவன், சத்தி, சதாசிவம், மகேசுவரர், உருத்திரர், விஸ்ணு, பிரம்மா. இறைவனுடைய திருமேனியாக கொள்ளப்படுகின்றது. அவற்றில் முன்னுள்ள நான்கும் அருவமானவை சதாசிவம் அருஉருவமானது எனைய நான்கும் உருவமானது. அதாவது அருவமான இறைவன் அருஉருவமான சதாசிவமாகி மனிதனுக்கு அருளள் உருவமானான். இறைவன் அருவமானவன். எம் உயிர் எப்படிப்பட்டதோ அதை ஒத்ததே இறைவன். அதுபோன்று எம்மை இயக்கும் சக்தி, புத்தி, அறிவு இவை அனைத்துமே அருவமானவை. எம்முள் உள்ள உறுப்புக்கைளும் அதன் செயல்பாட்டையும் எம்மால் பார்க்கும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது. அவை அதைத்தையும் மூளையும் இருதயமும் இயக்குகின்றது. இவை அனைத்தையும் அறிய ஞானியால் முடியும். அவர்கள் சித்தி பெற்றறவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். இந்து சமயம் இயற்கை வழிபாடாகும். லிங்க வழிபாடு தொடர்பாக குறிப்பிடுகையில் இலிங்கம் என்பது குறி, சின்னம், அடையாளம் என பொருள்படும் அதனை குறி என்ற சொல்லை வைத்து ஜனன உறுப்பாக கருதுகின்றனர் சிலர் இது பொருத்தமற்றது. இலிங்கபுராணமே இதன் அடிப்படை அங்கு படைப்பதிபதியான பிம்மாவுக்கும் காத்தல் அதிபதியான விஸ்ணுவுக்கும் ஏற்பட்ட யார் பெரியவர் என்ற ஆணவச் செதுக்கை அடகுக்க இறைவன் செய்த திருவிளையாடலின் விளைவே சோதிப்பிழப்பாகி இறுதியில் அருவுருவமான இலிங்கமானது. அருவமான இறைவனை அகத்தில் தியானிக்க ஒரு சின்னமாக உருவெடுத்தது. ஞானியருக்கு. இலிங்கம் என்பது யூபம் என்னும் சொல்லில்லிருந்து தொன்றியது என்றகருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது யூபம் என்பது தூண் போன்ற அமைப்புடையது இது நேராக அமைந்து விளங்குவதால் ஸ்தாணு என்ற பெயரையும் பெறும் இதனால் கந்தழி வழிபாட்டில் இருந்து தொன்றியதே லிங்க வழிபாடு என்று என்னத்தோன்றுகின்றது. சுவேதாஸ்வதா உபநிடத்தில் யோனி, லிங்கம் என்ற சொற்கள் காணப்படுகின்றன . இங்கு 'லிங்கம்'; என்பது 'அடயாளம்'; அல்லது 'அம்சம்' என்பதையே கருதுகின்றது 'மிகவும் நுண்ணிய உடம்பு' என்ற பொருளிலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். சிவபுராணம் இலிங்க வழிபாடு தொர்பாக குறிப்பிடுகையில் பிரணத்தோடு தொர்பு படுத்துகின்றது. எல்லாத் தெய்வங்களும் இலிங்கமாக விளங்குவதால் இலிங்கத்தையே வழிபடும்படி விஸ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தியதை காணலாம். அதுமட்டுமல் விஸ்ணு பிரம்மபகஸ்தி தோஷம் போக்க இராமேஸ்வரத்தில் மண்ணால் இலிங்கம் செய்து வழிபட்டதை யாவரும் அறிவர். இலிங்கத்தின் அமைப்பு மிகவும் நுட்பமானது. இலிங்கம் பற்றி மேலும் குறிப்பிடுகையில் காசியப சில்வ சாஸ்திரம் நாதமே இலிங்கம் பிந்துவே அதன் பீடம் என்றும் கூறுகின்றது. இலிங்கமானது சிவரூபமானது பீடமானது சக்திரூபமானது இவை இரண்டும் ஓன்றாக இருப்பது நெருப்பும் வெப்பமும் போன்று சிவசக்திரூபம் என்று கூறுகின்றது.
இலிங்கம் அமைக்கும் முறைகள் பற்றி ஆகமங்களும் சிற்பநூல்களும் மிகவும் விரிவாக எடுத்து இயம்பியுள்ளன. சிவன் எனைய வடிவங்களுக்கு அடிப்படையாக அமைவதுடன் கருவறையில் பிரதான மூலவராக அமைவதாலும் அதன் அமைப்புப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எடுத்து இயம்பியுள்ளது. சிற்ப்பாசாரி இலிங்கத்தை உருவாக்கும் போது மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகளை தெளிவாக செப்பியதுடன் சிற்பாசாரி செதுகுவதற்கான கற்களை தேந்தெடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் தெளிவாக இயம்பியுள்ளது. பூர்வ காரணாகமம், 'லிங்க லசஷண விதிப்படம்' என்ற தலைப்பிலும் இது பற்றி தெளிவாக கூறுகின்றது. மானசாரம் 'லிங்க விதாநம்' என்ற தலைப்பிலும் காசியப சில்ப சாஸ்திரம் ' சிவலிங்க லசஷணம்' என்ற தலைப்பிலும் சில்பரத்தினம் ' லிங்க லசணம்' என்னும் தலைப்பிலும் ஸ்ரீ ஸாரஸ்வதீய சித்ர கர்ம சாஸ்திரமும் காளாதிகாரமும் பிரதிமைகளின் அளவு முறைகளையும் குறிப்பிடுகின்றன.
இயற்கையை நேசித்து அதன்வழியில் சென்றவர்களே சித்தர்களும் மகரிஷpகளும். இயற்கை கோரங்கொண்டால் மனிதன் தாங்க மாட்டான். அதை நேசித்து அதன் வழியில் சென்றால் உலகை காக்க முடியும். அப்படி நாம் அதை காக்காவிட்டல் நம்மையும் நம்மால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழித்து இயற்கை தம்மை காத்துக்கொள்ளும் அதனையே அனத்தம் என்கின்றோம்.
இயற்கையின் அச்சுறுத்தலை அவன் அனுபவித்தும் அதற்கு அஞ்சி அதன் அனுசரனையை பெறவிரும்பி வழிபாடு செய்தான். முதலில் சூரியனையும் அதன் பின் அக்னி, வாயு, இந்திரன் வருனன் போன்றோரை வழிபடலானான். இடி முழக்கம் மின்னல் போன்ற இயற்கை தாக்களை கண்டு அஞ்சி நடுங்கினான். இடிமின்னல் பூமியை தாக்குவதன் மூலம் பூமிக்கடியில் கனியங்கள் உருவாகுகின்றன. இதை தாங்கவே ஆலயங்கள் உயரமாக அமைத்து கோபுரத்தில் இடியைத்தாங்க கலசத்தில் கேள்வரகு அரிசியை நிரப்பி வைத்தனர். அதனாலேயே 'கோயில்லா ஊரிலே குடியிருக்கலாகாது' என்ற முதுமொழி உள்ளது. 'கோயிலை விட மேலாக இல்லம் இருக்கக் கூடாது' போன்ற முதுமொழிக்கே காரணம். இயற்கையான இடிதாங்கியே. இது மட்டு மல்ல கோபுரங்களின் வடிவமும் இலிங்க வடிவத்தை ஓத்ததே அது பிரபஞ்ச சக்தியை ஈத்து இழுத்து மூலவிக்கிரகத்தில் செலுத்தக் கூடியது.
விக்கிரகங்கள் கருங்கல்லினால் அமைவதனால் அக்கல்லுக்கு பிரபஞ்சசக்தியையும் மந்திர ஒலிகளையும் ஈக்கும் சக்தி உண்டு. சிற்பாசாரி கற்களை தெரிவு செய்யும் போது கல்லின் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியமாகும் அவற்றில் காணப்படும் கோடுகளைக் கொண்டு கல்லின் தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. கற்களில் காணப்படும் குறைபாடுகளைக் கொண்ட கற்களை நீக்கி கற்களை தேந்தெடுக்கும் விதிமுறைகளையும் ஆகமங்களும் சிற்பநூல்களும் எடுத்து இயம்புகின்றன. கற்களில் எழும் ஓசையைக்கொண்டு அவற்றின் பேதங்களை நிர்ணயிக்கின்றனர். கற்கள் பாலை, யுவதி, விருத்தை என்று புருஷ சிலை,ஸ்திரிசிலை, நபும்ஸகசிலை என்று பாகுபடுத்து கின்றனர். அகன்று எடுக்கும் வேளை சப்தமுடையதும் குட்டையான உருவம் உள்ள சிலைகள் பாலசிலை ஆகும். மணியோசையைப்போன்று ஒலியுடையதும் நீள் வட்டவடிவுடையதுமான கல் 'ஸ்திரிசிலை' எனவும், ஸ்திரி சிலை பானையைப் போன்ற ஓசையைக் கொண்டு விளங்கும். மணியோசையைப் போன்ற அதிக சத்தமும் நீள் வடிவமுடையதுமானதும் 'புருஷசிலை' க்குரிய இலட்சணமாகும். பளபளப்பின்றியும கரடுமுறடானதும் உறுதியில்லாமலும் ஒலியில்லாமல் இருக்கும் சிலை 'நபும்ஸக சிலை' எனப்படும். இவ்வாறு கல்லின் எழும் ஓசையைக் கொண்டு இவற்றின் வேறுபட்ட அம்சங்கள் நிர்ணயிப்கப்படுவது போன்று அவற்றின் 'ஆகிருதி' எனப்படும் உருவத்தின் அடிப்படையில் பேதங்கள் கூறப்படுகின்றன. 'ஸ்திரீ சிலை' சற்சதுரமாகவும் எண்கோணமாவும் அமையும். நீள் சதுரமாகவும், வட்டமாவும், பத்துக்கோணமாவும், பன்னிரண்டு கோணமாகவும் இருப்பது 'புருஷ சிலை' என்று கூறப்படுகின்றது. நான்கு வட்டமாக இருப்பது 'நபும்ஸக சிலை'யாகும். இலிங்கத்தையும் ஏனைய சிலைகளையும் அமைக்கும் போது கவனத்தில கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஆகங்களும் சிற்ப நூல்களும் குறிப்பிடுகையில் இலிங்கம் புருச சிலையினாலும் ஆவுடையாரயன பீடம் ஸ்திரி சிலையினாலும் இலிக அடித்தளமான பீடம் நபும்ஸக சிலையினாலும் செய்யப்பட வேண்டும். என விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எல்லா வகையான கற்களும் பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதுமட்டும் அல்ல கற்களை தெரிவு செய்யும் இடங்கள் இயற்கை எளில் உள்ள நறுமலர்கள் நிறைந்த நதி வளம் உள்ள குற்றமற்ற இடங்களாக இருக்க வேண்டும். அவைகள் பண்டைய சாஸ்திரங்களுடன் கூடியதான கல்லில் சிலைவடிக்கும் போது 'சிலா பரீசஷணத்தையும் மரத்தில் வடிவமைக்கும் போது தாருபரீசஷணம் போன்ற வற்றையும் கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்கின்றனர். இதனை பூர்வகாரணாகமம் குறிப்பிடுகின்றது.
இயற்கை வழிபாடான அருவ வழிபாடு அருவுருவம் பெற்று இன்றைய உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்கம் பரம்பொருளின் அருஉருவமான சதாசிவம் ஆகி அடியவர்க்கு அருளினார்.
'மட்டூர் புன்னையம்பதியான்'
No comments:
Post a Comment