சித்தர்கள் வாழ்வியல் தொடர்பான இரண்டாவது பாடலில்
'பால் உண்போம் எண்ணை பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல் துயிலோம் பகற் புணரோம் பருவம் மூட்ட
வேலஞ்சேர் குலலியோடும் இலகயிலும் விரும்போம்
இடந்த அடக்கோம் ஒன்று விடோம் இடது கையில் படுப்போம்
மூலம் சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம்
முதல் நாளில் சமைத்த கறி அமுது எனினும் அருந்தோம்'
என சித்தர்கள் வாழ்வியலை வகுத்துக்காட்டியும் வாழ்து பயனை அனுபவித்தும் காட்டியுள்ளனர். அதை மனுக்குலம் வழுவாது வாழவழி காட்டியவர்கள் சித்தர்கள் அவர்களின் சிந்தனை செயல் அனைத்தும் மனுக்குலம் தாம் பிறந்த பயனை அனுபவித்து விடை பெறுவதற்கு வழிகாட்டுவதே அதற்கு காயமான தேகம் அவசியம் அதற்கே சித்தவைத்தியம் கண்டவர்கள் சித்தர்கள்.
1.'பால் உண்போம்': பால் வெண்மையானது. அது சாத்வீக குணத்தை ஏற்படுத்த வல்லது. பால் தரும் பசு தாவரஉண்ணி. அத்துடன் சாத்வீகமானது. அதை காமதேனு என்று அழைப்பர். அதாவது பாலினை காமத்தேன் என்பர்.பாலியல் உணர்வை ஏற்படுத்தும் தன்மையுடையது உடல் பலமிக்கதாக இருந்தால் தான் அவ்வுணர்வு உடலில் ஏற்படும் அதனால் தான் பால் பூரணஉணவாக கருதப்படுகின்றது. அத்துடன் குளிர்மையானது இதனால் உடலும் உள்ளமும் தூய்மையடையும். பசுவில் சகலதேவதைகளும் வாசம் செய்வதாக வேதம் கூறுகின்றது. பசுவை இலக்குமியாகக் கொண்டு எல்லா கிரியைகளிலும் பூஜை செய்வது முக்கியமானதாகும். அதாவது கிரகப்பிரவேசம், குடமுழுக்கு, நித்தியப்படி ஆலயங்களில் அதிகாலையில் கோமாதா பூஜை செய்வது வழமையாகும். பால் அபிஷேகம் செய்தால் ஆயூட்பலம் கிடைக்கும் என்பது ஐதீகம் அப்படிபட்ட தன்மை கொண்டது பால் அதை தினம் பருகவேண்டும் என சித்தர்கள் கருதுகின்றனர். பசு வின் சாணம் ஒரு விபூதிபாக பயன்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல ஒரு கிருமீ நாசினியும் கூட பஞ்சகௌவ்வியத்தின் அனைத்து பொருட்களும் பசுவினது தான் அதாவது பால், தயிர், நெய், கோசலம், கோமயம், போன்றன. பால் ஆயூள்விருத்திக்கும், தயிர் நெய் ஞானத்துக்கும், இறைவனிடம் வேண்டி அபிஷேகம் செய்வதுடன் சிவனுக்கு பஞ்சகௌவிய அபிஷேகம் சிவன் இராத்திரி முதல் ஜாமத்துக்கு செய்வது சிறப்பு வாய்ந்தாகும். கோமாதாவில் பஞ்சபூதங்கள் வாசம் செய்வதாக ஆகமம் கூறுகின்றது. கோஜலத்தில் வருணனும், கோமயத்தில் அக்னியும், பாலில் சந்திரனும், தயிரில் வாயுவும், நெய்யில் விஸ்ணுவும் வாசம் செய்வதாகவும் கோமயம், கோசலம், பால், தயிர், நெய் முறையே செந்நிறம், வெண்நிறம்,பென்னிறம், நீலநிறம், கருநிறம் கொண்ட பசுவிடம் பெறுவது உத்தமம். என்றும் கலக்கும் அளவுகள் முறையே கோமயம், கோசலம் ஆறுமாத்திரை அளவும் பாலும் நெய்யும் மூன்று மாத்திரை அளவும் தயிர் பத்துமாத்திரை அளவும் இருக்க வேண்டுமெனவும் ஸ்மிருதிகள் கூறுகின்றன. இது ஓர் கிருமிநாசினியும் கூட அது மட்டுமல்ல சமயக்கிரிகைகளுக்கு அசௌகரியம் போக்கி உடல் வலுதரும் அருமருந்தும் கூட இவ்வாறு சிறப்புமிக்க பசுவின் பால் உண்பது எவ்வளவு சிறந்தது என்பது கண்கூடு.
2. 'எண்ணை பெறின் வெந்நீரில் குளிப்போம்' : எண்ணை தேய்த்துக் குளிப்பது என்பது தமிழரின் பண்பாடு. இங்கு எண்ணை என குறிப்பிட்டிருப்பது நல்ல எண்ணையைத்தான் இவ்வெண்ணெக்குத்தான் சித்தர்கள் நல்ல எண்ணை என்ற பெயரையும் மற்றை எண்ணைகளுக் கெல்லாம் எடுக்கப்படும் வித்தின் பெயர்களையே பயன் படுத்தியுள்ளனர். வேப்பம் வித்தின் எண்ணை வேப்பெண்ணை, இலுப்பை வித்தின் எண்ணை இலுப்பை எண்ணை, தேங்காயின் வித்தின் எண்ணை தேங்காய்யெண்ணை இப்படி அழைக்க எள்ளின் எண்ணை மட்டும் நல்லலெண்ணை என அழைப்பது ஏன்? அதன் தன்மையில் அவ்வளவு சிறப்பு இருப்பதால்தான் அதை நல்ல எண்ணையாக அறிமுகப்படுத்தினர் சித்தர்கள்.
உடலில் பல்வேறு வகையான கொழுப்புச் சத்துக்கள் இருந்தாலும். ஆதில் இரண்டு வகையானது எண்ணைகளால் வருவது இதில் ஒன்று அடர்த்தி கூடிய கொழுப்பமிலம் மற்றையது அடர்த்திகுறைந்த கொழுப்பமிலம். இதில் அடர்திகூடிய கொழுப்பமிலம் 'டைட்கிலிகரைட்' எனப்படும் இது உடலின் பல்வேறு பாகங்களில் படிந்திருது இருக்கும் அதாவது வயிற்றின் அடிப்பாகத்தில் உடலின் பின்புறத்தில் தோலின் அடிப்பகுதியில் கானப்படும். இனை அகற்றக்கூடிய ஆற்றலும் சக்தியும் நல்லெண்ணைக்குமட்டும்தான் உண்டு என அன்று அறிந்திருந்தனர். அதனாலேயே உடல் முழுவதும் தேய்த்து வெண்நீரில் நீராடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எண்ணை தேய்க்கும் போது உடல் வெப்பநிலையை வெளிவிடாது தடுக்கின்றது. அதைப் போக்க சீயாக்காய், பயற்றுமா தேசிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உடலில் இருந்து எண்ணை நீங்கி மயித்துளைக் குளாய்கள் துப்பரவு செயயப்பட்டு வியர்வை வெளியேறும். வெண்நீரில் நீராடுவதனால் எண்ணை நீக்கப்படுவதுடன் மயித்துளைக் குளாய்களிலிருந்து வியர்வை வெளியேறுவதையும் அவதானிக்க முடியும். வெண்நீர் என்னும் போது சூடாக்கும் போது குளிப்பதற்கு ஏற்ற அளவிலேயே சூடாக்க வேண்டும்.நன்கு சூடாக்கிய நீரில் குளிந்த நீரை கலக்கும் போது நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடலில் கபத்தன்மை ஏற்பட்டு உடலை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
3.'பகல் துயிலோம்' : இந்த விடையம் முதல்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
4.'பகற் புணரோம்': பகலில் பெண்ணுடன் கலவியில் ஈடுபடக் கூடாது என்பதை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை உபநிடதம் பிரமச்சாரியம்; பற்றிக்குறிப்பிடுகையில் பகலில் எமது உடலில் பிரானன் வாசம் செய்வதனால் பகலில் ஆண்மையை இழப்பது பிரம்மத்தை அவச்சாரம் செய்வதென்றும் இரவில் காபீர் என்னும் வாயு உடலை இயக்குவதால் இரதிபோன்ற பெண்களுடன் உறவு கொள்லலாம் என்றும், இப்படி ஆச்சாரத்தைக் கடைப்பிடிபது பிரம்மத்துக்கு ஆச்சாரம் என்றும். இப்படி செய்வதனால் அதனை பிரம்மச்சாரியம் என்றும் கூறப்படுகின்றது. இங்கும் பகற் புணச்சியை ஏற்றுக் கொள்ள வில்லை.
5.'பருவம் மூட்ட வேலஞ்சேர் குலலியோடும்': வயதுதில் மூத்த பெண்களுடன் கலவியிலி ஈடுபடக்கூடாது இதனால் வயது குறைந்தவர் விரைவாக முதுமை அடையும் வாய்ப்பு அதிகம் உண்டு. இளையவர் களுடன் கலவியில் ஈடுபட்டால் இளமை நீடித்து இருக்கும் என்பது இதன் கருத்தாகும்.இன்னுமோர் கருத்தும் உண்டு பொதுவாக தீட்டு நிற்கும் வயது நாற்பதில்லிந்து நாற்பத்தைந்து வயதாக இருப்பதுடன் தற்போது திருமணவயது கல்வியை பெற்றுக் கொள்ளல், தொழிலிலை பெற்றுக் கொள்வது என்பதன் மூலம் தீமானிக்கப்படுவதனாலும் அடுத்து வரதட்சனை கொடுமையாலும் தள்ளிப்போடப்படுவானால் கருவள வீழ்க்கியடைவதனாலும் தன்னைவிட வயதில் குறைந்த பெண்ணை தேர்தெடுத்து இல்லறசுகத்தை நீடித்து அனுபவிக்க முடியும். அதனாலேயே பாலியல் விவாகம் அந்தக்காலத்தில் அனுமதிக்கப்பட்டது. அது தற்போது அறிவியல் ஏற்றுக் கொள்ள வில்லை. அறிவு முதிச்சியின்மையால் உருவாகும் குழந்தைகள் முதிர்ச்சியற்ற குழந்தையாக உருப்பெறுவதாகவும் தாய்பலவீனமடைந்து நோய்த் தொத்துக்கு ஆழாக நேரும் நிலை ஏற்படலாம் போன்ற பல்வேறு காரணத்தால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 'சித்தர்கள் காட்டும் இல்லற்ற தர்மம்' என்ற கட்டுரையில் விரிவாக விளக்கவுள்ளேன்.
6.'இலகயிலும் விரும்போம்' : இங்கு இலகயில் என்பது இளம் காலை வெயில் இது ரோகிக்கு விருப்பமாக இருக்கும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காலையில் சூரியனில் இருந்து வரும் கதிர்களான 'அல்ராவைலட்' 'இன்பெறகிரேஸ்' போன்ற கதிர்கள் காலையில் வெளிவருகின்றன இவை பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பவை இதனால் காலை வெயில் சிறந்ததல்ல மாலை வெயில் சிறந்தது. இதனை 'காலை வெயில் கழுதைக்கு சிறந்தது மாலை வெயில்மனிதருக்கு நல்லது' இதனை 'காலை வெயிலில் உடலைக் காச்ச மாட்டோம். வரும் சேர் வயதில் மூத்த பெண்களுடன் உறவு கொள்ள மாட்டோம்' என்றும் கூறிப்பிட்டுள்ளனர்.
7.'இடந்த அடக்கோம் ஒன்று விடோம்' : இதனை இரண்டு அடக்கோம் என்பதால்; மலசலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் கழிக்க வேண்டும். மனிதனை விட எனைய விலங்குகள் எல்லாம் மலசலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் கழித்துவிடும். மனிதன் மட்டும் பொருத்தமான இடம் தேடி அல்லது வேலைப்பழுவின் நிமித்தம் தாமதிக்கின்றான். இதனால் மலம் குடலில் இருக்கும் போது அகத்துறுஞ்கப்படும் இதனால்; உடலில்; நஞ்சுறும் அதனால் நோய் தொற்றுக்கு இடமாகும். அடுத்து சலம் நீடித்து இருப்பதால் சிறுநீரகக்கற்கள் தோன்றுவதுடன் கிருமித்தொத்துக்கு ஆளாகும் வாப்புகள் அதிகம் எனவே இவை இரண்டையும் அடக்கக்கூடாது. 'ஓன்று விடோம்' இதனை 'சிக்கல் இரண்டை அடக்கோம் பெண்ணுக்குள் ஒன்றை விடோ' என்றும் கூறிறுள்ளனர். அதாவது மாதத்தில் அதிக நாட்கள் பெண்களுடன் கலவியில் ஈடுபடல் உயிப்பு குறைவடையும் என சித்தர்கள் கருதுகின்றனர் ஆனால் அறிவியல் இக் கருத்தை இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லை இது தொடர்பாக'சித்தர்கள் காட்டும் இல்லற்ற தர்மம்' என்ற கட்டுரையில் விரிவாக விளக்கவுள்ளேன்.
8.'இடது கையில் படுப்போம்': இடது பக்கமாக சரிந்து சைநிப்பதால் உடலின் எல்லாப்பாகத்துக்கும் இரத்தோட்டம் நிகழ்ந்து சுகமான உறக்கம் ஏற்படும் இதனால் தேகம் ஆரோக்யமான நித்திரையைப் பெறும். இது நோயற்று ஆரோக்கிமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
9.'மூலம் சேர் கறி நுகரோம்': மூலநோயை ஏற்படுத்துகின்ற உணவு வகைகளை உண்ணக்கூடாது. மூலநோய் என்பது எல்லா நோய்க்கும் இது தான் மூலகாரணம். இதன் மூலம் உடல் நோய் எதிப்பு சக்தியை இழந்து வருவதன் அடையாளமாக இன் நோய் கருதப்படுகின்றது.இதனால் உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை உடல் இழக்கும் போது மூலநோய் ஏற்படும் இதனைத் தடுத்து உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை அதிகரிக்க மூலநோயை உண்டாக்கும் உணவு வகைகளை உட்கொள்ளக்கூடாது.
10 'மூத்த தயிர் உண்போம்' : மூத்த தயிர் என்பது நன்றாக உற்பத்தியான விளைந்த பழைய தயிரை குறிக்கின்றது. அதில் 'ஈஸ்' இருக்கின்றது. இயற்கையான ஈஸ் உடல் நலத்துக்கு அவசியம்.
11. 'முதல் நாளில் சமைத்த கறி அமுது எனினும் அருந்தோம்': உணவு சமைத்தவுடன் உண்பதே சிறந்தது. உணவு சமைத்து வைத்திருக்கும் போது அது நேரம் செல்லும்போது இரசாயன மாற்றத்துக்குட் படுகின்றது. அதில் நுண்ணங்கித்தாக்குதல் இடம் பெற்று இரசாயனமாற்றம் ஏற்பட்டு உணவு பழுதடைந்து நஞ்சாகுகின்றது. குளிர் பதனிடும் பெட்டியில் சமைத்த உணவுகள் வைத்தாலும் அங்கும் இரசாயன தாக்கதற்குட்படுவதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்து உணவு பதனிடும் முறையில் பயன் படுத்தப்படும் பொருட்களை நீண்டகாலம் பழுதடையாது பாதுகாக்கும் இரசாயண பொருளான 'பிறசவேற்றி' என்னும் பொருள் புறள்வான கலங்களை உண்டாக்கி உடல் வலிமையை இழக்ச்செய்வதாக அதாவது புற்றுநோக்கு காரணியாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சித்தாகள் அன்றே இன்று நடக்கப் போவதை தடுக்க விழிசமைத்தார்கள் என்றால் அவர்கள் மனுக்குல நன்மையை என்றோ சிந்தித்து செயல்பட்டிருப்பது எவ்வளவு வியப்புக்குரியதாகும்.
"மனுக்குல வாழ்கையே அவன் வாழ்க்கை
ஆன்ம விடுதலையே அவன் இலக்கு
அதை அடைய உடல் தேவை
அதை காக்க சித்த வைத்தியம்
வைத்தியம் பலிக்க வாழ்வியல்
அது சித்தர்கள் அறிவியல்
உண்மையை உணத்தும் மெய்யியல்'
'ஞானிகள் பசிக்கு ஞானம்
அஞ்ஞானிகள் பசிக்கு உணவு
உலகத்தை அறிந்தவன் அறிவாளி
தன்னை அறிந்தவன் ஞானி
உலகை அறிவது அஞ்ஞானம்
தன்னை அறிவது ஞானம்
ஞானியின் விளிப்பு மும்மலபிடியிலிருந்து நீங்க
அஞ்ஞானியின் விளிப்பு மும்மலத்தை ஏற்க
அத்தனைக்கும் காரணம் தாம் செய்த தர்மமும் கறுமமும்
ஞானிகளின் தனிமை பற்றில் பற்றாமை"
மட்டூர் புன்னையம்பதியான்
No comments:
Post a Comment