"சித்தர் பாடல்கள் சிந்திக்கச் சிந்திக்க தித்திக்கும் தீங் கனி அழியாத தத்துவ முத்துக்கள்
வாழ்ந்து அனுபவித்து உலகுக்கு கொடுத்த வித்துக்கள் தாகம் உள்ளவன் தீத்திடும் நதி யது
முற்றும் துறந்தவன் சங்கமமாகும் சமுத்திரம் அது"
'தன்காயம் தோனாமல் எண்சான் பாத்தி கட்டி
வெங்காயம் நாற்று விட்டு வெகுநாளாக காத்திருந்தேன்
வெங்காயம் தின்னாமல் மேல்தோலைத் தின்றதனால்
தன் காயம் தோனாமல் என் ? கண்ணம்மா !
நான் சாகிரேன்டி சாகாமல்'
இப்பாடலில் உடல் பெறப்பட்ட நோக்கத்தை அடையாததையும் அதனால் வருந்தும் ஆன்மாவின் கதறலையும் இங்கு குறிப்பிட்டு வெண்பா பாடியுள்ளார். தன்னுடைய உடலைக் காட்டாமல்(அதாவது சூட்சும உடலை) பருவுடலை உருவாக்குவதை எண்சான் பாத்தி கட்டி அதில் வெங்காயத்தை உருவாக்கி காத்திருதார் விளைவு பெற ஆனால் வெங்காயத்தின் தோல்களை உரித்து உரித்து உண்டு விட்டார்கள் இறுதியிலே பாத்தியல் இட்ட வெங்காயமும் இல்லை பயனும் இல்லாது பொயிற்று என இப்பாடலின் கருத்தை நேரடியாகக் கொள்ள முடியும். ஆனால் இதன் உட்கருத்தை பார்க்கும் போது முதலில் குறிப்பிட்டுள்ள வெங்காயம் வெறுமையான கரும வினை அற்ற ஆத்மா புனிதமானது. அடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது பருவுடல் இது முன்வினைப்பயனை அறுக்க எடுக்கப்பட்டது. ஆத்மா தன்னில் பட்ட களிம்பைப் போக்க உடல் எடுக்கின்றது. இதை மாயை மறைக்கின்றது ஆணவம் தூண்டுகின்றது கன்மம் அனுபவிக்கின்றது. இதனால் ஆன்மா ஏமாறுகின்றது. இதனையே பிரம்கஸ்த்தி தோசம் என குறிப்பிடுகின்றனர். ஆன்மா தனது களிம்பைப் போக்க பிரம்மனிடம் பெற்ற உடலை மாயை மறைத்ததனால் ஏற்பட்ட விளைவு அப்போது மனம் எம்மை இயக்கும். அங்கு புத்திக்கு வேலை இல்லை. குருவருள் இருந்தால் திருவருள் உண்டு. அப்போது நாம் மனத்தை இயக்க முடியும். இங்கு புத்தி இயங்கி சித்தி கிடைக்கும். இங்கு சித்தி என்பது முத்தி யாகும். இதுவே பிறவிப்பயன்.
No comments:
Post a Comment