"நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்
அன்நாள் ஜேசு பிறந்த பொன்நாள்
மனுக்குலம் மீட்சிபெற வித்திட்டதிரு நாள்
அன்நாள் உலகுக்கு ஒளி பிறந்த பொன்நாள்.
ஆஜாரகத்துக்கு அச்சுறுத வித்திட்ட திரு நாள்
மாதாவின் விசுவாசத்தின் சாட்சிய திருநாள்
சூசையப்பரின் மாட்சிமை திருநாள்
கடவுனின் மாட்சிமை நிலை நிறுத்திய திருநாள்
அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை காக்க
அவதாரம் எடுப்பேன் என்ன கீதையில் கண்ணனின்வார்த்தை பலித்த நன்நாள் அன்நாள் எல்வோருக்கும் பெரும் திருநாள்".
"வார்தை மாமிசமாகி உன்னுடனே வாசமாக இருந்தார் இறைவன்.
அன்பின் சொருவம் அவர்
ஆடுகளை மேய்ற்கும் ஆயனவர்
உண்மையின் இலக்கணம் அவர்
சித்தர் குழாமில் ஒருவர் அவர்
அவர் பாதை விடுதலை அளிக்கும்" .
"ஏழ்மையில் பிறந்து எழிமையில் வாழ்து
தனக்கென வாழாது உலக்கு வாழ்ந்த
மனித உருவில் பிறந்த இறைவன்
அவன் வாழ்ந்த வாழ்கையும்
அவன் போதித்த போததையும்
மனுக்குல விடுதலை
அதை அறிந்து உணர்ந்தால்
அதுவே அவனுக்கு செய்யும் காணிக்கை"