Monday, December 26, 2011

'கிருமி நமச்சல் கிராணி அதிசாயம் சிரநீர் நீக்கிடும் கசகசா'

'கிருமி நமச்சல் கிராணி அதிசாயம் சிரநீர் நீக்கிடும் கசகசா'
கசகசாவின் மருத்துவக் குணம்

  Opium Poppy

 பிரிவு:     Magnoliophyta
வகுப்பு     Magnoliopsida



வரிசை:   Ranunculales
குடும்பம்:Papaveraceae


 தேரையார் கசகசாவின் மருத்துவக்குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
'கிருமி நமச்சல் கிராணி அதிசாயம் சிரநீர் நித்திரைபங்கம் போம் செப்பில் உருவழகும் காந்தியும் உண்டாகும் கசகசாவின் குணத்தை தேர்ந்நவர்க்கு விள்துவமாம் தேர்' என குறிப்பிடுகின்றார். 
          இங்கு கிருமி என்பது நுன் கிருமியைக் கருது கின்றார். கிருமியை அழிக்கவல்லது இதுமட்டுமல்ல கடியுடன் கூடிய கிரந்தியை கட்டுப்படுத்த வல்லது. சிரசிலே ஏற்படும் நீர் கோருப்பதால் ஏற்படும் தலை வலி தலைப்பாரம் போன்றவற்றை போக்குவதுடன் ஆழ்ந்த நித்திரைக்கு தடையாவற்றை நீக்கி நித்திரை செய்யக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்ல உருவழகும் காந்தியும் உண்டாகும் என்கின்றார். கசகசாவை பயன் படுத்துவதனால் உடல் அழகு பெறுவதுடன் மற்றவர்களை கவரும்தன்மையுடையதாக கருகின்றார். இவ்வாறு சிறப்பு மிக்கது கசகசா இதை பொதுவாக சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்ப்படுகின்றது. வறன்ட சருமத்தைப்  பாதுகாக்க பொன் வறுவலாக வறுத்து அரைத்து முகத்தில் பூசலாம். என்னை பசையான சருமத்துக்கு பயத்தம் மா சேர்த்;து அரைத்து பூசலாம். இதனால் சருமம் பளபளப்பாகும். குளிப்பானங்களில் கசகசாவை இட்டும் அருந்த முடியும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உணவுப் பொருட்களை தயாரிக்கும் போதும் கசகசாவைப் பயன்படுத்து கின்றனர் (பொதுவாக அசைவ உணவுதயார்ப்பின்போது) இதில் போதையும் உண்டு இதனாலேயே 'நித்திரைபங்கம் போம்' என தேரையார் குறிப்பிட்டுள்ளார்.
   

No comments:

Post a Comment