“காரிகையே யவ் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” வாய்வேக்காடு போக்கிடும் மனத்தக்காளி சூப்
தேவையானபொருட்கள்:
1.சுத்தமாக்கப்பட்ட மனத்தக்காளி இலை
2.ஒரு மண் சட்டி அல்லது இரும்புக் கடாய்
3.தாளிப்பதற்கு தேவையான அளவு தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்
4. தாளிப்பதற்கு தேவையான அளவு கடுகு
5. தேவையான அளவு நறுக்கி எடுத்த சின்னவெங்காயம்.
6. தேவையான அளவு மிளகுத்தூள்.
7. தேவையான அளவு சீரகத்தூள்.
8. தேவையான அளவு நீர்.
9. பாதி தக்காளித் துண்;டு ஒன்று.
சூப்பு தயாரிக்கும் முறை:
தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி சூப்பாக பருக முடியும்.
குணப்படுத்தும் நோய்கள்:
பருகினால் வாய் கிரந்தி வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும்.
No comments:
Post a Comment