Monday, November 7, 2011

"மனவழுத்தம் போக்கும் அறுகம்புல் தைலம்"


"மனவழுத்தம் போக்கும் அறுகம்புல் தைலம்" 
தேலைப்படும் பொருட்கள்:
1.சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல் ஒருபிடி
2.அகன்ற கரண்டி.
3. கரண்டியில் கொள்ளக் கூடிய சுத்தமான        எள்ணெண்ணை.
4.எண்ணையை சூடாக்கக் கூடிய அடுப்பு.
அறுகம் புல்லை தேர்தெடுத்தல்:
அறுகம்புல்லைத் தேர்தெடுக்கும் போது கவணிக்க வேண்டியது ஓர் முக்கிய விடையமாகும். சரியான புல்லைத் தேர்தெடுக்கும் போது 1.அறுகம்புல் பூக்கும் தன்மையுடையது. 
2.கணுக்கள் விட்டு படர்ந்து கணுக்களுக்கிடையல் கிளை விட்டு           
வலைப் பின்னல் போல விரிந்து படரும் தன்னையுடையது. இவ்வாறு               
 தெரிவு செய்து கொள்ளவேண்டும். அறுகு போன்று வித்யாசப்படுத்த முடியாத புல்வகையும் உண்டு. அது பூக்காத ஒஸ்ரேலியன் கிராஸ், கொறியன் கிராஸ் போன்ற பூங்காக்களில் அழகுபடுத்தும் ஒருவகைப்புல்கள்  உண்டு அவை  பார்வைக்கு ஒன்று போல இருந்தாலும் அதன் தன்மை வேறு அது அறுகாகாது. 
எண்ணை தயார்க்கும் முறை:
 தேர்ந்தெடுத்த அறுகம் புல் ஒருபிடி எடுத்து அதை நன்றாக உரலில் இட்டு இடித்தெடுத்து வைத்துக் கொண்டு. ஒரு அகன்ற கரண்டியில் நல்லெண்ணை விட்டு நெருப்பில் பிடித்து காச்சி அதனுள் இடித்தெடுத்து வைத்த அறுகம்புல்லை இட்டவும். இட்டவுடன் அது எண்ணெயினுள் சென்று மீண்டும் மேல் வரும். (எண்ணையில் அறுகை இடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எண்ணையில் பச்சை புல்லை போடும் போது பொங்கும்) வந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட்டு எண்ணையை எடுத்து ஆறவிட்டுதல் வேண்டும்
எண்ணையை பிரயோகிக்கும் முறை:
        ஆறிய எண்ணையை தலை, முகம் போன்ற வற்றில் தேய்த்து சில மணிநேரம் ஊறவிட்டு வெண்நீரில் தோய வேண்டும். வேண்நீர் என்னும் போது நன்றாக சூடாகிய நீரில் குளிந்த நீரைகலத்தலை தவித்து சூடாக்கும் போது குளிப்பதற்கு தக்கதாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணையை உடலில்லிருந்து எண்ணைத்தன்மையை அகற்ற சவற்காரத்தைத் தவித்து சீயாக்காய்த்தூள், அரப்புத்து தூள், பாசிப்பயறுமா போன்றவற்றை பயன்படுத்தி எண்ணையை உடலில்லிருந்து அகற்ற வேண்டும்.  
குணமாகும் நோய்கள்:
இவ்வெண்ணையைப் பயன்படுத்துவதினால் பினிசம், தலைவலி, மனவழுத்தம், பரபரப்பை ஏற்படுத்தும் தலைவலி என்பன குணமாகும்
"மட்டூர் புன்னையம்பதியான்"

No comments:

Post a Comment