தத்துவம் - 1
பன்னிருதிருமுறையில் பத்தாவது திருமந்நிரம் இதற்கு மாத்திரமே மந்திரம் எனவருகின்றது. இதனால் இதிலுள்ள அனைத்தும் மந்திரங்கள் மட்டுமன்றி சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதியும் மாகும்.
முதலில் மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது ஜீவகாருண்னியம் இதை தவமாக்கியவர் “அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருனை” வள்ளலார். புலால் உண்பவர்களுக் தானதரும் செய்தாலே பவம் என்னுமளவும் புலாலை வெறுக்கின்றார்.
திருமந்திரம் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்னாமை, பிறர் மனை நயவாமை, போன்ற பஞ்மாபாவங்கள் தவித்தல் தொடர்பாகவும் அறம், அன்புடமை, கல்லாமை, நடுவுநிலமை, போன்றவற்றையும் குறித்துரைத்துள்ளார்.
முதலில் கொல்லாமையைப்பார்போம்.
“பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்கனைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றோர் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றார் ஆவி அமர்திட்டம் உச்சியே” இங்கு இறைவனுக்குகந்த மலர் இன்னுமோர் உயிரைக் கொல்லாமையாகிய சிறந்த மலர். ஒன்றித்த மனவைராக்கியம் பூசைக்கேற்ற தீபஒளியாகும். உயிர்களிடத்து இறைவன் உறையும்மிடம் தலை உச்சியாகிய சக~;ராகாரமாகும். அப்படிப்பட்ட இறைவனின் படைப்புக்களை கொல்வதையோ வதைப்பதையோ திருமூலர் அனுமதிக்க வில்லை. சிவனை பூசிப்பதற்கு சிறந்த மலர்களால் எட்டு அவற்றை அட்டபுஸ்பம் என்பர். அக பூசைக்கு உகந்தது “கொல்லாமை ஐந்தடங்கள் கொள் பொறுமை டிரக்கம் அறிவு மெய் தவம் அன்பெட்டு” என்னும் நற்பண்புகள் எட்டும் ஒண்மலராகும். கொல்லாமை ஐம்பொறியடக்கல் பொறுமை இரக்கம் அறிவு மெய் தவம் அன்பு இவை முறையே சிவபெருமானுடைய எட்டுக்குணங்கள் இவை எட்டும் எம்மிடம் இருத்தல் வேண்டும். அப்பர் பெருமான் இவ்வெட்டுக்குணத்தையும் “எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலரிடு வார்வினை மாயுமால்” புறமலரை விட அகமலரான ஒண்மலர்களை சமர்ப்பித்தல் சிறந்தது.
“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே” கொல்லென்றும் குத்தென்றும் எறிஎன்றும் அங்கனமே செய்தும் செய்துவரும் கொடியவர்களை கூற்றவன் தன் ஏவளார்களான வலிய இடிகாரர் வன்மையுள்ள கயிற்றினாற் கட்டி இடிமுழக்கம் போல்முழங்கி நரகத்திலிடுவர் ஆருயிர்கள் பருவுடம்பில் நின்று செல்லவும் கேட்கவும் முடியாத அஞ்சத்தக்க கொடுமைகளைச் செய்கின்றனர். அவர்களை இறைவின் ஏவலாளர்களை வைத்து நுண்ணுடம்பில் வைத்து மாறமுடியாத துன்பங்களைச் செய்கின்றனர். துன்பத்துக்கு மருந்தும் கிடையாது இரங்கு வோரும் கிடையாது. இதைப் போன்று துன்பம் கிடையாது. இதற்காகத்தான் “மனங்கொண்டு பிறருக்குத் துன்பஞ்செய்யாது இன்பம் செய்தல் நன்று”
“கொலையே களவுகட் காமம்பொய் கூறல்
முலைவான பாதக மாம்அவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சாந்தின்பஞ் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே” கொலை களவு கள்ளுண்டல அறமற்;ற காதல் பொய் என்னும் ஐந்தும் மாறாமயக்கம் தரும் பெரும் பாவங்கள் இவற்றை செய்பவர்கள் நரகத்தை அடைவர். இவற்றை செய்யாது இறைவனை நாடியவக்கு இறவா பேரின்பம் சார்ந்த நல்லார்க்கு நரக துன்பம் மில்லை. “அழிவில்லாத் திருவடி உணர்வின்பத்திருந்தலே என்றும் நிலைநின்ற மெய்ப்பொருளாகும்” இப்பாவங்கள் செய்தவரை பின் விளைவாக வந்து பின் தொடர்ந்து எம்மைக்கொல்லும். உண்மையை நாடி அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை இந்த ஐந்தினையும் இடையறாது ஒழுகுதல் வேண்டும். அடுத்து புலால் மறுத்தல்
“ பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
சேல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லதக்கத் தள்ளி மறித்துரைப் பாரே” உலகவராலும் உண்பார்க்கமைந்த உறுப்புக்களாலும் ஏற்றுகொள்ளும் வாய்ப்பு அமையாதது புலால். இவர்கள் பிறப்பில் இழிவானவர்கள். அப் புலையர்களை இடிபோல்முழங்கி யமன் நரகத்தில் தள்ளி துன்பப்படுத்துவான். “புலால் உணபவருக்கு இன்மையிலும் பொல்லாதேயாகும் என்னை அவ்வூன் நல்ல உள்ளத்தைத் தாராதாகலான்” இவ் உண்மை “உழைப்பால உடலழகாம் ஊணாலாம் உள்ளம் மழைளொழுக்காலாம் உயிரின் மான்பு”
“கொன்றி லாரைக் கொலச்சொல்லிக் கூறினார்
தின்றி லாரைத் தின்னச்சொல்லித் தெண்டித்தார்
பன்றி யாப்படி யிற்பிறந் தேழ்நரகு
ஒன்று வார்அரன் ஆணையி துண்மையே” கெல்லாதவரை அதாவது கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லாதவரை கொல்லும்படி தூண்டி துணை நின்றவரும் உண்ண மனமின்றி அருவருப்புடன் இருந்தவரை வற்புறுத்தி உண்ணச் செய்தவரும் அப்படியும் தின்னாதவரை ஒத்திவைத்தவரும் இன்நிலத்தில் பன்றியாய்ப் பிறப்பர் பின்பு ஏழ்நரகத்திடை வீழ்ந்து ஆழ்ந்த துன்புறுவர். இது இறைவன் ஆணை. இங்கு இயேசுகிறிஸ்து சாத்தானை பன்றியில் ஏவினார். அதுபோன்று இஸ்லாம் பன்றி இறைசியை கறாம் எனவும். இந்துக்கள் ஈனமான பிறவி பன்றி என்றும் கூறும்போதும் அதை எல்லாமதமும் ஏற்று கொள்வது போலத்தான் இருக்கின்றது. இராமலிங்க அடிகள் குறிப்பிடுகின்றார் மாமிசம் உண்பவர்களையும் உண்ணாதவர்களையும் மிருகங்கள் உகித்தறிந்து உண்பவர்களை வெறுத்தும் உண்ணாதவர்களை வாழ்த்துகின்றன. என குறிப்பிட்டுள்ளார்.
உணவு மனிதனின் செயல்பாட்டை மாற்றியமைப்பதில் முக்கிய காரணியாக அமைகின்றது. மனித நடத்தைக்கு காரணமாக அமைவது குணங்கள். அவை தாமதம் ராஜதம் சாத்வீகம்மாகும். அக்குணங்கள் ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் பிரதான காரணங்களில் ஒன்று உணவுவாகும். உணவில் சாத்வீக இராஜத தாமத குணங்களைங்களை ஏற்படுத்தும் தன்மையா உணவுகள் உண்டு. இதை மிருகங்களில் இலகுவாக அவதானிக்கமுடியும். இலை குலை கிழங்கு வகைகளை உண்னும் ஆடு மாடு போன்றவை சாத்வீக குணமுள்ளதாகவும். மாமிசம் போன்ற கலப்புணவுகள் உண்ணும் சிங்கம், புலி, கரடி போன்றவை பயங்கரகுணங்கள் கொண்டவையாக இருப்பதையும் அவதானிக்கமுடியும். இதை ஒத்ததுதான் மனித நிலையும். முதல்நுகரி அல்லது தாவரநுகரியானவை(சைவ) சாத்வீக ராஜத தாமத குணங்களில் சாத்வீகம் சற்று அதிகமாகவிருப்தையும். இரண்டாம் நுகரியான அசைவ உணவை உட்கொள்பவர்கள் சாத்வீக ராஜத தாமத குணங்களில் ராஜத தாமதம் சற்று அதிகரித்து இருப்பதையும் அவதானிக்க முடியும். தற்போது மருத்துவர் ஆய்வுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் அசைவஉணவுகளை குறைத்தல் அல்லது தலித்தல் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என கருதுகின்றது. உடலில் கொழுப்பு அதிகரிப்பதனால் கொழுப்பு வெளியேற்றப்படாது. இரத்தத்தில் கலந்து இரத்தநாளங்களில் உறைந்து இரத்தொட்டத்தை சீரற்தாக்கும் போது இரத்தழுத்தம் அதிகரித்து மனிதன் நிலைகுழம்பு கின்றான். கோபம் அதிகரித்து அவனது நிலை குழம்பி நிம்மதி இழக்கின்றான். தேவைத்கதிமான உணவருந்தலாலும் கொழுப்பின் அளவு அதிகரிப்பதாலும் இன்சுலினின் தேவை அதிகரித்து இக்சுரப்பி அதன் செயல்ப்பாடு குறைந்து சக்கரை உப்பு என்பனவற்றை எரித்து கழிவகற்றும் செயல்பாடு குறைந்து சக்கரை உப்பு அதிகரித்து அதுவும் இரத்தத்தில் கலக்கின்றது. இதன் மூலம் இரத்தழுத்தம் இருதய அதிர்ச்சி நோய் சக்கரை வியாதி இரத்தஉப்பு நோய் என்பன உண்டாகின்றது. உடல்பயிற்சி இன்மையும் காரணம்தான்.
சிலர் கருதுவதுண்டு சைவ உணவுகளுக்கு உயிர் இல்லையா? என்று கேட்பதுண்டு. உயிர் உண்டு. ஆனால் அதில் ஒரு கிளை அல்லது இலை பூ காய் கணியைப் பறிப்பதனால் மரம் இறப்பதில்லை மாறாக வளர்கின்றது. காலத்துக்கு காலம் தளிர் விடுவதும் பூப்பதும் காய்ப்பதும் பழுப்பதும் இயற்கை.
மனித உடல் சுடுகாடல்ல இறைவன் உறையும் ஆலயம். சுடுகாட்டுக்கு செல்ல பயமேன் புதைக்கப்பட்டவர்களின் ஆவி வசிக்கும் இடம். அவர் அவர் செய்த வினைப்பயன் ஆத்தும விடுதலை. அவர்கள் செல்லும் லோகமும். எமது வயிறு சுடுகாடு போல் மச்ச மாமிச உடல்களை புதைக்கும் இடமல்ல. இது எமக்கு புரியும் மச்ச மாமிச உட்கொண்டால் ஆலயத்துக்கோ அல்லது சமய நடவடிக்கையிலோ கலந்து கொள்வதில்லை. வீட்டில் இடம் பெறும் சமய நிகழ்வுகளின் போதும் தவிக்கின்றோம். பொதுவாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் தவிப்பதுண்டு. அதிலிருந்து நாம் நம்மை அறியாமல் இருக்கின்றோம் என்பது உண்மை. ஜெசுகிறிஸ்து இறைவனை நோக்கி நாற்பது நாள் பிதாவை நோக்கி விரதம் இருந்த போது அவர் சாத்வீக உணவே உட் கொண்;டார். அதை ஞாபகப்படுத்தவே விரதத்தின் முன் முட்டைகள் மலையில் உடைக்கப்பட்டது. இதனை முட்டையடிப்பெருநாள் என்றும் உலக ஆசையை வெறுக்கவே அவற்றை எரித்து சாம்பல்புசியதை சாம்பலடிப் பெருநாள் என்றும் கொண்;டாடப்பட்டது. அதிலிருந்து புலனாகின்றது. இறைவனை நோக்கும் போது உடல் விடையங்களைத் தவித்து ஆத்துமா விடயங்களை கடைபிடியுங்கள் என்றார் ஜேசு என கூறப்படுகின்றது. இதிலுருந்து புலால் தவித்தல் புலனாகின்றது. மறைமுகமாக கொல்லாமையை வலியுறுத்துகின்றார்.
இஸ்லாம் மதத்தின் திருக்குறான் இறக்கட்ட போது மலைக்குகையில் விரதமிருந்த போது ஈச்சம்பழமும் பாலும் உரோட்டியும் உண்டார் என கூறப்படுகின்றது. அதிலிருந்தும் இறைவனை நோக்கி விரதமிருக்கையில் சாத்வீக உணவுகளையே உட்கொண்டார். இதிலிருந்து இறைவனை அடைய கொல்லாமை புலால் உண்னாமை மறைமுகமாக வலியுறுத்தப்படுவது உட்கிடை. பௌத்த மத்தில் புத்த பகாவான் இந்து மதத்தின் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட வேள்விகளில் காணப்பட்ட மிருகப்பலியிடலை வெறுத்தே பௌத்தமதத்தை பஞ்சீலக் கொள்கையில் உருவாக்கினார்.
எனவே நேரடியாக இந்து பௌத்த மதங்களும் மறைமுகமாக ரோமங்கத்தோலிக்கமும் இஸ்ஸாமும் இறைவனின் கிருபையைப் பெற கொல்லாமை புலால் உண்னாமை வலியுறுத்தப்படுகின்றது.
கள் உண்ணாமை பற்றி திருமந்திரம் குறிப்பிடுகையில்
“கழுநீர்ப் பசுப்பெறின் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்தங் காயம் சுருங்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே” பசுவுக்கு அரிசி கழுவிய நீர் விருப்பம் அதை உண்டால் மீண்டும் கிடைக்கும் வரை காதிருக்கும். இது போல சிவானந்தத்தை விரும்பி உண்போர் மீண்டும் அதையே நாடுவா சிலர்;. மானிடநோ சிவானந்தத்தை அருந்தாது கள் அருந்தி மாய்கின்றனர்களே. பசுவின் அறிவு கூட இல்லையே இந்ந நிலை கெட்ட மாந்தருக்கு என்று கேட்கின்றார்.
“ சித்தம உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்நம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணக் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்ததல்கீழ்க் காலே” சித்தம் தெளிந்து சிவானந்த தேனை பருகி திளைக்காது உண்பதும் உலாவதும் உறங்குவதுமாக இருப்போர் கீழானவர்கள். “காமமும் கள்ளும் கலதிட்கே ஆகும்
மாமல மும்சம யத்தில் மயல்உறும்
போமதி யாகும் புனிதன் இணைஅடி
ஓமய ஆனந்தத் தேறல் உண்ர்வுண்டே” பெண் ஆசையும் கள் உண்னும் ஆசையும் உடையோர் கீழ் மக்களாகிய தீயவருக்கே பொருந்தும். அவர்கள் தான் என்ன ஆணவம் மயங்கி புத்திகெட்டுப்போவர். அதை விட்டு பிரணவப் பொருளையுணர்ந்து அத் தேனமுதை உண்டுகளித்து பயன் பெறுக.”உள்ளுண்மை ஓரார் உண்ரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் லாழ்வுறார்
தௌ;ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே” கள்ளருந்தும் மாந்தர்கள் என்றுமுள்ள மெய் பொருளை ஆய்தறியவோ உணரவோ மாட்டார்கள். ஆன்மாவாகிய பசுக்கள் பாசத்தில் சிக்கித்தவிப்பதை அறியார். வள்ளல் பிரானின் அருள்பெற்று வழங்க மாட்டார்கள். சிவயோகத்தில் சேர்ந்திருக்கமாட்டார்கள்.
“மயக்குஞ் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்
மயக்குறு மாயையின் மாமாயை வீடு
மயக்கில் தெளியின் மயக்முறும் அன்றே” அறிவினைக் கெடுத்து அல்லப்படுத்தும் எதுவும் ஆன்ரொரால் கள் என்றே கொள்ளப்பட்டது. ஆதலால் தெளிவு விரிவு இல்லாத அறிவுள்ளவர் மலம் நிறைந்த மூடர்கள். அவர்களின் எரிவினால் ஏற்படும் சமயம் மயக்கம் தரும் பொய்ச்சமயம் ஆகும். இங்கு சமயம் தீமையெனகெண்டவர்களையும் நன்மையெனக் கொன்டு ஆராயாது நிற்கும் தீயார் அறிவைக் கொடுக்கும் மதுவினையுண்பவர்கள் மாமூடர்கள். அவர்களுக்கு அதுபற்றி விளக்கினாலும் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மயக்கம்தரும் மலங்களின் இருப்பிடமான இவர்கள் மயக்கம் தெளிந்தாலும் விழித்தெழுவ தில்லை.
“மயங்கும் தியங்கும்கள் வாய்மை அழிக்கும்
அயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம்கொண்ட ஞானத்து முந்த
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே” கள் மனதை மயக்கி புத்திதடுமாறி அபாய் பேசவைத்து பெண்களுடன் கூடிமகிழவைத்து பேரின்ப நாட்டத்துக்கு தடையாக அமையும்.இவர்களுக்கு தொடர்ந்து கள்மயக்கமே கிடைக்குமே தவிர தொடர்ந்து கிடைக்குமே தவிர தொடர்ச்சியான பேரின்பம் கிடைக்காது. “இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டடித் தேன்” இரவு பகலற்ற தன்னை மறந்து யோக நிலையில் உள்ளுறும் ஆனந்தத் தேனை அருந்தாது இருப்பவர்கள் கீழானவர்கள். அதனால் இரவு பகல் உள்ள மாய மலங்கள் இரண்டையும் அகற்றி இறையருளில் திளைத்தேன்.
“ சத்தியை வேண்டிக் சமத்தோர் கள்ளுன்பர்
சத்தி அழித்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பபட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே” சத்தியிடம் சக்திவேண்டி பராசக்தியைத் துதிப்பர் சிலர். சக்திக்கு கள் நிவேதனம் செய்து அதை தாம் அருந்தி தன் சக்தியை இழக்கின்றனர். சக்தி என்பது சிவஞானம் அதிலிடுபட்டு சத்திய ஞான ஆனந்தத்தை அடைவதை விட்டு கள் அருந்துகின்றனர். சக்தி பூசை என்று கள்ளு நிவேதனம் செய்தும் ஆடு கோழி பலியிடப்படும். பூசையின் போது அம்மன் கள் அருந்துவதாக தான் அருந்தி அம்மனுக்கு பலியிடுவதாக தான் கொழியை கடித்துக்குதறியும் ஆட்டை வெட்டி பலியிட்டும் சமயத்தின் பேரில் பித்தலாட்டம் ஆடும் பலர் இன்றும் எம்மிலிருக்கின்றனர். இவர்கள் தாந்திரிய வழிபாட்டினர். இந்து தர்மம் கொல்லாமை புலால் மறுத்தல் கள் உண்ணாமை போன்றவற்றை குறிப்பிடுகையில் எப்படி இது நடைபெறுகின்றது. இந்து சமயத்தில் அறுவகை சமயங்கள் உண்டு அதில் சாத்தமும் ஒன்று. சக்தி மகாமாயை மாயையை அழிப்பவள் அன்பானவள் ஆருயிர்களுக்கெல்லாம் அன்னை அப்படி இருக்க ஆட்டுப்பலி கோழிப்பலி கேட்டு காரியம் முடிக்கப்பாளா? ஆடும் கோழியும் ஆருயிர்கள் இல்லையா? அவள் இரக்கமற்றவளா? என்று சிந்தித்துப்பார்த்ததுண்டா? அவையனைத்தும் யாருடைய வேலை அது வாசகர் பக்கம்.
அன்பே வடிவான அவள் எம்மிடம் எதிபார்ப்பது தூய அன்பையும் அவனிடம் சரன்புகுதலையும் தான். குருதேவர் ஸ்ரீ இராமகி~;ணர்,காளிதாசர,பாரதியார்,சப்தரிசி~pகள் போன்றோர் ஆடும் கோழியும் பலியிட்டார்களா? சத்திக்கு கள் கொடுத்தார்களா? அல்லது அம்பிகையின் கருணை கிடைக்க வில்லையா? முற்பெரும் தேவிகளாக உலகம் அறிந்தது காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, உலகை விரிந்த பார்வையில் பார்த்துக் கொண்டு இருப்பவள் காசி விசாலாட்சி, உலக மக்களின் பிறவாமைக்கு தடையாக அமையும் ஆசையை ஆழ்பவள் காஞ்சி காமாட்சி,மீன் தனது குஞ்சிகளை காக்க எவ்வாறு விளித்திருக்கின்றதோ அவ்வாறு உலக மக்களைக் காப்பவள் மதுரை மீனாட்சி. இங்கெல்லாம் ஆடு கோழி பலியிடலும் கள்ளும் நிவேதனம் செய்கின்றார்களா? இல்லை.
ஆடு,கோழி பலியிட்டு, கள் கொடுத்து காரியம் முடிப்பது துர்தேவதைக்கே அங்கு பில்லி, சூனியம், கெடுதி செய்வதற்கே அதனால் வஞ்சகம் சூது பொறாமை உலகில் தலைவிரித்தாடி கெட்டசக்திகளின் ஆக்கிரமிப்புக்கே அதை செய்விக்கும் பூசாரி அசைவ உணவுட் கொள்பவராகவும் கள் அருந்துபவராகவும். இடுகாட்டை மையமாக கொண்டவராகவும் காணப்பாடுவார். இவர் சிவன் சுடலைப் பொடிபூசி சுடலையில் நடமாடியதை கதைபார். சிவன் நடனமாடிய சுடலை நம்மிழுள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் திரிபுரங்களை எரித்து அந்த சாம்பலை அணிந்து எம்முள் ஆடிய நடனம் அது அதை அவர்கள் அறியார். அகோரிகளை ஒத்தவர்கள்.
அதற்கு தடையான மும்மலமான ஆணவம் கன்மம் மாயை இவற்றையே பலியிட்டு அவளிடம் சரன்புக வேண்டும்;. இதுவே பலிஇடல். ஆலயத்தில் கோபுரத்தின் வழியாக உட்செல்லும் போது முதலில் தம்பவினாயகர் அதையடுத்து தம்பம் அதையடுத்து மும்மலத்தைபலியிடும் பலிபீடம் அதையடுத்து மூலவரின் வாகனம் இருப்பதை அவதானிக்கலாம். இறைவனை அடைய தடையாக அமையும் விக்கிரகங்களை தீர்க்க புத்திவிளிப்புத்தேவை அதை வினாயகரிடம் வேண்டி ஆறாதாரத்தின் ஊடாக குண்டலினி விளிப்படைந்து சகஸ்ராதரத்தில்லிருந்து ஊறிச்சொரியும் அமுதம்மெனும் கள்லினை அனுபவித்து பரமானந்தத்தை அடைய தம்பம் அடையளமாகும். அதற்கு மலபரிகாரம் செய்யும்மிடம் பலிபீடமாகும்;. அதன் பின் ஆத்துமா விடுதலை பெற்று இறைவனை அடையும் என்பதை இறைவனை நோக்கி நந்தியிருப்பது குறிக்கின்றது. இதை அடைய பலதடைகள் இருப்பதை நந்திக்கும் இறைவனுக்கும் இடையியுள்ள திரைகள் குறிக்கின்றன. இந்த தத்துவஞானம் இல்லாது அறியாமையில் மூழ்கின்றனர் பலர். எழுபிறப்பு என்பதும் ஏழு உலகமும் எம்முள் தான் அது வெளில் இல்லை. எம்முள்ளுள்ள ஏழு ஆதாரமும் ஏழு பிறப்பு அவையே ஏழு உலகமும். முலாதாரத்தில் புத்திவிளிப்பு இடம் பொற வேண்டும். அதன்பின் சுவதிட்டானத்தில் காமக்குரோத செயல்கள் பலியிடப்பட வேண்டும். அதன்பின் மணிப்பூரகத்தில் காமக்குரோத செயலுக்கு காரணமான தாமத இராசத குணத்தை ஏற்படுத்தும் உணவை தவித்து சத்வீகக்குணத்தை ஏற்படுத்தும் உணவை உட் கொண்டு சாத்வீககுணத்தை மேன்படுத்தால். அதன் பின் அணாகதத்தில் அக்கினியில் அஞ்ஞானத்துக்கு காரணமான அணைத்தையும் கோமம் செய்து உலக விவகாரங்களிலிருந்து விடுபடுதல். அடுத்து விசுத்தியில் எல்லாவற்றையும் துறந்து துற அறம் பூணுதல். அடுத்து ஆக்ஞாவில் சதாசிவத்தில் இரண்றற்றுக் கலத்தல். சகஸ்ராகாரத்தில் சிவஞான தௌ;ளமுதை அருந்தி யோகநிஸ்டையில் இருத்தல்.
ஆக்ஞ்னா இமையம் இது இமைகளின் மையப்பகுதியாகும். இதுவே கைலாயம் என்னும் கைலையம்பதி. இது எமது முத்தி தலம். இதன் முன் வாரனாசி இது இமைகளுக்கு சற்றுக்கீழ் இடகலை பின்கலை நாசிகளின் மேல் துவாரம் இதுவே உடலுக்கு உயிர்புக்கான பிரானன் செல்வதான வலப்பக்க நாடியான சூரிய நாடியும் இடப்பக்க கரியமலவாயு வெளியேறும் சந்திரநாடியும் இருக்கின்ற வேளை வெளியில் தென்படாத சுழுமுனை நாடி வழியாக குண்டலினி முலாதாரத்திலிருந்து முளையிட்டு சகஸ்ராதாரத்தில் அமுத மழையாக சொரியும் நாடி இருக்கின்றது. காசிவிஸ்வநாதர் இருக்குமிடம்;. “காசியில் இறக்க முத்தி” என்பர் சான்றோர். காசியில் கங்கை யமுனை சரஸ்வதி மூன்றும் கலக்குமிடம் வாரனாசி இதில் கங்கையும் யமுனையும் கண்ணுக்குப் புலப்படும் சரஸ்வதி கண்ணுக்குப் புலப்படா இதுவே சுழுனா மற்றவை இரண்டும் இடகலை பின்கலை ஆகும். இன்று சரஸ்வதி நதி தொடப்பான ஆய்வுகள் நடை பெற்ற வண்ணமுள்ளது. இதையே அண்டத்திலுள்ளவை பிண்டத்திலும்முண்டு என்று சான்றோர் கூறுகின்றனர். பூமிக்கு கீழ் ஓடி வாரணசியில் கலப்பதாகவும் வெண்நிறமானது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
திருமூலர் ஒரு மனிதன் பிறப்பின் நோக்கத்தை அறிந்து அதை அடைய வேண்டுமாயின் முதலில் கொல்லாமை புலால் உண்ணாமை கள் உண்ணாமை போன்ற விடயங்களில் அவர் கவனம் ஈத்தது. இன்று விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது. மனிதனின உடலில் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மூளை செயல்படுகின்றது. மூளைக்கு சமிக்கை கொடுப்பது நரம்பு மண்டலம். சிந்திப்பதன் மூலமே அது செயல்படுத்தப்படுகின்றது. கள் உண்பதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சிந்தித்து செயலாற்றும் செயல்பாட்டை காலப்போக்கில் இழந்து சுயநினைவை இழந்து நடைப்பிணமாக அலைந்து மனிதன் க~;டப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு காரணம் கலங்கள் இறத்தல். மனிதனின் கலங்கள் இறப்பதும் புதிய கலங்கள் பிறப்பதும் இயற்கை. இந்த இறப்பு பிறப்பு விகிதம் சமமாக இருக்கையில் வளர்ச்சி பிறப்பு விகிதம் குறைறும் போது முதுமை ஏற்படுகின்றது. அது இயற்கையின் நியதி அது விதிவசம். இதற்கு இயற்கையின் நியதிக்கு மாறாக மனித நடத்தையும் காரணம். “விதியை மதியால் வெல்லலாம் அதுவும் விதிதான்” இறவாமையை அடைய உடல் வேண்டும். ஏனெனில் சாதனை செய்ய. “ சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” சாதனை செய்ய ஆரோக்கியமான உடலும் தூய்மையான உள்ளமும் வைராக்கியமான எண்ணமும் தேவை. அதற்கு இளமை தேவை. இதற்கு குருதேவர் ஸ்ரீ இராமகி~;ணர் குறிப்பிடுகின்றார். “இளமையில் ஆன்மீகம் முதுமையில் லவ்வீகம்” ஏனெனில் சாதனை செய்ய இளமையின் உடல் உறுதி அவசியமென்றும் பிற்கால திட்டம் ஆன்மீகப்பாதைக்கு தடையற்ற வழியாக அமையும். அடுத்து குருதேவர் சாதனை செய்பவன் “பகலில் தூங்கி இரவில் விளித்திரு” என்றார். பகலில் சூரியபகவான் இருப்பதால் தூய்மையான எண்ணங்களுக்கு தடையாக அமையாது. இரவில் சூரியபகவான் இல்லாமையினால் தீயசக்திகளின் வலு அதிகம் இதனால் ஜபம் தவம் செய்து இவற்றின் இடையூறிலிருந்து எம்மைக் காப்பாற்ற வேண்டும். என தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இது போன்று ஜேசுநாதரை அன்னை மேரி வயிற்றில் சுமந்த காலத்தில் பல்வேறு க~;டங்களுக்கு மத்தியிலும் எந்த நேரத்திலும் செபம் தியானத்தில் மூழ்கி இருந்ததை சூசையப்பர் தான் இரலில் நித்திரையில் எழுகின்ற சந்தர்பத்தில் எல்லாம் அன்னை செபம் தியானத்தில் மூழ்கியிருந்ததாகவும் நித்திரை செய்ததை கணாவில்லை எனகூறியதாக அன்னையின் வாழ்கை வரலாறு புத்தகம் ஒன்றில் நான் வாசித்துள்ளேன். அங்கும் குருதேவரின் கருத்தை ஒத்தாக இருப்பதை காண்கிறோம். அதிலிருந்து உலக விவகாரத்தில் மூழ்கி தூங்காது அதில் விழிபாகவிருந்து ஆன்மீக வாழ்கையில் தளைத்தோங்கு அதற்கு ஜபம் தவம் தேவை என்பதை சூசகமாக குருதேவர் கூறியிருப்பதாக தோன்றுகின்றது. உலகவிவகாரங்களை இரவுக்கும் ஆன்மீகத்தை பகலுக்கும் ஒப்பிடுகின்றார். இரவில் உள்ளவற்றை காண்பதற்கு வெளிச்சத்தின் துணையும் விளிப்பும் தேவை பகலில் எல்லாமே தெட்டத்தெளிவாக தெரியும். பகலில் வெளிச்சத்தின் துனை தேவையில்லை. ஏனெனில் இறைவனுடனிருத்தல்.
எனவே திருமூலர் மனிதனின் சுகாதார ஆரோக்கிய வாழ்iயின்னுடாக ஆன்மீக வாழ்கையை திட்மிட்டு செயல்பட அடிப்படையில் தவிக்கவேண்டிய கொல்லாமை, புலால் தவித்தல், கள்உண்ணாமை பற்றியும் அதன் விளைவுகளையும் தெளிவு படுத்தியுள்ளார். அடுத்த கட்டுரையில் ஏனையவை தொடரும்.
திருவடி தீக்ஷை(Self realization)
ReplyDeleteஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
விவரம் இப்படி இருக்க...சிலர் குண்டலி யோகம் என்று கூறி அசைவம் உட்கொண்டு தியானம்,யோகம்,பிரணாயாமம் போன்றவற்றை பழகுகிறார்களே......அவர்களை என்ன சொல்வது...! பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்.....பழக்குபவர்கள்தான் இதற்கு காரணம்...!
ReplyDelete