Tuesday, October 25, 2022

சிவோகம் என்பதற்கு ஞானகுரு திருமூலர் கூறுவது

 சிவோகம் என்பதற்கு ஞானகுரு திருமூலர்  கூறுவது 


"சத்தும் அசத்துந் தணந்வர் தானாகிக்

சித்தும் அசித்தும் தெரியாச் சிவேகமாய்

முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்

சித்தியும் மங்கே சிறந்துள தானே" 

என ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லி விட்டார். சத்தும் அசத்துக்களாகிய காரண காரிய மாயயைகளை மலமற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சுட்டடுணர்வும் இல்லாச் சிவனிறைவில் அடங்கி சிவனே தானாகி வீடுபெற்றின் கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கியவராவார்.சத்தியும் சிவமும் வேறல்ல இரண்டும் இணைந்தே இருக்கும் ஒன்றை பிரிக்க முடியாது. அதுபோல் சிவமும் ஆறுமுகனும் வேறு அல்ல குமரன் குரு பரனுக்கு அவன் குருபரன். அவன் முத்திக்கு பராப்பரன். அணுக்குள் பிரிக்கமுடியாத இரு பொருள் நியூத்திறன் புரோத்திரன். இரண்டும் மோதினால் இலத்திரன். அதுவே சோமஸ்கந்த முகுத்தம். 

அவருக்கு பெரும் பேறு சிறந்து விளங்கும். சிவ - அகம் சிவோகம் சிவ நிறைவில் உறைதல். சிவமே ஆய் அதுவே சைவ மார்க்கம் நாம் சைவர் சிவமாவதே அவன் பணி அன்றி வேறேன்றும் இல்லை. 

அதற்காகவே எம்மை படைத்தான். சிவபூமியாம் இலங்காபுரியில் அங்கு அவனை அடைய வேண்டும். அதை மீறினால் இதுதான் பிரம்மகஸ்தி தோசம். ஆசை யாரை விட்டது. அது பாதை மற்றும் கருவி அதை தடுக்க கடிவாளம் தேவை வைராக்கியம் மனவடக்கம் தேவை. சிவயநம என்னும் மந்திரம் உபாயம் இடைவிடாது மனதினுள் கணிப்பே உபாயம்.

No comments:

Post a Comment