நாம் இறைவனை அடைவதும் அடையாமல் பிறப்பிறப்பு என அலைவதும் எமது செயல்பாடே நாம் எண்ணும் எண்ணமும் செயலும் பால் மண்டலத்தில் பதிவாகி நேர் எதிர்மறையாகி மீண்டும் எம்மிடமே வருகின்றது. எம்மிடம் இருந்து வெளிவந்த எண்ணங்களையும் செயல்களையும் மீண்டும் பெறவும் முடியாது அழித்தெழுதவும் முடியாது. நாம் தான் நமது விதியை தீர்மானிக்க காரணமாகின்றோம். இது இயக்கையின் நியதி.
சாத்வீக உணவருந்தி நேர்மறை எண்ணங்களை வளர்த்து மந்திர ஜபம் மூலம் பால்மண்டலத்தில் பரந்துள் மந்திர சக்தியை ஈர்த்து பராபரையின் ஆற்றலை பெற்று சிவம் என்னும் அறிவை அடைதலே முத்தி நம் உலக ஆசையை சாம்பலாக்கி அதாவது மும்மலம் முப்புரம் எரித்து இதை நடப்பாற்றலான ஆதிசத்தி செய்ய வனப்பாற்றலான பராபரை ஆற்றலால் சிவத்தை அறிவதே முத்தி.
சத்தி இன்றி முத்தி இல்லை ஆற்றல் சத்தி அறிவு சிவம் அதுவே “சிவ” அதனால் சித்தம் தெளித சித்தர்கள் வாலை செய்தார்கள் வாலை திரிபுர சுந்தரியை அவள் திரிபுரங்களை எரித்து மும்மலத்தை அழித்து ஆண்டவள் அவள்
ஓம் ஶ்ரீ அகத் ஈசாய நமஹ
ஜெக் குரும் சிவம்
சிவ குருவே சரணம்
ஆதி குரு சிவம்
ஆதி சித்தன் சிவம்
ஓம் அரகர சிவ சிவா காசி வாசி வாசி வாசி வா
No comments:
Post a Comment