Wednesday, April 13, 2022

ஜீவாத்மனுக்குக் கர்மத்தில் பற்றிருக்கும் வரையில் அவனுக்கு துன்பமுண்டு

 ஜீவாத்மனுக்குக் கர்மத்தில் பற்றிருக்கும் வரையில் அவனுக்கு துன்பமுண்டு. பரம்பொருள் பற்று ஒன்றே பரமனின் கருனையைப் பெறுவதற்கும் பின் அவனிடத்து லயமாவதற்கும் உற்ற உரியதாகும்.

நாம் பிறப்புக்கு காரணமான தீமையை வெல்ல நாம் செய்த நன்மையை பயன் படும். எஞ்சிய வினையை முடிக்கவேண்டும். ஏறு வினையை ஏற்படுத்தவே மாயை காத்திருக்கின்றது . அதை செயல் படுத்த ஆணவவல்லிருள் தயாராக இருக்கின்றது அபரஞானம் தயாராக இருக்கின்றது. அங்கு மணம் செயல் பட பிரபஞ்சத்துக்கே வெற்றி. பரஞானம் அதை தடுக்க வழிசெய்கின்றது. அவன் அருள் இன்றி அது நடக்காது. பிரபஞ்சத்தை எஞ்சிய வினையை மட்டும் கடக்க பயன்படுத்தும் மனப்பாங்கு உள்ளவனே அவன் அருள் பெற்று பல்லாயிரம் ஜென்மம் கடந்தவன். மனித பிறவியே பல ஆயிரம் கடந்ததே அதை யாரும் உணர்வதில்லை. மணிக்கவாசக பெருமான் திருவாசத்தில் ......புல்லாகி .....
மனிதராய்,தேவாரம்.... என எடுத்து இயம்பு கின்றார். " அரிது அரிது மனிடராய் பிறத்தல்" என சான்றோர் பகர்கிறார்கள். பிரபஞ்ச படைப்பு எஞ்சிய வினை முடிப்பதே அதற்கு தயாரா என சோதிப்பதே மாயை அதை வென்றால் மாயை எம்மை வணங்கும் பிரபஞ்சம் வசமாகும் அதை பயன்படுத்தாதவன் பரஞானியாய் பரபிரம்மமாகின்றான்.
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
ஜெகத் குரும் சிவம்
சிவகுருவே சரணம்
சிவோகம் சிவோகம் சிவோகம்

No comments:

Post a Comment