Monday, March 15, 2021

அறிவியல் நோக்கி காயத்ரீ மந்திரம்

 "அறிவியல் நோக்கி காயத்ரீ மந்திரம்"

காயத்ரீ மந்திரம் சாவித்திரி என்றும் வேதமாதா என்றும் அழைக்கப்படும். காயத்ரீ ஸர்வ வேதா நாம் மாதா என்று கூறப்பட்டுள்ளது. இது வேதசாரம் என்று குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகின்றார்.
"ஓம் பூர் புவஸ் ஸீவ:
தத் ஸவிதுர் வரேணியம் பக்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: பிரசோதயாத்"
அறிவியல் ரீதியாக அனுகும் போது பூமியை தன்னுள் அடக்கிய ஆகாய கங்கைத் தெகுதியில்(GALAXIES) 100 000 நட்சத்திரங்கள் உள்ளாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். அதில் உள்ள ஒவ்வோர் நட்சத்திரங்களும் சூரியனைப் போன்ற கிரகங்கள் அவை எல்லாமே தன்னைத் தானே சுற்றி வருகின்றது. சூரியனும் அதன் குடும்பமும் விண்வெளில் உள்ள நட்சத்திர கூட்டங்களும் சற்றிவர 22.5 கோடி ஆண்டுகளாகும். இவையாவும் வினாடிக்கு 20.000 மையில்கள் வேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லுகின்றது.
இவ்வாறு 20.000 மைல் வேகத்தில் நகரம் பூமி கிரகங்கள் நட்சத்திரத் தொகுதி என்பன எழுப்பும் ஒலி ஆதாரம் ஓம் என்னும் பிரணவம் ஆகும்
ஒம் என்னும் ஒலி ரிஷிகளின் தியானத்தில் ஈக்கப்பட்டு இறைவனின் நாமமாகக் கொள்ளப்பட்டது.
'ஒமிதி ஏகாசஷரம் பிரம்ம" ஓம் பரம்பொருளின் பெயரே ஓம் என்று கீதை இயம்புகின்றது.ஒம் என்பது "நாதப் ப்ரம்மம்" மகத்தான ஒலி 'உத்தீதம்" வானுலகம் எழுப்பும் இனிய நாதம் "அநாஹதம்" தியானத்தில் ஆழ்நிலையில் கேட்கப்படும் ஒலிவேகமாக இயங்கும் நட்சத்திர தொகுதிகள் 1/2 MV 2 என்ற அறிவியல் அளவிற்குச் சமமான இயக்கு விசையைத் (KINETIC ENERGY) தோற்று விக்கின்றன என்றும் அதுவே இந்தப் பிரபஞ்சம் பயன்படுத்தும் சக்தியைச் சமப்படுத்கின்றது என்றும் கண்டனர். எனவே அச்சக்தியை அவர்கள் பிரணவம் அதாவது சத்தியின் கருவூலம் என்று அழைத்தனர் .
உருவகம் அற்ற இறைவனை பெயரும் உருவமும் உதவும் என்று மஹரிஷி விசுவாமித்திரர் கூறினார். மேலும் கண்ணுக்கு புலப்படாத இறைவனை ஓம் என்ற ஒலி மூலமும் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரக் காட்சி மூலமும் அறிய முடியும் என்றார்.
'தத் ஸவிதுர் வரேண்யம்"
தத்- அந்தக் கடவுளான ஸவிது- சூரியன் வரேண்யம்- வணங்கத்தக்கவர்
"ஓம் பூர் புவஸ் ஸீவ 'என்பன சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்கள் ஸீவ என்பது நட்சத்திர தொகுதி பிரணவத்தின் மூன்று எழுத்துக்களுமான அ - உ - ம ஆகியவற்றில் இருந்துதான் "பூர் புவஸ் ஸீவ" என்ற வியாஹ்ருதிகள் தோன்றின. அதிலிருந்து காயத்ரியின் பிரிவுகளும் வேதங்களும் தோன்றின.
'பர்க்கோ தேவஸ்ய தீமஹீ"
பர்க்கோ- ஒளியை தேவஸ்ய -தேவதையுடைய தீமஹீ - நாம் தியானம் செய்வோம். இதனால் கண்களுக்கு புலனாகும்ஒளியின் மூலம் கண்களுக்கு புலனாகாத இறைவனை வணங்குமாறு மஹரிஷி கற்பிக்கின்றா.
"தியோ யோந: ப்ரசோதயாத்"
தியோ- புத்தியை யோ- எவன் ந நம்மை ப்ரசோதையாத்- நல்வழிப்படுத்தட்டும்
பிரணவம் பிரணவமானது பிம்மத்தோடு ஒன்றாகவும் மனினையும் இறைவனையும் இணைக்கும் வழியாகவும் அடையாளமாகவும் போற்றப்படுகின்றது. பிரணவத்தின் முக்கியத்துவத்தைஉயந்த ரிஷிகள் ஸ்போட வாதம் என்ற தத்துவத்தையும் தோற்றுவித்தனர் பிரணவமே பிரபஞ்ச்தின் பின் நிற்பதாக அறியப்பட்டது. அதன் மூலமே உலகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன அதுவே அனைத்து நாமங்களுக்கும் உருவங்களுக்கும் அடிப்படை தொக்கத்தில் பிம்மனாகின்ற பிரஜாபதி இருந்தார் . அவருடைய வார்த்தை இருந்தது. அந்த வார்த்தையே பரப்பிரம்ம மாகும். என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
வார்த்தைகள் இல்லாத பிரமம் ஒன்று உண்டு. இரண்டாவதாக வார்த்தைகள் உள்ள பிரமம் ஒன்றுன்டு என்று மைத்ராணீய உபநிடதம் கூறுகின்றது. மேலும் அந்த வார்தையே ஓம் என்னும் ஒலியாகும்.அந்த வார்த்தையே பிரணவம் பிரணவத்தின் மூன்று எழுத்க்களான அ உ ம ஆகியவற்றில் இருந்தூன் " பூர் புவஸ் ஸிவ' என்ற வியாஹ்ருதிகள் தோன்றின. அதிலிருந்து காயத்ரீயின் பிரிவுகளும் அதிலிருந்து வேதங்களும் தோன்றின. அதாவது
"தத் ஸவிதுர் வரேண்யம்" என்பதில் இருந்து ரிக் வேதமும்
"பக்கோ தேவஸ்ய தீமஹி" என்பதில் இருந்து யஜீர் வேதமும்
"த்யோ யோ ந: ப்ரசோதயாத்" என்பதில் இருந்து சாம வேதமும் தோன்றின "காயந்தம் த்ராயதே இதி" காயத்ரி யார் தன்னைப் பாடுகின்றாரோ அவரை காப்பாற்றுபவள் ய - என்பது வாயுதத்துவம் இது சூக்கும தேகத்தை குறிக்கும். இதன் அதிகாரி விஸ்ணு ஆ- என்பது அக்கினி தத்துவம் அது காரண சரீரத்தை குறிககும் இதன் அதிகாரி ருத்திரன்

மந்திர சக்தி
மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதால் ஆகாயத்தில் சலனத்தை ஏற்படுத்து கின்றன பின்னர் அவை வானத்தில் உயர்வான நிலைக்கு செலுத்தப்படுகின்றன சில ஒலி குறிப்புக்கள் சில சலங்களை ஏற்படுத்தும். மந்திரங்கள் வெறும் சொற்கள் அல்ல மிகவும் சக்திவாய்ந்தவை . அவை சாதகனின் மீது அளவில்லா ஆன்மீக செல்வத்தை பொழிகின்றது. சாதகனின் மனதை இறைவனை நோக்கி அழைத்து செல்லுகின்றது. மந்திரத்தை உட்சாடனம் செய்யும சாதகனிடம் அசாத்தியமான சக்தி பிறக்கின்றது. மந்திர ஒலி எண்ண அலைகளையும் சப்த அலைகளையும் மின் அலைகளையும் தோற்று விக்கின்றது. அதனால் உடலில் மனித காந்தம் உருவாகி எமது உடலை சுற்றி ஒளி வட்டம் உருவாகி எதிராண எண்ணங்கள் எம்மை நெருங்கி மன அலைகளை உருவாகி மனகிலேசம் அடைவதை தடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவன்பால் செலுத்த உதவுகின்றது. அதனாலே மந்திரம் என்பது மனதை ஸ்திரப்படுத்துவது என்று பொருள். கருமூலத்தில் மந்திரங்கள்hனவை பிரபஞ்சத்தில் பரவிநிற்கும் ஒலி அலைகளே அதுவே ஓம் என்னும் பிரணவம். அதில் இருந்தே எல்லாம் தேன்றன. அது அ, உ, ம என்ற அச்சரங்களில் அடங்கும். அ - என்பது அக்னி மண்டலம் உ - என்பது ஆதீத்திய மண்டலம் ம - என்பது சோம மண்டலம் . அச்சரங்களை உச்சரிக்கும் போது அ என்று உச்சரிக்கும் போது விரிந்து உ என்னும் போது சுருங்கி ம என்னும் போது அடங்குகின்றது.
மந்திரத்தின் சக்தி அதன் ஒலியிலேயே தங்கியுள்ளது. மந்திரத்தை சரியான முறையில் உச்சாடனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பீஜா சஷரங்கள் என்பவை அவைகளுக்கு உண்டான தேவதைகளுடன் நேரடி தொடர்பு கொன்டுள்ளன. காயத்ரீ ஜீவ மாதா எனப்படும். இம்மந்திரத்தின் முக்கிய பலன்கள்
முதல் அடி - சாதகன் முலில் தன்னை இறைவனின் விருப்பத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும்
இரண்டாம் அடி- சாதகன் தனது இதய கமலத்தில் இறைவனை எழுந்தருளச் செய்தல் வேண்டும் என்றும்
மூன்றாவது அடி- சாதகன் தனது புத்தியை முற்றாக இறைவனிடம் ஒப்படைத்து அவரது வழிகாட்டலுக்காக காத்திருக்க வேண்டும். என்றும் எடுத்து இயம்புகின்றது.

No comments:

Post a Comment