மரணத்தின் பின் மனிதர் நிலை
எப்போது நாம் அதை சிந்திப்பதில்லை. கண்டதேகோலம் கொன்டதே வாழ்ககை என்று வாழ்வதே பெரும்பாலாரின் வாழ்க்கை . மறுமை எமக்கு தெரியாத ஒன்று அது எப்படிதான் இருந்தால் என்ன என்று வாழுகின்றோம். சொர்க்கமும் நரகமும் நாம் வாழும் வாழ்க்கையில் தான்.
இறப்புக்கு பின் உள்ள வாழ்கை மிகவும் பாரதுரமானது நாம் செய்யும் செயலின் விளைவு அது ஆத்மாக்கு அழிவில்லை அது பேர்த்திக் கொன்டு இருக்கும் உடலுக்கே அழிவு அது ஆறிவுரூபமாயிருக்கும். பட்டினத்தார்' அத்தமும் வாழ்வும் அககத்துமட் டேவிழி அம்பொழு
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விமமியிரு
கைத்தலை மேல்வைத்து அழுமைந் தருஞ்குடு காடுமட்டே பற்றித் தெடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே என்றார் உடலை மெய்பொருள் என்று எண்ணி அதன் சுகத்க்காக நாம் செய்யும் செயல்கள் பிறப்புக்கே வழிசமைக்கும். ஒருவன் பணம் பழத்தை ருசி என அதிகம் உண்டால் அவன் பின்னர் பித்தத்தால் வேனை அடைவதை ஒத்தது இந்த உலகமும் உடலும் இன்பம் என்று என்னுவோர் மறுமையில் பெரும் துன்பத்தையே அடைவர். புண்ணியத்தை அறவழியில் தேடிவைத்தவர் மறுமையில் இன்பம் அடைகின்றர்.
நிலவுலகில் இயங்கும் உடலானது தடிப்பாய் கனத்த பொருட்களின் சேர்க்கையே அதனால் இதனை துலகேம் என்று ஞானநூல்கள் எடுத்து இயப்புகின்றன இதன் உள்ளே இனனும் நான்கு தேகங்கள் உள்ளன இவை வெங்காய சருகுகளை ஒத்தாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இருப்பது போல் அமைந்து இருக்கும்ஒன்றை மற்றொன்றினை ஊடுருவி நிற்காது மற்றுக் கண்ணடியின் அப்புறத்தே தோன்றின ஒளியானது அதனை ஊடுருவிக் கொண்டு அதன் இப்புறத்தேயும் தோன்றுதல் போல இந்த தூல உடம்பினுள் மாற்ற நான்கு உடம்புகளும் ஒன்றை ஒன்று ஊடுருவிக் கொண்டு தூலசரிரத்தில் வியாபித்திருக்கின்றன இவை துண்ணியதாகவும் மெல்லியதாகவும் இருக்கின்றன. அவையாவன சூக்குமசரீரம் குணசரீரம் கஞ்சுகசரீரம் காரணசரீரம் என பெயர் பெறும். அல்லது பிராணமயகோகம் மனோமயகோசம் விஞ்ஞாணமயகோசம் ஆனந்தமயகோசம் எனவும் அழைக்கப்படும். இறப்பின் போது தூல உடம்பான அன்னமயகோசம் அழிந்து சூக்கும் உடலுடன் ஏனை மூன்றும் உடல்களும் பிறவிதோறும் சூக்குமஉடலுடன் ஒற்றுமையுடன் பயனிக்கும். தூலதேகம் மட்டுமே இறந்து போவது ஆனால் மற்றவை இறப்பதில்லை . அவ்வுடல்களை பாதுகாக்க நற்செயல்களும் நற்சிந்தனைகளும் அவசியமாகும் அல்லாது தூலஉடலுக்கு வேண்டும் அன்னமும் நீரும் குறைகளும் அல்வாதேவை ஆனால் சூக்கும சரீரங்களில் இருந்தே
அருமையான
பலகாரியங்களை செய்ய முடியும். தூலதேகத்தில் பலநாட்கள் பயணிக்கும் பயணம் சூக்கும உடலுக்கு ஒருசில சேக்கன்களே தேவை.
சுக்குமசரீரம் பற்றி நோக்கு வோமாக நாம் கேள்வி பட்டிருக்கின்றோம். சித்தர்கள் நினைத்தமாத்திரத்தில் பரவெளியில் உள்ளவற்றை எல்லாம் சில நமிடங்களில் சென்று அறியும் ஆற்றல் உள்ளவர்கள் என்று அவர்கள் சுக்கும தேகத்திலேயே அவர்களால் அவற்றை அறியும் ஆற்றல் பெற்றவர்கள் . தூலதேகம் இருக்கும் போதே சுக்குமதேகத்தில் சஞ்கரிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் சித்தர்கள் தூலதேகம் பாரமான பூமியில் மட்டும் உலாவக் கூடியது ஆனல் சுக்கும தேகம் பாரமற்ற பரவெளில் சஞ்சரம் செய்யக்கூடியது. தூலகேத்தில் இருப்பவர்கள் சுக்கும தேகத்தில் செல்லும் போது அவர்கள் தூலதேக வடிவத்தை பெற்று தன்னை காட்டும் வல்லமை உண்டு. இலங்காபுரியில் வாழ்த ஆணைகுட்டி சுவாமி காரதீவில் இருக்கும் போதே கதிர்காமத்தில் காட்சி கொடுப்பது அவர் வாழ்த கால்த்தில் சர்வ சாதாரணம் அதுபோல் யோகர் சுவாமியும் அப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களின் வாழ்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அவர்கள் வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்தவர்கள் சொல்ல கேள்விபட்டுள்ளோம் யோகர் சுவாமிக்கு பணிவிடை செய்யும் பெண்ணின் மகன் நீண்டகாலமாக வெளிநாடு சென்று எத்தகவலும் அறியாது தவித்த போது அதை அறிந்த சுவாமி அப்பெண்ணிடம் யான் அறைக்குள் செல்கின்றேன். அறையை பூட்டிவிடு என்னை யாரும் தொந்தரவு செய்யாது பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு நிஸ்டையில் ஆழ்து விட்டார் . அதன் பின் சிஸ்டை கலைந்து சுவாமி எழுந்து வந்து வந்து அவரின் வழமையான கரியங்களில் ஈடுபட்டார். சிறிது காலத்தின் பின் அப்பெண்ணுக்கு தன் மகனிடமிருந்து கடிதம் வருகின்றது . அம்மா சுவாமி என்னிடம் வந்து நீ வருந்தியதை கூறி உடனடியாக கடிதம் போட்டு உன் நிலையை அறிவிக்கும் படி சொல்லி சென்றார் என்று. அப்போது தான் அப்பெண் சுவாமியின் ஆற்லை அறிந்து அவர்கால்களி விழ்ந்து வணங்கினாள். இந்த நிலை அவனே கதி என இறைவனிடம் சரணடைந்து அறமாய் வாழ்பவருக்கே கிட்டுகின்றது. பணம் பொருள் பண்டம் பெண் மண் ஆசைபிடித்துயாய் அலைபவனக்கு கிட்டுவது இருண்ட உலகமே அவன் பேயாய் அவனது சுக்கும் உடல் அலையும். இறைவனை தேடி உலகபற்றற்று வாழ்தவன் ஒளி உலகில் ஒளியாய் அவனது சுக்கும உடல் தூய வெண்மையான பட்டு பொன்ற கையில் அகப்படா உருவையே பெறுகின்றான். அவன் தேவதூதனாக மனுக்குல சேவைக்காக பூவுலகில் சஞ்கரிக்கின்றான். இருள் உலகத்வர் கருமை நிறங்கொண்டு அவர்களின் ஆக்குரோதத்தை தீர்க்கவும் அவர்கள் உணவுக்கு அடிமையாகி இறைச்சிக்கும் மீனுக்கும் குடிவகைக்கம் இலக்காகி அதற்காக பூவுலகில் சஞ்சரித்து மந்திரவாதிகளின் கைகளில் அகப்பட்டு ஏவல் செய்யப்படுவர்.
ஒருவர் இறக்கும் தருவாயில் நிதானம் இருக்கும் போது அவரின் உறவினர்கள் அதாவது அவர் இறப்பதற்கு முன்னர் இறந்தவர்கள் வந்திருப்பதாக கூறுவதை அறிந்து இருக்கின்றோம். அது போன்று கடவுளின் வடிவங்களை அவர்கள் கண்டதாக கூறுவதையும் அறிந்து இருக்கின்றோம். அவைகள் அவரின் மூதாதைகளின் சுக்கும உடல்களே அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். எனது தந்தையின் இறப்பின் போது ஒரு சம்பவம் நடை பெற்றது தந்தை நினைவிழந்து மூன்று தினங்கள் எமது வீட்டில் இருந்த போது இரண்டாம் நாள் அதிகாலையில் தந்தை இருந்த அறையின் வாசலில் ஓர் கறுத்த தடித்த உருவம் ஒன்று இருந்தது.எனது தங்கை இதை கண்ட போது அது எனது தங்கையை தள்ளி விழுத்தி விட்டு வெளியில் ஓடிய போது பயந்து கத்திநாள் அதன் பின் எமது வீட்டு நாய் பல குட்டிகள் இன்று இருந்தது அந்த குட்டிகளில் ஒன்று துடிதுடித்து இறந்தது. அது எமதூர். ஆனால் எனது தந்தை சிவபத்தன் அனால் அங்கு சிவதூதர்கள் வருவதை கண்டு ஓடியதாக எமது உணருகின்றேன். அடுத்த நாள் எனது தந்தை சிவபதம் அடைந்தார். பருவுடல் புதைக்கும் இடத்தில் அதன் சுக்கும உடல் இருக்கும் உலாவிக் கொண்டு இருக்கும். அது பருவுடலில் கொண்ட அபிமானத்திலேயே ஆகும். அனாலேயே இந்துக்கள் தூலதேகத்தை எரித்து விட்டால் அதில் சுக்கும தேகத்துக்கு இருந்த அபிமானம் நீங்கிவிடும். எரிப்பதே சிறந்தது.
ஒருவர் இறக்கும் தருவாயில் நிதானம் இருக்கும் போது அவரின் உறவினர்கள் அதாவது அவர் இறப்பதற்கு முன்னர் இறந்தவர்கள் வந்திருப்பதாக கூறுவதை அறிந்து இருக்கின்றோம். அது போன்று கடவுளின் வடிவங்களை அவர்கள் கண்டதாக கூறுவதையும் அறிந்து இருக்கின்றோம். அவைகள் அவரின் மூதாதைகளின் சுக்கும உடல்களே அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். எனது தந்தையின் இறப்பின் போது ஒரு சம்பவம் நடை பெற்றது தந்தை நினைவிழந்து மூன்று தினங்கள் எமது வீட்டில் இருந்த போது இரண்டாம் நாள் அதிகாலையில் தந்தை இருந்த அறையின் வாசலில் ஓர் கறுத்த தடித்த உருவம் ஒன்று இருந்தது.எனது தங்கை இதை கண்ட போது அது எனது தங்கையை தள்ளி விழுத்தி விட்டு வெளியில் ஓடிய போது பயந்து கத்திநாள் அதன் பின் எமது வீட்டு நாய் பல குட்டிகள் இன்று இருந்தது அந்த குட்டிகளில் ஒன்று துடிதுடித்து இறந்தது. அது எமதூர். ஆனால் எனது தந்தை சிவபத்தன் அனால் அங்கு சிவதூதர்கள் வருவதை கண்டு ஓடியதாக எமது உணருகின்றேன். அடுத்த நாள் எனது தந்தை சிவபதம் அடைந்தார். பருவுடல் புதைக்கும் இடத்தில் அதன் சுக்கும உடல் இருக்கும் உலாவிக் கொண்டு இருக்கும். அது பருவுடலில் கொண்ட அபிமானத்திலேயே ஆகும். அனாலேயே இந்துக்கள் தூலதேகத்தை எரித்து விட்டால் அதில் சுக்கும தேகத்துக்கு இருந்த அபிமானம் நீங்கிவிடும். எரிப்பதே சிறந்தது.
சூக்கும சரீரத்தின் வடிவம் தூல சீரத்தை ஒத்தாக இருந்தாலும் அது போத்தி இருக்கும் ஆடை தூய வெண்மையான கண்ணுக்கு மாத்திரம் புலப்படுகின்ற தோற்றமே அன்றி அது கைகளில் படாது இவ்வாடை யை பெற அவ்வாத்மா பெற்றுள்ள பரிசுத்தத்தை பொறுத்தே அது அமையும். தும்பை மலரை ஒத்த நிறமாக இருக்கும். அவரின் செயல்கள் தீயவையாக இருப்பின் அது கறுப்பு உடையாக மறிவிடும். அவர்கள் இருள் சூழ்ந்த உலகில் யாதும் அறியாது கஸ்டப்பட்டு வாழ்வதாக அவர்களே அவர்களது உறவினர்கள் அழைத்தபோ தெரிவித்தகாக பல செய்திகள் உண்டு. அவர்கள் தங்களின் விடுதலைக்காக இறைவனிடம் வேண்டு மாறு தமது உறவினர்களிடம் வேண்டியதையும். வேண்டுதலின் பின் தங்களுக்கு வெளிச்சம் தெரிவதாகவும். பலசெய்தி களை அறியக் கூடியதாக இருக்கின்ற. இதை அடிப்படையாக வைத்தே இறந்த மூதாதையர்களுக்கு கிரகஸ்த ஆச்சிரமத்தில் பஞ்ச ஜஞ்சங்களில் பிதிர் ஜஞ்ஞம் என்பது கடமையாக வகுக்கப்பட்டுள்ளது. கஸ்டஙகள் நேருகின்ற போது சாஸ்த்திரம் பார்க்க சென்றால் பித்ருதோசம் இருக்கு அதற்கு பரிகாரம் செய்யும்மாறு கூறுவர் இதற்கு மாதம் தோறும் வரும் அமாவாசை அதிலும் சிறந்தது ஆடிஅமாவாசை திவச நாள் மாகாளையம் பொன்ற நாட்களில் தோய்ந்த தூய ஆடை அணிந்து உவவாசம் இருந்து எள்ளு இறைத்து தற்பணம் செய்து காக்கைக்கு எள்ளு சாதம் வைத்து பின் தாம் தேடி தனது உணவை உண்ணமுடியாத கூன், குடு, நொன்டி, சப்பானி, நோயாளி முதலியோக்கு அன்னமிட்டு இறைவனிடம் இறந்த மூதாதையருக்கு விடுதலை வேண்தல் செய்தல் வேண்டும். "மாதா பிதா செய்தது மாந்தருக்கே' என்பது. ஏன் என்றால் அவர்கள் இம்மையில் செய்ததை மறுமையில் அனுபவிக்கும் போது அதன் வேகத்தை தாங்க முடியாமல் அவதியுறும் போது அவர்களுக்காக அவர்கள் சூக்கும உடலில் எதுகும் செய்ய முடியாது. அதற்கு தூல உடல் தேவை . அவர்களின் பிள்ளைகள் உற்றாரே செய்ய முடியும் அதை செய்ய வைக்க அவர்களின் ஆவியாகி துன்பத்துக்குள்ளாக்கி அதை அடைகின்றனர்.
நிலவுலகில் உயிரோடு இருக்கையில் பரிசுத்த சிந்தையிலும் செய்கையிலும் திரிகரண சுத்தியுடன் நேர்மை நியாயம் உண்மையும் வாழ்ந்வர்கள் அறுமையில் துன்பம்மெயியார் அவர்கள் ஒளி உலகில் பரலோகத்தில் தூயவெண்ணிறமான சூக்கும் உடலை பெற்று தேவவுருபெற்று இன்புறுகின்றனர். அறிய பவருபத்தில் பூதவுடலை விட்ட குழந்தைகள் பொண்நிறம் பெற்று தேவதை வடிவைப் பெறுகின்றனர்.
பரோபகாரமான காரியம் இன்றி மற்றவர்களுக்கு வஞ்சகம் சூது பெறாமை பேராசையில் இறைசிந்தனை இன்றி நிலவுலகில் வாழ்ந்தவர்கள் தனது இறப்பின் பின் அச்செயல்களில் ஈடுபடும் மந்திரவாதிகளின் பிடியில் அகப்பட்டு இறைச்சிக்கும் இரத்தத்துக்கும் மதுவுக்கும் மீனுக்கும் ஏவல் செய்பவராக பேயாக செயல்படுவர்.ஆனால் நல்லோர் இதற்கு இணங்க மாட்டார்கள் அவர்கள் ஒளி உலகையும் தூமையான வெண்மையாக சூக்கும் உடலையும் தீயோர் கருமையான சூக்கும உடலையும் அடைவர். இது எவ்வாறு நிகளும் மெனில் தீய குணமுடையோர் இருள் உலகில் கருமையாக சூக்கும் உடலில் எதும் அறியாது திரியும் போது அவர்களுக்கு பருவுடலில் இருக்கும் போது பதிவான தீய எண்ணங்கள் தொன்றிய வண்ணம் இருக்கும். அதை மந்திர வாதிகள் அறிந்து அவர்களின் மண்டை ஓட்டை எடுத்து அவர்களை அழைக்கும் வல்லமை தீய செயலகளை செய்யும் மந்திர வாதிகளுக்கு தெரியும். ஆனால் அவர்களால் எல்லாருக்கும் தீங்கு செய்ய முடியாது . செல்லுமிடத்திலே தான் அவர்களுக்கு வலிமை செல்லுமே அல்லாது மற்ற விடயங்களில் அஃது உண்டாகாது. இறைச்சிகள் மீன்கள் உண்டு மற்றவர்களுக்கு தீங்கு நினைவும் தீயசெயல்களும் உடையவாராய் இரப்பவர்களுக்கும் அசுத்தமான இடங்களில் அசுத்தமாக வசிப்பவர்களிடத்தும் தீய பிசாசு தொடர்ந்து சென்று துன்பம் செய்யும். சுத்தமான உணவு அருந்தி தூயசிந்தையில் இருப்பவர்களிடம் வர அவை துனிவதில்லை. ஒரு வேளை மந்திர வாதியின் ஏவலால் அதாவது அவரது மந்திர பலத்தால் அவரிடம் சென்ற பேய் பலியாது மந்திரவாதியையே துன்புறுத்தும். இறைசிந்தனையும் தர்மசிந்iயுடன் வாழ்பவனை அல்லது வாழ்தனை இருள் அனுகாது. இவ்வுலகை விட்டு நீங்கியும் சூக்கும உடலில் வருவது உயிர் நீக்கும் போது கொன்ட பொருள் காசு ஆசையே மீண்டும் வந்து அவை இருக்கும் இடத்தில் இருப்பதற்காகவே. சொத்தாசை கொண்டவன் நிலை அதுதான். பழைய வீடுகள் இடித்துக் கட்டம் போது அதன் ஒருபகுதியை வைத்தே கட்டுவது மரபு . சில வீடுகள் எப்படி கட்டினாலும் அதில் இருக்க முடியாது. அது பாழ்ளடைந்து கானப்படுவதை கண்கின்றோம். காணிகளை கொள்வனவு செய்து வீடுகட்ட வெளிக்கிட்டால் கட்ட முடியாது . அப்படி கட்டினாலும் வீட்டு முடிபடாது. முடித்தாலும் இருக்க முடியாது. இதற்கெல்லாம காரணம் அச்சொத்தின் ஆசையுள்ள சூக்கும இருள் உலக வாசிகளே.
மச்ச மாமிச்களை புசிப்பவர்களில் கெட்ட ஆவிகளை பிரயோகிப்பது. இலகு உடல் பிற உயிர்களின் உடல்களை ருசித்து புதைத்த சவக்காலை. இறைவன் மும்மல்களை நம் உள்ளிருந்து நாடியவனுக்க அழித்த சுடலையும் அதுவே எப்போதும் நாம் இருக்கும் வீடு அலயம் போல் சுத்தமாக நறுமணம் கமழும் மலர் சோலையாக இருக்க வேண்டும். கெட்ட வாடைகள் வீட்டின் சுற்றுப்புறங்களில் வீசக்கூடாது. இப்படி இருந்தால் துர்ஆவிக்கு நெருங்க முடியாது. சுத்தபோசணமும் இறை நம்பிக்கையுடன் தூயசிந்தனையில் இருப்பவனை நன்மை செய்யும் இறை துதரான தூய ஆவி நம்மை தூய்மைப்படுத்தி இறைவனிடம் சேர்க்கும்.
வீட்டை வாங்கி அதில் இருப்பதானால் இவ்வீட்டின் சுவரில் அங்கு வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் பதிவாகி இருக்கும். அவை அங்கு வாழ்தவர்களின் நெறிமுறைக்கு ஏற்ப இருக்கும். அதை அறிந்து சுவரின் மை எது என தீமானிக்க வேண்டிய நிலை உண்டு. நாம் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு எமது மனம் அதிக நேரம் இருந்து அளவளாவ விரும்பும். சில இடத்தில் இருக்க விருப்பம் இருக்காது. அது ஏன் என சிந்தித்தது உண்டா. அவை அங்கு வாழ்ந்த வாழ்ந்து கொன்டு இருப்பவர்களின் எண்ண அலைகளே அன்றி வேறொன்றும் இல்லை. நான்பர்களும் அப்படித்தான்.
பேராசையால் மனிதன் இறந்த பின் இருள் உலகம் அடைந்து. எதுவும் அறியதவனாக நிலவுகில் அவன் தேடிய சொத்துக்களை நாடி அவனின் சூக்கும உடல் அலைகின்றது. அது போல் மற்றவரை பழிதீர்க்க நினைத்து முடியாமல் உயிர் நீர்த்ததவர்கள் சூக்கும உடலில் பழிதீர்க்க இருள் உலகை அடைந்து மீண்டும் நிலவுலகை அடைந்து அவதியுறுகின்றனர். சொத்தில் பற்றற்று அவற்றை இல்லாதோருக்கு பகிர்ந்தளிதவர்கள் மறுமையில் ஒளி உலகை அடைந்து தூய வெண்நிற உடலை பெற்று இறைவனிடம் இருந்து இன்புறுகின்றனர்.
ஒருவர் கொலை செய்யப்படுகின்ற போது அவனை கொலை செய்தவனை அவனது சூக்கும உடல் நன்கு அறியும் அறிந்து அவனை துன்புறுத்தும். ஆனால் நல்லவர் ஒருவர் கொலை செய்யப்படும் போது அவர் நீதியக்காய் அவருக்காக போராடுபவருக்கு உதவியாக இருந்து தண்டனை வாங்க சூக்கும உடல் செயல்படும்.
சூக்கும உடல் எப்போதும் உஸ்ணமானது. அது பருவுடல் புதைக்கப்படுமிடத்து அது புதைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும் வெயில் உஸ்ணம் அதிகரிக்கும் போது நீர்நிலைகளை நாடி செல்லும் பின்னர் மாலை நேரத்தில் புதைக்கப்பட்ட இடத்துக்குவரும். அதனால் ஆன்றோர் பருவமடையாத அல்லது முகப்பொலிவான பெண்களை மதிய நேரத்திலும் மலை நேரத்திலும் நீர் நிலைகளுக்கு அருகாமையில் செல்வதை தவிக்கச் சொல்வர்.