"குண்டலினி பிறவாமை தந்திடும் அருமருந்து நம்முள் உள்ள பெருமருந்து அதை அறிந்திட்டால் பெற்றிடுவோம் பெறு."
குண்டலினி என்றவுடன் சிலர் அது பெற்றுக் கொள்வது இலகு தன்னை மறந்து பரவசப்படுவது என்று குறிப்பிடுகின்றனர். அதை நான் தருவேண் என்றெல்லாம் கூறி மக்களை தன்வசப்படுத்து கின்றனர். குருதேவர் பெற்ற சித்தியை அவரின் பிரதம சீடனான சுவாமி விவேகானந்தருக்கு பரிசம் மூலம் கொடுத்தார். அவர் முற்றும் உணர்தவர் சுவாமி சப்தரிஷிகளின் ஒருவர் என்பதை உணர்திருந்தார். அவருக்கு இயல்பாகவே அது இருந்தது. இருந்ததை விளிப்படையச் செய்தார். எல்லோரிடமும் இருக்கின்றது அது வெளிப்படும் தன்மை அளுக்கு ஆள் வேறுபடும். அவர் அவர் விதிப்பயனைப் பொறுத்தது. அது விட்ட குறை தொட்ட குறையைப் பொறுத்தது. முதலில் குண்டலினி என்பது என்ன என்பதை நோக்கும் போது அது எம்முள் உள்ள சக்தியாகும். அது வெளில் இருந்து பெற்றது அல்ல அதை விளிப்படைய செய்ய யோகப்பயிற்சி அவசியம். அதுமட்டுமல்ல குருவருள் தேவை. அத்துடன் பிரசாரியம் கடைப்பிடிக்க வேண்டும். இந்திரியம் கீள்நோக்கக் கூடாது. மேல்நோக்க வேண்டும். இதனை யோகப்பயற்சி மூலம் பிராயாணமயம் மூலமே முறையாகப் பயின்று செய்தல் வேண்டும். முதலில் குண்டலினி இருக்கும் இடம் பற்றி குறிப்பிடுகையில் திருமந்திரத்தில் திருமூலர்
'நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலம்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே'
என்றார். நாபிக்கு கீழ் பன்னிரண்டு விரல்கடை கீழே இருப்பது மூலாதாரம் அதை தொழிப்படச் செய்யும் மந்திரம் 'ஓம்' என்னும் மந்திரம் அதனை நிலை நிறுத்துதல் வேண்டும். இதனை நிலை நிறுத்த சிவபெருமான் வெளிப்படுவார் .மூலாதார எழுத்து வ, ச, ஷ ஸ என்பன இது நாபி மந்திரம். முலாதாரத்தின் மூன்டெழு கனலால் எழுப்படுவது குண்டலினி கால் என்பது காற்று அதாவது வெப்பத்தால் உண்டாகும் காற்று. எனவே ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுவதால் முறையாக ஓதப்படுதல் வேண்டும். அடுத்து குண்டலினி இருக்கும் இடத்தை குறிப்பிடுகையில்
'மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே'
என்றார். குண்டலி சக்தியின் இருப்பிடத்தை குறிப்பிடுகையில் மூலாதாரதின் இரண்டு விரல்கடை கீழும் குறியின் கீழ் இரண்டுவிரல் கடைக்கீழும் உள்ள இடத்தில் சுருண்டு பம்பு போல் வட்டவடில் உள்ளது குண்டலினி சக்தி அது உணர்வினுள் எழும் செச்சுடராகும். அச் செஞ்சுடர் உச்சித்தொளை வழி செல்லும். அச்சுடர் பொப்பூழுக்குக்கீழ் நான்கு விரல்கடை அளவு பரவி இருக்கும். இன்நிலையை மெய்கண்டர் 'அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமம்' என்றா அக்ஞா சக்கரம் இருக்கும் இடமும் அங்கு சிவபொருமான் வழிபடும் ஆற்றல் பற்றியும் குறிப்பிடுகையில்
'நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினைவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே' என்றார்.
நாசிக்குக் கீழ் பன்னிரண்டு விரல் கடையில் இருப்பது நெஞ்சு. அவ்விடத்தில் இறைவனை நாடி கொல்லாமை, ஐந்தடக்கல், கொள்பொறுமை, யோடிரக்கம், நல்லறிவு, மெய்தவம், அன்பெட்டும் ஆகிய ஞானமலர்களை இறைவனுக்கு சமப்பித்து ஐந்தெழுத்தால் வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வாழிபாடு செய்தால் மாசித்தி கைகூடும். அதாவது கொல்லாமை என்பது பிற உயிர்களின் உடலை கொல்லாமை. ஐந்தடக்கல் என்பது ஐம்புலன்களை அடக்குதல். அதாவது புலன்களை உலகியல் பால் செலுத்தாது இறையியல் பால் செலுத்தி பலன் கருதாது செயல்களில் ஈடுபடல். தான் செய்யும் ஒவ்வொரு செயல்களும் மகேசன் செயலாக செய்தல். கொள்பொறுமை எந்த செயல்களையும் செய்யும் போது மனத்துக்கு இடம் கொடுக்காது புத்திக்கு இடம் கொடுத்து சிந்தித்து செயல்படுதல். இரக்கம் எல்லோர் மீதும் அன்பு கொண்டு இரக்கமாக இருத்தல். நல்லறிவு என்பது ஞானமான சிந்தித்த அறிவு அதாவது பகுததறியும் தன்மை ஆராய்ந்து முடிவெடுக்கும் திறமையான அறிவு. மெய்தவம் உமையான தவம் எமது செயல்பாடுகளை அனைத்துமே தவமாக அமைத்துக் கொள்ளல். அன்பு எல்லோர் மீதும் இரக்கமாக இருத்தல். இதனையே அட்டபுஸ்பமாக இறைவனுக்கு சமர்பித்தால் இறைவன் எம்மோடு இருப்பதுடன் இவ்வுடலுக்கு எத்தீங்கும் உண்டாகாது. இதுவே அகவழிபாடாக அமையும். இதனையே புறவழிபாட்டில் அட்டபுஸ்மாக கருதி எட்டு மலர்களால் தாமரை, அலரி, மந்தாரை போன்ற எட்டுவகை பூக்களைக் கொண்டு வழிபாடு செய்கின்றனர். அகவழிபாடு செய்யும் போது அகத்தில் பிறைகீற்று போன்று சுடர்ஒளிதோன்றும் இதுவே குற்றமற்ற நற்தவ பேரின்பமாகும். இதனை திருமூலர்
'சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஒதுவ துன்னுடல் உன்மத்த மாமே' என்றார்.
இதன் நிலவொளி கண்டமாகிய விசுத்தியில் தெரியும் என்றார். நிலவொளி தோன்றினால் உடல் பரப்பிமத்தின் பொன்மேனியாகுமாம். அது சிவன் மேனியாகும். குண்டலினி சக்தி மேல் நோக்க நிமிந்து ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதை திருமந்திரம் குறிப்பிடுகையில்
'மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விளித்திரு
காலத்தை வெலிலுங் கருத்திது தானே' என்றார்
திருமூலர். செவ்வனே நிமிந்து ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும் என்பதை முக்கார மிட்டிரு என்பதனுடாக உணர்து கின்றார். அப்போது இந்திரியம் மேல்நோக்கி சுழுனா நாடி வழியாக சென்று உடல் எல்லாம் பரவும். மேலைதுவாரத்தின் மேல் மனதைபத்தித்து இருத்தல் வேண்டும் என்பதை ஆக்ஞா சக்கரமான புருவமத்தியில் மனத்தை பதிக்க வேண்டும். புறநாட்டமின்றி விளிப்பாக இருத்தல் வேண்டும். அப்போது குண்டலினி சக்தி மேல் நோக்கும். இதனால் ஒருபோதும் இந்திரியம் கீழ் நோக்காது.குண்டலினி நிலைக்களம் பற்றி குறிப்பிடுகையில்
'எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்து நின் றானே'
என்றார். எருவிடும் வாசல் என்பது மலவாசல் கருவிடும் வாசல் என்பது குறி மலவாசலுக்கு மேல் இருவிரல்கடை மேலும் குறிக்கு கீழ் இரு விரல்கடையிலும் அமைந்துள்ள பிரதேசம் குண்டலினி சக்தி இருக்கும் இடம் அதன் பிரகாசம் தொப்பூக்கு கீழ் நான்கு விரல்கடை அளவு வரையுள்ள பிரதேசம் வரையில் பரவிக் காணப்படும். இங்கு திருவருளே திருவுருவாய் சொதிபிழம்பாய் தோன்றும். அதனை கண்டாக்கு கருவாகிய பிறப்பினை அறுத்து அட்கொள்வார் இறைவன். உடலை சித்தர்கள் மூன்று பாகமாக்கி உடலின் கீழ் பகுதியை அக்னி மண்டலமாகவும் மத்திய பகுதியை அதீத்திய மண்தடமாகவும் மேல் பகுதியை சோம மண்டலமாகவும் கண்டனர். இதனாலேயே குண்டலினி அக்னி மண்டலத்தில் இருக்கின்றது. அத்துடன் அதன் பிகாசம் தொப்பூளுக்கு நான்கு விரல்கடை கீழ் வரை பிகாசிக்கின்றது. அது யோகப்பயிற்சியால் நெஞ்சுப்பகுதியில் அனாகத்தில் ஆதீத்திய மண்டலம் வரை சுழுனா நாடி வரை உயத்தி அங்கு பிகாசிக்ச் செய்து அதன் பின் சோமமண்டலத்தில் விசுதிதியல் இளம்பிரை சந்திரனாக பிரகாசிக்கின்றது. இதனாலேயே சிவனுக்கு சந்திரசேகரர் என்றம் சசிசேகரர் என்றும் திருநாமம் வந்தது இதன் மூலம் அவர் வெளியில் இல்லை நம்முள் உள்ளவர். இதனால் கடவுள் என்று அழைக்கப்பட்டார். கடந்தவர் எம்முள் உள்ளவர். யாருக்கு கடந்தவர் உள்நாடாதவர்களுக்கு. உள்உள்ளவர் தன்னுள் நாடியவருக்கு. இதைனையே அப் பெயர் கருதுகின்றது. சிவனுடை விக்கிரகங்களில் ஜடாமுடியில் இளம்பிரை சந்திரன் அமையப்பெற்றது. அதனையே இஸ்லாமிய மதத்தினர் தமது நோம்பு பெருநாளை குறிக்க பயன்படுத்துவதுடன் பிறையை அடிப்டையகவைத்து மதம்சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்றனர்.
குண்டலினி சக்தியை எப்போதும் நினைவில் நிறுத்தவே இந்துப் பெண்கள் தமது தலை முடியை மூன்று பிரிவாக எடுத்து பின்னி இறுக்கிக் கட்டிக் கொள்வர். இப் பின்னலில் வரும் மூன்று இளைகள் வலப்பக்கம் அமைந்தது ஆதீத்திய நாடியான சூரியநாடி இடது பக்கம் சோமநாடியான சந்திரநாடி நடுவில் இருப்பது சுழுனாநாடி ஆகும். சுழுநாவை மையமாகக் கொண்டு மற்றைய நாடிகள் பின்னி இருக்கும் . இதை பார்க்கும் போது பம்பின் வடிவில் தோற்றமளிக்கும். இதனையே திருமணவைபவங்களில் பெண்ணுக்கு நாகசடையாக கூந்தலில் அணிவர். பொதுவாக கூந்தலை பின்னி கட்டிக்கொள்பவர்களின் வாழ்க்கை இனிமையாக அமையும் என்பது சான்றோர் கருத்தாகும். பெண்கள் எப்போதுமே உணச்சிவசப்படுபவர்கள் சில சந்தப்பத்தில் நிதானத்தை இழந்துவிடுபவர்கள். இயல்பாகவே சாநித்தியம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் தமது காமத்தை அடக்கி சிந்து செல்பட வேண்டியவர்கள். அதனால் பிரமச்சாரியம் கடைப்பிடிக்க குண்டலினியை ஞாபகப்படுத்தவே கூந்தலை அப்படி அமைத்துள்ளனர் சித்தர்கள். கன்னகி கோவலன் கதையில் கன்னகி கற்புள்ளவள் கோலனின் இழப்பை தாங்காது தலையை மயிரை விரிதாள் மதுரையே அழிந்தது. இதற்கு உட்பொருள் ஒன்று உண்டு. பெண் தலை மயிரை வித்தால் தன்நிலையை இழப்பாள் இதனால் குடும்பம் சீர்கெடக் கூடியவாப்புகள் அதிகம். அதற்காக தலை மயிரை விரித்தவர் எல்லா இப்படிப்பட்டவர்களும் இல்லை பின்னி கட்டியவர்கள் எல்லாம் பெறுமையானவர்களும் அல்ல. இது பொதுவான கருத்து புறநடைகளும் உண்டு.
குண்டலினி சக்தியை உணர்ந்து அனுபவித்து உலகு கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர் இவருடைய சமாதி மருதமைலயில் இருக்கின்றது. அவர் வேடுவகுலத்தைச் சேர்ந்தவர் அவர் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவர் ஒரு நாள் பாம்பை பிடிக்க புத்துக்குள் கையை விட்ட போது புத்தினுள் இருந்து குரல்வரக் கேட்டார்' 'நிறுத்து உன்னுள்ளே ஒருபாம்பு இருக்கின்றது அதை பிக்க முயற்சி செய்' என்று இதைக்கேட்டதும் அதிர்ந்து போனார். இது என்னடா புத்திலிருந்து மனிதக்குரல் புத்தை உடைத்த போது அதிலிருந்து தென்பட்டார் தவயோகி அவரின் ஆசிபெற்று தவத்தில் தன்னை மறந்தார் சித்தர். குண்டலினி சக்தியை தன்னுள் உணந்தார் அதை உலகம் அனுபவிக்க செய்தார் சித்தர். 'தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்னும் முதுமொழிக்கமைய உலகம் அனுபவிக்கச் செய்தவர்கள் சித்தர்கள்.
No comments:
Post a Comment