"பஞ்சபூதங்கள் உடலையும் உலகையும் இயக்கும் மாபெரும் சக்தி மூலங்கள் "
பஞ்சபூதம் என்னும் போது அவை மண், நீர், நெருப்பு, வாயு ஆகாசம் என்பவை ஆகும். இவற்றினால் ஆனவை எமது உடலும் நாம் வாழும் உலகமும். இதனாலேயே சித்தர்கள் 'அண்டத்தில் உள்ளவை பின்டத்திலுமாம்' என்பர். எமது உடலில் ஆதாரங்களாக அமைந்தவை மண் ஆனா பூமி அவைகள் உடல் இயங்கத்தேவையான கோமோன்களை உற்பத்தி செய்யும் பூமியாகும். ஆவை ஆறு ஆதாரங்களாக உள்ளது. உணவிலிருந்து ஊட்டச்சத்தை பிரித்து எடுப்பதற்கும் உடலின் வெப்பத்தை பாதுகாத்து சமப்படுத்துவதற்கும் கழிவை வெளியேற்றுவதற்கும் நீர் தேவைப்படுகின்றது. அதன் செயல் பாட்டை செய்ய ஆகாசம் தேவை. உணவு சமிபாடடையும் போது வாயு உண்டாகின்றது. உன்டாக்கி ஆகாசப்பகுதிகளை நிறப்புகின்றது. இவ்வாறு உடல் செயல்பட பஞ்சபூதங்கள் உதவுகின்றது.
வாயு பிரதானாவாயுகளாக ஐந்தும் உப வாயுகளாக ஐந்தும் இயங்குகின்றது. ஆபானன் மலம், சலம், இந்திரிய வெளியேற்றத்துக்கு பயன் படுகின்றது இது மூலாதாம் சுவாதிட்டா தானங்களில் இயங்குகின்றன. சமானன் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவு கின்றது. இது மணிப்பூரகத்தில் இருப்பது. பிராணன் நெஞ்சிப்பகுதியான அனாகதத்தில் இயங்குவது இது இரத்தத்தை பிராண வாயு சேர்த்து உடலெங்கும் உடல் இயக்கத்துக்கு இழுத்துச் செல்வது. அடுத்தது வியானன் இது விசுத்தியாகிய கழுத்துப் பகுதியில் மூச்சுக் காற்றாகவும் பேச்சுக்கான சத்தம் வெளிவர சேவியில் கேட்க உதவ இயங்குவது. அடுத்து உதானன. இது சகத்திராதானத்தில் இயங்குவது. உயிர் உருவாகும் போது பெண் முட்டையில் ஆண் அணுவை சேர்க வைத்து உயிரை பாதுகாத்து உயிர் பிரியும் போது வெளியேறுவது. இவை பிரதான வாயுக்களாகும். இதால் கிரியை வழிபாட்டில் இறைவனுக்கு உணவு சமர்ப்பிக்கும் போது. சிவாச்சாரியர் அபானாய சுவாகா, சமானாய சுவாகா, பிரானாய சுவாகா, வியானாய சுவாகா, உதானாய சுவாகா என்னும் மந்திரத்தை பிரையோகிப்பார். சுவாகா என்பது சூரிய சக்தியாகும். சுவாகா என்றால் தேவர்களுக்கு அக்னி மூலம் கொடுக்கப்படும் அவியை கொண்டு சேர்ப்பவள் என்று பொருள் படும். பொருள் இயங்க வேண்டுமானால் சக்தியாக மாற வேண்டும். சக்தியாக மாறினால் தான் பலனை பெற முடியும். சூரிய சக்தி கதிர்களாக மாறி அதை மரங்கள் இலைகளின் மூலம் உணவாக்கி இதை மரம் பெற்று மரத்தின் பயனாக எமக்கு அளிக்கின்றது. மரத்தின் பயன்களை நாம் உண்ணும் போது அது உடலை இயக்கும் சக்தியாக மாற வேண்டும். அதற்கான பீடங்களே ஆறாதாதம். இந்து மதத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் (கிரியைகளும்) அர்த்தமுள்ளவை. இவைகளை வகுத்துத் தந்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் பஞ்சபூதங்களின் மருத்துவ குணம் பற்றி கூறும் கருத்க்களைப் பார்ப்போம். பிருதிவியின் (பூமியின்) குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
'பூசவிரணம் பொருமல்போம் பொன்முதலாம்
ஆசையுள்ள பண்ட மதிலுண்டாம் - நேசமதாய்த்
தின்றிடிற் பாண்டு செழிக்குமிகத் தேமொழியே
சென்றுலகில் அண்குணத்தைத் தோ'.என்றனர் சித்தர்கள்.
இரணம் என்னும் நோயும் பொருமல் என்னும் நோயும் போகுமாம் பாண்டு நோய் உண்டாகும். ஆத்துடன் பொன் மற்றும் பண்டங்கள் தோன்றும் என்கின்றனர் சித்தர்கள். பூமி பிறப்புக்கு ஆதாரம். ஏனேனில் ஆசைக்கு காரணம்.
அப்புவின் (நீரின்) மருத்துவக்குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
காசமறுந் தந்தங்கழலாது மேகமுதல்
வீசு மனறணியும் வீரியமாம் - வாசமென
உந்திவளர் குன்மமுதிரஞ் சொறியிவைபோம்
இந்த நறுந் தண்ணீருக்கே' என்றனர் சித்தர்கள்.
காசநோய், குன்மம், சொறி, தேகவனம், மேகம் என்பன இல்லாதொழியும் பல்லிறுகள் பலமடையும். பொதுவாக உடலில் நீர் குறையாது பராமரிப்பது அவசியம். நீர் இழப்பு உடலுக்கே அபாயத்தை ஏற்படுத்த கூடியது. நீர் பராமரிப்பு தெடர்பாக சித்தர்கள் நிறையவே கூறியுள்ளனர். 'பேர்து நீர் அருத்தக் கூடாது. ஏந்த எந்த நேரத்தில் நீர் அருந்த வேண்டும். நீரை சுரக்கி உண்ண வேண்டும். நீர் ஒரு உணவு என்பது பற்றி எல்லாம் சித்தர்கள் வாழ்வியல் என்ற கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.
தேயுவின் (நெருப்பின்) மருத்துவக் குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
கண்டைக்கா னோயுள்வலி காதம்போங் காய்ந்தக்கால்
விண்டே பலபிணியும் விட்டேகும் - விண்டோய்
பொருப்பனைய வட்டமுலைப் பூவையே நாளும்
நெருப்பி னதுகுணங்களா ணீ' என்றார்.
காய்ந்தால் கண்டைக்கால் நோய், உள்வலி, பல பிணிகளும் போம் என்றார். காலில் ஏற்படும் பிணிகளுக்கு நேருப்பில் காச்சிய மருந்துளைப்பயன் படுத்துவதை கண்கின்றோம். உதாரணமாக கீல் வாததத்துக்கு எரிக்கிலையை செங்கல்லை சூலையிட்டு அதில் எரிகிலையை வைத்து கைலை அதில் அழுத்திவைப்பதை நாம் கண்டிருக்கின்றோம்.
வாயுவின் மருத்துவக்குணம் பற்றி குறிப்பிடுகையில்
'மேகக் கடுப்பை விளைவிக்கும் வீறிநின்ற
தாக மனலிளைப்பைச் சாந்திசெய்யு – மேகத்தின்
புண்ணோய்க்கும் பொல்லாது பூவையரே ரூட்சைக்குங்
குண்ணோய்க்கு மாகாது காற்று' என்றார்கள்.
ஆனலை போக்க வல்லது. இதனால் இளைப்பு நோய் தாகம் இவையும் போக்க வல்லது. மேகக கடுப்பை உண்டாக்கும். மேகப்புண்னை உண்டாக்கும். குண்ணோய்குமாகாது.
தே- ஆகாயத்தின் மருத்துவக்குணம் பற்றிக் கூறிப்பிடுகையில்
'உலகுமன மும்பலவா மோடதியு மண்ணுஞ்
சலமுமன லுங்காலுஞ்சாற்ற – அலகில்
அநந்தம் பொருளு மடங்க வழிநல்கும்
அநந்தம் தனைக்கண் டறி' என்றனர் சித்தர்கள்
உலகுக்கு மனமும் வலவித பொருட்களும் உண்டாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.
பஞ்ச பூதங்கள்டை கட்டுப்படுத்தி செயல்படுத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். ஒரு தாய்க்கு மகன். இன்னொருத்திக்கு கணவன். பிள்ளைக்கு தந்தை. தங்கைக்கு அண்ணன். தம்பிக்கு அண்ணன். ஆனால் எல்லா உறவு முறைகளும் ஒருவனுக்கே. அவனது கடமைகள் உறவு முறைக்கு ஏற்ப வேறுபடுவது போல பிரபஞ்ச பரம் பொருள் தேவைக்கு ஏற்ப சக்தி பெற்று. தனது செயலில் வேறுபட்டு பேதமுறுகின்றது. தாயும், தாரமும், தங்கையும் பெண்ணே ஆனால் அதன் தன்மை வேறு. இதுவே மூத்தி பேதமாகும். பூமிக்கு அதிபதி பிம்மா அவர் பணி படைத்தல். படைப்புக்கு காரணம் விணை அதனை கர்மா என்பர் அதன் சக்தி சரஸ்வதி ஞானத்துக்கு அதிபதி படைப்பு நிகழ காரணம் கர்மா என்றல் ஞானம் இருந்தால் பலன் கருதாத கருமம் நடை பெறும். அதாவது எதிர்பார்பில்லாத கருமம். எதிர்பபார் பில்லாத கருமம் துக்கத்தை ஏற்படுத்தாது இதனால் பாவ புண்ணியம் இல்லை பாவ புண்ணியம் இல்லாவிட்டால் பிறப்பு இருக்காது. நீருக்கு அதிபதி விஸ்ணு அவர் பணி காத்தல். மரம் வாழ நீர் அவசியம். உடல் விடுதை பெற வேண்டுமானால் கருமத்தின் பலனை அறிகின்ற ஞானத்தை பெறும் வரை உடலை காப்பதுடன் பிறபிலிருந்து காக்க வேண்டியுள்ளது. செல்வத்துக்கு அதிபதி இலக்கும் பிறப்யிறப்பில்லா பெருவாழ்வு என்னும் செல்வதை தருபவள் அவள். எமக்கு கிடைக்கும் செல்வம். எம் மூலம் பிறருக்கு கொடுத்து திருமகளின் பணி செய்யவே சந்தர்ப்பத்தை அன்னை எமக்கு வழங்கி இருக்கின்றாள். ஆதை எமக்கு என வைத்துக் கொண்டால் எமது சந்ததிக்கு சேர்த்த கறும மூட்டை அதனால் சந்ததி விமேசனமின்றி அழியும் என்பதே நியதி. தானும் அனுபவித்து அதன் மூலம் பிறரும் அனுபவிப்பதே நன்மை பயக்கும். 'தேன் எடுத்தவன் கையை நக்காமலா விடுவான்' என்பது முது மொழி. செல்வம் என்பதிலே அதன் கருத்து இருக்கின்றது. நெருப்பு அதில் எதை இட்டாலும் வெண்மை ஆக்குவது. அதுகட்டுமல்ல ஒரு பிடி நீறு கிடைக்கும். அதற்கு உருத்திரன். அவன் கறுமத்தை அழிப்பவன். ஆவனின் சக்தி உருத்திராணி அவள் நம்மை புனிதப்படுத்துபவள் திரிபுரங்களை அழிப்கின்ற திரிபுரசுந்தரி ஆணவம், கன்மம், மாயை இவையே திரிபுரம். வாயு மறைத்தல். இதற்கு அதிபதி பரமேஸ்வரன். அவன் விசுத்தியில் மறைந்து நிற்பான் அதன் சக்தி பரமேஸ்வரி அடுத்து ஆகாசம் அது அருளள் அதிபதி சதாசிவன் அதன் சக்தி மனோன்மணி மனத்தை மறைத்து புத்தியை விளிப்படையச் செய்வாள் புத்தி விளித்தால் சித்தம் தெளியும் சித்தம் தெளிந்தால் சிவலிங்கம் தெரியும் சத்தத்தினுள் சதாசிவம் தெரியும்.
download (5)இதுவே உலக இயக்கத்திலும் உண்டு. ஆகாசத்திலிருந்து வாயு அதிலிருந்து நெருப்பு அதிலிருந்து நீர் நீரிலிருந்து நிலம் தோன்றியது. நிலத்திலிருந்து 'புல்ஆகி, பூடுஆய், புழுஆய் மரம்ஆகி , பல்மிருகம்ஆகி பறவைஆகி பம்புஆகி கல்ஆய் மனிதர்ஆய் பேய்ஆய் கணங்கள்ஆய் வல்அசுரர்ஆய் முனிவர்ஆகி தேவர்ஆய் செல்லாஅ நின்ற அத்தாவர – சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்' என்று மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் இயம்பி அருளியுள்ளார். இதுவே படைப்பின் இரகசியம். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என கூப்புக் கொள்கையும் கூறுகின்றது. இங்கும் விலங்குகளின் பின் தான் மனிதன் தோன்றியதை கூறுகின்றது. பிரபஞ்சப்படைப்பும் இப்படித்தான் தோன்றியது.
இதை அடிப்படையாகக் கொன்டு பூஜை செய்யும் போது பூர்வாங்க பூஜையில் ப்ராணப்ரதிஷ்டா செய்த பின் அதாவது விம்பத்தில் பிராணனை பிரதிஷ்டை செய்த பின் பஞ்சபூதங்களுக்கு பூஜை செய்வர் அதில்
'லம்' – ப்ருதிவ்யாத்மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி ('லம்' என்பது பூமியின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி பூமியை நினைத்து சந்தனத்தை விம்பத்தில் ஸமர்ப்பித்தல்)
'ஹம்' – ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி ('ஹம்' என்பது ஆகாயத்தின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி பூவால்; பூசை செய்தல்)
'யம்' – வாய்வாத்மிகாயை தூயமாக்ராபயாமி ('யம்' என்பது வாயுவின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி துபம் காட்டுதல் வேண்டும்)
'ரம்' – அக்னியாத்மிகாயை தீபம் தர்சயாமி ('ரம்' என்பது தீயின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி தீப தரிசனம் செய்ய வேண்டும்.)
'லம்' – அம்ருதாத்மிகாயை அம்ருதம் மஹாநைவேத்தியம் நிவேதயாமி ('லம்' என்பது நீரின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி நைவேத்தியம் நிவேதம் செய்ய வேண்டும்)
'ஸம்' – ஸர்வாத்மிகாயை ஸர்வோபசாரம் - பூஜாம் ஸமர்ப்பயாமி ('ஸம்' என்பது எல்லா உபசாரங்னையும் சம்ப்பிப்பதாக கருதப்படும்.)
இவ்வாறு பஞ்கபூதங்களை பூஜை செய்து அகமும் புறமும் பிரிதிப்படுத்துவது இந்து சமய கிரியை வழிபாட்டில் முக்கியமானது. ஆதைவிட எந்த கிரியைகளை ஆரம்பிப்பதானாலும் அங்கு முதலில் செய்வது பூமி பூஜை பின்னர் ஆஸன பூஜா, கண்ட பூஜா, கலசபூஜா, தீப பூஜா என பலவகையிலும் பஞ்சபூதங்களுக்கு பூஜா நடை பெறுகின்றது.
எனவே பஞ்சபூதங்கள் உள்நின்று உணர்தும் அதே சமயம் உலகையும் இயக்குகின்றது. உலக இயக்கத்துக்கு தடை வரும் போது தடையாக அமைவதை சீர் செய்ய சீற்றம் கொண்டு சீராக்கும் வல்லமை படைத்தது பஞ்பூதங்கள். அது அண்டத்திலும் பிண்டத்திலும் நடக்கும். இயற்கையை சீற்றம் கொள்ள காரணமான மனிதனையும் அவனால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழிக்கும். ஆசை அளவற்று பேராசைஆகி தான் மட்டும் என்னும் வாழ்கை வாழ்து பொதுவாக எல்லோருக்கும் சொந்தமானதை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிக் கொண்டதன் விழைவு இயற்கை சீற்றமே. பணம் படைத்தவன் பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க நினைத்ததே! முடிந்ததா? இறப்பை வெல்ல. அல்லது நிம்மதியான வாழ்கை வாழ. நோயற்ற பெருவாழ்வு வாழ. எல்லாம் அவன் செயல் விட்டதா கறுமா பின் தொடர்தது கறுமா. அதன் விளையாட்டை நிறுத்த முடிந்ததா? இதை எல்லாம் முன்னமே சிந்து செயல்பட்டிருந்தால் பற்றற்ற செயல் காபாற்றி இருக்கும் உலகத்தை அவசியமானதை இயக்கையே எமக்கு தரைவார்த்திருக்கும். இப்போதாவது சிந்தியுங்கள். செய்ததை ஒன்றும் செயமுடியாது. அதை நாம் தான் அனுபவிக்க வேண்டும். செய்ய இருப்பதையாவது சரியாகச் செய்வோம். அன் நற்பலன் செய்த தீயதை ஓரளவுக்காவது சீரக்கி நன்மை தீமை யற்ற பற்றற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

images (2)ஐம்பூதங்களின் வடிவும் அவற்றாலாம் உடல் என்பதை உண்மை விளக்கம் பின்வருமாறு கூறுகின்றது
'நாற்கோணம் பூமிபுனல் நண்மதி யின்பாதி
ஏற்குகனல் முக்கோணம் எப்போதும் - ஆர்க்கும்
ஆறுகோணங் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் ஆமிவற்றால் உற்று'

துல பஞ்சபூதங்களின் உடல் நீர் நிலம் தீ ஆகாயம் ஆகும் அதன் வடிவங்கள் முறையே நாற்கோணம், பாதிமதி
முக்கோம், அறுகோணம்,வட்டமாகும் எனறு கூறுவதுடன் அதன் நிறம் எழுத்து என்வற்றையும் கூறுகின்றது.

பொன்பார் புனல் வென்மை பொங்குசிவப்பு
வன்கால் கருமைவளர் வான்றூமம் - என்பார்
எழுத்து லவரயவப் பாராதிக் கென்றும்
அழுத்தமாய் நிற்கு மது'
வன்கால் கருமைவளர் வான்றூமம் - என்பார்
எழுத்து லவரயவப் பாராதிக் கென்றும்
அழுத்தமாய் நிற்கு மது'
அதாவது நிலம் பொன்நிறம் நீர் வென்மைநிறம் தீ சென்நிறம் காற்று கருமைநிறம் ஆகாயம் புகை விறம் அவை முறையே லவரயஅ என்னும் எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றது. பஞ்சபூதங்களின் அடையாளமாக கருதப்படுகின்றவற்றை உண்மை விளக்கம் குறிப்பிடுகையில்
"குறிகுலிசங் கோகநதங் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி யாரமுத விந்துப் - பிறிவின்றி
மண்புனல்தீக் காவானம் மன்னும் அடைவேயென்
றொண்புதல்வா வாகமமோ தும்".
அறுபுள்ளி யாரமுத விந்துப் - பிறிவின்றி
மண்புனல்தீக் காவானம் மன்னும் அடைவேயென்
றொண்புதல்வா வாகமமோ தும்".
நிலத்தின் அடையாளம் வச்சிரம், நீரின் அடையாளன் தாமரைமலர், தீயின் அடையாளம் சுவத்திகம், காற்றின் அடையாளம் அறுபுள்ளி, ஆகாயத்தின் அடையாளம் அமுதத்துளி என்பனவாகும் இதுபோன்ற அதிதேவதைகளும் கூறப்படுகின்றது
'பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள்
ஆதார ரயனாதி யைவராம் -ஒரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுத லைந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்'

ஆதி தெய்வங்களாக முறையே பிரம்மா விஷ்ணு உருத்திரன் மகேஸ்சுவரன் சதாசிவன் ஆகும். ஐப்பூத இயல்பு பற்றி குறிப்பிடுகை
'மண்கடின மாய்த்திரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்களல்சுட் டொன்றுவிக்கும் ஒவாமல் - வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பர்க்கிலா காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து'

பஞ்சபூதங்கள் முறையே நிலம் கடினமானது எனவே அது கடினகுணத்தையும் நீர் குளிர்ச்சியானது அதனால் குளிந்த தன்மையும் தீ சுட்டு ஒன்றாக்கும் தன்மையுடையது காற்று பரந்த தன்மையினால் பரந்து ஒன்று திரட்டும் தன்மையும் ஆகாயத்தில் எல்லா விடயங்களும் நடைபெறுவதால் நிறைந்து நிற்கும் தன்மையும் பெறுகின்றது.
உடல் உலகை உணர ஐம்புலன் உண்டு. அவை ஐம் பொறிகளினுடே அனுபவிக்கின்றது. ஐம்பொறிகள் ஐம்புதங்களின் தொடர் பால உடலை இயக்குகின்றது. இனை உண்மை விளக்கம் எடுத்து இயம்புகின்றது.
'உள்ளபடி மாபூதம் ஓதினேம் உன்றனக்குக்
கன்னமிகும் ஐம்புலனுங் கட்டுரைக்கில் - மௌ;ளவே
ஓசை பரிகம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புவனே யாம்'

imagesநேரிய நெறில் செல்ல விடாது இழிந்த கள்ள வழியில் ஆன்மாவை இட்டுச் செல்லும் ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம்; என்னும் ஐம்புலன்களாம். விநாயகர் அகவலில் 'ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்......' என்று ஒளவையாரும் திருவாசகத்தில் 'ஐம்புலன் தன்னை கட்டழிக்க வல்லானை.....'என்று மணிக்க வாசகரும் அருளியதிலிருந்து அவை ஆன்மீகத்துக்கு எதிரானது என்பது புலனாகும். ஐம்புவனை உணர ஐம்பொறிகள் உறுதுணைபாகின்றது.
'ஞானேந் திரியங்கள் நன்றா வுரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம்
சத்தா தியையறியுந் தகானஞ் செவிதோலகண்
அத்தாலு மூக்கென் றறி'
ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம்
சத்தா தியையறியுந் தகானஞ் செவிதோலகண்
அத்தாலு மூக்கென் றறி'
ஞானேந்திரியங்களை பற்றி நன்றாக உரைக்கின்றேன் கோள் இவை ஐந்து பொறிகளும் ஆன்மாவுக்கு துன்பத்தை மிகுதியாக விளைவிக்கும் பஞ்சபூதங்கின் இடமாக பொருந்தி நிற்கும் இழிவுடைய சத்தம் புலன்களை அறியகின்றதாமாகிய சேவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை பஞ்சபூதங்களுடனான தொடர்பை கூறுகையில்
'வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதலை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசந் தனையறியும் பர்வையிற்கண் அங்கி
விரவியுரு வங்காணு மே'
'வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதலை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசந் தனையறியும் பர்வையிற்கண் அங்கி
விரவியுரு வங்காணு மே'
செவி ஆகாயத்தின் தொடர்பால் சத்தத்தையும் தோல் காற்றின் தொர்பால் பரிசத்தையும் கண் ஒளியின் தொடர்பால் உருவத்தையும் அறியும் அடுத்து
'நன்றாக நீரிடமா நாவிரதந் தானறியும்
பொன்றா மணம்மூக்குப் பூவிடமா – நின்றறியும்
என்றேது மன்றே யிறையா கமமிதனை
வென்றார்சென் றாரின்ப வீடு'.

நாக்கு நீரின் தொடர்பால் இரத்தத்தையும் மூக்கு நிலத்தின் தொடர்பால் கந்தத்தையும் அறிவர் இவ் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வெற்றி கொண்டவன் பெரின்பத்தை பெறுவர். எனவே பஞ்சபூதங்கள் ஞாநேந்திரங்களுடன் தொடர்பு கொள்வதால் பஞ்சபூதங்களிலானது உடல். அதுமட்டுமல்ல ஞானேதிரங்களை போல கன்மேந்திரங்களுடனும் பஞ்சபூதங்கள் தொடர்பு கொள்கின்றது.
'கண்ணுதல்நூ லோதியிடுங் கன்மேந் திரியங்கள்
எண்ணும் வசனாதிக் கிடமாக – நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னுதம் உபத்த
மாக்கருது நாளு மது'
எண்ணும் வசனாதிக் கிடமாக – நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னுதம் உபத்த
மாக்கருது நாளு மது'
கன்மேந்திரிகள் வாக்கு, பாதம், பாணி, குதம், உபத்தமாகும் அதாவது வாக்கு, பாதமும் கையும், மலவாசலும், ஆண்பெண் குறியும் ஆகும். இவை விணைக்கீடாக செயல்படும். எண்ணுவதை வசனிப்படுத்தல் நடத்தல் தானம் செய்தல் கழித்தல் இன்புறுதல் ஆகியவற்றுக்கு இடமாக பொருந்தி நிற்கும். என ஆகம நூல்கள் கூறுகின்றன. இவை தூல பஞ்ச பூதங்களை பொருந்தி நிக்கின்றன இதனை உண்மை விளக்கம் எடுத்து இயம்புகின்றன.
'வாக்காகா யம்இடமா வந்துவச னிக்குங்கால்
போக்காருங் காற்றிடமாப் புல்கியனல் - ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமா மலாதி
விடும்பா ரிடமுபத்தம் விந்து'

வாய் ஆகாயத்தினிடமா பொருந்தி நின்று வார்த்தை பேசும் பாதம் காற்றினிடமாகப் பொருத்தி நின்று நடத்தல் செய்யும் கை தீயின் இடமாகப்பொருந்தி நின்று ஏற்றலும் ஈதலும் செய்யும் மலவாயில் நீரைப் பொருந்திநின்று மலம்கழிக்கும் ஆண்பெண் குறி நிலத்தினிடமாகப் பொருந்தி நின்று தாதினை விட்டு இன்பமடையும் இப்படியாக பஞ்சபூதம் எமது உடலில் பொருந்தி நிற்கின்றது.
ஆறாதாரத்தின் உட்பொருளும் அதுதான் மூலாதாரசக்கரம் சுவஸ்தானச்சக்கரம் என்பன நிலம் மணிப்பூரகச்சக்கரம் நீர் அனாகசக்கரம் தீ விசுத்திச்சக்கரம் காற்று ஆக்ஞா சக்கரம் ஆகாசம் எனவே பஞ்சபூதத் தத்துவத்தால் ஆனது உடல்
இவ்வாறு பஞ்சபூதங்கள் பற்றி குறிக்கின்றது உண்மை விளக்கம் இவ் ஐம்பூதங்களால் ஆகனது உடல் உடலும் இத்தன்மையை உடையதே ஓங்காரத்திலே உள்ளொளி பெருக்கி ஆங்காரம் அடங்கி ஓங்காரம் ஒலித்தது
'சிந்தியுங்கள் சிந்தனையில் விழிப்பிருந்தால் அத்தனையும் வந்து விடும்'
No comments:
Post a Comment