Monday, March 26, 2018

குண்டலி சக்தி ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தி"
குண்டலி சக்தி ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தியாகும். சக்தி எல்லா தந்திரங்களிலும் நடு நாயகமாக விளங்குகின்றது.உட் பொருளின் சக்தியே பிரபஞ்ச படைப்பு காத்தல் அழித்தலலுக்குகாரணமாகின்றதுசக்தியினை உடையபொருட்கள் எல்லாம் அகபுற சக்திகள் ஒன்றே பிராணமும் பிரபஞ்சமனமும் உலகின் அடிப்படை தத்துவமாகும் தனிநபருக்கு அந்தபிரானம் அல்லது மனம் அடிப்படையானபோது அறியாமையில் சுருண்டு கிடப்பதனால் குண்டலி சத்தி எனப்படுகின்றது. இதனை விளிப்படைய செய்தல் வேண்டும். மனிதஉடலை மன சட உடல் என இரண்டாக பிரிக்கப்படுகின்றது. இதில்சடஉடலில் மேருதன்டத்தின் அடி முனையில் குண்டலி இருப்பதாக கூறுகின்றது. அறிவுமையங்கள் ஆறு இது பற்றி இனிபார் போம்.
ஒரு மனிதனின் உடலில் ஆறு இடங்களில் இட கலை இடம் வலமாமாகவும் பின் கலை வலம் இடமாகவும் ஒன்ரை ஒன்று பின்னியதாக செல்லுகினின்றது. இவ் விடங்கனை உடலுகு உரிய ஆதாரங்களாகக்கருதப்படுகின்றப்படுகின்றது. இவ் ஆறு இடங்களிலும் நரம்பு மண்டலங்கள் கானப்படுவதுடன் ஆறு சுரப்பிகளும் காணப்படு கி ன்றன இவைகளே உடலை இயக்கும் சத்தி வாய்ந்த மண்டலங்களாகும் இதனை ‘ஒளவையார்
'விணயகர் அகவலில்’ ஜம்புலன் றன்னை யடக்குமு பாயமும் இன்புறு கருணையு மெனக்கருளி தலமொருமூன்றினந் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின்மயக்கமு மறுத்தெ ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஜன்புறுகதவை யடைப்துங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையை பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கயிலை னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலங் காட்டி முன்றுமண் டலத்தின் முட்டிய தூணில் நாற்ழெற வாயி னால் லுணர்த்திக் குண்டலி தன்னை கூறு மியல்பை விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி மூலா தார மூண்டெழு கனலைக் காலா லெழுப்பிக் என மிகதெளிவாக கூறியுள்ளார்.ஆறாதாரங்களையும் கீழ் யிருந்து மேலாக பார்கின்றபோது முதலில்மூலாதாரம் இது புத்தி சித்தி சத்திகளின் நாயகர் விநாயகரின் இருப்பிடமாக கருதப்படுகின்றது
உடலின் முதன்மையான ஆதாரமாக கருதப்படு கின்றது. ‘ ஓம்’ என்னும் மந்திரம் பிரயேகிக்க படுகின்றது
அடுத்து ஸ்வர்திஸ்ஷ்டானம் இது ஆறிதல்கள் கொண்ட தாமரை உடையதாகவும் சதுர வடிவமும் ‘ லம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் நிலமாகவும் ‘பிரமாவின்’ இருப்பிடம் ஆகவும் கருதப்படுகின்றது. இங்கு படைப்பு இடம் பெறுகின்றது. ‘ ந’ என்னும் மந்திரம் பிரயேகிக்க படுகின்றது .இங்கு விந்துபை அல்லது கருப்பை உள்ளது.
அடுத்து மணிப்பூரகம் இது பத்து இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். ஆரை வட்ட பிறை வடிவமும் ‘ வம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் நீராகவும் காத்தல் கடவுள் ‘விஸ்ணுவின்’ இருப்பிடம் ஆ கவும் கருதப்படுகின்றது. ‘ம’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது. இங்கு ‘கிட்னி’ சுரபி இருக்கின்றது. அடுத்து அனாகதம் இது பண்ணிண்டு இதழ்கள் கொண்ட தாமரை உடைய தாகவும் முக்கோண வடிவமும் ‘ ரம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் தீயாகவும் அழித்தல் கடவுள் ‘உருத்திரனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ சி’ என்னும் மந்திரம் பிரயேகிக்க ப் படுகின்றது இங்கு ‘ எதைன்’ சுரபி ஜகபச்சுரப்பிஸ இருக்கின்றது
அடுத்து விசுத்தி இது பதிணறு இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். அறு கோண வடிவமும் ‘ யம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் காற்றாகவும் மறைத்தல் கடவுள் ‘பரமேஸ்வரனின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘வ’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது இங்கு ‘தைறோய்ற்’ சுரப்பி இருக்கின்றது. அடுத்து ஆஞ்ஞை இது இரண்டு இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். வட்ட வடிவமும் ‘ ஹம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் ஆகாயமாவும் அருளல்; கடவுள் ‘சதாசிவனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ய’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது இங்கு ‘பிற்றுறி;’ சுரப்பியும் பின் பகுதியில் ‘பினியன்’ சுரப்பியும் இருக்கின்றது.
அடுத்து சகஸ்ராகரம் இது ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும் ‘.சுத்தசிவத்தின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு மூளைத்தண்டு உள்ளது. அதன். வட அச்சின் உட் புறம் சுழு முனை நாடி அமைந்துள்ளது. இதன்அச்சுக் குள் அமைந்த உள் நாடிகளில் அதிபுறம்பாய் அமைந்தது இதுவே இதில் தமஸ் குணம் மேலோங்கி நிற்கும் இதற்கு சிவப்பு நிறம் இதன் உள்ளே பிரகாசமானது ராஜஸ் குணம் மேலோங்கிய வஜ்ரிணி நாடி அமைந்துள்ளது
இதன்உள்ளே சாத்துவிகக்குணம் இயற்கையாக அமைந்துள்ளது வெளியினதும் அமுதம் சுரக்கின்றதுமான சித்திரிணி நாடி உள்ளது. இதன் உள்ளே இருப்பது பிரம்மநாடி இது சித்திரிணி நாடியின் பிதான துவாரம் இது கீழ்க்கோடி முனையில் இருந்து அதி உயர் சிவன்வரை சகஸ்ராகரம்வரை வியாபித்துள்ளது. இதனை ‘குல மாக்கம்’ அல்லது ‘லய யோகம் என குறிப்பிடுகின்றனர். குண்டலினி சத்தி தொடர்பாக உபநிஷத்தில் யோக குண்டலி உபநிஷ
த்தில் குண்டலி சத்தி ரூபம் புத்தி மான் அச் சக்தியை எழுப்பிச் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும. அது உறையும் இடமான மூலாதாரத்ல் இ லிருந்து ஆஞ்ஞை வரை செலுத்துவது சக்தி சாலனம் எனப்படுகின்றது.
குண்டலினி சத்தி தாமரை நூல் போன்று மங்கள வடிவினள். தாமரைக் ;கிழங்கு போன்ற மூலாதாரத்தைப் பார்த்துக்கெண்டு வாய்னால் வாலைப்பிடித்துக் கோண்டு பாம்புபோல் சுறுண்டு இருந்தவள் எழுந்தபின் பிரம்மரந்திரம் எனும்உச்சி வரை செல்வாள். ஸாதகன் சுகமாக பத்மாசனத்தில் இருந்து கொண்டு குண்டியைச் சுருக்கி வாயுவை மேல் நோக்கிச் செலுத்தி கும்பகத்தில் மனதை நிறுத்தி வாயுவால் ஸ்வாதிஸ்டானத்தில் உள்ள அக்னியை ஜ்வலிக்கச்செய்து வாயுவாலும் அக்னியாலும் எழுச்சியுற்ற குண்டலி சத்தி பிரம்மக் கிரந்தியைப் பிளந்து பிறகு விஸ்ணு கிரந்தியையும் ருத்ர க்ரந்தியையும் பிளந்து ஆறு கமலங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் சிவனுடன் உறைவாள் அந்தநிலைதான் உத்தமமானதும் விருத்தி அயடங்கியது மான நிலை. எனக் குறிப்பிடுகின்றது.
காமத்தால் ஒருவன் விஷயங்களையும் அதனால் மேலும் காமம் வளர்ந்து மயங்குகிறான் வ்விரண்டில்லிருந்து விலகி மாசற்ற பரம் பொருளை நாடுகின்ற போது ஆத்ம நன்மைக்காக மற்ற அனைத்தையும் நீக்கவேண்டும். வாக்கானது எவ்வாறு பரஸ்தானத்தில் முலைத்து பச்யந்தியில் இரண்டிலை விட்டு மத்திமைய்ல் தளிர்து வைகரில் மலர்கின்றது. இது விலோமத்தில் அஸ்மன மாகுகின்றது. அந்த வாக்கை எழுப்புபவன் உத்தமதேவன் அவனெ நான் இவன் எதிலும் பற்றற்றவன்.
ஜீவனுக்கு மூன்று நிலை உண்டு விச்வன், தைஜஸன் ,பிராக்ஞன் இதுபோன்று பரமாத்மாவுக்கும் விராட்,ஹிண்யகர்பன், இசுவரன் என்ற மூன்று நிலைகள் உண்டு பிரம்மாண்டமும் பிண்டாண்டமுமான பூமி முதலிய உலகம் படிப்படியாக அவற்றின் உபாதியின் லயத்தால் பரமாத்மாவில் லயமடைகின்றது. ஞானாக்னியால் எரிந்து போன அண்டம் மூல காரணத்துடன் பரமாத்மாவில் லயித்து பரமாத்மவாகி விடுகின்றது. இந்தநிலையில் ஒளியோ இருளோ இல்லை

No comments:

Post a Comment