நவராத்திரி விழா
நவராத்திரி விழாவினை இலங்காபுரியில் சிவபத்தினி ,விஸ்ணுபத்தினி, பிரம்மபத்தினகிக்கே கொண்டாடக்படுகின்றது. ஆனால் அவை மஹாகாலீ, மஹாஇலக்கும், மஹா சரஸ்வதிக்கு கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்; பஞ்கப்ரஹ்ம ரூபம் என்பதில் சுத்த சிவத்திலிருந்து ஆதிசக்தி இதனை சிவோஹம் என்றும் அதிலிருந்து பராசக்தி அது ஜகந்நியாமக சக்தியும் ஜகத் சேர்ந்து இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகி பிரம்மா,விஸ்ணு,ருத்திரன் என்றும் அவை முறையே விராட்,ஸ்வராட்,ஸம்ராட் ஆகி அவை முறையே ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்காரம் என்கின்ற பஞ்சகிருத்தியத்தில் மூன்றை செய்கின்றனர். இன் அடிப்படையிலேயே தீபாரதனைகள் ஒன்று. மூன்று, ஜந்து, ஏழு என காட்டப்படுகின்றது. இங்குள்ள ருத்திர, விஸ்ணு, பிரம்ம பத்தினிகளான துக்கை, இலக்குமி, சரஸ்வதிக்கு வீரம், செல்வம், கல்விக்கு விழா எடுப்பதாகவே கொன்டாடப்படுகின்றது நவராத்திரி ஆனால் ஸ்ரீ தேவி மாஹாத்மியமான மார்க்கண்டேய புராணம் மஹா காலீ, மஹா இலக்குமி, மஹா சரஸ்வதிக் சரதாநவராத்திரி கொண்டாடப்படுவதாக கூறுகின்றது. யமனுடைய கோரப்பல்லாக பங்குனிமாதத்தையும் ஜப்பசி மாதத்தையும் கணித்து அதில் பங்குனி வெயிலால் நோய்கள் வருவதால் அந்தக்காலத்தை வசந்த நவராத்திரி எனவும் ஜப்பசிமாதம் மழையால் வருத்தங்கள் வருவதால் அக்காலத்தில் சரதாநவராத்திரியாகவும் அம்பிகையை வேண்டி கொன்டாடப்படுகின்றது. சரதா நவராதிரி காலத்தில் அம்பிகையின் ஸ்ரீதேவி மாஹாத்மியபாராயனத்தில் முதல் ஏழு நாட்களும் பாராயனம் செய்து இறுத் மூன்று நாட்களும் சண்டீஹோமம் செய்ய வேண்டும். அங்கு ருத்ர பத்தினிக்கோ விஸ்ணுபத்திக்கோ, பிரம்மபத்தினிக்கோ பூசை இல்லை அவை அனைத்தும் ஞானத்தை அடிப்படையாகவே பூசை நடைபெறுகின்றது. அங்கு மஹசரஸ்வதி அறியாமை என்னும் அஞ்ஞாத்தை போக்கவே மகிசாசுரவதம் இடம்பெறுகின்றது.
மா்கண்டேய புராணத்தில் மஹாகாலீ மஹா இலக்குமி மஹாசரஸ்வதிக்கே கொலுவைத்து அஞ்ஞான இருளைப்போக்க ஆதிசக்தி மதுகைடப வதம்,மஹிஷாஸுரஸைன்ய வதம்,மஹிஷாஸுர வதம், தேவி தாத ஸ்ம்வாதம், தூம்ரலோசன வதம், சண்டமுண்டா்கள் வதம், ரக்தபீஜ வதம்,நிசும்ப வதம், சும்ப வதம் என பல வதங்கள் செய்து மஹா காலீயான மகிசாசுர மத்தினியாக் மஹா அட்டமியும் நவமியும் சந்திக்கு நேரத்தில் சம்ஹாரம் செய்து அஞ்ஞான இருள் போக்கியதான வெற்றி விழாவே விஜயதசமி என்று ஸ்ரீ தேவி மாஹாத்மியம் கூறுகின்றது அங்கு சிவ,விஸ்ணு,பிரம்மபத்தினிகளுக்கு அல்ல சரதா நவராத்திாி என்று கூறுகின்றனா்.
No comments:
Post a Comment