இலங்காபுரியல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிசோலை என்னும் கிராமத்தில் அமைந்ததே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் இலங்காபுரி திருமூலரால்சிவபூமி என அழைக்கப்படும் பூமி இது ஆதிகாலத்தில் சிவகளம் என அழைக்பட்டு அது சிகல எனமருவி கிங்களம் என அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருகின்றனர். இங்கு இயக்கர் நாகர் காலத்திலிருந்தே சிவவழிபாடு இங்குஇருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு நாகர்; வழிபாடான நாகலிங்க வழிபாடு செய்தனர் அவ் வழிபாடே பின்னர் நாக வழிபாடாக மாறியது. அதுமட்டுமல்ல இங்கையை ஆண்ட இலங்கை வேந்தன் இராவணன் சிவ பத்தன் அது மட்டுமல்ல அவன் மனைவி மண்டோதரி சிவபத்தை இலங்காபுரியின் நாற்திசையும் ஸ்வரஙகள் இருப்பதுடன் சித்தாகள் சமாதிகளும் இருக்கின்றது. வடக்கில் மாந்தை என்னும் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரமும் கீரிமலையில் நகுலேஸ்வரமும் சித்தர்களான யோக்கர் சுவாமி, செல்லப்பாசுவாமி, கடையில்சுவாமி, அருளம்பலசுவாமி, குழந்தவேல் சுவாமி, சடையம்மா ஆகியோரின் சமாதிகளும், கிழக்கில் திருகோணமiலில் திருகோணேஸ்வரம், கொக்கட்டிசோலையில் தான்தோன்றிஸ்வரம் சித்தர்சமாதி காரைதீவில் சித்தானக்குட்டி சுவாமிகள், தெற்கில் பசுபதீஸ்வரம் அதுஇன்று இல்லை அதன் சுவடுகள் உண்டு. கதிர்காமத்தில் சித்தர்கள் சுமாதி தென்வானை அம்மன் சன்நிதிக்கு முன்னர் எடடு சமாதி இருக்கின்றது அவை சுகிதபுரி, பாலசுந்தரி அம்மா, ஸ்ரீலஸ்ரீ கேசவபுரி, நாராணபுரி,மங்களபுரி, ரபணபுரி,சந்தோசபுரி,விக்ணபுரி அத்துடன் சிவன் கோயிலில் கல்யாணபுரி ஆகியோரின் சமாதி, மேற்கில் சிலாபத்தில் முனீஸ்வரம் இருப்பதுடன் முகத்துவாரம் பிள்ளையார் கோயிலில் பெரியானைக்குட்டி சுவாமிகளின் சமாதியும் அமைந்ததுடன் மத்தியில் பதுளை குயின்பா p தோட்டத்தில் நவநாதர் சுவாமிகளின் சமாதியும் உண்டு. அதுமட்டுமல்ல கதிர்காமத்தில் தவபலம் பெற்று கிரியா வாவாஜீ செய்றார். இப்படியான சக்தி பெற்றது இலங்காபுரி.
இங்கு கொட்டிசோலை தான்தோன்றீர்வரம் சுயம்பு லிங்கம் அக்காலத்தில் அப்பிரதேசம் கொக்கொட்டி மரங்கள் நிறைநிறைந்த இடம் இங்கு விறகு வெட்டச்சென்ற விறகு வெட்டிக்கே அப்பன் சித்தம் கிடைத்தது. ஒருநாள் விறகு வெட்ட கொக்கட்டிமரத்தை வெட்டியபோது மரத்திலிருந்து இரத்தம் வரக்கண்ட பிறகு வெட்டி பயந்து அஞ்சி நடுங்கி ஊர்முனை வந்து விடையம் விளம்ப ஊர்மக்கள் ஓடோடி சென்று பார்தபோது மரத்தினுள் லிங்கம் இருக்க கண்டு அப்போது ஆட்சி செய்த உலகநாட்சிஅ ம்மையிடம் விளம்ப அவள் அப்பனுக்கு கொத்து பந்தல் அமைத்து வழிபடசெய்தாள். அதன் பின் கோயில் அமைக்பட்டது. அதை போத்துக்கேயர் இடித்தொழிக்க வந்த போது 'கல்நந்தி புல் உண்ணுமா' என்று குருக்களிடம் விதன்டா வாம் செய்த போது அது உண்னும் என்று குருக்கள் கூறி பிற்பகல் வருமாறு கூறினார். பின்னர் இறைவன் மீது விரதம் இருந்து வேண்டவே பிற்பகல் அவர்கள் வந்தபோது கல்நந்தி எழுந்து புல் உண்டு சாணமிட்டு அவை இரண்டுமே கல்லானது இதை கண்ட போத்துக்கேய தளபதி வணங்கிச் சென்றதாக தலவரலாறு எடுத்து இயம்புகின்றது. இன்றும் அவற்றை காணலாம். அப்படியாக திருவிளையாடல் செய்தவர் தான்தோன்றீஸ்வரர்
இவ்.வாலயத்தில் இலங்கையில் முதல் முதலில் தேரோட்ம் இடம் பெற்றதும் இங்கு தான் . இன்றுப் பாரம்பரியம் மாறாது பழமையான தேரிலேயே அப்பன் வலம் வருகின்றார். சித்திரதேர், பிளளையார் தேரும் தேரோட்டத்தில் இடம்பெறுகின்றது. இத்தேர் குழக்கோட்ட மன்னனால் செய்யப்பட்டதாக ஆலயவரலாறு எடுத்து இயம்புகின்றது. தங்கத்தேர் இருந்ததாகவும் இது ஆற்றில் விழுந்து மறைந்ததாகவும் கூறப்படுகின்றது. வீரசைவர்களே இங்கு பூசகர்களாக உள்ளனர். ஆலய பரிபாலணம் குடிவழமையானது. இங்கு உலகநாச்சிகுடி, படையாண்டகுடி, காலிங்காகுடி, போன்ற பலகுடி இருகிகின்றனர் பொதுவாக கிழக்குமாகாணத்தில் குடிவழமை உண்டு குடி தாய்வழியானது. தேரோடம் முடிவடைந்ததும்.முட்டிகூறும் வழமையும் இங்கு இருக்கின்றது. குடிகளை கூறி அதன் உரிமையை நிரூபித்து முட்டியை பெறவேண்டும். இதன் மூலம் குடிகளை கௌரவப்படுத்தும் பண்பாடும் இங்கு உள்ளது. இந்த வரலாற்று பெருமை மிக்க நிகழ்வு நாளை நடை பெவுள்ளது.
'மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்'
No comments:
Post a Comment