சிவன் இராத்திரி என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது நித்திரை இன்றி இரவு முழுவதும் விழித்து இருப்பதே. சிவனுக்கு ஓரு இராத்திரி அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி அதிலிருந்து விங்கிக் கொள்ள வேண்டியது அதன் முக்கியத்துவம் விளித்திருத்தல் என்பது நித்திரை விளித்திருப்பதாகவே எல்லோரும் கருதுகின்றனர். நித்திரை என்பது உலகவிவகாரத்தில் லயித்து அதில் மூழ்கி ஆன்மீகத்திலிருந்து விலகி ஆன்ம விடுதலையை எண்ணாது உலக மாயையில் மயங்கி இருப்பதையே கருதுகின்றனர். இதில் பீடிக்கப்பட்ட மாயையை விளிப்பாகவிருந்து இதன் செயல்பாடுகளை அவதானித்து அதில் ஆத்ம விடுதலைக்கு தடையானவற்றை தவிர்த்து ஆத்ம விடுதலைக்கு ஏதுவானதை பயன்படுத்தி அதில் இருந்து தனித்திருந்து ஞானப்பசியில் இருந்து ஞானத்தை அடைவதையே சிவன்ராத்திரி விரதத்தின் பயனாக அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது.
சிவன்ராத்திரி விரதம் விரத தத்துவங்களை ஓருங்கே பெற்றவை அவை விளித்திருத்தல், பசித்திருத்தல், தனித்திருத்தல் என்பதாகும். அதாவது தனித்திருத்தல் என்பது மலங்களில் இருந்து தனித்திருத்தல் இவை பீடிக்காதவாறு விளிப்பகாக இருத்தல். ஞானத்தினை பெற பசித்திருத்தல். இதுவே விரததத்துவம். இங்கு பார்த்தால் கண்விளித்து உணவருந்தாது ஓர் இடத்தில் தனிமையில் இருப்பதே விரதம் என்று எண்ணுகின்றனர். 'பசித்தால் பத்தும் பறந்திடும்' என்பது முது மொழி இங்கு சிந்திக்க வேண்டிய விடையம் ஒன்று உண்டு. அதாவது பசி என்பது ஞானப்பசி அது இருந்தால் பற்று என்பது பறந்து விடும் அதனால் ஞானம் உண்டாகும் என்பதே இதன் கருத்து. இது சித்தர்கள் வாக்கு இவர்கள் கருத்துக்கள் இரு கருத்துக்களை கொன்ட்டதாகவே அமையும். ஞானிகள் உண்மைக்கருத்துக்களை அறிவர். இன்னுமோர் வகையில் பார்த்தால் பசியிருந்தால் எதையும் கிரகித்துக்கொள்ள முடியாது. அதை பூர்த்தி செய்தால் தான் எல்லாமேபுரியும். இதுபோன்று 'அரசனை நம்பி புருசனை கைவிடாதே' என்று இன்னுமோர் முதுமொழி உண்டு. அதில் அரசன் என்பது அரசமரம் குழந்தை பாக்கியம் கிடைக்க சிலருக்கு அரசமரத்தை சுற்றி அங்கிருக்கும் கடவுளை வழிபடுமாறு கூறுவர். அதற்கு காரணம் கருப்பையில் இருக்கம் கிருமிகளை கொல்லும் வல்லமை அரசமரத்தின் இலைகளினால் உணவுதாயாரிக்கும் போது உண்டாகும் உயிர் காற்றில் உள்ளது. இதை பெறவே அரசமரத்தை வணங்கும் படி கூறுகின்றனர். அதற்காக கணவன் இன்றி குழந்தை கிடையாது. அதை மையமாக வைத்தே இம் முதுமொழி உருவாகியது.
சிவராத்திரி தொடர்பாக புராணக் கதையில் காட்டில் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்ற போது இரவில் புலி அவனை துரத்த அவன் மரமொன்றில் ஏறி இரவு முழுவதும் விளித்திருப்பதற்காக இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டு இருந்த போது அதிகாலையில் இறைவன் காட்சிகொடுத்து முத்தி அளித்ததாக கூறப்படுகின்றது. அங்கு அவன் ஏறி இருந்த மரம் வில்லமரமாகவும் அதன் கீழ் இலிங்கத்திருமேனியான சதாசிவமூர்த்தியாகிய அருளோன் இருந்தாகவும் அதிலே அவன் பறித்தெறிந்து கொண்டு இருந்த வில்லதளங்கள் விழ்ந்ததால் மகிழ்ச்சியுற்று இறைவன் காட்சிகொடுத்து ஆட்கொண்டார். என்று கூறப்படுகின்றது. இதன் உட்கருத்துக்களை அறிய வேண்டியது அவசியமாகும். இராத்திரி என்பது இருள்நிறைந்த நேரம் அந்த நேரத்தில் பொருட்கள் தெரியாது அது உண்மையை மறைக்கும் தன்மை இந்நிலை கண்கள் இருந்தும் குருடனாக இருப்பதை ஒத்த தன்மை அதாவது இருள் மலம் ஆணவமலம். புலியாக துரத்தியது என்பது மாயை ஆணவமலமும் மயையும் பீடிக்காத வகையில் விளிப்பாக தனிமையில் இருந்ததால் ஞாமாகிய முத்திப்பேறு கிடைத்தது. இறைவன் ஆன்மாக்களை ஆட் கொள்ளும் போது அவனிடம் இருக்கும் நன்மை தீமைகளை எல்லாம் அறுத்தே ஆட்கொள்வார். இங்கு பிறப்புக்கு காரணமான எதுவும் இருக்காது. ஆன்மாக்களும் பரம்பொருளான இறைவனும் மட்டுமே இருப்பர். இதற்காகவே பிரதோச காலத்தில் நந்திதேவர் மத்தளம் அடிக்க சிவபெருமான் ஆனந்தக்கூத்தாடுவர். இன்நிலையின் இருவர் மட்டுமே இருப்பர். நந்திதேவர் ஆன்மா அது சீவாத்துமா சிவபெருமான் பரமாத்துமா. இருவருமே அக்காலத்தில் இருப்பர். சிவராத்திரி மாசிமாத அமரபட்ச(கிஸ்ணபட்ச) சதுர்த்ததி தினத்திலேயே வரும். அதனை வருடபிரளயமாகவும் மாதாந்த பிரளயமாக பிரதோசதினத்தையும் கருதுவர்.
மாசிமாதத்தில் மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து பங்குனியில் புதிய தளிகள் தோன்றும் அக்காலமே வசந்த காலமாக கருதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்களியாணம் நடை பெறுகின்றது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரமமுகூர்த்தம் அக்காலத்தில் வியாழன் பூமியை அண்மித்து வரும் காலம். வியாழன் உயிர்க்கிரகம் அங்கிருந்துதான் உயிர்கள் பூமிக்கு வந்தது அதனால் சந்திரக்கவர்ச்சி ஏற்பட்டு கடல் ஈக்கப்படுவதால் வெற்றிடம் ஏற்பட வங்காளவிரிகுடாவில் வெப்பக்காற்று புகுந்து இயற்கை அனர்தத்தத்துக்கு ஏதுவாகின்றது. அதனாலேயே காத்திகை மார்கழி மாதங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. வியாழனின் ஈர்ப்பால் சூரியசக்தி அதிகரித்து கதிர்வீச்சு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு பொதுவாக பிற்பகலில் ஏற்படுவதால் அவை நீர்நிலைகளின் மேற்பரப்பில் உறைகின்றன அடுத்தநாள் பகலில் சூரிய வெப்பத்தால் ஆவியாகி முகிலாக ஆகாசத்தில் சேகரிக்கப்பட்டு மேகம் குளிர்வடைந்து பூமிக்கு மழையாக பொழிந்து ஊறி மரங்களில் சக்தியாக சேருகின்றது. அதேவேளை இலைகளில் உள்ள பச்சையத்தை கொண்டு சூரிய வெப்பத்தினால் உணவு தயாரித்து வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இதனாலேயே மார்கழிமாதத்தில் அதிகாலையில் தலைக்கு தோய்வதனால் அச்சத்து தலையினால் உறிஞ்சப்படுகின்றது. இதற்காகவே சிவபத்தர்கள் மார்கழி திருவாதிரை நாளை அடிப்படையாக கொண்ட பத்துநாட்கள் திருவெப்பாவையும் விஸ்ணு பத்தர்கள் மார்கழிமாதம் முழுவதையும் திருப்பாவை மாதமாகவும் கொண்டு வழிபாடுகள் மேற்கொள்ளுகின்றனர். இக்காலத்தில் பொதுவாக திருமணவைபவங்கள் நடைபெறுவதில்லை. கீதையில் கிருஸ்ணபரமாத்மா 'மாதங்களில் நான் மார்கழி' என்றார். வழிபாட்டுக்குரிய மாதமாகவே கொள்ளப்படுகின்றது. நாற்பது வயது வரையில் கிறிஸ்டல் வைற் எணர்ஜீ உடலாலும் பின்னர் தலையாலும் ஈக்கப்படுகின்றது. இதனாலேயே நாற்பது வயதுக்கு மேல் தலைமயிர் வெண்மை நிறம் அடைகின்றது.
இந்துமதம் எதை செய்தாலும் அது அர்த்தமுள்ளதாவே அமையும். அதனாலே இந்து மதத்தை அர்த்தமுள்ள இந்துமதம் என்றார்கள்;. சித்தர்களும் மகரிஷிகளும் அர்த்தமுள்ளவற்றையே ஏற்படுத்தியவர்கள் அவர்கள் மெய்ஞானிகள். எல்லவற்றிலும் உட்கருத்துக்கள் இருக்கின்றன அவற்றை ஞானிகளே அறிவர். இன்னும் அவை கதைகளாகவே இருந்ததால் வருடாவருடம் பாராயணம்செய்யப்படும். அது ஏற்படுத்தப்பட்ட உட்கருறாதுக்களை அறியாத நிலையிலேயே அவர்களின் காலம் முடிந்து விடும். இதனால் எந்தப் பயனும் இல்லை. அவை கதைகளாகவும் காவியங்களாகவும் இருக்கும் வரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவை மூடநம்பிக்கையையும் கேலிக்கிடமாவும் தான் அமையும். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் முருகனுக்கு மயில் எப்போது வந்தது. மம்பழக் கதையிலா? அல்லது சூரசம்ஹரத்திலா? இது ஒரு வேடிக்கையாது தான். தந்தையை கோபித்த முருகன் மயிலில் பழனிக்கு பறந்து சென்றார். என்றும். சூரசம்ஹாரத்தில் சூரனை இருகூறாக்கிய போது சேவலும் மயிலுமானான்சூரன். அதாவது மனிதனிடம் இருக்கும் அசுரசக்தியே சூரன் அவனிடம் இருந்த நல்ல குணம் சேவல் என்றும் அது அதிகாலையில் சூரிய உதயத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி சந்தோச மடைகின்றது. சூரிய சக்தி பிரபஞ்சத்தின் ஆக்கசக்தியாகும். அவனது கெட்டகுணம் மயில் அது அசுரசக்தி அது ஆக்கத்துக்கு எதிரான ஆணவம். அதை அடக்கி அதன் மேல் அறிவான இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்தார். சுரனை வேலாகிய ஞானசக்தியால் பிளந்தார். வேலின் கூர் அறிவு கூர்மையானதாகவும் அதன் அகலம் அகலமான அறிவையும் அதன் தண்டு ஆழமாதான அறிவையும் குறிக்கும். இது இப்படி இருக்க பாலமுருகன் எப்படி மயிலில் தந்தையை கோபித்து பறந்து சென்றார். மயில் ஆணவத்தின் அடையாளம் ஆணவம் உற்றால் மனிதன் இறைவனை விட்டு அகன்று வெகுதூரம் செல்வான். ஆணவம் அறிவுக்கு விரோதி. அதனாலேயே மயில் பாம்பை தன் கீழ் வைத்துள்ளது. பாம்பு குண்டலினி சக்தி .இன்னோர் விதத்தில் கூறுவதனால் ஒன்றுக்கொன்று விரோதி இவை இரண்டும் இறைவனிடத்து ஒற்றுமையுடன் இருக்கின்றது. கதைகள் கதைகளாகவே இருக்கும் வரை அது இப்படியான பிரச்சனைகளைத்தான் ஏற்படுத்தும் இவைகளின் தத்துவங்களை விளங்கிக்கொள்ளும் போதே அவை அர்த்தமுள்ளவையாகும். இன்றைய சமுதாயம் ஆராய்ந்தறியக்கூடியவர்கள் அவர்கள் சந்தேகங்களை மதிநுட்பமாகவே கையாளவேண்டும். வேற்று மதங்கள் இலகுவாக உட்புக இவை காரணமாகிவிடக்கூடாது. அவரவர் மதங்களில் தெளிவும் உறுதியும் அவசியம். தன் தாயை மாற்ற முடியுமானல் மதத்தையும் மாற்றலாம்.
சிவராத்திரியில் கேட்டது அப்பனிடம் இருந்து கிடைக்கும். ஏன் என்றால் அவனுக்கு இருப்பதே ஒரு இராத்திரி அவனை பிரபஞ்சமே நினைத்து வழிபடும் நாள் அது. அன்று அவன் நினைவுதான் எல்லோரிடமும் எண்ணங்கள் ஒன்று பட்டால் அதன் சக்தியை சொல்லவேண்டுமா? '{ஒன்று பட்டால் உண்டு வாழமுடியும்' அல்லவா? 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகப் பெருமானின் கூற்றுக்கு இணங்க அவன் அருள் பெறுவோம்.
இந்து மதத்தின் உட்கருத்துக்களை அறிந்து அதன்படி நடந்து உய்வடைவோம். அர்தமுள்ளது இந்து மதம்.
( மட்டூர் புன்னையம் பதியான்)
No comments:
Post a Comment