Saturday, November 5, 2011

“உடல் வலிமை தரும் கரிசலை தைலம்”

“உடல் வலிமை தரும் கரிசலை தைலம்”
தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1.ஒரு கிலோ நிறையுள்ள பசுமையான கரிசலை இலை மூலம் பெற்ற ஒரு லிட்டர்(1.ட) கரிசலை சாறு
2. ஒருலிட்டர் சுத்தமான எள்ளெண்ணை (நல்லெண்ணை) ஒரு லிற்றர்(1.ட)
3.தோல் நீக்கப்பட்ட ஏழுமுறை சுத்தநீரினால் திரும்ப திரும்ப நன்றாக சுத்தம் செய்தெடுத்த குமரியின் சோறு (சோற்றுக் கற்றாலை சோறு) இருநூற்றி ஐம்பது கிராம் (250 g) விழுது போல் அரைத்து எத்துக் கொள்ளல்
4.பச்சை நாட்டு நெல்லிக்காய்ச் சதை இருநூற்றி ஐம்பது கிராம் (250 g) விழுது போல் அரைத்து எத்துக் கொள்ளல்
5.சாதிக்காய் - 50 கிராம்(50g), கஸ்தூரி மஞ்சல் கிராம் (50g) இவை இரண்டையும் பசுவின் பாலில் விழுதுபோல் அரைத்து எடுத்தல் வேண்டும்.
தைலம் தயாரிக்கும் முறை:
முதலில் நல்லெண்ணையுடன் கரிசலைச் காற்றையும் விழுதாக அரைக்ப்பட்ட குமரி, நல்லி, சாதிக்காய், கஸ்தூரிமஞ்சல் இவை அனைத்தையும் நன்றாக இரண்டர கலக்கி அதன் பின் அடுப்பிலேற்றி கமாக்கினி(தாமரை மெட்டை ஒத்த)அளவான தீயில் நன்றாகக் கச்சி அதை வடித்தெடுத்து தானியப்புடத்தில்(நெல்,பயறு போன்ற தானியத்துக்குள்வைத்தல்) நற்பத்தி எட்டு நாட்கள் வைத்து அதன்பின் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
1.தலை,கை,கால் உட்பட உடலெங்கும் காலையில் தேய்த்து ஒரு மணித்திலாங் கழித்து மிதமான சூட்டி உள்ள நீரில் தோய்தல் வேண்டும். இங்கு கவணிக்க வேண்டிய விடையம் நீரை நன்றாக சூடாக்கி அதில் குளிந்த நீரை கலந்து மிதகாக்கலை தவித்து குளிப்பதற்கு தேவையான சூட்டின் அளவிலேயே சுடாக்க வேண்டும்.அல்லது அதை அளவுக்கு ஆத்தி அதன் சூட்டை குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக புதன்கிழமை, சனிக்கிழமைகளை எண்ணை தேய்த்துக் குளிக்க பொருத்தமான தினங்களாக் கருதுவார்கள். தோயும் போது எண்ணையை உடலிலிருந்து நீக்க பாச்ப்பயற்றுத்தூள். சீயாக்காய்த்தூள்; போன்ற இயற்கை உடலழுக்குகளை நீக்கக் கூடிய பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
2. தினமும் எண்ணை வைப்பதைப் போல் தலைக்கு வைக்கவும் முடியும்.
 எண்ணையின் பயன்:
தலைவலி, பினிசம், காதுவலி, கண்வலி போன்ற கபாலநோய்களுடன் சரும நோய்களும் போம்.

No comments:

Post a Comment