“நித்த முறை விந்துவையுண்டாக்கும் வெந்தையம்”
வெந்தையம் என்பதை வெந்த அயம் என்பர் அயம் என்பது அயச்சத்தான இரும்புச்சத்து ஆகும். வேந்த அயம் எனப்படும். போது இரும்புத் தாதுகளை மருத்துவப் பயன்பாட்டுக்கு முகிலிகளின் சாற்றையும் பாசாணங்களையும்; பயன்படுத்தி நூறுவீத உலோக உப்பாக மற்றி அமைத்துப் பயன்படுத்துவர் அதில் பின்வளைவுகலோ பக்க விளைவுகலோ இல்லை. அதனை கொண்டு சித்தவைத்திய அவூடகங்களைத் தயாரித்துக் கொள்வர். ஆனால் அவூடகங்களைத் தயாரிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது சித்தர்கள் கூறிய முறைப்படி தயாரிக்கப்பட வேண்டும். உலோக மூலக்கூறுகள் உப்பாக மாறும் போது அழிந்துவிடும்.
உலோகங்கனை முகிலிகைச்சற்றை விட்டு திரும்பத்திரும் அரைத்து அதை உரியமுறையில் புடம் போட்டு பயன்படுத்தப்படும். உலோகங்களுக்கேற்ப வெப்பமேற்ற வேண்டிய வெப்பநிலையும் மாறும் குக்குடப்புடம் என்றால் ஒரு கோழியின் அளவான வராட்டியைப்பயன்படுத்தி வெப்பமாக்க வேண்டும். இதன் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வெப்பத்தை கட்டுப்படுத்தும் நுட்பத்தை சித்தர்கள் கையான்டுள்ளனர் என்பது புலனாகின்றது. அது போன்று வராகப்புடம் என்றால் பன்றியின் அளவும் கஜபுடம் என்றால் யானையின் அளவும் வராட்டிபயன்படுத்தப்பட வேண்டும் என்று பொருள் இது போன்று உலோகங்கள் உப்பாகும் அளவுக் கேற்ப வொப்பத்தின் அளவு வேறுபடும். உலோக உப்புக்களைக் கொண்டு அயச்செந்தூரம், அயக்காந்த செந்தூரம்,அயபஸ்பம், அன்னபேதிப் பஸ்பம் போன்ற மருந்துகளை தயாரித்து இரும்புச்சத்து குறைபாடுடை யோருக்கு கொடுக்கின்றனர்.
இரும்புச்சத்து மனிதனின் ஆரோக்கியத்துக்கும் ஸ்திரமான உறுத்யாக நீடித்த வாழ்வுக்கும் நோய் எதிப்புசக்தியை உடலில் ஏற்படுத்தி உடலை ஸ்திரப்படுத்தவும் அவசியமான மூலக்கூறாகும். கிமோகுலோபின் சிவப்பு அணுக்களில் இருக்கின்றது. நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் பிராண வாயுவை எடுத்துச் சென்று உணுவை சொரிக்கச் செய்து சக்தியைப் பெற்று உடலில் சீரான இயக்கத்துக்கு உதவுவது இரும்புச் சத்தாகும் அதாவது கிமோகுலோபினில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது எழும்பு மச்சையாகும் அதை உற்பத்தி செய்ய இரும்புச்கத்து அவசியமாகும். இந்தத் தன்மை வெந்தயத்துக்குண்டு இதனாலேயே வெந்தையத்தை வெந்த அயம் என சித்தர்கள் தெளிந்தனர். வேந்தயத்தின் மருத்துவ பாகம் பற்றி தேரயர் தனது பதாத்த குணசிந்தாமணியில்
“மேதி கனம் மத்தி சுர மேக கூடிய சீத
பேதி யதி சாரம் பித்திரு மலாகிய நோய்
தன தனிக்கும் போகக்கு மனந்தளிக்கும்
நித்த முறை விந்துவையுண்டாக்கும்
மனமே யறி” வெண்பா பாடியுள்ளார். இதில்
“மேதி” என்பது வெந்தயம் “கனம்” என்றால் செல்வம் வெந்தயத்தை செல்வத்துக்கு ஒப்பிடுகின்றார்.
1.“மத்தி சுர”: இது சம்பலை குறிக்கின்றது. சாம்பல் இறந்தவர் எரித்த அஸ்தி என்றும் அதில் கிடைப்பது எழும்பு எரிக்கப்பட்ட சாம்பல் லாகும். இங்கு எழும்பு மச்சையில் ஏற்படும் சுரத்தைக் குறிப்பிடுகின்றார். சுரம் என்பது காச்சல். காச்சல் உடலில் ஏற்படும் நோயின் அறிகுறியாகும். இதனை “வோன் மரோ டிப்பிரேசன்” என ஆங்கிலத்தில் கருதுகின்றனர். எழும்பு மச்சையில் சிவப்பு அணுக்களின் உந்பத்திகளில் குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோய் இதனை இரத்தச் சோவை நோய் ஏற்பட்டு உடல் பலவீணமாகி வெளுப்பு நோக்கு ஆளாகி உடல் சக்தியை இழக்கும். இதனையே “மத்தி சுர” என குறிப்பிட்டுள்ளார்.
2. “மேக”: மேகம் என்பது மதுமேகமான நீரளிவு நோயைக் குறிக்கின்றது.
3. “சீத பேதி”: சீதம் என்பது இரத்தம் பேதி என்பது வயிற்றோட்டம் சீதபேதி என்பது இரத்தத்துடன் மலம் போகும் வயிறோட்ட நோயைக் குறிக்கும்.
4. “யதி சாரம்”: அதிசாரம் என்பது வயிற்றுப் போக்கு தொடர்சியாக நீர்தன்மையான மலம் வெளியேறுதல் இதனால் உடலில் நீர்இழப்பு ஏற்படும்.
5. “பித்திரு மலாகிய நோய்” :பித்தத்தால் உண்டாகும் இருமல்
6. “தன தனிக்கும்”: அனல் தனிக்கும் உடலில் ஏற்படும் வெப்பத்தைத் தனித்து குளிர்சியை தரவல்லது வெந்தயம்.
7. “நித்த முறை விந்துவையுண்டாக்கும்”: தினமும் உடல் உறவு கொண்டாலும் அதனால் உண்டான விந்திழப்பை அன்றே சரி செய்து மீண்டும் குறைந்ததை ஈடுசெய்து விடும் வல்லமை வெந்தயத்துக்கு குண்டு. இதை இயற்கை வயகிரா என்று மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
வைந்தையக் கீரையின் சிறப்புப் பற்றி தேரையர் வெண்பாவில்
“பெருமந்தம் வாயு கபம் போராடுகின்ற
இலட்லருசு பிவையேகும் தரையில்
திதிசையர் நமனை சீறும் விழியணன்தே
கோதில் வெந்தையக் கீரை கொள்
தீதில் உயர் நமனை”
1.“பெருமந்தம்”: என்பது வயிற்றில் பெருமல் இது அஐPரணக் கோளாறு உணவு ஐpரணமாகாமல் அமிலக்சுரப்புகள் அதிகரித்து வயிறு பொருமி மந்தமாக இருக்கின்ற நிலை.
2. “வாயு” வயிற்றில் உப்பிசம் வயிற்றில் வாயு உறைதல்.
3. “கபம ;போராடுகின்ற” சளியுடன் போராடுகின்ற இருமல்
4. “இலட்லருசு” வாயில் சுவையின்மையை ஏற்படுத்துகின்ற தன்மை போன்ற நோய்கள் எல்லாம் போக்கும் திறன் வெந்தையக் கீரைக்குண்டு கீரையைக் கண்டால் சீறுகின்ற பாம்ihக் கண்டு பயந்து ஓடுவது போல மனிதர்களின் உயிர்ளைப் பறிக்கும் எமன தருமராஜ ஓடி விடுவாராம். “நமனை சீறும் விழியணன் கோதில் வெந்தையக் கீரை கொள் தீதில் உயர் நமனை” அப்படியான பலனைத் தருவதாக வெண்பா கூறுகின்றது
அறிவியல் ஆய்வுகள் கூறும் விடயங்கள்:
1.நீரழிவு நோக்கு அருமருந்து:
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்நூறில்(1990 இல்) சர்மா என்ற ஆய்வாளரும் இரண்ராயிரத்து ஒன்றில் (2001 இல்) சீல் என்ற ஆய்வாளரும் இரண்ராயிரத்து எட்டில் (2008 இல்) மூலர் என்ற ஆய்வாளரும் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையின் படி நீரழிவு நோயில் இரண்டு வகை உண்டு அதில்
1.இன்சுலீன் குறைவாக இருக்கின்ற வகை (NDDM) இது உடலில் இன்சுலீன் சுரக்காது இதனால் சக்கரையின் அளவு கட்டுப்படாது. இரத்தத்தில் சக்கரையின் அளவு அதி;hக்கும்.
2.சக்கரை செரிமானத்துக்கு தேவைப்படுகின்ற வகை இதனை (NIDDM ) என்பர் மூவரின் ஆராய்ச்சிகளின் மூலமும் வெந்தையதில் ஒரு வேதியல் மூலக்கூறு இருக்கின்றது அது “பொக்கைரோச்சன் சொலிசன்” இது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைக் குறைக்க வல்ல தன்மை வெந்தையத்துக்கு உண்டு என கண்டு பிடித்துள்ளனர். ஆய்வின் போது காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உணவுடன் ஒரு கிராம் வெந்தையம் கொடுத்து வந்தது பின் பரிசேதனை செய்த போது இன்சுலீன் குறைவாக இருக்கின்ற முதலாவது வகையானவர்களுக்கு(NDDM) உணவு உண்ட பின் பரிசோதனை செய்த போது சக்கரையின் அளவு இயவு நிலையில் இருந்தாகவும். இரண்டாவது வகையானவர்களுக்கு சக்கரை செரிமானத்துக்கு தேவைப்படுகின்ற வகையானவர்களுக்கு (NIDDM ) உணவுக்கு முன் உள்ள சக்கரையின் அளவுமட்டுமல்ல உணவுக்குப் பின் ஐம்பத்தி நான்கு (54%) சதவீதம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவ்வாய்வின் மூலம் சித்தரின் வெண்பா கூறிய “மேக” என்ற மதுமேத்துக்கு வெந்தையம் அருமருந்து என்பது புலனாகின்றது.
2. அத்திசுரத்துக்கு அருமருந்து:
அத்தி சுரத்துக்கு காரணமான சிவப்பணுக்கள், இரத்தத் தகடுகளை குறைவடைவதைத் தடுத்து அதிகரிக்கும் ஆற்றல் வெந்தையத்துக்குண்டு என்பதை ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்நூற்று ஒன்பதில் (1999 இல்) இபிரேன் என்ற ஆய்வாளர் வெள்ளை எலிகளுக்கும், மனிதர்களுக்கும் வெந்தையத்தைக் கொடுத்த போது எழும்பு மச்சையில் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், இரத்தத் தட்டுக்கள் போன்ற எல்லாவற்றையும் உருவாக்குகின்ற திறன் வெந்தையத்துக்குண்டு என்பதை நிரூபித்துள்ளார்.
3.நித்தமும் உறவுகொள்ள விந்துறும் அருமருந்து:
நித்தமும் விந்துவை உண்டாக்கும் ஆற்றல் வெந்தையத்துக்குண்டு. வெந்தயத்தில் “புறோட்டோ டயசின்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது. இது இயற்கை வயகிரா என்று அழைக்கப்படுகின்றது. வயக்கிரா பொதுவாக இருதயநோயைக் குணப்படுத்தவே தயாரிக்கப்பட்டது. அதன் பக்கவிளைவாக பாலியல் தூண்டுதலாக விருந்தது அதனால் தற்போது அதற்கு கிராக்கி பாலியல் தேவையாகி இன்று இருதயநோய்க்கான நோக்கம் மாறி பாலியலே முதன்மையாகி அதற்கான உற்பத்தியாகி விட்டது. “போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி” என தேரயர் சித்தர் அன்றே பாவில் இயம்பி விட்டார். இன்று விஞ்ஞானம் ஆராய்ந்து மெய்ஞானத்தை மெய் என நிரூபிக்கின்றது.
பயன்பாடுத்தும் முறைகள்
1.வெந்தையக் கொழம்பாக சின்ன வெங்காயம் சேர்த்து பயன் படுத்தலாம்.
2. உணவருந்துவதற்கு அரைமணித்தியாலம் முன்னதாக அரைத்தேக்கரண்டி காலை, மாலை உணவில் பயன்படுத்த முடியும். ஏனெனில் உணவருந்த முன் குடலுக்குள் இன்னுமோர் சுவரை அமைத்து குடல் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுத்து கொளஸ்ரோல், மேலதிக சக்கரை இரத்தத்தில் சேர்வதைத் தடுத்து உடலை பாது காக்கின்றது. காலையில் வெறுவயிற்றில் உண்டு விட்டு நடைப்பயிச்சி செய்துவிட்டு நேரம் சென்று உணவருந்துவதால் வெந்தயம் உண்பதால் அடையும் பயனை அடைய முடியாது.
3. சோற்றுக்கற்றாலையை எடுத்து அதன் மடல்களை நடுவால் பிளந்து அதனுள் வெந்தையத்தைப் பரப்பி கட்டி வைத்து இருநாட்களின் பின்னர் முளைகட்டிய வெந்தையத்தை எடுத்து இனலில் உலத்தி பின் பொடியாக்கி சல்லடையில் சலித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு உணவருந்த அரைமணித்தியாலம் முன்னதாக அரைத்தேக்கரண்டி காலை,மதியம், மாலை உணவில் பயன்படுத்த முடியும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் முன் சொன்ன நோய்கள் அனைத்தும் குணமாகும்.
“சித்தன் வாக்கு மெய்யாம்
அது பொய்யா மொழி
அவன் வாழ்க்கை மானிடர்க்கே
அர்ப்பணம்
மனி தத்துவம் உணர்ந்தவன் மனிதன்
அவனுக்கே அவன் வாக்கு பொய்யா மொழி
அதை உணர்ந்து நடந்தாக்கு
அவன் வாக்கு அருமருந்து.
அது சிந்தையில் உத்தித்த சிவன் வாக்கு
சீ வன் சிவன் என உணர்தால்
அதுவே மானிடப் பிறவியின்
பிறப்பின் பிவிப் பயன்”
No comments:
Post a Comment