பஞ்சகௌவ்வியம் இயற்கை எமக்களித்த வரப்பிரசாதம்
பஞ்சகவ்யம் இந்துசமய கிரிகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இப் பஞ்சகவ்யம் அண்ட, பிண்ட சுத்திகரிப்புக்கே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று விஞ்ஞான ரீரியிலான முறைகளுடாக களைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதன் விளைவு அண்டமும் பிண்டமும் அழிவதற்குக் காரணமாக அமைந்தவையே இன்று விஞ்ஞானிகள் இயற்கையான களைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள விளைந்ததன் காரணமாக வேப்ப மரத்தின் பயன்களையும், புகையிலையின் பயன்களையும் பயன்படுத்தும் அதே சமயம் இந்தியாவில் தமிழ் நாட்டில் பஞ்சகவ்வியத்தைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தியதுடன் விளைவையும் பெருக்கியுள்ளனர்;. அதுமட்டுமல்ல விஞ்ஞான ரீதியிலா பொருட்களைப் பயன்படுத்திப் பெறப்பட்ட சுவையை விட இது நிறைந்த சுவையுள்ளதாகக் காணப்படுவதுடன் அங்குள்ள மக்கள் சுகாதார ஆரோக்கியமான வாழ்க்கையை வாழக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாறான இயற்கை மூலிகை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை எம்மை அழிப்பதிலிருந்து எம்மைக் காப்பாற்ற முடியும். இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் நோயற்று நீடூழி வாழமுடியும்.
பஞ்சகௌவ்வியம் என்பது கோமாதாவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோமேயம், கோயலம் ஆகும். கோமேயம் பொதுவாக மண்வீடுகளை மெழுகுவதற்கும் விபூதி தயாரிப்பதற்கும் தாவரங்களுக்குப் பசளையாகவும், பயிர்களுக்குக் கிருமி நாசினியாகவும் பயன்படுத்துகின்றனர்.
பஞ்சகௌவ்வியம் தொடர்பாக அபிதான சிந்தாமணி பின்வருமாறு கூறுகின்றது. கோமூத்திரத்திற்கு வருணனும் கோமேயதிற்கு அக்கினியும் பாலிற்குச் சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகளென ஸ்மிருதிகள் கூறுகின்றன. பின்னும் செந்நிற பசுவினிடம் கோமூத்திரத்தையும் வெள்ளைப்பசுவினிடம் கோமேயத்தையும் பொன்னிறத்த பசுவிடத்துப் பாலையும் கருநிறத்த பசுவினிடம் நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும்.
கோமேயம் கோமூத்திரத்திரம் இரண்டும் ஆறுமாத்திரை எடையும் நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும் பால் பத்துமாத்திரை எடையும்இருத்தல் வேண்டும். இதை மந்திர பூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவர் சகல பாவத்திலும் நின்று நீங்கி சுகமடைகின்றான்.
இவ்வாறு சிறப்பு மிக்க இரகசியங்களை அன்றைய சிதர்கள் அறிந்து இந்துமத கைங்கரியங்களில் முக்கியப்படுத்தினர். அதை இன்று பயன்படுத்தி பெறு பெற்றிருப்பதுடன் இயக்கையின் சீற்றத்தை அடக்க உபாயமக்கிக் கொன்டனர் எம்மவர்.
No comments:
Post a Comment