மாசி மாதம் என்றாலே சிவராத்திரி
ஞாபத்துக்கு வரும் . சிவனுடைய பஞ்சகிருத்தியத்தில் இக் காலம் அளித்தல் தொழிலை செயல்படுத்தும் காலம். இதனை வருடபிரழையம் என்பர். அன்றைய தினம் கிஷ்ணபட்சஷ சதுர்த்;தசி திதீ ஆகும். இது போன்று மதாமதம் வருவது பிதோசம் அதுவும் மாத சிவராத்திரி அதுவும் விசேஷ காலம் தான் அம்பிகைக்கு ஒன்பது இராத்திரிகள் அதனை நவராத்திரி என்பர். சிவனுக்கு ஒரு இராத்திரி ஆகும். அதனால் இவ் இராத்திரி. அத் தினத்தில் விரதம் இருந்தால் இகபர இன்பம் பெறுவர் என்பர் சான்றோர்.
விரதம் என்னும் தனித்திரு பசித்திரு விழித்திரு எனக் கூறுகின்றனர். இதற்கு பலர் தனிமையில் இருந்து உணவருந்தாது நித்திரை செய்யாது வழித்திருத்தல் என பொருள் கொள்பவர்கள் அனேகர். ஆனால் என்னைப் பொறுத்த வரை தனித்திருத்தல் என்பது உலக விபகாரங்களிலிருந்து தனித்திருத்தல் பசித்திருத்தல் என்பது ஆன்மீகபசியில் இருத்தல். விழித்திருத்திருத்தல் என்பது மலங்களின் பிடியில் படாது விழிபாக இருத்தல். இவ்வாறிருந்தால் தான் பிறவிப்பயனை அடையமுடியும்.என்பது எனது கருத்து. எனவே சி;வராத்திரி தினத்தில் எம்முள்ள இறைவனை தனித்திருந்து அத்ம தியானம் செய்து மலங்களின்பிடியில் படாது விழித்திருந்து சிவபூசை நான்குயாமம் செய்து ஆன்மீகபசியில்லிருக்க அப்பனின் காட்சி கிடைப்பது நிட்சயம். விதங்களில் முதன்மையானது. இவ்விரதம். இவ்விரதம் தொடர்பாக பல புராணக் கதைகள் உண்டு. ஆலயம் என்பற்கு மூர்த்தி தலம் தீர்தம் என்கின்ற மூன்றும் எப்படி முக்கியமோ அது போல விரதங்;களில் தனித்திரு பசித்திரு விழித்திரு இவை மூன்றும் முக்கிமாகும். இவை மூன்;றும் ஒருங்கே அமையப்பெற்ற விரதம் சிவராத்திரி விரதமாகும். இதனால் இவ்விரதம்; முக்கியம் பெறுகின்றது. எமது முழுமுதல்லான மூலவன் அவனை. ஆவனையன்றி ஒரு அணுவும் அசையாது.

அத்தன் உலத்தையியக்க ஆடுகின்றான்.
பிண்டத்தில் சிற்றம்பலத்தில் ஆடுகின்றான்
அத்தன் உடலையியக்க ஆடுகின்றான்.
ஆட்டம் நின்றால்
அண்டமும்மில்லை பிண்டமும்மில்லை”.
பிண்டமும் பிரமான்டமும் சமம். பிண்டமான சரிரம் இடப்பக்கம நாடி இடகலை எனவும் வலப்பக்கநாடி பின்கலைநாடி யாகவும் நடுநாடி சுழுமுனை நாடி என பிண்டத்தில் உள்ளது போல பாரதகண்டத்தி;ல் இமயத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நடுவில் உள்ளது தில்லையும் சிவப்பரம்பொருளான என்னப்பன் ஆனந்ததிருநடனமாடும் திருத்தலம் சரிரத்தில் உள்ளே இருக்கும் இருதயதானமான புண்ரீக வீடு. இருதயத்திள்ளே இருக்கும் பிரமாண்டம் பிரமபுரம் பிண்டத்தினுள்ளியிருக்கும் தில்லைவனத்தில் நிறுத்தம் செய்யுஞ்சிவன்ஆகாசம் இது பூத ஆகாசம் போன்று சடஆகாசமன்று. அது சித்தாகாசம். ஆதலாற் சிதம்பரம் எனப்பட்டது இது எக்காலமும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால் இத் தில்லையும் சிதம்பரம்மென பெயர் யொற்றது. அப்படிப்பட்ட அத்தனானந்ததை நாம் மெய் உருகி உள்ளத்தில் நிறுத்தி அத்ம தியானத்தில் மூழ்கின்ற போது அவன் இராத்திரில் அவன் காட்சி கிடைப்பது உறுதி.
சிவராத்திரி கால நிர்ணயம் தொடர்பாக சஸ்திரரிதியாகப் பக்கும் போது மாசி மீ கிருஸ்ணபசஷம் சதுர்த்தசி இரவு பதினான்கு நாளிகை லிங்கோற்பவ காலம் இதுவே மகாசிவராத்திரி புண்ணியகாலம்மாகும். கிருஸ்ணபசஷம் சதுர்த்தசிகாலமும் திரியோதசி பதினான்கு நாளிகைக்கு சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம். திரியோதசி இல்லாமல் சதுர்த்தரி வியாபிப்பது அதர்மம். ஒரு காலம் அன்றையிராத்திரிக்கு அமாவாசை பிரவேசிப்பது பரியான சிவராத்திரி இது மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும். அப்போது திரியோதசி பரமசிவத்துக்கு தேகமாகவும் சதுர்த்தசி தேகியாகவும் அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்படுகின்றது.
சிவராத்திரி நான்கு வகையாகக் கூறப்படுகின்றது. மாதம் தோறும் வரும் அமரபட்ச சதுர்த்தசியில் வருவது மாத சிவராத்திரி. அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் வருவது யோக சிவராத்திரி எனவும். மாசி மாத பூர்வபக்க வளர்பிறைப் பிரதமை தொடங்கி அமரபக்க தேய்பிறை திரியோதசி வரை அனுட்டித்தல் மூன்றாவதாகவும். மகாசிவராத்திரி நான்காவதாகவும் கூறப்படுகின்றது.

பூரணை சந்திரமன்டலம் தொடர்பானது. அது அம்பிகைக்கு அதாவது பிரபஞ்ச சத்திக்கு முதன்மை நாள். அமவாசை சூரியமன்டலத்துடன் தொடர்பானது அது சிவப்பரப் பிரம்மம்.
எமது உடலை மூன்று பாகமாக பிரிக்கப்படுகின்றது. அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொன்டு அமைகின்றன. மூலாதரத்தலிருந்து ஸ்வாதிஷ்டானம் வரையான பகுதி அக்கி கண்டம். மணிப்பூரகத்திலிருந்து அநாஹதம் வரையான பகுதி சூரிய கண்டம். விசுத்திலிருந்து ஆஞ்ஞை வரையான பகுதி ஸோமகண்டம். ஆமாவசை தினத்தில் அநாஹதசக்கரத்தில் ஆதித்திய கண்டத்தில்(சூரிய கண்டம்) இருதயமான சிற்றம்பலத்தில் சிவனை கானமுடியும். மகாசிவராத்தியான அன்று. அது போன்று பூரணையில் ஸோமகண்டத்தில் ஆஞ்ஞையில் குடலினியாக எம்யை வழிப்படுத்தும் அம்பிகை தென்பட்டு சகஸ்டாகரத்தில் ஆயிரம் இதழ் தாமரையில் அமிதம் செரிவாள்.
ஸ்வாதிஷ்டானத்திற்கும் மணிப்பூரகத்திறகும் இடையில் பிரம்மக்ரந்தி என்னும் முடிச்சு உண்டு. இது போன்று அநாஹதத்துக்கும் விசுத்திக்கும் இடையில் விஷ்ணுகிரந்தி முடிச்சு உண்டு. ஆஞ்ஞைக்கும் சகஸ்டாகரத்துககும்; இடையில் ருத்திரணுகிரந்தி முடிச்சு உண்டு. இவைகள் இடகலை பின்கலை நாடிகள் பினைந்து விரிகின்ற இடமாகும்.இவ்விடங்கள் உடலில் சத்திமிக்க இடங்களாகும். “கிரந்தி” என்பது நாடி முடிச்சையும் நாடியினுள் பாயும் எண்ணங்களில் பூர்வவாஸனியால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும் இவற்றை அறிந்து அவ்விடங்களை எண்ணி தியானம் செய்வதன் மூலம் பூர்வவாஸனியால் ஏற்படும் சிக்கல்களை தவிக்க வளி பிறக்கும் இதற்கு சிறந்த காலம் சிவராத்தி காலமாகும்.
இவ்வாறு ஒவ்வொரு விரதகாலத்திலும் உள்ள கிரக நட்சேத்திர நிலைகளில் எற்படும் மாற்றங்களை கணித்து விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் மகரிசிகளும் சித்தர்களும். இதை கடைப்பிடிப்பது மனுக்குலத்துக்கு நன்மையே.
சிவராத்திரி விரதம் கைக்கொள்ளும் முறை. சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் துயிலேலுந்து சந்தியாவந்தனம் செய்து விநாயகர் பூசை செய்து சங்கல்பம் பூண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் உணவை தவித்தேனும் அல்லது குறைத்தேனும் சிவசிந்தையில் இருந்து மலையில் முதலாம் யாமத்தில் லிருந்து சிவபெருமானின் அருஉருவ திருமேணியான இலிங்கத்திருமேனிக்கு முறைப்படி பூசை செய்து. இலிங்கோற்பவகலமான மூன்றாம் யாமத்துக்கு விசேட பூசை செய்து வழிபடுவதுடன் திருமுறைகள் ஓதி வழிபடுதல் வேண்டும். ஆதிகாலை உணவு தயார்செய்து பறனை செய்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். விட்டிலிருந்து செய்ய முடியாதவர்கள் ஆலயத்திலிருந்து விரதத்தை மேற்கொள்ள முடியும்.
நான்கு யாமங்களிலும் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பான அட்டவனை பின்வருமாறு தரப்படுகின்றது.
யாமங்கள் 1ம் யாமம் 06-09 மணிவரை
. 2ம் யாமம் 09-12 மணிவரை
3 ம் யாமம் 12-03 மணிவரை
. 4 ம் யாமம் 03-06 மணிவரை
1. அபிக சேஷகலச எண்ணிக்கை: 1. 108 2. 49 3. 25 4. 9
2. அபிசேஷகதிரவியம் : 1. பஞ்சகவ்வியம் 2. பஞ்சாமிர்தம் 3. தேன் . 4. பலோதகம் கருப்பஞ்சாறு அல்லது சந்தனம்
3. வாசனைத்திரவியம் : 1. சந்தனக் குழம்பு 2. பச்சைக்கற்பூரச் சுண்ணம் 3. புனுகு . சந்தனம் 4. குங்குமம் பன்னீர்
4. வஸ்திரம்: 1. சிவப்பு பட்டு 2. மஞ்சள் பட்டு 3. வெண் பட்டு 4. நீலப்பட்டு
5. அசஷதை : 1. பச்அரிசி 2. வாற்கோதுமை 3. கோதுமை 4. ஆரிசி உழுந்து பயறு தினை முதலிய 7 வகை தானியம்
6. பக்திர புஸ்பம்: 1. தாமரை அலரி வில்வம் துளசி 2. தாமரை வில்வம் துளசி . . குருந்து 3. சண்பகம் வில்வம் ஆதிதி அறுகு மல்லிகை முட்கிழுவை . . 4. நீலோத்பலம் கருநொச்சி நந்தியாவநர்த்தம் நறுமண மலர்கள்
7. நைவேத்தியம் : 1. பயற்றன்னம் 2. சுத்தஅன்னம் கறிவகைகள் வில்வம்பழம் . 3. பயாசம் லட்டு முதலியபட்சணம்கள் பலாப்பழம் ஏள்ளுச்சாதம் நெய்ப் . . 4. பலகாரம் மாதுளம்பழம் சுத்தஅன்னம் அல்லது கோதுமை பலகாரம் . . எல்லாப் பழவகைகளும்
(1,2,3,4. என்பது யாமங்களைக்குறிக்கின்றது)
மேலே உள் முறைப்படி அல்லது அவர்அவர் வசதிக்கும் சத்திக்கும் எற்றமாதிரி பின்பற்றலாம்.ஒன்றும் முடியாதவர் அன்றையத் தினம் சிவசிந்தையில் இருந்தாலே போதுமானது. முடிந்தவர்கள் மணலால் லிங்கம் செய்து அதற்கு வில்வதளம் எடுத்து இரவு முழுவதும் சிவநாமங்களை அல்லது பஞ்சாச்சரத்தில் அச்சித்து அல்லது பஞ்சாச்சர ஜபம் செய்து விடியக்காலையில் விம்பத்தை கங்கையிலோ அல்லது சமுத்திரத்திலோ கலக்கச் செய்து ஸ்நானம் செய்து விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment