Monday, December 30, 2024

உத்தராயணம் தட்சணாயனம் காலங்களில் செய்யக்கூடியவை கூடாதவை தொடர்பாக

 உத்தராயணம் தட்சணாயனம் தொடர்பான விடையங்களை முன் வைக்கலாம் என்னுகின்றேன் 

           இவை சூரியன் செல்லும் பாதையை பொறுத்துதே அமைகின்றது. வடக்கு நோக்கி நகரும் போது உத்தராயணம்  என்றும் தெற்கு நோக்கி நகரும் போது தட்சணாயனம் எனவும் நகர்கிறது.  தமிழ் மாதமான மகர சங்கராந்தி முதல் ஆடி மாதம் வரையான முதல் ஆறு மதம் வடக்கை நோக்கி உத்தராயணம் அடுத்த ஆறு மதம் தெற்கை நோக்கி தட்சணாயனம்.

     இதனுடன் தேவர்களின் நாள் தொடர்பு படுகின்றது தேவர்களுக்கு எமது ஒருவருடம் அவர்களுக்கு ஒரு நாள் முதல் ஆறுமாதமும் பகல் அது உத்தராயணம் அடுத்த ஆறுமாதமும் இரவு அது தட்சணாயனம். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம். 

பொதுவாக தேவகாரியங்கள் உத்தராயணத்தில் செய்வது உத்தமம். பொதுவாக தேவர்கள் போகத்தை கொடுப்பவர்கள் மங்கல காரியங்கள் செய்ய உத்தமம் காலம் திருமணம்,வீடு குடிபுகுதல், குடமுழுக்கு உபநயணம் ,காணிவாங்குதல் போன்ற காரியங்களை மேற்கொள்வது உத்தமம். இக்காரியங்களில் அக்னி காரியம் உண்டு தேவர்கள் உறக்கமின்றி விளித்திருக்கும் காலம். ஒருவருக்கு கெடுதி செய்வதாக இருந்தால் அவர் பட்சி உறக்கத்தில் இருந்தாலே வாய்ப்பு. அப்படி இருக்க தேவ  காரியம் உறக்கத்தில் எப்படி 

        தட்சணாயனம் பொதுவாக மாளையத்தில் ஆரம்பித்து அதாவது பிதிர் கருமத்தில் ஆரம்பித்து நவராத்திரி, கேதாரகௌரி, கந்தசஷ்டி, விநாயகர் சஷ்டி,திருவெண்பாவென வாரகாலமாக அமைகின்றது.

             குடமுழுக்கு செய்வது என்பது பாலாலயத்தில் இருந்த மூர்தியை புணராவத்தணம் செய்த கோயிலில் பிரதிஷடை செய்தல் இது பல காரணங்களுக்காக நடைபெறும் போது பல காரணத்தைப் பொறுத்து அதன் பெயர் அமையும். சில வேளையில் உடனடியாக குடமுழுக்கு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு ஆலயங்களில் ஆசௌசியங்கள் இடம் பெறுறிருக்கின்ற  போது அதற்கு எதையும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை காரணாகம் கைக்கொன்டு செயல்படலாம்.

            எப்போதும் உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம்  ஏன் என்றால் பால மூர்த்தியாக இறைவனை அமர்தும் போது அங்கு தேவபிரசன்னம் தேவை அவியை அக்னி மூலம் குறித்த தேவதைக்கு குறித்த காலத்தில் கொண்டு செலுத்த வேண்டும். அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

   தட்சணாயனம் காலம் விரதகாலம் பால மூர்த்தி யாக கருத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறும் போது அங்கு விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது உத்தமம் இல்லாத படியால் பொதுவாக உத்தராயணம். உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம். குறித்த பாரம்பரிய  விரதங்கள் அனுஷடிக்கும் ஆலயங்களைப் பொறுத்தவரை.

      குடமுழுக்கு செய்து மண்டலாபிஷேகம் நடை பெறும். ஆலயங்களில் திருவிழாவாக செய்வதில்லை அங்கு நடனம் சங்கீதம் போன்ற நிகழ்வுகளை செய்து பால மூர்த்தியை மகிழ்ச்சிபடுத்தி அடியார்களையும் மகிழ்ச்சி படுத்தும் நிகழ்வுகள்வுகள் நடைபெறும் .  

         பொதுவாக பூர்வாங்க சாக்கில் பட்ச வளர்பிறையில் மங்கல காரியங்கள் செய்வதற்கு உகந்தது .நோய் காவல் பின்னுதல் தீயசக்திகளை விலக்கும் போன்ற விடையங்களை  கிஸ்ணபட்ச தேய்பிறையில் செய்வது உத்தமம்

         ஒருவரது பிறப்பு நட்சத்திரம்மாவும் இறப்பு திதியாவும் அமையும். இறப்பு வளர்பிறையாயின் அது பிறக்கும் தேய்பிறையின் வினை குமறைந்து செல்லதை அறிய முடியும் பிறைகளின் எண்ணிக்கைக்கு அமைய இருக்கும். கர்மாவே பிறப்பை கணிக்கும். 

இவை ஆகமங்களைப் பின்பற்றிய கோயிகளுக்கே பெரும் பாலும் பொருந்தும் சித்தர்கள் வழியில் இறைவன் அண்ட பிண்டத்தில் ஆதியாய் அனாதியாய்  எங்குமாய் எதிலும் இருப்பவன் அண்ட பிண்டமே கோயில் எல்லா நாளும் அவன் படைப்பு. இறைவன் நிர்மலன் நிர்குணன் ,எங்கும் உள்ளவன் எல்லாம் வல்லவன் தோற்றமும் இல்லை முடிவும் இல்லை பிரளைய காலத்தில் அவன் மட்டுமே இருப்பான் . மேல் உள்ளவை போகிக்கே அன்றி யோகிக்கு அல்ல ஆனால் யோகிக்கு ஆறாதாரங்களை வலுவாக்க தேவைப்படுகின்றது உத்தராயணம் அனாக தத்துக்கு மேல் குன்டலினியை உயத்தவும் தட்சணாயனம் அதன் கீழ் சுத்தம் செய்யவும் பயன்படுத்து கின்றனர். 

               யோகிக்கு  தன்னிலை அடைய உத்தராயணம் சிறந்தது புத்த பகவான் வைகாசி விசாகத்தில் பரிணாம் அடைந்தார் பல சித்தர்கள் சித்தி பெற்றனர்.

           மகா பாரதத்தில் விஷமர் அம்பு படுக்கையில் உத்தராயணம் வரை காத்திருந்தார். 

தட்சணாயனத்தில் தேவர்கள் உறக்கத்தில் இருப்பதால் பிதிர்கள் பூமிக்கு வருவதால் பிதிர் கடன் செய்ய உகந்தது காலம் மாளையபட்சம் அக்காலத்தில் அமைகின்றது.

பொதுவாக நோக்கின்ற போது தேவபிரதிஸ்டை செய்ய உத்தராயணம் சிறந்தது. 

பெண்கள் இறுதிக் கிரியை செய்யலாமா

 பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் 


பெண்களுக்கு தம்முடைய தந்தை அல்லது தாயார் இறந்தபின் அவர்களுக்கு எமது சைவ சமய மரபுப்படி எரியூட்டவோ, செய்யவேண்டிய இறுதிக்கிரியைகள் செய்யவோ உரிமை இல்லை என்ற கருத்து பல காலமாக எம் மக்களிடையே வேரூன்றி இருக்கின்றது. இதை எமது சமயகுருமாரும் கூறி வருகின்றார்கள். ஒருவர் ஆண் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் அவருடைய ஆண் உறவினர் ஒருவரை நியமித்தே இறுதிக்கிரியைகள் செய்யும் வழமை உள்ளது. ஒரு சில தசாப்தங்களாக பெண்களும் இவ்வாறான கிரியைகளைச் செய்தாலும் இவை அருமையாகவே காணப்படுகின்றன; விதிவிலக்காகவே கருதப்படுகின்றன.  


ஆயினும் இந்த பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து ஒதுக்கிவைக்கும் மரபு உண்மையிலேயே எமது சைவ சமய நூல்களில் உள்ளதா என்று பார்த்தால் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் காத்திருக்கின்றது. இன்று மரபுச் சைவர்கள் கருதிவருவதுபோல பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து சைவம் ஒதுக்கிவைக்கவில்லை. 

                       ………………….நவின்ற தகனாதி

அவை தனக்கு இங்கு அதிகாரி அவர் இருபதின்மர்

ஆன இவர்தம் பெயரும் முறையும் அறைந்திடுவாம்;

குவை தரும் சீர்ப் புத்திரன், நன் மனைவி, மகள், அன்பு

கூர உடன் பிறந்தான், இங்கு உரைத்த இவர் மைந்தர். 


                              


கூறுமவன் தாய், அரிய மருமகள், ஓங்கு அன்பு

குலவு சகோதரி, அவள் தன் புதல்வன், அருட் சபிண்டர்,

வீறி சமானோதகர், தாய்(ச்) சபிண்டர், சோதகர், தம்

மெய்ப்புதல்வர், சீடன் எனச் சன்வியன், குரவன், கொண்ட

பேறுபெறு மருகன், அன்பார் தோழன், அடல் அரசன்

பேசும் இவர் என்றறிக; பிறங்கி வரில் உண்மை

தேறு, பிரதானன் புத்திரன், ஒழிந்தோர் எல்லாம்

சேர் இரண்டாம் பிரதானர் என அறிக தெளிந்தே.   


குறித்த தகனம் முதலிய கிரியைகளுக்கு வரிசையாய் அதிகாரிகள் இருபதின்மர் ஆவர். அவை வரிசைப்படி வருமாறு: 

1. புத்திரன் 2. மனைவி 3. மகள் 4. மகளின் புதல்வன் 5. சகோதரன் 6. சகோதரனின் புதல்வன் 7. பிதா 8. மாதா 9. மருமகள் 10. சகோதரி, 11. சகோதரி புதல்வன் 12. பிதிர்வழிச் சபிண்டன் 13. பிதிர்வழிச் சமானோதகன் 14. தாய் வழிச் சபிண்டன் 15. தாய் வழிச் சமானோதகன் 16. சீடன் 17. குரு 18. பெண் கொண்ட மருமகன் 19. தோழன் 20. அரசன். இவர்களுள் புத்திரனே பிரதான கருத்தா, ஏனையோர் இரண்டாம் பிரதானர் ஆவர்.  


- ஆசௌச தீபிகை, பாடல் 144, 145

(சிவாகமங்களிற் கண்ட விதிப்படி நெல்லையம்பதி தமிழாகரர் இயற்றியது, துன்னாலை ஆ. சபாரத்தினக் குருக்கள் 

எழுதிய தாற்பரிய உரையுடன் )


திருவிளையாடற் புராணத்திலும் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலத்திலே அம்பாள் மீனாட்சியாக மதுரையை ஆண்ட காலத்தில் அவர் தந்தை மலையத்துவச பாண்டியன் இறந்தபொழுது தாமே இறுதிக் கிரியைகளைச் செய்ததாகவே திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. 

விரதநெறி அடைந்து ஈற்றுக்கடன் பிறவும் தாதைக்கு விதியால் ஆற்றி

அரதன மெல்லணை மேற்கொண்டு உலகமெலாம் ஒரு குடைக்கீழ் ஆழ்வாளானாள்……

- பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், பாடல் 560


சபிண்டர் என்றால் யாவர் என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதேபோல் தான் சமானோதகர் என்பதும். 


இங்கு சபிண்டர் என்பது தன்னில் இருந்து தொடங்கி ஏழு தலைமுறை வரை வருகின்ற உறவுகளாகும். ச- என்பது உடனான, சமனான என்று பொருள் தரும். பிண்டம் என்பது உடம்பு. ஒரே விதமான உடலை உடையவர் என்று பொருள். அதாவது பெரும்பாலும் ஒத்த பரம்பரை அலகுகளை தம்முடலில் கொண்டவர் என இக்கால அறிவியல் முறையில் கூறலாம். 


சமானோதகர் என்பது தன்னில் இருந்து எண்ண 8இல் இருந்து 12ம் தலைமுறை வரையுள்ள உறவுகளாகும். இங்கும் சமனான அல்லது ஒரேவிதமான உடல் கொண்டவர் ஆயினும் அவை சற்று தூரத்தில் உள்ளன. உதகம் என்பது குளிர் அல்லது உறை நிலை. ஒரே விதமான பரம்பரை அலகுகள் இருந்தாலும் அவை வெளிப்படையாக அன்றி உறங்குநிலையில் (unexpressed or dormant genes) உள்ளதாக இக்கால அறிவியலின் படி விளக்கலாம்.  


இவர்களுள்ளும் முதல் மூன்று தலைமுறைக்குள் உள்ளவர்களை மிக்க உரிமையாக ஞாதியர் என்று கூறுவர். ஈழத்தமிழ் மரபில் இவர்களை துடக்குக்காரர் எனும் சொல்லால் அழைப்பர். 


இவர்களுக்கு சடங்குகளில் உரிமை உள்ளதுபோல எமது நன்மை தீமைகளிலும் பங்குண்டு. இறப்பினூடாக நாம் நொடித்துப்போகும்பொழுது எம்மையும், நிர்க்கதியாக நிற்கும் எமது குடும்பம், பிள்ளைகளையும் தாங்கும் பொறுப்பும் உரிமை வரிசையில் முறையாக இவற்றினூடாக அவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. 


தற்காலத்தின் திரமான சனநாயக அரசமைப்பும், திடமான பொருளாதாரமும் இவ்விதமான குடும்ப, சமூக உறவுகளின் தேவையையும், அவர்களில் தங்கியிருத்தலையும் பிரதியீடு செய்து வருகின்ற வேளையிலும் இவ்விதமான உறவுகளின் தொடர்பையும் தேவையையும் அறிவியல ரீதியாகவும் பார்க்கலாம். இக்கால மருத்துவ சிகிச்சையில் உயிர் காப்பதற்காக உறுப்பு மாற்றுச் சத்திரசிகிச்சை  தேவைப்படும்பொழுது சிறுநீரகம், என்பு மச்சை போன்ற உறுப்புகளை இவ்விதமான ஒத்த பரம்பரை அலகுகளைக்கொண்ட உறவினர் தானம் செய்தாலே அது பெறும் நோயாளியின் உடலில் ஏற்றுகொள்ளப்பட்டு சிகிச்சை வெற்றியளிக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளதை இங்கு ஒப்புநோக்கலாம்.


எமது நாடும் சமயமும் அன்னியர் ஆட்சியில் ஆட்பட்டபொழுது தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் நிலையில் பெண்களை வீட்டின் உள்ளேயே வைத்துப் பாதுகாக்கும் முகமாக வழக்கில் வந்த சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்னர் மருவி ஆணாதிக்கத்தையும், அதன் வழி சொத்துடைமையும் சமூக மரபாக்கும் நோக்கில் வேரூன்றியன எனலாம்.