Tuesday, October 25, 2022

சிவோகம் என்பதற்கு ஞானகுரு திருமூலர் கூறுவது

 சிவோகம் என்பதற்கு ஞானகுரு திருமூலர்  கூறுவது 


"சத்தும் அசத்துந் தணந்வர் தானாகிக்

சித்தும் அசித்தும் தெரியாச் சிவேகமாய்

முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்

சித்தியும் மங்கே சிறந்துள தானே" 

என ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லி விட்டார். சத்தும் அசத்துக்களாகிய காரண காரிய மாயயைகளை மலமற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சுட்டடுணர்வும் இல்லாச் சிவனிறைவில் அடங்கி சிவனே தானாகி வீடுபெற்றின் கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கியவராவார்.சத்தியும் சிவமும் வேறல்ல இரண்டும் இணைந்தே இருக்கும் ஒன்றை பிரிக்க முடியாது. அதுபோல் சிவமும் ஆறுமுகனும் வேறு அல்ல குமரன் குரு பரனுக்கு அவன் குருபரன். அவன் முத்திக்கு பராப்பரன். அணுக்குள் பிரிக்கமுடியாத இரு பொருள் நியூத்திறன் புரோத்திரன். இரண்டும் மோதினால் இலத்திரன். அதுவே சோமஸ்கந்த முகுத்தம். 

அவருக்கு பெரும் பேறு சிறந்து விளங்கும். சிவ - அகம் சிவோகம் சிவ நிறைவில் உறைதல். சிவமே ஆய் அதுவே சைவ மார்க்கம் நாம் சைவர் சிவமாவதே அவன் பணி அன்றி வேறேன்றும் இல்லை. 

அதற்காகவே எம்மை படைத்தான். சிவபூமியாம் இலங்காபுரியில் அங்கு அவனை அடைய வேண்டும். அதை மீறினால் இதுதான் பிரம்மகஸ்தி தோசம். ஆசை யாரை விட்டது. அது பாதை மற்றும் கருவி அதை தடுக்க கடிவாளம் தேவை வைராக்கியம் மனவடக்கம் தேவை. சிவயநம என்னும் மந்திரம் உபாயம் இடைவிடாது மனதினுள் கணிப்பே உபாயம்.

சித்தர் பாடல் தொட ..........

சித்தர் பாடல் தொட ..........


'நட்டகல்லைத் தொய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து முண முண என்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சட்டசட்டி சட்டவம் கறிச்சுவை அறியுமோ'என்றார் சிவாக்கியர்


இறைவன் நம்முள்தான் இருக்கின்றான் அவன் அருவமான நெல் அளவு உள்ள ஒளி அவன் உள்ளவனுக்கு உள்உள்ளான் இல்லை என்பவனுக்கு கடந்து உள் நிக்கின்றான். அதனால் கடவுள் ஆனான். சித்தம் தெளிந்தவனுக்கு சீவன் சிவலிங்கம். .அருமான கடவுள் மனிதனுக்கு அருவுரு வாய் உருவமானான். மனிதன் உருவத்தை வழிபபட்டு அருவுருவான சிவலிங்க்தை பற்றி அருவமான கடவுளை சித்தம் தெளிந்து பஞ்சேந்திரிய்கள் மனத்தில் ஒடுங்கி மனம் சித்ததில் கலந்து அழிந்து சித்தம் தெளிந்து சிவமாகும். கடல் ஒன்னு தான் அதில் கரையில் அலை ஆழத்தில் அமைதி  அலை சீவாத்மா அமைதியான கடல் பரப்பிமமம்  ஆனால் கரையும் அமைதியன கடலும் கடல்தான். மன கிலேசங்கள் அலை அது அழியும் போது ஆத்மா அமைதியாய் செயற்று போகும்.  அங்கு சீவனும் சிவனும் ஒன்று சீ சியாகும். அளவுதான்.. நதிகள் எல்லாம் கடலை அடைந்தே ஆகவேண்டும்.ஆனல் அவர் அவர் பக்குவத்துக்கு ஏற்ப கர்மா செயல் பட்டு செயல்படுத்தி அடைய வைக்கும். அதனால் மணிக்கவசகப் பெருமான் அவன் என் சிந்தையில் வந்த அதனால் அவன் அருளாலால் அவன் தாள் வணங்கி என்று அருளியது அருளினார்.

 

Monday, October 24, 2022

சித்தர் பாடல் தொட ..........

 சித்தர்பாடல்கள் தொடர் அறிமுகம்

சித்தர்கள் எப்போது சித்தம் சித்தர் பாடல் தொட ..........தெளிந்து சிவமானவர்கள். அவர்கள் மனுக்குலம் படும் துயரம் அனைத்துக்கும் காரணம் பேராசையே அதனால் அடையப்படாத ஆசைகளால் துயரப்படுவதையே அதனால் கோபம் குரோதம் வஞ்சகம் சூது பொறாமை உருவாகி தன்னை தானே அழிக்கின்றனர். இதை தடுத்து பிறப்பின் நோக்கம் அடடைய வைப்பதே அவர்கள் பிறந்து இறவாமை பெற்றதன் நோக்கம்.. மரம் இருக்கின்றது அதன் பயனை அது அனுபவிப்பது அல்ல. அது மனுக்குல உடல் ஆதாரம். தங்கம் இருக்கின்றது அதை தங்கம் அனுபவிப்பதில்லை. அதை மனிதன் தான் அதன் பலனை விற்று காசாகிகியும் அணிகலமாக செய்து போட்டும். ஆனால் மனிதன் தனக்கு மட்டும் வாழ முற்படுகின்றான். கடவுளும் அவருக்காக எதையும் எடுத்துக் கொள்வதும் இல்லை ஏன் என்றால் அவர் எதையும் அனுபவிப்பவர் இல்லை. அவர் எட்டு குணங்களை உடையவர். இயற்கையும் அப்படித்தான். இயற்னையே அவர் அவர் உருவகிக்கப்பட்டதே அவ்வாறு தன்னலமற்று மனித ஈடேற்றமே சித்தர்கள் இலக்கியம் இலக்கணம் இறைவன் எப்படியே அப்படி இருப்பவனே அவனாக முடியும்.இருமை அற்று ஒருமை தேடி தனக்குள் கண்டவர்களே சித்தர்கள். அவர்கள் சித்தாந்தம் வெளில் தேடாதே உன்னுள் இருகிக்கிதடா எல்லாம். சீவன் சிவன் சிவனானால் ஒன்றும் இல்லை.சும்மா இரு ஒருபொல்லாப்பும் இல்லை.
'நந்வனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி மைத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண'டி'
இப்பாடல் கடுவளிச்சித்தர் பாடல்.
இப்பாடல் பிரம்மனிடம் ஜீவன் ஒரு உடலை கேட்டு வாங்கி தாயிடம் பத்துமாதம் வயிற்றில் இருந்து பிறந்து உலகில் உளர்ந்து பயனற்று இறந்து பிறப்பு இறப்பே தனதாக்கி வேதனையே வாழ்வாக்கி உளளுவதையே அங்கு பாடுகின்றார்.
ஓம் தத் சத் ஓம்
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
ஓம் ஜெகத் குரும் சிவம்
சிவகுருவே சரணம் சரணம்.
தென்னா வுடைய சிவனே போற்றி
என்னா ட்டவருக்கு இறைவா போற்றி
அண்ண மலையானே போற்றி போற்றி
கைலாய மலையானே போற்றி போற்றி.
இரு உதயம் அமைந்த இமை யாசலனே போற்றி போற்றி.
Like
Comment
Share