Saturday, March 24, 2018

ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்

ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்
சிவ: சக்தி: காம: சஷிதி- ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்- ததனு ச பரா-மார-
ஹரய:|
அமீ ஹ்ருல்லோகாபிஸ்- திஸ்ருபி-ரவஸானேஷூ கடிதா
பஜந்தே- வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்||
தாயே சிவ பீஜாசஷரமான 'க' சக்தி பீஜாசஷரமான 'ஏ' மன்மத பீஜாசஷரமான 'ல' அதன் பின்னர் சூரிய பீஜமான :ஹ' குளிர்ந்த கிரணங்களுடைய சந்திர கிரணங்களுடைய 'ஸ' மன்மதபீஜமான 'க' ஹம்ஸ மந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான 'ஹ' இந்திரனுடைய பீஜமான 'ல' அதற்குப்பிறகு பரா பீஜமாகிய 'ஸ' மன்மத பீஜமாகிய 'க' ஹரிபீஸமாகிய 'ல' உன்னுடைய இவ்வசஷரங்கள் மூன்று புவனே சுவரீ பீஸமான ஹ்ரீங்காரங்களுடன் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் வேர்க்கப்பட்டு உன்னுடைய மந்திரத்தின் அவயவங்களாக அமைகின்றன.
இங்கு 'க' என்னும் அசஷரத்தை முதலில் உடைய 'காதிவித்தை' என்னும் பஞ்சதசாசஷரீ மஹாமந்திரம் மறைமுகமாகக் கூறப்டுகின்றது. முதலாவதாகிய வாக்பவகூடம் (க-ஏ-ஈ-ல-ஹ்ரீம்) பிரளயகால அக்னி போல பிரகாசிப்பதைய் மூலாதாரத்திலிருந்து பிரகாசித்து அனாஹதத்தைத் தொட்டுகின்றது. இரண்டாவதாகிய காமாஜகூடம் (ஹ-ஸ-க-ஹ-ல- ஹ்ரீம்) கோடி ஸூர்யப் பிரகாசமுடையதாய் அனாஹதத்திலிருந்து கிளம்பி ஆஜ்ஞா சக்கரத்தைத் தொடுகின்றது. மூன்றாவதாகிய சக்திகூடம் (ஸ-க-ல-ஹ்ரீம்) கோடி சந்திரப்பிரகாச முடையதாய் பிரகாசித்து ஆக்ஞையிலிருந்து லலாட மத்திவரை வியாபிக்கின்றது. மாலையிலுள்ள ரத்தினப்பரல்களைப்போல் மூன்று கூடங்களிலும் உள்ள வர்ணங்கள் வரிகையாக ஒன்றன்மேல் ஒன்றாகச் சிந்திக்கப்பட வேண்டும். முலாதாரத்தி; உதித்த நாதம் இவ்வெழுத்துக்களிடையே மணிகளை ஊடுருவிச் செல்லும் சரடுபேல் விளங்கும். மூன்று கூடங்களிலும் ஹ்ரீங்காரத்தில் உள்ள பிந்துகலைகள் மூன்றும் வஹ்னிகுண்டலினீ, ஸூரியகுண்டலினீ, ஸேமகுண்டலினீ எனப்படும்.
பஞ்சதசாசஷீ மந்திரதில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களினின்றே ஆகாசம்,வாயு,அக்னி,அப்பு,பிருதிவி என்ற மகாபூதங்கள் தோன்றன. ஆகாசத்தின் குணம் சப்தம் ஒன்றே வாயுவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ஆகிய இரண்டும். அக்னியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம் ஆகிய மூன்றும், அப்புவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் ஆகிய நான்கும். பிருதிவியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆக மொத்தம் பதினைந்து குணங்களும் பஞ்சதசாசஷீ மந்திரத்தின் விகாஸமே என பாவித்தல் வேண்டும்.
ஸ்ரீம்த்வாக்பவ-கூடைக-ஸ்வரூப- முக பஙகஜா
கண்டாத:-கடிபர்யந்த- மத்யகூட-ஸ்வரூபிணி
சக்தி கூடகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ'
வாக்பவகூடத்தை அம்பிகையினுடைய முமமாகவும் மத்தியிலுள்ள காமராஜகூடத்தை அம்பிகையினுடைய கழுத்து முதல் இடுப்புவரையுள்ள பாகமாகவும். சக்திகூடத்தை இடுப்பின் கீழ் உள்ள பாகமாகவும் தியானித்தல் வேண்டும். என்பது லலித ஸஹஸ்ர நாமம் கூறுகின்றது.
காயத்ரி மந்திரத்தில் 'பரோ ரஜஸே ஸாவதோம்' என்னும் நான்காவது பாதத்தைச்சேர்ந்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்க வேண்டும். அப்போது தான் காயத்ரி வித்தை பூரணத்துவம் அடையும் அதுபோலவே பஞசதசஷரீ மந்திரத்தின் நான்காவது சந்திரகலாகூடம் ரமா பீஜமான 'ஸ்ரீம்' என்றும்,அதுவும் சேத்துத்தான் பதினாறு கலையுடன் இம்மந்திரம் பரிபூரணம் அடைகின்றது என்றும் அதனால் தான் 'ஸ்ரீவித்தியா' என்றும் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டதாய் உணரவேண்டுமட் என்றும் கூறுகின்றனர்.முதல்கூடம் ஜாக்கிரத்திற்கும் இரண்டாவது ஸ்வப்னத்திற்கும் மூன்றாவது ஸூஷூப்திக்கும் நான்காவது துரீத்திற்கும் ஒப்பிடப்பிடப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
"காதிவித்தியா பஞ்சதகர்சஷரீ மந்திர ஜபம் செய்யும் முறை"
அஸ்ய ஸ்ரீ பஞச தசாசஷரீ மஹாமந்திரஸ்ய ஆனந்த பைவ ருஷி: காயத்ரீச்சந்த: பஞ்சதாசஷர்யதிஷ்டாத்ரீ லலிதா மஹா திரிபுரஸூந்தரீ தேவதா|| 'கஏஈலஹ்ரீம்- பீஜம்| 'ஸகலஹ்ரீம்' சக்தி:| 'ஹஸகஹலஹ்ரீம்' திலகம்| ஸ்ரீலலிதாமஹாத்திரிபுர ஸூந்தரி-ப்ரஸாதஸித்த்யர்த்தே ஜபே விநியோக:||
கஏஈலஹ்ரீம், ஹஸகஹலஹ்ரீம், ஸகலஹ்ரீம் என்ற மூன்று கூடங்களையும் இரண்டுதடவை திரும்ப உச்கரித்துக் கர நியாஸமும் அங்க நியாஸமும் செய்க.
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்பந்த:| த்யானம்||
அருணாம் கருணாதரங்கிதாசஷீம் த்ருதபாசாங்குச- புஷ்பபாண சாபாம் மணிமாதிபி- ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம்||
லம்- இத்யாதி பஞ்ச பூஜா||
மந்திரஜபம் - 'கஏஈலஹ்ரீம் - ஹஸகஹலஹ்ரீம் - ஸகலஹ்ரீம்'
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்விமோக:|| த்யானம் லம்- இதர்யாதி பஞ்ச பூஜா||
ஸமர்ப்பணம்- குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ரு ஹாணா- ஸ்மத்க்ருதம் ஜபம்| ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா||
'குருவில்லா வித்தை பாழ்' என்பர் சான்றோர். ஆனாலும் குருவை பெறாதவர்கள் தமது அத்மாவை குருவாக ஏற்று மந்திர உச்சாடணம் செய்யலாம். அது சீவாத்மா அதற்கு தெரியதது எதுவும் இல்லை. இங்கு சில விடயங்களை தருகின்றேன். 'கர நியாஸமும் அங்க நியாஸமும்' கர நியாஸம் என்பது சின்ன விரலில் இருந்து பின்வரும் மந்திரங்களை மனனம் செய்து கொண்டு பெருவிரலால் அடிவிரலிலிருந்து மேல்நோக்கி ஒவ்வொரு விரலாக தொட்டு மெதுவாக அழுத்தி சொல்லவும். உடல் சுத்தம் செய்வதைக் போல மந்திரபூவமாக உடல் அங்கங்கiயும் சுத்தம் செய்ய வேண்டும். அதில் பூஜை செய்வாற்கான கைவிரல்கனை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே கர நியாஸம் எனப்படும். அங்கங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே அங்க நியாஸம் எனப்படும்.
ஓம் 'கஏஈலஹ்ரீம்' அங்குஷ்டாப்ப்யாம் நம்:|
ஓம் 'ஸகலஹ்ரீம்' தர்ஜனீப்ப்யாம் நம:|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்' மத்த்யமாப்ப்யாம் நம:|
ஓம் 'கஏஈலஹ்ரீம்'; அநாமிகாப்ப்யாம் நம:|
ஓம் 'ஸகலஹ்ரீம்' கனிஷ்டிகாப்ப்யாம் நம:|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்' கரதல-கரப்ருஷ்ட்டாப்ப்யாம் நம:| ( ஐந்து விரல்களையும் முன்னும் பின்னுமாக தொடவேண்டும்.)
அங்க நியாஸம் விரல்களால் ஒவ்வொரு இடமாகவும் தொடுதல்.
ஓம் 'கஏஈலஹ்ரீம்' இருதயாய நம:|
ஓம் 'ஸகலஹ்ரீம்'; சிரஸே ஸ்வாஹா|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்'; சிகாயை வஷட்|
ஓம் 'கஏஈலஹ்ரீம்' கவசாய ஹூம் (கைளை ஆட்காட்டி விரலை விட்டு மற்றைங மூன்று விரல்களையும் பெருவிரலுடன் சேர்த்து கைகளை மாறி தோள் பட்டையை தொடுதல்)
ஓம் 'ஸகலஹ்ரீம்' நேத்ரத்ரயாய வெளஷட்|
ஓம் 'ஹஸகஹல
ஹ்ரீம்' அத்திராய பட்| (மெதுவாக ஒருகையின் மேல் மறுகையால் தட்டுதல்)
பஞ்ச பூஜா: (பஞ்சபூதங்களுக்கான பூஜை)
ஓம் லம் - ப்ருதிவ்யாத்மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி| ( சந்தனத்தை ஸமாப்;பனம் செய்தல்)
ஓம் ஹம் - ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி| ( பூவால் பூஜை செய்தல்)
ஓம் யம் - வாய்வாத்மிகாயை தூபமாக்ராபயாமி| (தூபம் காட்டுதல்)
ஓம் ரம் - அக்ன்யாத்மிகாயை தீபம் தர்சயாமி| (தீபத்தை தரிகனம் செய்தல்)
ஓம் வம் - அமிருதாத்மிகாயை அமிதம் மஹா நைவேத்தியம் நிவேதயாமி| (உணமை நிவேதித்தல்)
ஓம் ஸம் - ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார – பூஜாம் ஸமர்ப்பயாமி.|

No comments:

Post a Comment